ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

புதிய முகம், புதிய இன்ஜின் ஹூண்டாய் வெர்னா!

ஹூண்டாய் வெர்னா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹூண்டாய் வெர்னா

ஃபர்ஸ்ட் லுக்: ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

ஹேட்ச்பேக் பிரிவைப்போலவே, செடான் செக்மென்ட்டிலும் மாருதி சுஸூகியின் தயாரிப்புக்கு ஹூண்டாய்தான் போட்டி. ஆம், மாருதி சுஸூகியின் சியாஸுக்கு ஹூண்டாயின் வெர்னாதான் போட்டியாளர்.

பெட்ரோல் மாடலைப் பொறுத்தவரை, சில பல அளவுகோல்களில் ஹோண்டா சிட்டி முன்னிலை வகித்தாலும், டீசல் மாடலில் வெர்னாவே வென்றிருக்கிறது. காம்பேக்ட் மற்றும் மிட்சைஸ் எஸ்யூவிகள் மீது வாடிக்கையாளர்களுக்கு எழுந்த பெரும் மோகத்தினால், வெர்னா வலம் வரும் மிட்சைஸ் செடான் செக்மென்ட், தனது இருப்பை இழந்துவிட்டது.

7-ல் இருந்து 8 இன்ச்சுக்கு டச் ஸ்க்ரீன் வளர்ந்திருக்கிறது. புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி உண்டு. ஏசி வென்ட்ஸ் புதுசு.
4.2 இன்ச் MID உடனான டிஜிட்டல் மீட்டர் புதுசு.
பின் பக்கம் ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டருடன் சீட்கள் செம சொகுசு.
7-ல் இருந்து 8 இன்ச்சுக்கு டச் ஸ்க்ரீன் வளர்ந்திருக்கிறது. புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி உண்டு. ஏசி வென்ட்ஸ் புதுசு. 4.2 இன்ச் MID உடனான டிஜிட்டல் மீட்டர் புதுசு. பின் பக்கம் ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டருடன் சீட்கள் செம சொகுசு.

போட்டியின் காரணமாக, கார் கம்பெனிகள், புதிய மாடல்களை வெளியிட, BS-6 ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு உதாரணம் போக்ஸ்வாகன்/ஸ்கோடா. இந்த மாற்றத்தை உணர்ந்திருக்கும் ஹூண்டாய், நிறுவனமும் வெர்னாவுக்குத் இந்த சமயத்தில் புத்துணர்ச்சி ஊட்டியுள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் என்றாலும், ஸ்டைலான டிசைன் - புத்தம் புதிய இன்ஜின்/கியர்பாக்ஸ் - அதிக வசதிகள் என இந்த நிறுவனம் அடித்து விளையாடி இருக்கிறது. புதிய சிட்டிக்குப் போட்டியாக வரும் இந்த கார் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்!

ரஷ்ய மாடலில் இருக்கும் அதே கிரில்தான். ஆனால், க்ரோம் ஃபினிஷ் புதுசு.
இண்டிகேட்டருடன் கூடிய சைடு மிரரில், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உண்டு.
பனி விளக்குகள் சாதாரண மாடல் இல்லை; புரொஜெக்டர் டைப்.  டர்போ மாடலுக்குக் கறுப்பு கிரில்.
ரஷ்ய மாடலில் இருக்கும் அதே கிரில்தான். ஆனால், க்ரோம் ஃபினிஷ் புதுசு. இண்டிகேட்டருடன் கூடிய சைடு மிரரில், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உண்டு. பனி விளக்குகள் சாதாரண மாடல் இல்லை; புரொஜெக்டர் டைப். டர்போ மாடலுக்குக் கறுப்பு கிரில்.

டிசைன்

இங்கே வெர்னாவாக விற்பனை செய்யப்படும் கார்தான், ரஷ்யாவில் Solaris என்ற பெயரில் கிடைக்கிறது. முன்பக்கத்தில் இருக்கும் க்ரோம் Cascading கிரில், காருக்கு யூத்ஃபுல் லுக்கைத் தருகிறது. அதற்குக் கீழே இருக்கும் பெரிய ஏர் இன்டேக்குக்கு, Brushed அலுமினிய ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கோண வடிவ பனி விளக்குகள், ஆராவை நினைவு படுத்துகின்றன. இவை எல்லாமே புதிய பம்பரில் இடம்பெற்றுள்ளன. LED DRL உடனான LED ஹெட்லைட்ஸ் ஸ்டைலாக உள்ளன. இந்த செடானின் பக்கவாட்டுப் பகுதியில், புதிய டூயல் டோன் அலாய் வீல்களைத் தவிர எந்த மாற்றமும் இல்லை. பின்பக்கத்தில் LED டெயில் லைட்டில் சிறிய மாற்றம் தெரிவதுடன், Diffuser - க்ரோம் வேலைப்பாடுடன் கூடிய பம்பர் புதிது.

இது ஃபேஸ்லிஃப்ட்தான் என்றாலும், முற்றிலும் புதிய ஹோண்டா சிட்டியுடன் போட்டி போடும் வகையில் வெர்னா ஃப்ரெஷ்ஷாகவே காட்சியளிக்கிறது. 1.0 லிட்டர் T-GDi இன்ஜின் கொண்ட மாடலின் கிரில் மற்றும் பின்பக்க பம்பர் ஸ்போர்ட்டியாக இருப்பதுடன், Dual Exhaust Tip இருப்பதும் நச்.

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

மேலோட்டமாகப் பார்க்கும்போது, கேபினில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. ஆனால் காரில் உட்காரும்போது, வித்தியாசங்கள் தென்படுகின்றன. 8 இன்ச் டச் ஸ்க்ரீன், முன்பைவிட ஒரு இன்ச் வளர்ந்திருக்கிறது. இதில் வழக்கமான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே தவிர, 45 வசதிகளை உள்ளடக்கிய ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி சேர்க்கப் பட்டுள்ளது. ரஷ்ய வெர்னாவில் இரட்டை அனலாக் மீட்டர்களே இருக்கும் நிலையில், இந்த மாடலில் இருக்கும் ஃபுல் டிஜிட்டல் மீட்டர்கள் செம ஹைடெக் ரகம்.

உத்தேச விலை I ரூ.10-15 லட்ச ரூபாய்
உத்தேச விலை I ரூ.10-15 லட்ச ரூபாய்

இதிலுள்ள 4.2 இன்ச் MID, தேவையான தகவல்களைத் தெளிவாகக் காட்டுகிறது. சீனாவில் விற்பனை செய்யப்படும் ix25 (நம் ஊர் க்ரெட்டா) காரில் இருந்த அதே மீட்டர்தான் இது!

புதிய i20-யிலும் இதே மீட்டர் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. Faux அலுமினிய வேலைப்பாடுகளுக்குப் பதிலாக, Faux Wood வேலைப்பாடுகள் டேஷ்போர்டை அலங்கரிக்கின்றன. இதில் பொருத்தப்பட்டிருக்கும் ஏசி வென்ட்கள், க்ரெட்டாவில் இருந்தவைதான். மற்றபடி அப்ஹோல்சரியிலும் மாறுதல் தெரிகிறது. முன்பைப் போலவே ஃபிட் & ஃபினிஷ் மற்றும் தரத்தில் எந்தக் குறையும் இல்லை.

ஹூண்டாய் வெர்னா
ஹூண்டாய் வெர்னா

க்ரெட்டா போல இங்கேயும் Air Purifier இருந்திருக்கலாம். ஹூண்டாயின் லேட்டஸ்ட் டர்போ மாடல்களைப் போலவே, 1.0 லிட்டர் T-GDi இன்ஜின் கொண்ட வேரியன்ட்டின் கேபின், சிவப்பு வேலைப்பாடுடன் கூடிய கறுப்பு நிறத்தில் கிடைக்கிறது.

வெர்னாவின் டாப் வேரியன்ட்களில் ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி உடனான 8 இன்ச் இன்ஃபோ டெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் வாட்ச் & மொபைல் ஆப், சன்ரூஃப், Leatherette அப்ஹோல்சரி, ரியர் ஏசி வென்ட், கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், என வழக்கம்போல வசதிகளை வாரியிறைத்திருக்கிறது ஹூண்டாய். அனைத்து வேரியன்ட்டிலுமே 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ் - EBD, ISOFIX, பின்பக்க பார்க்கிங் சென்சார், முன்பக்க சீட்பெல்ட் ரிமைண்டர் போன்ற பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டு.

இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

ஃபேஸ்லிஃப்ட் தவிர BS-6 விதிகளுக்கும் வெர்னா மேம்படுத்தப்பட்டுள்ளதால், இன்ஜின் - கியர்பாக்ஸ் எல்லாமே புதுசு; 115bhp பவர் - 14.7kgm டார்க் - 17.7கிமீ அராய் மைலேஜ் ஆகியவற்றை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே CVT உடன் சேரும்போது, இதே 4 சிலிண்டர் இன்ஜின் 18.45 கி.மீ அராய் மைலேஜைத் தருகிறது.

டாப் வேரியன்ட்களில் LED ஹெட்லைட்ஸ். காருக்கு செம லுக் கொடுக்கிறது.
சன்ரூஃப் இருக்கிறது. ஆனால், க்ரெட்டா போல் பனோரமிக் இல்லை. 
டூயல் டோன் 16 இன்ச் அலாய் வீல்கள் புதுசு, செம ஸ்போர்ட்டி.
டெயில் லைட், முன்பைப்போலவே LEDதான். ஆனால், டிசைன் புதுசு.
டாப் வேரியன்ட்களில் LED ஹெட்லைட்ஸ். காருக்கு செம லுக் கொடுக்கிறது. சன்ரூஃப் இருக்கிறது. ஆனால், க்ரெட்டா போல் பனோரமிக் இல்லை. டூயல் டோன் 16 இன்ச் அலாய் வீல்கள் புதுசு, செம ஸ்போர்ட்டி. டெயில் லைட், முன்பைப்போலவே LEDதான். ஆனால், டிசைன் புதுசு.

டர்போ டீசல் இன்ஜினும் 1.5 லிட்டர்தான் என்றாலும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும்போது இது 115bhp பவர் - 25.5kgm டார்க் - 25 கி.மீ அராய் மைலேஜைத் தருகிறது. 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இந்ந 4 சிலிண்டர் இன்ஜின் கூட்டணி வைக்கும்போது, அராய் மைலேஜ் 21.3 கி.மீயாகக் குறைந்து விடுகிறது! இந்த இன்ஜின்கள் எல்லாமே, நாம் க்ரெட்டா மற்றும் செல்ட்டோஸில் பார்த்ததுதான். முன்பைவிட அதிக மைலேஜ் நல்ல விஷயமே! தனது செக்மென்ட்டில், இப்போதைக்கு BS-6 டீசல் இன்ஜின் கொண்ட ஒரே கார் வெர்னாதான் என்பதால், விற்பனை விறுவிறுப்படையலாம்.

ஏனெனில் புதிய சிட்டியில்தான், தனது 1.5 லிட்டர் BS-6 டர்போ டீசல் இன்ஜினை ஹோண்டா பொருத்தும் முடிவில் இருக்கிறது. இந்த செடானின் இந்திய வரலாற்றில் முதன்முறையாக, டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனைச் சேர்த்திருக்கிறது ஹூண்டாய்.

வென்யூவில் இருக்கும் அதே 1.0 லிட்டர் T-GDi இன்ஜின் என்பதால், அதைப் போலவே 120bhp பவர் - 17.5kgm டார்க் - 19.2 கி.மீ அராய் மைலேஜைத் தருகிறது. இருப்பினும் 7 ஸ்பீடு DCT உடன் மட்டுமே இந்த இன்ஜின் கொண்ட மாடலை வாங்க முடியும் என்பது நெருடல். மேனுவல் கியர்பாக்ஸ் இல்லை என்ற குறைபாட்டை, பேடில் ஷிஃப்ட்டர்களைக் கொடுத்துச் சரிக்கட்டிவிட்டது ஹூண்டாய். இப்படி பலவிதமான ஆப்ஷன்களில் இந்தக் கார் கிடைப்பதால், அவரவர் தேவைக்கேற்ப வெர்னாவை வாங்கலாம்.

வெர்னா ஓகேவா?

இந்த மிட்சைஸ் செடானின் புக்கிங்கைத் தொடங்கி விட்டது ஹூண்டாய் (25,000 ரூபாய் செலுத்தி ஆன்லைனில் புக்செய்யலாம்). 6 கலர் ஆப்ஷன்கள் (Black, Red, White, Silver, Grey, Starry Night) - மொத்தம் 11 வேரியன்ட்கள் - 5 விதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணியில், 9.31 லட்சம் - 13.99 லட்ச ரூபாய் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையில் வந்திருக்கிறது வெர்னா ஃபேஸ்லிஃப்ட். இது தற்போது விற்பனையில் இருக்கும் BS-6 ஹோண்டா சிட்டியைவிடக் குறைவு.

புதிய முகம், புதிய இன்ஜின் ஹூண்டாய் வெர்னா!

ஐந்தாம் தலைமுறை சிட்டி களமிறங்கும் போது, இந்த விலை வித்தியாசம் இன்னும் அதிகரிக்கக்கூடும். ஒரே இன்ஜினுடன் கிடைக்கும் மாருதி சுஸூகி சியாஸ், மிட்சைஸ் செடான் பிரிவில் கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்கத் தயாரிப்பாகத் இருக்கிறது.

டர்போவுக்குப் பதிலாக, இந்த நிறுவனம் SHVS சிஸ்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது. 110bhp பவரைத் தரும் 1.0 லிட்டர் TSI இன்ஜினுடன் BS-6 அவதாரத்தில் வந்திருக்கும் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் ஆகியவை, இம்முறை வெர்னாவுக்குச் சவால் விடும் திறனைப் பெற்றுள்ளன.

ஹூண்டாய் வெர்னா
ஹூண்டாய் வெர்னா

சைலன்ட் மோடில் இருக்கும் டொயோட்டா யாரிஸ், வசதிகளால் வாடிக்கையாளர்களைத் தன்வசம் ஈர்க்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மாடர்ன் டிசைன் - அதிகப்படியான சிறப்பம்சங்கள் - கார் ஆர்வலர்களுக்குப் பிடித்தமான டர்போ பெட்ரோல் இன்ஜின்/DCT காம்போ - சிறப்பான BS-6 டீசல் இன்ஜின் என முன்பைவிட ஆல்ரவுண்டர் பேக்கேஜாக முன்னேறி இருக்கிறது வெர்னா ஃபேஸ்லிஃப்ட். ஆனால் டாப் வேரியன்ட்டில் மட்டுமே டர்போ பெட்ரோல் மாடல் என்பது நெருடல்.