லெக்ஸஸ் என்பது, தனவான்களின் கார். ஜப்பான் நிறுவனமான டொயோட்டோவின் லக்ஸூரி பிராண்டான லெக்ஸஸ், 2017-ல் இந்தியாவில் விற்பனையைத் துவங்கியது. தற்போது ES, LS செடான் மற்றும் NX, RX, LX எஸ்யூவிகளை இந்தியாவில் விற்பனை செய்கிறது லெக்ஸஸ். இவை அனைத்தும் ஜப்பானில் இருந்து முழுமையான காராக (CBU) இறக்குமதி செய்யப்படுகிறது என்பதால், விலை கொஞ்சம் அதிகம்தான்.

சர்ப்பரைஸாக, 2020-ல் லெக்ஸஸ் சார்பாக புதிய வரவு ஒன்றும் இருக்கிறது. இந்தியாவில் சொகுசு கார்களுக்கான இறக்குமதி வரிகள் அதிகமாக இருப்பது லெக்ஸஸுக்குப் பெரும் பாதகமாக இருந்தது. இந்நிலையில் ES 300h இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் எனவும், மார்ச் 2020 முதல் இது விற்பனைக்குத் தயாராக இருக்கும் எனவும் லெக்ஸஸ் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள டொயோட்டா தொழிற்சாலையில் ஒரு அசெம்பிளி லைனைத் தனக்காக அமைத்துள்ளது லெக்ஸஸ். ES செடானைத் தொடர்ந்து, இந்த ப்ளான்ட்டில்தான் NX எஸ்யூவியின் அசெம்பிளியும் தொடங்கப்பட உள்ளது.

LC 500h உடன் தற்போதுள்ள ES மற்றும் NX கார்களின் புதிய வகைகளான ES 300h Exquisite மற்றும் NX 300h Exquisite ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது லெக்ஸஸ். அனைத்துப் புதிய மாடல்களும் - BS-6 மாசுக்கட்டுபாட்டு விதிகளுக்கு ஏற்ப வந்துள்ளன.

ES செடான், இந்தியாவில் லெக்ஸஸின் என்ட்ரி லெவல் மாடல். பெட்ரோல்-எலெக்ட்ரிக் ஹைபிரிட் கூட்டணி மூலம் இயக்கப்படுகிறது. 6 ஸ்டெப் eCVT கியர்பாக்ஸ் வழியாக, சக்தி முன்சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. 178 bhp, 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 120 bhp எலெக்ட்ரிக் மோட்டார் என மொத்தம் 218 bhp பவரில் பறக்கிறது ES. ES 300h Exquisite வேரியன்ட் ரூ 51.90 லட்சம் மற்றும் டாப்-ஸ்பெக் லக்ஸூரி வேரியன்ட் ரூ 56.95 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) ES 300h இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், இதன் விலை முன்பைவிட ரூ. 8.05 லட்சம் குறைந்துள்ளது.

LC 500h காருக்கு வருவோம். 3.6 லிட்டர் V6 பெட்ரோல் இன்ஜின், 300bhp மற்றும் 34.8kgm டார்க்கை வெளிபடுத்துகிறது. இது 180bhp மின்சார மோட்டாருடன் இணைந்து செயல்படுகிறது. இந்த மாடல் 354bhp சக்தியை பின்பக்கச் சக்கரங்களுக்கு அனுப்புகிறது. லெக்ஸஸ் LC 500h 4.7 விநாடிகளில் 0-100 கி.மீ வேகத்தில் பறக்கிறது. புதிய 2,500-கார் இறக்குமதி விதியின் கீழ் CBU முறையில் LC 500h இந்தியாவுக்குக் கொண்டு வருகிறது லெக்ஸஸ். 2-டோர் கிராண்ட் டூரரான இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.96 கோடி.

இந்தியாவில் ஜாகுவார் F-டைப் V 8 (ரூ.2.21 - 2.80 கோடி), பென்ட்லி கான்டினென்டல், மெர்சிடீஸ்-AMG GT (ரூ .2.27-2.32 கோடி) ஆகியவற்றுடன் போட்டி போடுகிறது லெக்ஸஸ் LC 500h.