கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

எண்டேவரை விட... ஃபார்ச்சூனரை விட பெருசு! - எம்ஜி கிளாஸ்ட்டர்

எம்ஜி கிளாஸ்ட்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
எம்ஜி கிளாஸ்ட்டர்

ஃபர்ஸ்ட் லுக்: எம்ஜி கிளாஸ்ட்டர்

ட்டுமஸ்தாக இருப்பதும் ஒரு ஸ்டைல்தான். எம்ஜி கிளாஸ்ட்டர் அப்படிப்பட்ட ஒரு எஸ்யூவிதான். சுமார் 5 மீட்டருக்கு 15 மிமீ நீளம்தான் கம்மி; (4,985மிமீ); இதன் வீல்பேஸ் மட்டுமே 3 மீட்டருக்கு 50 மிமீதான் கம்மி; (2,950). பார்ப்பதற்கே சும்மா ஜைஜாண்டிக்காகத் தெரிகிறது எம்ஜி கிளாஸ்ட்டர்.

எண்டேவர், ஃபார்ச்சூனர், ஆல்ட்டுராஸ் இவற்றைவிடப் பெருசாக இருக்கிறது கிளாஸ்ட்டர். இதில் அகலத்தில் மட்டும்தான் ஆல்ட்டுராஸ் கிளாஸ்ட்டரைவிட முன்னே நிற்கிறது. (1,867 மிமீ கிளாஸ்ட்டர்; 1,926 மிமீ ஆல்ட்டுராஸ்).

இன்டீரியர் ரிச் லுக்கில் இருக்கிறது. 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் எவ்ளோ பெருசு! 8 இன்ச் MID ஸ்க்ரீனில் எல்லா தகவல்களும் வரும். பேடில் ஷிஃப்டர்கள் உண்டு.
இன்டீரியர் ரிச் லுக்கில் இருக்கிறது. 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் எவ்ளோ பெருசு! 8 இன்ச் MID ஸ்க்ரீனில் எல்லா தகவல்களும் வரும். பேடில் ஷிஃப்டர்கள் உண்டு.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கிளாஸ்ட்டர், இப்போது சாலைகளில் ஓடத் தயாராகி விட்டது.

இதன் 19 இன்ச் வீல்கள், செமையான ரோடு பிரசன்ஸைத் தருகின்றன. எம்ஜியின் ஃபேவரைட்டான ஸ்டைலில் அதே ஸ்லிம்மான ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், கீழே ‘சி’ வடிவ பனிவிளக்குகள், பெரிய Brushed மெட்டல் கிரில், செதுக்கி எடுக்கப்பட்ட பானெட் என்று கிண்ணென்று இருக்கிறது. மிரர்கள், விண்டோ லைன், அப்படியே ‘சி’ பில்லர் வழியாக ரூஃப் லைன் வரை பயணிக்கும் க்ரோம் ஃபினிஷ் வேலைப்பாடு ஸ்டைல்தான். டெயில் லைட் அசெம்பிளியும் ஓகே! காரைச் சுற்றி ADAS (Advanced Driver Assistance System), 4WD, MG, என ஏகப்பட்ட பேட்ஜ்கள்.

இத்தனை பெரிய காராக இருந்தாலும், உள்ளேயும் படா படாவென விஷயங்கள் தொடர்கின்றன. அந்த 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன், எவ்ளோ பெருசு. தடவித் தடவி விளையாடலாம். உள்ளே பிரெளன் மற்றும் கறுப்பு இன்டீரியர் வித்தியாசமாக இருக்கிறது. டேஷ்போர்டு, சீட், ஸ்டீயரிங் என எல்லாம் லெதர் மயம். அனலாக் டேக்கோ மற்றும் ஸ்பீடோ மீட்டர் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் MID ஸ்க்ரீனே 8 இன்ச்சில் இருந்தது. டயர் ப்ரஷரில் இருந்து ஃப்யூல், ட்ரிப், ADAS, டிரைவிங் மோடுகள் என எல்லாமே காட்டுகின்றன.

எண்டேவரை விட... ஃபார்ச்சூனரை விட பெருசு! - எம்ஜி கிளாஸ்ட்டர்

கிளாஸ்ட்டரின் உள்ளே பிடிக்காத விஷயம் என்னவென்றால், சில விலை மற்றும் தரம் குறைவான ப்ளாஸ்டிக்ஸ்தான்..

சீட்களில் நம்மை இம்ப்ரஸ் செய்கிறது கிளாஸ்ட்டர். சீட் நல்ல சொகுசாக இருக்கிறது. தாழ்வான டேஷ்போர்டு, உயரமான ஏ பில்லர்கள் என வெளிச்சாலை விஸிபிலிட்டி நன்றாகவே இருக்கிறது.

பின் பக்க கேப்டன் சீட்ஸ்தான் சொகுசின் உச்சம். 3–வது ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல். பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை சூப்பர்.

பெயரளவில் இல்லாமல் நிஜமாகவே மூன்றாவது வரிசை சீட்கள் நல்ல இடவசதியுடன் இருக்கின்றன.

இருந்தாலும், சீட்கள் தாழ்வாக இருப்பது, தொடைக்கான சப்போர்ட் கிடைக்காமல் இருப்பது போன்றவற்றில் இன்னும் கொஞ்சம் வசதி தேவை.

எம்ஜி கிளாஸ்ட்டரின் ஹூட்–க்குள் இருப்பது, 1,996 சிசி கொண்ட ட்வின்–டர்போ டீசல் இன்ஜின். இதன் பவர் 218bhp, 48kgm டார்க். இந்த செக்மென்ட்டில் அதிக பவரைக் கொண்ட கார் கிளாஸ்ட்டர். 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் கொண்ட இது, ஒரு ரியல் வீல் டிரைவ் கார். அப்படியென்றால், ஆஃப்ரோடு பார்ட்டிகளுக்கு பிடிக்கும். கூடவே 4WD சிஸ்டத்துடன். தேவையான நேரத்தில் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எண்டேவரை விட... ஃபார்ச்சூனரை விட பெருசு! - எம்ஜி கிளாஸ்ட்டர்

சென்டர் கன்சோலில் டிரைவிங் மோடு பட்டன் இருந்தது. Snow, Mud, Rock, Sand என ஆஃப்ரோடிங் அம்சங்களுக்கும் செலெக்டர். பார்க்கிங் பிரேக் எலெக்ட்ரானிக் ஆக இருந்ததே இதன் ப்ரீமியத்தைச் சொல்லிவிட்டது. போட்டி கார்களில் இருப்பதுபோல் மேனுவல் லோ கியரோ,4WD கியரோ இல்லை.

எக்கோ, ஸ்போர்ட் மோடுக்கும் பெர்ஃபாமன்ஸில் நன்றாகவே வித்தியாசம் தெரிந்தது. 0–100 கிமீ செக் செய்தோம். 11.21 விநாடிகளில் கடந்தது. இத்தனை பெரிய காட்டு யானை மாதிரி கம்பீரமான காருக்கு இது அதிகம்தான். பெரிய காருக்கு பிரேக்கிங்கும் அசத்தலாக இருந்தால்தானே கெத்து + நம்பிக்கை. 80 கிமீ வேகத்தில் வந்து சடர்ன் பிரேக் அடித்தால், 25 மீட்டர் தாண்டி 2.56 விநாடிளில் ஸ்டால் ஆகி நிற்கிறது பெரிய கிளாஸ்ட்டர்.

ஆனால், கிளாஸ்ட்டரும் பாட்டம் எண்ட் பெர்ஃபாமென்ஸில் கொஞ்சம் திணறத்தான் செய்கிறது. ஆக்ஸிலரேட்டரை மிதி மிதி என மிதிக்க வேண்டும்போல. 2,000 ஆர்பிஎம்–க்குக் கீழே கியர்பாக்ஸின் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் மந்தமோ என்று தோன்றுகிறது. 2,000–த்தைத் தாண்டிய பிறகுதான் கிளாஸ்ட்டர் உற்சாகமாகிறது. கூடவே நாமும்!

பேடில் ஷிஃப்டர்கள் இருப்பதால், மேனுவல் பார்ட்டிகள் இன்னும் உற்சாகமாகி விடுவார்கள். ஆட்டோமேட்டிக் கார்களில் ஓவர்டேக்கிங்குகளில் பேடில்ஷிஃப்டர்களின் பலன் அபாரமாகத் தெரியும். கிளாஸ்ட்டரில் டவுன்ஷிஃப்ட்டிங்குகளில் இன்னும் கொஞ்சம் வெறித்தனம் வேண்டுமோ என்று தோன்றுகிறது. ஆனால், தேவையான அளவு ஆக்ஸிலரேஷன் கொடுத்துவிட்டால் பிரச்னை இல்லை.

ஹைவேஸ்களில் 3,900–க்கு மேல் ஸ்பின் ஆகவில்லை; 4,000–க்குள் அடங்கிவிடுகிறது ஆர்பிஎம் முள். 7 மற்றும் 8–வது கியர்களில்கூட குறைந்த வேகங்களில் சூப்பராகச் செல்கிறது கிளாஸ்ட்டர். லோ எண்ட் திணறலைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இதன் ஸ்மூத்னெஸ்ஸும் பவர் டெலிவரியும் நிச்சயம் ஓட்டுநர்களுக்குப் பிடிக்கும்.

ஓட்டுதலில் நிச்சயம் குறை வைக்கவில்லை கிளாஸ்ட்டர். சாலைச் சத்தம், இன்ஜின் சத்தம் பெரிதாகக் கேட்கவில்லை. NVH லெவல் பிரமாதம். இது லேடர் ஆன் ஃப்ரேம் எஸ்யூவி என்பதால், குறைந்த வேகங்களில் கொஞ்சம் லேசான வெர்ட்டிக்கல் மூவ்மென்ட் இருப்பது சகஜம்தான். ஆனால் போட்டி கார்கள் அளவுக்கு வேகங்களில் பெரிதாகத் தூக்கியெல்லாம் போடவில்லை. அதிவேகங்களில் மட்டும் லேசான பாடிரோல் தெரிந்தது. லேன் சேஞ்சிங்கில் பின்னால் இருப்பவர்கள் அலைபாயக் கூடும் என்று நினைக்கிறேன். இதன் சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்–அப், எப்படிப்பட்ட மோசமான சாலைகளையும் ஒரு கைபார்த்து விடும்போல! இதன் லைட்வெயிட் ஸ்டீயரிங்கும் நல்ல ஒரு அற்புதமான கையாளுமைக்குக் கைகொடுக்கிறது.

இந்தப் பெரிய கிளாஸ்ட்டரின் விலை பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை எம்ஜி. நமது கணிப்புப்படி இதன் டாப் மாடலான Savvy, 35 லட்சம் எக்ஸ் ஷோரூமுக்கு வர வாய்ப்புண்டு.

எதற்கும் எண்டேவரும் ஃபார்ச்சூனரும் கொஞ்சம் கவனமாக இருங்களேன்!