Published:Updated:

பவர் ஃபுல் கிக்ஸ் வருது!

ஃபர்ஸ்ட் லுக்: நிஸான் கிக்ஸ் BS-6

பிரீமியம் ஸ்டோரி

டீசல் நிறுத்தச் செய்தியெல்லாம் இப்போது பழசாகி விட்டது. நிஸானின் கிக்ஸ் காரிலும் இனி ரெனோவின் ஃபேவரைட்டான K9K டீசல் கிடையாது என்பதைப் பழகிக் கொள்ளுங்கள். கிக்ஸின் BS-6 அவதாரம் ஆரம்பமாகப் போகிறது. ஆனால், பெட்ரோலில் மட்டும்தான். இந்த லாக்டெளன் முடிந்ததும், BS-6 கிக்ஸ் சாலைகளில் ஓட ஆரம்பிக்கலாம். கிக்ஸின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிப் பார்க்கலாம்.

நிஸான் கிக்ஸ் BS-6
நிஸான் கிக்ஸ் BS-6

மொத்தம் இரண்டு இன்ஜின்கள், 3 கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது புது கிக்ஸ். சாதாரண Nautrally Aspirated 1.5 லிட்டர் இன்ஜின், 106bhp பவரையும் - 14.2kgm டார்க்கையும் கொண்டு ஓடப் போகிறது. பர்ஃபாமன்ஸ் விரும்பிகளுக்கும் ஆப்ஷன் இருக்கு. 1.3 லிட்டர் டர்போ இன்ஜின் கிக்ஸின் பவர் - 156bhp. இதன் டார்க் 25.4kgm. ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொண்டவர்களுக்குத் தெரிந்திருக்கும். ‘டஸ்ட்டர் டர்போ இருந்துச்சே.. அதானே’ என்று சொல்லிவிடுவார்கள். ஆம், டஸ்ட்டரில் இருக்கும் அதே டர்போதான். ஆனால், டஸ்ட்டரில் இருந்து கியர்பாக்ஸில் வித்தியாசம் காட்டுகிறது கிக்ஸ். டஸ்ட்டரில் இல்லாத 5 ஸ்பீடு மேனுவல், கிக்ஸில் உண்டு. அதாவது, 1.5 லி இன்ஜினுக்கு 5 ஸ்பீடு மேனுவல், 1.3 லி டர்போவுக்கு 6 ஸ்பீடு மேனுவலோடு 8 ஸ்டெப் CVT கியர்பாக்ஸும் உண்டு.

XL, XV, XV Premium, XV Premium (O) - இப்படி 4 வேரியன்ட்களில் வரும் கிக்ஸின் விலையை, 9.7 லட்சம் முதல் 14.7 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்) என நிர்ணயம் செய்திருக்கிறது நிஸான். 1.5 லி NA இன்ஜின் மாடல் XL, XV வேரியன்ட்களில் மட்டும்தான் கிடைக்கும். டர்போவும் XL, XV, XV Premium-ல் உண்டுதான். ஆனால், டாப் எண்டான XV Premium(O), மேனுவல் மட்டும்தான். CVT கிடையாது.

பவர் ஃபுல் கிக்ஸ் வருது!

என்ன... 360 டிகிரி கேமரா, 4 காற்றுப்பைகள், ஃபாலோ மீ ஹெட்லாம்ப்ஸ், லெதர் சீட்கள், டூயல் டோன் இன்டீரியர்/எக்ஸ்டீரியர் கலர், ரியர் ஃபாக் லேம்ப்ஸ் போன்ற முக்கியமான சில வசதிகள் வேண்டுமென்றால்.. வேறு வழியே இல்லை. மேனுவல் கியர்பாக்ஸுக்குத்தான் போயாக வேண்டும் என்பதுதான் சிக்கல்.

ஆனால் டர்போவைத்தான் எதிர்பார்க்கிறது நிஸான். அநேகமாக இந்த செக்மென்ட்டில் பவர்ஃபுல் டர்போ - இந்த 156bhp கிக்ஸாகத்தான் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு