Published:Updated:

வருது நிஸானின் குட்டி எஸ்யூவி!

ஃபர்ஸ்ட் லுக்: நிஸான் மேக்னைட்

பிரீமியம் ஸ்டோரி

ஜூன் மாத மோட்டார் விகடனின் அட்டையை அலங்கரித்த காரைப் பற்றிப் பலருக்கும் ஐடியா இருந்திருக்காது. ஆகஸ்ட் மாதம் வரவிருக்கும் கார்கள் பட்டியலில் மிகவும் கவனம் ஈர்த்த கார் – நிஸான் மேக்னைட்தான் அது. மேக்னைட்டின் ஸ்பை படங்கள்கூட இப்போது ரிலீஸ் ஆகிவிட்டன. சாலையில் டெஸ்ட்டிங்கில் பரபரப்பாக இருக்கிறது மேக்னைட்.

Magnet + Ignite – இரண்டையும் சேர்த்துத்தான் மேக்னைட் என்று பெயர் வைத்திருக்கிறது நிஸான். கான்செப்ட்டில் பார்த்த மாதிரியே மெஷின் கட் அலாய்வீல், மெஷ் கிரில், பூமராங் வடிவ DRL என்று செம கெத்தாக இருக்கிறது. கிக்ஸ் காரின் ஸ்டைலில் அந்த ஸ்வெப்ட் பேக் ஹெட்லைட்ஸ், மேக்னைட்டிலும் இருக்கிறது. ஒருவேளை ஆஃப்ரோடுக்காக மேக்னைட் வடிவமைக்கப்பட்டிருக்குமோ… டயர்கள் ஆஃப்ரோடுக்கு ஏற்றபடி இருந்தன. கி.கிளியரன்ஸும் நன்றாக ஏற்றப்பட்டிருந்தது. கான்செப்ட்டில் இருந்த ஸ்கிட் பிளேட் மட்டும்தான் புரொடக்ஷன் மாடலில் மிஸ் ஆகலாம்.டாப் வேரியன்ட்டில் மட்டும்தான் எல்இடி ஹெட்லைட்ஸ் இருக்கலாம். மிட் வேரியன்ட்டில், சாதா ஹாலோஜன் பல்புகள்தான்.

அநேகமாக டீசல் இன்ஜினில் மேக்னைட் வராது. 72bhp பவர் கொண்ட 1.0 லிட்டர் - 3 சிலிண்டர் NA இன்ஜினும், 1.0 லிட்டர் – 95 bhp பவர் கொண்ட 3 சிலிண்டர் டர்போ பெட்ரோலும் இருக்கும். இரண்டிலுமே மேனுவல் கியர்பாக்ஸ் உண்டு. NA இன்ஜினுக்கு AMT கியர்பாக்ஸும், டர்போ பெட்ரோலுக்கு CVT கியர்பாக்ஸும் இருக்கும்.

நிஸான் மேக்னைட்
நிஸான் மேக்னைட்

காம்பேக்ட் எஸ்யூவி என்பதால், 4 மீட்டருக்குள்தான் இருக்கும் மேக்னைட். உள்ளே 8.0 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே உண்டு. கிக்ஸில் இருப்பதுபோல் 360 டிகிரி கேமராவும் கொடுத்திருக்கிறார்கள். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல்கள் இருக்கும். மேக்னைட்டும் ஒரு கனெக்ட்டட் கார்தான்.

ஆரம்ப விலையான 5.50 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் வருகிறது மேக்னைட். ஃபோர்டு எக்கோஸ்போர்ட், எக்ஸ்யூவி300, நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா எல்லா எஸ்யூவிகளும் ரெடியா இருங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு