ரேஞ்ச்ரோவர் இவோக் - இப்போது புதிய ப்ளாட்ஃபார்மில், BS6 இன்ஜினுடன் அறிமுகமாகி இருக்கிறது. பழசுக்கும் புதுசுக்கும் என்ன வித்தியாசம்? புதிய இவோக்கின் ஸ்டைலில், இப்போது ஆங்காங்கே ரேஞ்ச்ரோவர் வெலார் தெரிகிறது. கிரில், ஹெட்லைட், முகப்பில் இருக்கும் பம்பர் ஆகியவை இப்போது புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன.

பழைய இவோக்கைவிட புதிய இவோக்கின் ஆரம்ப மாடல் சுமார் மூன்று லட்ச ரூபாய் அதிகம். ஆனால், அதுவே விலை அதிகமான மாடல் என்றால் புதிய இவோக், பழைய இவோக்கைவிட மூன்று லட்சம் குறைவு. இப்போதைக்கு டீசல் மாடல் மட்டும்தான் விற்பனைக்கு வந்திருக்கிறது. பெட்ரோல் மாடல் சிறிது காலம் கழித்துத்தான் விற்பனைக்கு வரும்.

பக்கவாட்டில் இருந்து பார்த்தால், இதன் ப்ரொஃபைல் அப்படியே இருக்கிறது. பின்புறம் இருக்கும் பம்பர் மற்றும் டெயில் லைட் வெலாரின் சாயலில் மாறியிருக்கின்றன. உள்ளலங்காரத்தைப் பொறுத்தவரை மினிமலிஸ்டிக் டிசைன் என்பதுதான் தீம். BS-6 விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 249bhp சக்தியைக் கொடுக்கக்கூடியது. இது 48V மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தோடு பிணைக்கப்பட்டது. 9 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழியாகச் செல்லும் சக்தி, நான்கு வீல்களுக்கும் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

அதுவே 2 லிட்டர் டீசல் இன்ஜினாக இருந்தால், அது 180bhp சக்தியையும், 43kgm டார்க்கையும் வெளிப்படுத்தும்.
.ரேஞ்ச்ரோவர் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை!.
பவர்டு டெயில் கேட், பனோரமிக் சன் ரூஃப், 18 இன்ச் அலாய் வீல், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், 10 இன்ச் டச் ஸ்க்ரீன், JLR கனெக்ட் Pro என்று சிறப்பம்சங்களைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். டெரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் இருப்பதால், பயணிக்கும் பாதையை வைத்தே இந்த கார் தன் சஸ்பென்ஷன் செட்-அப்பை மாற்றியமைத்துக் கொள்ளும். 600 மிமீ அளவுக்குச் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றாலும் இவோக் தாக்குப்பிடிக்கும்.

6 காற்றுப்பைகள், ABS, EBD, குழந்தைகளுக்கான ISOFIX மவுண்ட், பிரேக் அசிஸ்ட், ஹில் அசெண்ட்/டிசெண்ட், ட்ராக்ஷன் கண்ட்ரோல், பார்க்கிங் சென்ஸார், ரியர் கேமரா, லேன் அசிஸ்ட் என்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் பக்கா!

பென்ஸ் GLA, பிஎம்டபிள்யூ X3, ஆடி Q5 ஆகியவற்றுக்குப் போட்டியாகக் களம் இறங்கப்போகும் இவோக் எஸ்யூவிக்கு ஸ்டைலும், சொகுசு வசதிகளும் சாதகமாக இருக்கின்றன. வாடிக்கையாளர்களின் மனதை இவோக் கவருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.