Published:Updated:

செம மைலேஜோடு ட்ரைபரில் ஆட்டோமேட்டிக்!

ஃபர்ஸ்ட் லுக்: ரெனோ ட்ரைபர் AMT

பிரீமியம் ஸ்டோரி

4 மீட்டருக்குள்ள 7 சீட்டரா’ என்று ட்ரைபரை லாஞ்ச் செய்து, புருவம் உயர்த்த வைத்தது ரெனோ. இப்போது அதே ட்ரைபரில், ஆட்டோமேட்டிக் மாடலையும் கொண்டு வந்து, ஆசையைத் தூண்டி விட்டிருக்கிறது.

லாக்டெளன் என்பதால், ஃபர்ஸ்ட் டிரைவுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ட்ரைபர் ஏஎம்டி-யில் என்ன இருக்குனு ஒரு ஃபர்ஸ்ட் லுக் பார்க்கலாம்.

ரெனோ ட்ரைபர் AMT
ரெனோ ட்ரைபர் AMT

அதே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். ஆனால், ஏஎம்டி என்பதுதான் புதுவரவு. அதே 1.0 லிட்டர் 3 சிலிண்டர் NA இன்ஜின்தான்; டர்போ இல்லை. பவர் அதே 72bhp/ டார்க் 9.6kgm. 95bhp பவர் கொண்ட 1.0லிட்டர் டர்போ மாடல், இந்த லாக்டெளனால் தள்ளிப் போய்விட்டது. அதற்கும் வாய்ப்பு உண்டு.

மிடில் க்ளாஸ் மக்களுக்கு ஒரு வாவ் விஷயம் – இதன் அராய் மைலேஜ் கணிசமாக உயர்ந்திருக்கிறது. 20 கி.மீ மைலேஜ் ரேட்டிங் ஆகியிருக்கிறது அராயில். ஆட்டோமேட்டிக் மாடலில் 20 கி.மீ என்பது வரவேற்கத்தக்க விஷயம். ட்ரைபரை ஓட்டிப் பார்த்தால், உண்மை புரிந்து விடும்.

மொத்தம் RXL, RXT, RXZ என 3 வேரியன்ட்களில், 6.18-ல் இருந்து 7.22 வரை எக்ஸ் ஷோரூம் விலையில் வருகிறது ட்ரைபர் AMT. வசதிகள்படி பார்த்தால், மேனுவலில் உள்ள அதே வசதிகள்தான். டாப் மாடலான RXZ-ல் 4 காற்றுப்பைகள், ரியர் கேமரா, பின் பக்க டிஃபாகர்/வைப்பர், LED DRL, 8 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளே, நேவிகேஷன் என்று வசதிகள் அருமை. என்ன, 15 இன்ச் வீல்கள்தான் சின்ன கார்போல் இருக்கிறது.

செம மைலேஜோடு ட்ரைபரில் ஆட்டோமேட்டிக்!

7 சீட்டரில் இருந்து 3 சீட்டராகவும் மாற்றிக் கொள்ளலாம் இந்த ட்ரைபரை. சீட்களை மடக்கிவிட்டால், 1000 லிட்டர் வரை டிக்கியில் இடவசதி கிடைக்கும். எல்லா சீட்களும் நிரம்பினால், 84 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ்தான்.

ட்ரைபர் மேனுவலைவிட சுமார் 44,000 அதிகமாகக் கொடுத்தால், AMT உங்கள் கையில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு