ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

ஐ... 2020 i20 எப்படி இருக்கும்?

ஹூண்டாய் i20
பிரீமியம் ஸ்டோரி
News
ஹூண்டாய் i20

ஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட்: 2020 ஹூண்டாய் i20

ந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி அலை அடித்தாலும், ஒவ்வொரு மாதமும் அதிகமாக விற்பனையாகும் டாப்-10 கார்களில் ஹேட்ச் பேக்குகளுக்குக் கணிசமான இடம் இருக்கவே செய்கிறது.

ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில், இந்த ஆண்டில் அல்ட்ராஸ் வழியே என்ட்ரி கொடுத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். பெலினோ மற்றும் கிளான்ஸா ஆகியவை, BS-6 அவதாரத்தில் கிடைக்கின்றன.

புதிய எலான்ட்ராவை நினைவுபடுத்தும்படியான டேஷ்போர்டு, செம ப்ரீமியமாக இருக்கிறது. அந்த டிஜிட்டல் மீட்டர் செம! 
வென்டிலேட்டட் சீட்கள், வயர்லெஸ் சார்ஜிங், USB/12V பாயின்ட், 6 ஸ்பீடு MT... எல்லாமே இருக்கிறது i20-ல்.
351 லிட்டர் பூட் ஸ்பேஸ் முன்பைவிட அதிகம். கார் அளவில் வளர்ந்திருப்பதால், கூடுதல் இடவசதி கிடைக்கலாம்.
புதிய எலான்ட்ராவை நினைவுபடுத்தும்படியான டேஷ்போர்டு, செம ப்ரீமியமாக இருக்கிறது. அந்த டிஜிட்டல் மீட்டர் செம! வென்டிலேட்டட் சீட்கள், வயர்லெஸ் சார்ஜிங், USB/12V பாயின்ட், 6 ஸ்பீடு MT... எல்லாமே இருக்கிறது i20-ல். 351 லிட்டர் பூட் ஸ்பேஸ் முன்பைவிட அதிகம். கார் அளவில் வளர்ந்திருப்பதால், கூடுதல் இடவசதி கிடைக்கலாம்.

BS-6 ஜாஸின் டீசர்கள் வந்துவிட்ட நிலையில், கொரோனா அதன் அறிமுகத்தைத் தள்ளி வைப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் i20 காரையே BS-6 விதிகளுக்கு ஹூண்டாய் மேம்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்குப் பிறகு, முற்றிலும் புதிய i20-ன் படங்கள், இணைய உலகில் லீக் ஆகி வைரலாகப் பரவின.

சர்வதேச சந்தைகளைத் தொடர்ந்து, இங்கேயும் இதே மாடல்தான் விற்பனைக்கு வரும் என நம்பப்படுகிறது. ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டுக்குப் புத்துணர்ச்சி ஊட்ட வந்திருக்கும் இதன் விவரங்களைப் பார்க்கலாம்.

டிசைன்

புதிய i20-ன் டீசர்களில் இருந்ததுபோலவே, நிஜ மாடலும் செம ஸ்போர்ட்டியாகக் காட்சியளிக்கிறது. தனது லேட்டஸ்ட்டான ‘Sensuous Sportiness’ கோட்பாடுகளின்படி, இந்த ஹேட்ச்பேக்கை ஃப்ரெஷ்ஷாக வடிவமைத்திருக்கிறது ஹூண்டாய். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இருந்த Le Fil Rouge கான்செப்ட்டைத் தொடர்ந்து, இந்த டிசைன் விதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் முதல் ஹேட்ச்பேக் i20தான். LED DRL உடனான ஹெட்லைட்ஸ், பெரிய Cascading கிரில், எலான்ட்ராவில் இருப்பதுபோன்ற முக்கோண வடிவப் பனி விளக்குகள் எனக் காரின் முன்பக்கம் தாழ்வாகவும் முரட்டுத்தனமாகவும் ஈர்க்கிறது. பக்கவாட்டுப் பகுதியில் இருக்கக்கூடிய டைமண்ட் கட் அலாய் வீல்கள், ‘Phantom Black’ ரூஃப், க்ரோம் விண்டோ லைன், சிறிய குவார்ட்டர் கிளாஸ் ஆகியவை செம.

ஹூண்டாய் i20
ஹூண்டாய் i20

பின்பக்கத்தில் LED டெயில் லைட் மற்றும் அவற்றை ஒன்றிணைக்கும் லைட் Bar சூப்பர். அல்ட்ராஸ் போலவே, டெயில்கேட்டின் மேல்பகுதியில் கறுப்பு நிற வேலைப்பாடுகள் உள்ளன. பம்பரில் இருக்கும் Faux Diffuser, புதிய i20-ன் தோற்றத்துக்கு ஈடுகொடுக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தூரத்தில் இருந்து பார்த்தாலும் இது i20தான் என்பதற்கான அடையாளம் காரில் தெரிந்தாலும், அவை முற்றிலுமாகப் புதிதாக உள்ளன.

உத்தேச விலை I ரூ.6-10 லட்ச ரூபாய்
உத்தேச விலை I ரூ.6-10 லட்ச ரூபாய்

உலகச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் i20-யைவிட இது 5 மிமீ அதிக நீளம் (4,040 மிமீ) - 16 மிமீ கூடுதல் அகலம் (1,750 மிமீ) - 24 மிமீ குறைவான உயரம் (1,450 மிமீ) - 10 மிமீ உயர்ந்திருக்கும் வீல்பேஸ் (2,580 மிமீ) என அளவுகளிலும் மாறியிருக்கிறது. இதனால் காரின் பூட் ஸ்பேஸும் 25-70 லிட்டர் வரை ஏற்றம் கண்டுள்ளது (351 லிட்டர்கள்). ஆனால் 4 மீட்டருக்குட்பட்ட இந்திய மாடலின் அளவுகளில் சிற்சில மாற்றங்கள் இருக்கலாம்.

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

வெளிப்புறம் போலவே உட்புறமும் நிறைய மாறியிருக்கிறது. உயரமாக வைக்கப்பட்டிருக்கும் டச் ஸ்க்ரீனுக்குக் கீழே, படுக்கைவசத்தில் இருக்கும் Blade-ல் ஏசி வென்ட்கள் அழகாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கு இணையாக, Door Pad-களிலும் Horizontal Slats இடம்பெற்றுள்ளன. புதிய எலான்ட்ராவை நினைவுபடுத்தும்படியான டேஷ்போர்டு, கேபினை அகலமாகக் காட்டுகிறது. புதிய க்ரெட்டாவில் இருக்கும் அதே லெதர் சுற்றப்பட்ட 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், புதிய i20-யிலும் இருக்கிறது.

ஹூண்டாய் i20
ஹூண்டாய் i20

இரு 10.25 இன்ச் ஸ்க்ரீன்கள், கேபினை ஹை-டெக்காக மாற்றிவிட்டன. ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னே இருக்கும் டிஜிட்டல் மீட்டரை கஸ்டமைஸ் செய்யும் வசதி இருப்பதுடன், டச் ஸ்க்ரீனுக்குக் கீழே சாஃப்ட் டச் பட்டன்கள் உள்ளன. அதுவும் தேர்ந்தெடுக்கும் டிரைவிங் மோடுக்கு ஏற்ப, டிஜிட்டல் மீட்டரின் கலர் மாறுவது அழகு (நீலம் - நார்மல், பச்சை - எக்கோ, ஆரஞ்ச் - ஸ்போர்ட்). Black Mono, Black-Gray, Black Mono & Yellow-Green எனும் 3 ஆப்ஷன்களில் கேபின் வரும்.

ஆடியோ வால்யூமை அட்ஜஸ்ட் செய்வதற்குத் தனியாக ஒரு சிறிய டயல் கொடுக்கப்பட்டுள்ளது. ஹூண்டாயின் வழக்கமான புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி உடன், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. Sub-Woofer மற்றும் 8 ஸ்பீக்கர்களைக் கொண்ட Bose சவுண்ட் சிஸ்டம் இருப்பது நைஸ். இதர ஹூண்டாய் கார்களைப் போலவே, புதிய i20-யிலும் அதிக வசதிகள். வயர்லெஸ் சார்ஜிங், பல்வேறு USB & 12V பாயின்ட்கள், டிரைவிங் மோடுகள், வென்டிலேட்டட் முன்பக்க சீட்கள், Blue LED ஆம்பியன்ட் லைட்டிங், புஷ் பட்டன் ஸ்டார்ட், முன்பக்க ஆர்ம் ரெஸ்ட், கிளைமேட் கன்ட்ரோல், பின்பக்க ஏசி வென்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை அதற்கான உதாரணம்.

விலை குறைவான வேரியன்ட்களில் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இடம் பெறலாம். காரின் பாதுகாப்புக்கு 6 காற்றுப்பைகள், லேன் Following அசிஸ்ட், Intelligent ஸ்பீடு லிமிட்டர், Rear Cross டிராஃபிக் அலெர்ட், பார்க்கிங் Collision Avoidance System, ஃபார்வர்டு Collision வார்னிங் With Pedestrian & Cyclist Detection, Blind Spot Collision Avoidance System - ஆனால் இதில் எவையெல்லாம் இந்திய மாடலில் இருக்கும் எனத் தெரியவில்லை.

இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் என வென்யூவின் இன்ஜின் ஆப்ஷன்கள், அப்படியே i20-ல் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியம் அதிகம். 1.2 லிட்டர் பெட்ரோலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர் டீசலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை ஸ்டாண்டர்டாக எதிர்பார்க்கலாம். 83bhp பவர் - 11.6kgm தரும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல், 0-100 கி.மீ வேகத்தை 13.1 விநாடிகளில் எட்டும் என்கிறது ஹூண்டாய். BS-6 வென்யூ போலவே புதிய i20-ன் டீசல் மாடலும் 100bhp பவர் - 24.5kgm டார்க்கைத் தரலாம். கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆராவில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி 100bhp பவரைத் தருவதால், அநேகமாக i20-ல் வென்யூ போலவே 120bhp - 17.5kgm டியூனிங்கிலேயே இந்த 3 சிலிண்டர் இன்ஜின் வரலாம்.

ஐ... 2020 i20 எப்படி இருக்கும்?

கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுக்கும் இது பொருந்தும் (6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DCT). சர்வதேச மாடலில் இதனுடன் 48V Mild Hybrid சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இது மைலேஜை 3-4% வரை அதிகரிக்கும் என்பது நல்ல விஷயம். இந்த T-GDi இன்ஜின் கொண்ட மாடல், 0-100 கிமீ வேகத்தை வெறும் 10.2 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோலில் 15 இன்ச் வீல்களும், 1.5 லிட்டர் டீசலில் 16 இன்ச் வீல்களும், 1.0 லிட்டர் டர்போவில் 17 இன்ச் வீல்களும் இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. இந்திய மாடலின் பர்ஃபாமன்ஸ் விபரங்களில் நிச்சயம் மாறுதல் இருக்கும்.

புது i20 எப்போ வரும்?

உத்தேசமாக 6-10 லட்ச ரூபாய் வாக்கில் வரப்போகும் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில், தனது மொத்த வித்தையையும் காட்டியிருக்கிறது ஹூண்டாய். டிசைனில் இறங்கி அடித்திருக்கும் இந்த நிறுவனம், கேபினில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மேலும் i20-ன் இந்திய இன்னிங்ஸில் முதன்முறையாக, கார் ஆர்வலர்களுக்குப் பிடித்தமான டர்போ பெட்ரோல் இன்ஜின் இப்போது அறிமுகமாக இருக்கிறது. தனது லேட்டஸ்ட் கார்களில், AHSS பயன்பாட்டைக் கணிசமாக அதிகரித்து வருகிறது ஹூண்டாய். அந்த ரீதியில், புதிய i20-ன் கட்டுமானம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

க்ரெட்டா போலவே பல்வேறு வேரியன்ட்களில் வரப்போகும் i20, வென்யூவைப்போலவே விற்பனையில் வெற்றிக் கொடி நாட்டுமா...? 2020-ம் பிற்பாதியில் (ஜூன் 2020) புதிய i20 களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா குறுக்கிட்டுவிட்டது. இந்த ஆண்டு நடக்கவிருந்த ஜெனிவா மோட்டார் ஷோவில், புதிய i20 வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா அந்த நிகழ்ச்சியையே நடக்கவிடாமல் செய்துவிட்டது.