Published:Updated:

3 இன்ஜின், 5 கியர்பாக்ஸ், 6 வேரியன்ட்... கியாவின் அடுத்த அதிரடி!

கியா சோனெட்
பிரீமியம் ஸ்டோரி
News
கியா சோனெட்

ஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட்: கியா சோனெட்

செல்ட்டோஸ், கார்னிவெல் ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து சோனெட்டைக் களம் இறங்கியிருக்கிறது கியா மோட்டார்ஸ். செல்டோஸ் போலவே பலவிதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், Tech Line & GT Line என இரு ஸ்டைல்களில் அறிமுகமாகி இருக்கும் இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் அப்படி என்ன இருக்கிறது?

டிசைன்

கியா கார்களுக்கே உரித்தான Tiger Nose கிரில், சோனெட்டிலும் இடம்பெற்றுள்ளது. கிரில்லின் இருபுறமும் இருக்கும் மெலிதான LED ஹெட்லைட்களில், Heartbeat LED DRL இடம்பிடித்துள்ளன. அதற்குக் கீழே பனி விளக்குகள். மேலும் ஷார்ப்பான பம்பரின் கீழ்ப்பகுதியில் இருக்கக்கூடிய ஏர் இன்டேக்கில், சில்வர் வேலைப்பாடு - க்ளாஸ். பானெட்டும் Power Buldge உடன் ஸ்போர்ட்டி! காரின் பக்கவாட்டுத் தோற்றம் வழக்கமாகவே உள்ளது.

சோனெட் GT Line கறுப்பு இன்டீரியர் செம ப்ரீமியம். Tech Line மாடல் என்றால், கறுப்பு-பீஜ் டூயல் டோன் கேபின் இருக்கும்.   வென்ட்டிலேட்டட் சீட்கள் உண்டு. வியர்க்கவே வியர்க்காது.  மெலிதான LED ஹெட்லைட்களில் Heartbeat LED DRL-ம் சேர்ந்திருப்பது அழகு.
சோனெட் GT Line கறுப்பு இன்டீரியர் செம ப்ரீமியம். Tech Line மாடல் என்றால், கறுப்பு-பீஜ் டூயல் டோன் கேபின் இருக்கும். வென்ட்டிலேட்டட் சீட்கள் உண்டு. வியர்க்கவே வியர்க்காது. மெலிதான LED ஹெட்லைட்களில் Heartbeat LED DRL-ம் சேர்ந்திருப்பது அழகு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கான்செப்ட் போலவே, கதவு பில்லர்கள் மற்றும் ரூஃப் பகுதி ஆகியவை கறுப்பு நிறத்தில் இருப்பது ஸ்போர்ட்டி டச். Quarter Glass-க்கு மேட்ச்சிங்காக, விண்ட் ஷீல்டின் இருபக்கமும் உள்ள Gloss Black பேனல் பொருத்தப்பட்டுள்ளது. 16 இன்ச் டைமண்ட் அலாய் வீல்களும் கான்செப்ட்டில் இருந்தவையே (215/60 டயர்); ஆரம்ப வேரியன்ட்களில் 195/65 R15 டயர்கள் உண்டு. ஹூண்டாய் வென்யூவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும், கியாவின் காம்பேக்ட் எஸ்யூவி முற்றிலும் வேறுபட்ட காராகவே காட்சியளிக்கிறது.

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

காரின் உட்புறமும் வென்யூவிலிருந்து மாறுபட்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வில், டோர் பேடு, சீட்கள் ஆகியவையே அதற்கான உதாரணம். டேஷ்போர்டின் மேல்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தரம் சூப்பர். கீழ்ப்பகுதியில் கொஞ்சம் இறுக்கமான பிளாஸ்டிக்ஸ் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக கேபின் தரம் நன்றாகவே உள்ளது. Tech Line மாடல் கறுப்பு - பீஜ் டூயல் டோன் கேபின் இருந்தால், GT Line மாடல் கறுப்பு நிற கேபினில் ஸ்போர்ட்டியாக உள்ளது. மற்றபடி ஹூண்டாய் கார்களை விடவும் இங்கே அதிக சிறப்பம்சங்களைப் பார்க்க முடிகிறது. 7 ஸ்பீக்கர்களைக் கொண்ட Bose சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள் அதனை உறுதிபடுத்துகின்றன. காம்பேக்ட் எஸ்யூவிகளிலேயே பெரிய டச் ஸ்க்ரீன் (10.25 இன்ச்), சோனெட்டில் இடம் பிடித்துள்ளது. இதில் Uvo கனெக்ட்டிவிட்டி Suite, சாட்டிலைட் நேவிகேஷன், Sound Mood Lights போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன (செல்ட்டோஸில் இருப்பதுதான்). கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, சன்ரூஃப், TPMS, கூல்டு வயர்லெஸ் சார்ஜிங், முன்/பின் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ ஹெட்லைட்ஸ் & வைப்பர்கள், எலெக்ட்ரிக் மிரர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற பல சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கு 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, ESC, HAC, VSM, பிரேக் அசிஸ்ட் ஆகியவை உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மேலும் முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், வயர்லெஸ் சார்ஜிங், ESC, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற வசதிகள், விலை அதிகமான GTX+ல் மட்டுமே கிடைக்கின்றன! போதுமான குஷனிங்குடன் இருக்கும் சீட்கள், சொகுசாக இருக்கும் என நம்பலாம். காரின் அளவுகள் வென்யூ போலவே அமைந்திருப்பதால், எதிர்பார்த்தபடியே அதிலிருக்கும் இடவசதிதான் சோனெட்டிலும் கிடைக்கும். 392 லிட்டர் பூட் ஸ்பேஸில், பொருள்களை வைப்பதற்குப் போதுமான இடம் இருக்கிறது. டிரைவரைச் சுற்றியே இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், டச் ஸ்க்ரீன், ஸ்டீயரிங் வீல் பொசிஷன் செய்யப்பட்டுள்ளதால், சீட்டிங் பொசிஷன் கச்சிதமாக அமைந்திருக்கிறது. ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் பிடிப்பதற்கு வாட்டமாக உள்ளதுடன், சோனெட்டில் MID உடனான டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் உள்ளது. ஆர்பிஎம் மீட்டர் அனலாக்கில் இருந்தாலும், அது கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம். டர்போ DCT மாடலில் டிரைவிங் மோடுகள், டிராக்‌ஷன் கன்ட்ரோல், ESC, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மற்றபடி MT/AT என எதுவாக இருப்பினும், ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் & ஏசி Pre Cooling ஆகிய வசதிகள் இருப்பது ப்ளஸ்.

கியா சோனெட்
கியா சோனெட்

இன்ஜின் - கியர்பாக்ஸ்

டிசைன் மற்றும் கேபினில் பலத்த வித்தியாசங்கள் இருந்தாலும், இந்த ஏரியாவில் வென்யூவுக்கும் சோனெட்டுக்கும் அதிக ஒற்றுமைகள் உள்ளன. 83bhp பவர் - 11.5kgm டார்க் - 18.4கிமீ அராய் மைலேஜைத் தரும் 1.2 லிட்டர், 4 சிலிண்டர் NA பெட்ரோல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அராய் மைலேஜை வெளிப்படுத்தும் பெட்ரோல் - மேனுவல் காம்போ கொண்ட காம்பேக்ட் எஸ்யூவியாக சோனெட் பெயர் பெற்றிருக்கிறது. இதுவே 120bhp பவர் - 17.2kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் T-GDi, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், இரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கிறது. ஒன்று 6 ஸ்பீடு iMT என்றால் (18.2கிமீ அராய் மைலேஜ்), மற்றொன்று 7 ஸ்பீடு DCT ஆகும் (18.3கிமீ அராய் மைலேஜ்). எனவே டர்போ பெட்ரோல் - மேனுவல் கூட்டணியில் ஹூண்டாய் குழுமத்தில் இருந்து காம்பேக்ட் எஸ்யூவி வேண்டும் என்றால், வென்யூதான் ஒரே சாய்ஸ். டீசல் இன்ஜின் விஷயத்தில் ஹூண்டாயைவிட ஒரு படி முன்னால் நிற்கிறது கியா மோட்டார்ஸ்.

கியா சோனெட்
கியா சோனெட்

ஆம், வென்யூவில் இல்லாத டீசல் ஆட்டோமேட்டிக் இணை, சோனெட்டில் கிடைப்பது கவனிக்கத்தக்கது. போட்டி டீசல் AT கார்களில் AMT கியர்பாக்ஸே இருக்கும் நிலையில், கியாவில் டார்க் கன்வெர்ட்டர் இருப்பது பெரிய ப்ளஸ். இந்த 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி, 100bhp பவர் - 24kgm டார்க் - 24.1கிமீ அராய் மைலேஜைத் தரும் டியூனிங்கில் வருகிறது. இதுவே டீசல் ஆட்டோமேட்டிக் காம்போ என்றால், அது செல்ட்டோஸில் இருக்கும் அதே செட்-அப் தான்! அதாவது 115bhp பவர் - 25kgm டார்க் - 19கிமீ அராய் மைலேஜைத் தரும்படி டியூன் செய்யப்பட்டுள்ள டீசல் இன்ஜின், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. எப்படிப் பார்த்தாலும், 3 விதமான இன்ஜின் மற்றும் 5 விதமான கியர்பாக்ஸுடன் வரும் சோனெட்டின் அராய் மைலேஜ், வென்யூவைவிட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். (டீசல் ஆட்டோமேட்டிக் மாடலின் அராய் மைலேஜ், போட்டியாளர்களைவிட 3.4 கிமீ வரை குறைவு.)

3 இன்ஜின், 5 கியர்பாக்ஸ், 6 வேரியன்ட்... கியாவின் அடுத்த அதிரடி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் தீர்ப்பு

இந்த காரின் முதல் 3 வேரியன்ட்களில் மட்டுமே, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடலை வாங்க முடியும். 1.0 லிட்டர் T-GDi iMT காம்போ, கடைசி 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதுவே 1.0 லிட்டர் T-GDi DCT மற்றும் 1.5 லிட்டர் CRDi VGT AT மாடல்கள், 2 வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் மொத்தமுள்ள 6 வேரியன்ட்களிலும், 1.5 லிட்டர் CRDi MT மாடலை வாங்க முடியும் என்பது ஆறுதல். வென்யூ தவிர எக்கோஸ்போர்ட், விட்டாரா பிரெஸ்ஸா, நெக்ஸான், XUV 3OO, விரைவில் வரவிருக்கும் அர்பன் க்ரூஸர், மேக்னைட், Kiger ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது கியா சோனெட்.

கியா சோனெட்
கியா சோனெட்

ஸ்போர்ட்டியான டிசைன், பலதரப்பட்ட இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், அதிகப்படியான வசதிகள், சிறப்பான ஒட்டுமொத்தத் தரம் என அசத்தும் இந்த காம்பேக்ட் எஸ்யூவி, வென்யூவைவிடக் கொஞ்சம் அதிக விலையில் வருவதற்கான சாத்தியம் இருக்கிறது (உத்தேசமாக 7-13 லட்ச ரூபாய், எக்ஸ்-ஷோரூம் விலை). ஆனால் அதனை நியாயப்படுத்தும்படி பல்வேறு First in Class வசதிகள், ப்ரீமியமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்த கியா காரை ஓட்டிப் பார்க்க, உங்களைப்போல நாங்களும் ஆர்வமாகவே இருக்கிறோம்!