Published:Updated:

இது ஃபோக்ஸ்வாகனின் மிட்சைஸ் எஸ்யூவி!

ஃபோக்ஸ்வாகன் டைகூன்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் டைகூன்

ஃபர்ஸ்ட் லுக் | ஃபோக்ஸ்வாகன் டைகூன்

இது ஃபோக்ஸ்வாகனின் மிட்சைஸ் எஸ்யூவி!

ஃபர்ஸ்ட் லுக் | ஃபோக்ஸ்வாகன் டைகூன்

Published:Updated:
ஃபோக்ஸ்வாகன் டைகூன்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் டைகூன்

ஒரு பக்கம் தேர்தல், இன்னொருபக்கம் கொரோனா என்று நாடு அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் `கண்டா வரச் சொல்லுங்க' என்றும் `என்ஜாய்... எஞ்சாமி’ என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் காற்றுவெளி அதிர்விசைகளால் நிறைந்திருக்கிறது. இத்தனை அதகளத்துக்கும் நடுவே ஃபோக்ஸ்வாகன் எக்கச்சக்க அளப்பரைகளோடு புதிய டைகூன் எஸ்யுவி மீது மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கியதோடு அல்லாமல், உள்ளே உட்கார்ந்து ஃபீல் செய்யவும் வாய்ப்பு கொடுத்தது. (இங்கே இருப்பது அந்தப் படங்கள் அல்ல!)


இந்தியா 2.0 என்ற புதிய அடையாளத்துடன் புது உத்வேகமெடுத்து வந்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். அதைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் சூப்பர் ஸ்டார் இந்த டைகூன்தான். அதன் கவனமும் இப்போது எஸ்யூவி ஏரியாவில்தான். போக்ஸ்வாகன் விளம்பரங்களில் எல்லாம் `SUVW ஸ்ட்ராட்டஜி' என்ற எழுத்துக்கள்தான் மிரட்டுகின்றன. ஃபோக்ஸ்வாகனின் பட்டறையில், டி-ராக் மற்றும் டிகுவான் ஆல்-ஸ்பேஸ் ஆகிய இரண்டு எஸ்யூவிக்கள் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்றன். டிகுவான் 5 சீட்டர் வேரியன்ட்டும் வெகு விரையிலேயே விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த மூன்று எஸ்யூவிகளோடு ஒப்பிட்டால், டைகூன்தான் மிகச் சிறிய எஸ்யூவி. சிறியது என்றாலும் TSI இன்ஜின் இருப்பதால் சீறும் என்றே தோன்றுகிறது.ஃபோக்ஸ்வாகன் எஸ்யூவிகளில்தான் டைகூன் சிறியதே ஒழிய, இதன் களம், மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட் என்பதால், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்ட்டோஸ், நிஸான் கிக்ஸ் ஆகியவைதான் இதற்குப் போட்டி. டிகுவான் உற்பத்தியாகும் அதே MQB பளாட்ஃபார்மில்தான் இதுவும் உற்பத்தி செய்யப்படுகிறது. 4.2 மீட்டர் நீளம், 2.6மீ வீல்பேஸ். ஆனாலும், பார்வைக்கு இது சிறியது மாதிரிதான் தோன்றுகிறது.

வெளித்தோற்றம்:

க்ரெட்டா, செல்ட்டோஸ் ஆகியவற்றின் பக்கத்தில் இதை நிறுத்திப் பார்த்தாலும் டைகூன் சைஸில் சிறியதாகத்தான் தெரிகிறது. ஆனால், ஃபோக்ஸ்வாகனுக்கே உரிய அத்தனை அம்சங்களும் கொண்ட டைகூனில் ஃபோக்ஸ்வாகனின்புதிய VW என்ற மாற்றியமைக்கப்பட்ட லோகோ ஜொலிக்கிறது. இரண்டு ஹெட்லைட்ஸையும் இணைப்பதைப்போன்று அமைந்திருக்கும் கிரில் டிசைன் சூப்பர். வெளிப்புற டிசைனில் வழக்கமாக அடக்கியே வாசிப்பதுதான் ஃபோக்ஸ்வாகன் ஸ்டைல் என்றாலும், டைகூனில் பானெட்டில் க்ரீஸ் கோடுகள் அழுத்தம் திருத்தமாக இருக்கின்றன. அதேபோல காரின் இருபக்கக் கதவுகளையும் கடந்து பயணிக்கும் க்ரீஸ் கோடுகளில் தென்படும் வீரியம் கவர்கிறது. ஃபோக்ஸ்வாகனின் விலை உயர்ந்த வேரியன்ட்டில் இருக்கும் GT என்ற எழுத்துக்கள் அதன் மதிப்பை உயர்த்துகின்றன. டெயில் லைட்ஸ் இருபக்கமும் நீண்டு ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்வதுபோல வடிவமைக்கப் பட்டிருப்பதும் அழகு. ஷார்க் ஃபின் ஆன்ட்டெனா, ஸ்பாய்லர் ஆகியவை கச்சிதமாக இருந்தாலும், கவர்ச்சியாக இருக்கின்றன.

டேஷ்போர்டு
டேஷ்போர்டு


உள்ளலங்காரம்:

டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், சீட்டுகள், டோர் பேடுகள் என்று உள்ளே எந்தப் பக்கம் திரும்பினாலும் ஃபோக்ஸ்வாகனுக்கே உரிய தரம் தென்படுகிறது. அதிலும் டைகூனில், தரம் சற்று தூக்கலாக, அதாவது ப்ரிமீயமாக இருக்கிறது. 10 இன்ச் டச் ஸ்கீரின், ஆம்பியன்ட் லைட்டிங், வென்டிலேட்ட சீட்ஸ், சன்ரூஃப் என்று தேவையான வசதிகளை ஃபோக்ஸ்வாகன் வழங்கியிருக்கிறது. சீட்டுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் குஷன் அதிக இறுக்கமாகவும் இல்லாமல், தளர்ச்சியாகவும் இல்லாமல் சரியான அளவில் இருப்பதால், நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தாலும் களைப்பு தெரியாது.

பின் சீட்டுகளைப் பொறுத்தவரை இரண்டு பேர் வேண்டுமானால் தாராளமாக உட்காரலாம். இரண்டு இருக்கைகளுக்கும் இடையே இருக்கும் ஆர்ம் ரெஸ்ட்டை மடக்கிவிட்டால், நடுவில் மூன்றாவது ஆள் கூட உட்காரலாம். ஆனால் கால் வைக்கும் இடத்தில் டனல் மேடு இருப்பதால், சற்று அசெளகரியாக இருக்கும். கச்சிதமான கார் என்பதால் தண்ணீர், பாட்டில்கள் மற்றும் பொருட்களை வைக்க ஓரளவுக்குத்தான் இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

பாதுகாப்பு:

ஃபோக்ஸ்வாகன் என்றாலே ஓட்டுநர்களுக்கு உற்சாகம் வந்துவிடும். அதற்கு இந்த இன்ஜின் உற்பத்தி செய்யும் சக்தியின் அளவு மட்டுமே காரணமில்லை. இதன் நிலைத்தன்மை, குறைந்த பாடிரோல், எல்லாவற்றுக்கும் மேலாக இதில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள். 6 ஏர்பேக்ஸ், ESP வசதி, டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் டிஸென்ட் கண்ட்ரோல் மற்றும் குழந்தைகளுக்கான சீட்டுகளைப் பொருத்த ISOFIX கொக்கிகள் ஆகியவை இதில் உண்டு.

6 ஏர்பேக்ஸ்
6 ஏர்பேக்ஸ்


இன்ஜின்


பெட்ரோலுக்கும் டீசலுக்கும் இடையேயான விலை வித்தியாசம் குறைந்து கொண்டே வந்தாலும்கூட, மிட் சைஸ் செக்மென்ட்டில் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான டிமாண்ட் கணிசமாக இருக்கிறது. ஆனால், ஃபோக்ஸ்வாகன் அதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அது பெட்ரோல் இன்ஜின்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. 115 bhp சக்தி மற்றும் 17.5kgm டார்க்கை கொடுக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் TSI இன்ஜின்தான் இதை இயக்குகிறது. இந்த பவர் போதாது என்கிறவர்களுக்கு 150 bhp சக்தியையும், 25kgm டார்க்கையும் வழங்கும் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் TSI இன்ஜின் ஆப்ஷனும் உண்டு.

இதன் ஓட்டுதல் அனுபவம், ஹேண்ட்லிங், சஸ்பென்ஷன், மைலேஜ் எல்லாம் எப்படி இருக்கிறது என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். கண்களைக் கவர்ந்திழுக்கும் டைகூன், எல்லோருடைய கவனத்தையும் கவருமா என்பது இதையெல்லாம் பொருத்தே இருக்கிறது.இது ஃபோக்ஸ்வாகனின் மிட்சைஸ் எஸ்யூவி!முன் பக்கம் வென்டிலேட்டட் சீட்டுகள்...ஃபோக்ஸ்வாகனின் தரம் அருமை. ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் சூப்பர். 6 காற்றுப்பைகள் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism