முன்பைவிட 20 - 45 ஆயிரம் ரூபாய் அதிக விலையில் அறிமுகமாகியுள்ளது, டாடா டியாகோ BS-6. இதன் முன்பக்கம் அப்படியே அல்ட்ராஸ்தான்! Tri Arrow Pattern Elements - பியானோ பிளாக் வேலைப்பாடுகள் கொண்ட மெலிதான கிரில், ஹெட்லைட்டுக்குக் கீழே 'Humanity Line'- போன்ற க்ரோம் பட்டை, ஏர் டேம் - பனி விளக்குகளின் புது டிசைன் போன்றவைதான் BS-6 டியாகோவின் அடையாளம். BS-4 டியாகோவின் XZ+ வேரியன்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட் இருந்த நிலையில், BS-6 மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட்டுக்கு யூ-டர்ன் அடித்துவிட்டது டாடா. பாதசாரிகளின் பாதுகாப்பு விதிகளுக்கேற்ப, பானெட்டின் உயரத்தை ஏற்றியிருக்கிறார்கள்.

பின்பக்க பம்பர் மற்றும் டெயில் லைட்டின் பூமராங் வடிவத்தைத் தாண்டி, எந்த மாற்றமும் இல்லை. 19 மிமீ அதிக நீளம் (3,765மிமீ), 30மிமீ கூடுதல் அகலம் (1,677மிமீ) என அளவுகளில் மாறியிருக்கும் டியாகோவில் XM மற்றும் XMA நீக்கப்பட்டு, XZ+ Dual Tone சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ரூஃப்-க்கு மேட்ச்சிங்காக பியானோ பிளாக் ரியர்வியூ மிரர்கள் உள்ளன. கேபினில் Tri Arrow Pattern-யை நினைவுபடுத்தும் சீட் அப்ஹோல்சரி, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் (உபயம்: அல்ட்ராஸ்) ஆகியவை புதிது. 1.2 லிட்டர் Revotron BS-6 பெட்ரோல் இன்ஜின், 86bhp பவர் (1bhp அதிகம்) - 11.3kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது (0.01kgm குறைவு, rpm-மும் மாறியிருக்கிறது).

இந்த 3 சிலிண்டர் இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல்/AMT ஆப்ஷன்கள் தொடர்கின்றன. BS-4 மாடலைவிட, இந்த டியாகோவின் மைலேஜ் (அராய்) 4 கி.மீ அடிவாங்கியிருக்கிறது. முன்பிருந்த 1.1 லிட்டர் Revotorq டீசல் இன்ஜினை, BS-6 விதிகளுக்கேற்ப டாடா அப்டேட் செய்யவில்லை. Global NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், Adult Occupancy Protection (12.52/17 - 4 Stars) மற்றும் Child Occupancy Protection (34.15/49 - 3 Stars) பெற்ற டியாகோ, ஒட்டுமொத்தமாக 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது! ஆனால் ``பாடி ஷெல் (கூடு) கொஞ்சம் நிலையற்றதாக இருக்கிறது. டிரைவர் கால் வைக்கும் பகுதியில் இன்னும் வலிமை வேண்டும்’’ என டியாகோவின் கட்டுமானத்தைப் பற்றி, Global NCAP கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால் முன்பக்கப் பயணிகளின் கழுத்து மற்றும் தலைப்பகுதியில், நல்ல பாதுகாப்பு இருக்கிறது.

டியாகோவில் ISOFIX பாயின்ட் இல்லாவிட்டாலும், பின்பக்கத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு போதுமானதாக இருப்பது செம! இரண்டிலுமே 2 காற்றுப்பைகள், ABS, EBD, CSC, முன்பக்க சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர்ஸ், பின்பக்க பார்க்கிங் சென்ஸார் ஆகிய பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக இருக்கின்றன. வேரியன்ட்டுக்கு ஏற்ப, காரின் எடையில் முன்பைவிடக் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது.

டியாகோவின் டாப் வேரியன்ட்டான XZ+ல் ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் ப்ளே உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 8 ஸ்பீக்கர் ஹர்மான் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் மீட்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, டிரைவிங் மோடுகள், 15 இன்ச் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் ரியர்வியூ மிரர்கள், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், பாடி கலர் ஏசி வென்ட்டுடன் கூடிய கேபின், டிரைவிங் மோடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. டட்ஸன் கோ, செலெரியோ, வேகன்-ஆர், சான்ட்ரோ ஆகிய கார்களுடன் டியாகோ BS-6 போட்டி போடுகிறது. இதில் மாருதி சுஸூகியின் தயாரிப்புகள் BS-6 அவதாரத்தில் வந்துவிட்டன. டட்ஸனும் ஹூண்டாயும் இனிமேல்தான் BS-6க்கு மாறவுள்ளன.