Published:Updated:

அட... நெக்ஸானில் எலெக்ட்ரிக்!

டாடா நெக்ஸான் EV
பிரீமியம் ஸ்டோரி
டாடா நெக்ஸான் EV

ஃபர்ஸ்ட் லுக்: டாடா நெக்ஸான் EV

அட... நெக்ஸானில் எலெக்ட்ரிக்!

ஃபர்ஸ்ட் லுக்: டாடா நெக்ஸான் EV

Published:Updated:
டாடா நெக்ஸான் EV
பிரீமியம் ஸ்டோரி
டாடா நெக்ஸான் EV

லெக்ட்ரிக் கார்களுக்கென டாடா பிரத்யேகமாகத் தொடங்கி இருக்கும் Ziptron பிராண்டின் முதல் தயாரிப்பாக, நெக்ஸான் EV மாடல் வரப் போகிறது. நெக்ஸானில் இருந்து இந்த கார் எப்படி வேறுபட்டிருக்கிறது?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிசைன்

காரின் முன்பக்கம் கொஞ்சம் உயரமாகியிருக்கிறது. இதற்கு அக்டோபர் 2020-ல் கட்டாயமாகும் Pedestrian Protection விதிகளே காரணம். முன்பிருந்ததைவிட மெலிதான கிரில், பெரிய Airdam உடனான பம்பர் ஆகியவை புதிது. காரின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எடை மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப்பில் மாறுதல் இருக்கலாம்.

 ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் புதிது. ,  சீட்கள் முன்பைப்போலவே சொகுசாக இருக்கின்றன.
ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் புதிது. , சீட்கள் முன்பைப்போலவே சொகுசாக இருக்கின்றன.

கறுப்பு - பீஜ் டூயல் டோன் கேபினில் புதிய அம்சங்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன. வழக்கமான மாடலில் இருக்கும் கியர் லீவருக்குப் பதிலாக இங்கே டயல் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்திலும் நீல நிற ஃபினிஷ் இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

3 வேரியன்ட்களில் வரப்போகும் நெக்ஸான் EV-ல், பழைய வசதிகள் அப்படியே தொடர்கின்றன. கூடவே ஆட்டோ ஹெட்லைட்/வைப்பர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 30 விதமான கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவிங் மோடுகள் (Drive, Sport), ஹில் ஹோல்டு அசிஸ்ட் உண்டு.

அட... நெக்ஸானில் எலெக்ட்ரிக்!
அட... நெக்ஸானில் எலெக்ட்ரிக்!

எலெக்ட்ரிக் மோட்டார்

30.2kWh லித்தியம் ஐயன் பேட்டரி - 129bhp பவர் மற்றும் 24.5kgm டார்க்கைத் தரும் Permanent Magnet Synchronous வகை எலெக்ட்ரிக் மோட்டார் - Single Ratio கியர்பாக்ஸ் அமைப்பு ஆகியவைதான், எலெக்ட்ரிக் நெக்ஸானின் பவர்ட்ரெயின்.

0-60 கி.மீ வேகத்தை 4.6 விநாடிகளிலும், 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளிலும் கார் எட்டும் என்றும், சிங்கிள் சார்ஜில் 300-க்கும் அதிகமான கி.மீ தூரம் கார் செல்லும் எனவும் டாடா தெரிவித்துள்ளது.

வழக்கமான AC சார்ஜிங் உடன், DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உண்டு. இதில் 0-80% பேட்டரியை சார்ஜ் செய்ய, ஒரு மணி நேரமே போதும். வழக்கமான 15A சார்ஜரைப் பயன்படுத்தும்போது, ஃபுல் சார்ஜ் ஏற்ற 8-9 மணிநேரம் ஆகும்.

 DC/AC என இரண்டு சார்ஜிங் பாயின்ட்டும் உண்டு. ,  இதுபோன்ற நீல நிற ஃபினிஷ், கேபினில் பார்க்க அழகு.
DC/AC என இரண்டு சார்ஜிங் பாயின்ட்டும் உண்டு. , இதுபோன்ற நீல நிற ஃபினிஷ், கேபினில் பார்க்க அழகு.

கார் Coasting பாணியில் இயங்கும்போது, அதில் இருக்கும் Energy Regeneration வசதி, பேட்டரிக்கு மின்சாரத்தை அனுப்பும். எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரிக்கு 8 வருடம்/1,60,000 கிமீ வாரன்ட்டி கொடுத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

பேட்டரி ஃப்ளோருக்குக் கீழே இருப்பதால், காரில் 5 பேருக்கான இடவசதி முன்பைப்போலவே கிடைக்கும். இதனால் வாகனத்தின் Centre Of Gravity குறைவாக இருக்கும் என்பதுடன், காரின் ஓட்டுதல் அனுபவத்தில் முன்னேற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. எலெக்ட்ரிக் நெக்ஸானின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 4 மிமீ குறைந்துவிட்டது (205 மிமீ).

15-17 லட்ச ரூபாய்க்குக் களமிறங்கப்போகும் இந்த மாடலை, 21,000 ரூபாய் செலுத்தி டாடாவின் டீலர்களில் புக் செய்யலாம்.

கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான கி.மீ தூரம் இந்த காரை டெஸ்ட் செய்துள்ளது டாடா. பெட்ரோல்/டீசல் இன்ஜின் கொண்ட வாகனங்களின் ரன்னிங் காஸ்ட்டில் 20% (1/5 பகுதி) மதிப்பிலேயே நெக்ஸான் EV-யை ஓட்ட முடியும் என்பது ஒரு சந்தோஷமான செய்தி.