இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட கார் எனப் பெயர்பெற்ற டாடாவின் நெக்ஸான், இதுவரை எந்தப் பெரிய மாற்றத்தையும் பார்க்கவில்லை. இதில் டாடா தொடர்ச்சியாகச் சில ஸ்பெஷல் எடிஷன்கள் மற்றும் கூடுதல் வசதிகளை அப்டேட் செய்துகொண்டே இருந்தாலும், டிசைனில் கை வைத்ததே இல்லை. ஆனால் இப்போது முதல் முறையாக, ஃபேஸ்லிஃப்ட் வடிவில் விற்பனைக்கு வந்திருக்கிறது BS-6 நெக்ஸான்.

சில்அவுட்டில் பார்த்தால், நெக்ஸானின் வடிவத்தில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் டிசைனில் நிறையவே மாறியிருக்கிறது. உதாரணத்துக்கு, இதன் முன்பக்கத்தில் இருந்த பெரிய ஹெட்லைட் யூனிட்டுக்குப் பதிலாக, இப்போது மெல்லிய ஹெட்லைட் இருக்கிறது. முன்பைப் போலவே புரொஜெக்டர் பல்ப் மற்றும் LED DRL இருக்கின்றன.

இதில் புதுமை என்னவென்றால், DRL தான் இண்டிகேட்டராகவும் செயல்படும்! முன்பக்க பம்பரை Tri Arrow Pattern வைத்து நிரப்பியிருக்கிறார்கள். அங்கு மட்டுமில்லை... ஹெட்லைட் இணையும் இடம், டெயில் லைட்ஸ், ஃபாக் லைட் ஹவுசிங் என எங்கு பார்த்தாலும் இந்த அம்புக்குறி டிசைன்தான். பெரிய ஏர் இன்டேக், வெளிர் நிற ஸ்கிட் பிளேட் மற்றும் அலாய் வீலின் டிசைன் ஆகியவை ஃபேஸ்லிஃப்ட்டில் புதுவரவு.

பாதசாரிகள் பாதுகாப்பு விதிகளுக்கேற்ப, தட்டையான பானெட்டின் உயரத்தைக் கூட்டியுள்ளார்கள். நெக்ஸான் EV மற்றும் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு இடையில் இருக்கும் வித்தியாசம், வெளிப்புறத்தில் இருக்கும் நீல நிற வேலைப்பாடுகள் மட்டும்தான். கேபினுக்கு உள்ளேயும் நிறைய மாற்றங்கள் உண்டு. அனலாக் டிஜிட்டல் மீட்டருக்குப் பதிலாக, டியாகோவில் இருக்கும் ஃபுல் டிஜிட்டர் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்டியான ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் (அல்ட்ராஸில் இருப்பதுதான்) மற்றும் வெளிர்நிற இன்டீரியர் வேலைப்பாடுகள் எனக் கேபினில் மாற்றங்கள் பளிச்சிடுகின்றன. இதன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் இரண்டுமே, BS-6 விதிமுறைக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது.

பழைய இன்ஜின்களுடன் ஒப்பிடும்போது, அராய் மைலேஜில் முன்னேற்றம் இருப்பது செம. பெட்ரோல் மாடல் அதே 110bhp பவர் - 17kgm டார்க் தருகிறது. டீசல் மாடல் 110bhp - 26kgm டார்க் தருகிறது. பெட்ரோல் மாடல் 6.95 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) ரூபாயில் இருந்தும் (முன்பை விட 22,000 ரூபாய் விலை அதிகம்), டீசல் மாடல் 8.45 லட்சம் ரூபாயிலிருந்தும் (முன்பை விட 56,000 ரூபாய் அதிகம்) தொடங்குகின்றன. ஆரம்ப வேரியன்ட்டிலேயே 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், முன்பக்க பவர் விண்டோஸ், ESP மற்றும் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் வந்துவிடுகிறது.

டாப் வேரியன்ட்களில் பின்பக்க ஏசி வென்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 7 இன்ச் டச் ஸ்கிரீன், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் வைப்பர் மற்றும் ஹெட்லைட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் வருகின்றன. எக்கோஸ்போர்ட், வென்யூ, XUV300, விட்டாரா பிரெஸ்ஸா போன்ற காம்பேக்ட் எஸ்யூவிகள், அலெர்ட்டாக வேண்டிய நேரம் இது.