டிகோர் BS-6, பழைய மாடலை விட 10,000 ரூபாய் மட்டுமே விலை உயர்ந்திருக்கிறது. இதன் முன்பக்கமும் அல்ட்ராஸ்தான். டியாகோ போலவே இதிலும் Tri Arrow Pattern Elements, Humanity Line எனும் க்ரோம் பட்டை போன்ற சில விஷயங்கள் இருக்கின்றன. புரொஜெக்டர் ஹெட்லைட் தொடர்ந்தாலும், LED DRL புதுசு.

டியாகோவிலிருந்து டிகோரை வேறுபடுத்திக் காட்ட, சில உதாரணங்கள் உண்டு. அதிக க்ரோம் வேலைப்பாடுகள் (முன்பக்கம், கதவுக் கைப்பிடிகள், விண்டோ லைன்).

பியானோ பிளாக் ஃபினிஷில் உள்ள ரியர்வியூ மிரர்கள் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்ட்டெனா ஆகியவை இருந்தாலும், ரூஃப் - பாடி கலரில்தான் உள்ளது. அதேபோல க்ளியர் லென்ஸ் டெயில் லைட்டில், LED எட்டிப் பார்க்கிறது. புதிய முன்பக்க பம்பரில் இருக்கும் ஏர் டேம் மற்றும் பனி விளக்குகளின் தோற்றம் மாறியுள்ளது.

பாதசாரிகளின் பாதுகாப்பு விதிகளுக்கேற்ப, இதிலும் பானெட் வடிவமைப்பில் மாற்றம் தெரிகிறது. அதே 15 இன்ச் அலாய் வீல்கள்தான்! பின்பக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. எலெக்ட்ரானிக் டெயில்கேட் வசதி புதுசு. BS-6 டிகோரில் XZA-க்குப் பதிலாக XMA வழங்கப்பட்டுள்ளது. குறைவான விலையில் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் வேண்டும் என்பவர்களை இது திருப்திப்படுத்தும். கேபினில் சீட் அப்ஹோல்சரி, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் (நெக்ஸானில் இருப்பதுதான்), ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவை புதிது.

1.2 லிட்டர் Revotron BS-6 பெட்ரோல் இன்ஜினில் இருப்பது 86bhp பவர் (1bhp அதிகம்) மற்றும் 11.3kgm டார்க். (0.01kgm குறைவு, ஆர்பிஎம்மும் மாறியிருக்கிறது) 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT ஆப்ஷன்கள் அதே! டியாகோ போலவே டிகோரிலும் சிட்டி & எக்கோ டிரைவிங் மோடுகள் தொடர்கின்றன.

பாதுகாப்பில் அப்படியே டியாகோதான். Global NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், டியாகோ போலவே டிகோருக்கும் 4 ஸ்டார்தான். Global NCAP-ன் கட்டுமானத் தரம் பற்றிய அந்த ஸ்டேட்மென்ட் டிகோருக்கும் பொருந்தும். 2 காற்றுப்பைகள், ABS, EBD, CSC, முன்பக்க சீட்பெல்ட் ப்ரீ டென்ஷனர்ஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இதில் ஸ்டாண்டர்டு.

டிகோரின் டாப் வேரியன்ட்டான XZ+ல் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்களைக் கொண்ட ஹர்மான் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் மீட்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, டிரைவிங் மோடுகள், 15 இன்ச் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக்கலாக மடிக்கக்கூடிய ரியர்வியூ மிரர்கள், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், பாடி கலர் வேலைப்பாடுகளுடன் கூடிய கேபின், LED DRL உடனான புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், எலெக்ட்ரிக் டெயில்கேட், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவை உள்ளன.

ஆரா, டிசையர், அமேஸ், ஆஸ்பயர், வென்ட்டோ ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது டிகோர். இதில் ஆரா மற்றும் டிசையர், BS-6 அவதாரத்தில் வந்துவிட்டன. இதர கார்கள் இனிமேல்தான் BS-6க்கு மாறவிருக்கின்றன. டிகோரின் அராய் மைலேஜ் பற்றிய எந்தவிதமான அறிவிப்பையும் டாடா வெளியிடவில்லை.