Published:Updated:

பிரெஸ்ஸா... டொயோட்டா பேட்ஜில்!

ஃபர்ஸ்ட் லுக்: டொயோட்டா அர்பன் க்ரூஸர்

பிரீமியம் ஸ்டோரி
பெலினோவிலிருந்து எப்படி கிளான்ஸா உருவானதோ, அதே பாணியில் விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து அர்பன் க்ரூஸர் எனும் கார் வெளிவருகிறது.

தனது லேண்ட்க்ரூஸர் எஸ்யூவிகளை நினைவுபடுத்தும்விதமாக இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் தோற்றத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது டொயோட்டா. Twin Slat க்ரோம் கிரில்லில், லேசாக ஃபார்ச்சூனர் சாயல் தெரிகிறது. மேலும் Faux Bull Bar & Faux Skid Plate ஆகியவற்றை உள்ளடக்கிய முன்பக்க பம்பர் கட்டுமஸ்தாகக் காட்சியளிக்கிறது. மற்றபடி LED DRL உடனான ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் மற்றும் LED பனி விளக்குகள் ஆகியவை, நாம் விட்டாரா பிரெஸ்ஸாவில் பார்த்ததுதான். பக்கவாட்டுப் பகுதியில் புதிய 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களைத் தவிர எந்த மாறுதலும் இல்லை. பிரெஸ்ஸா போலவே அர்பன் க்ரூஸரிலும் ரூஃப், பில்லர்கள், வீல் ஆர்ச், பம்பர்கள் என டூயல் டோன் ஃபினிஷ் இருப்பது நைஸ். காரின் பின்பக்கம் எப்படியிருக்கும் என்று இதுவரை தெரியவில்லை. அந்த ஏரியாவில் வித்தியாசங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. மற்றபடி விட்டாரா பிரெஸ்ஸாவில் இல்லாத பிரெளன் நிறம், அர்பன் க்ரூஸரில் உண்டு.

பிரெஸ்ஸா... டொயோட்டா பேட்ஜில்!

கேபினைப் பொறுத்தவரை, ஸ்டீயரிங் வீலில் இருக்கும் டொயோட்டா பேட்ஜிங் மற்றும் Dark Brown நிற அப்ஹோல்சரியைத் தவிர்த்து, மற்ற எல்லாமே விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து இங்கே Cut & Paste செய்யப்பட்டுள்ளன. 7 இன்ச் ஸ்மார்ட் ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், MID இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், எலெக்ட்ரிக் மிரர்கள், கன்ட்ரோல் ஸ்விட்ச்கள், சீட்கள் ஆகியவை உதாரணம்.

பிரெஸ்ஸாவில் இருக்கும் அதே 1.5 லிட்டர் K15 NA - 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (105bhp பவர் - 13.8kgm டார்க்), 5 ஸ்பீடு மேனுவல் & 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் எனும் 2 கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன்தான் அர்பன் க்ரூஸரும் கிடைக்கிறது. இதிலும் டீசல் ஆப்ஷன் இல்லையென்றாலும், SHVS அமைப்பு இரு கியர்பாக்ஸுடனும் வருவது ஆறுதல் (பிரெஸ்ஸாவில், ஆட்டோமேட்டிக்கில் மட்டுமே SHVS). 1.5 லிட்டர் - 5 ஸ்பீடு மேனுவல் காம்போ 17.03 கிமீ அராய் மைலேஜ் தந்த நிலையில் (அர்பன் க்ராஸ் இதில் முன்னேற்றத்தைக் காட்டக்கூடும்), 1.5 லிட்டர் - 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கூட்டணி 18.76 கிமீ அராய் மைலேஜைத் தருகிறது. சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளின் பட்டியல், அப்படியே விட்டாரா பிரெஸ்ஸாவில் இருக்கும் அதே செட்-அப் தான். க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார் இதனை உறுதிபடுத்துகின்றன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர்
டொயோட்டா அர்பன் க்ரூஸர்

எக்கோஸ்போர்ட், நெக்ஸான், XUV3OO, வென்யூ, சோனெட், மேக்னைட், Kiger ஆகியவற்றுடனும் போட்டி போடுகிறது அர்பன் க்ரூஸர். 2 ஆண்டு / 40,000 கிமீ வாரன்ட்டியுடன் விட்டாரா பிரெஸ்ஸா கிடைக்கும் நிலையில், கிளான்ஸாவைப் போலவே 3 ஆண்டு/1 லட்சம் கிமீ வாரன்ட்டியுடன் தனது காம்பேக்ட் எஸ்யூவியை டொயோட்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. மேலும் டொயோட்டாவின் Subscription திட்டத்தில் அர்பன் க்ரூஸரும் உண்டு. குர்காவுனில் இருக்கும் மாருதி சுஸூகியின் ஆலையில் இருந்துதான், டொயோட்டாவுக்கு கார்கள் உற்பத்தியாகி அனுப்பப்படும். இதன் புக்கிங் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. உத்தேசமாக 7.5 - 11.5 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் அர்பன் க்ரூஸர் வெளிவரலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு