Published:Updated:

வெரிட்டோ வைப்... மோசமான வைப்ரேஷன் ஏன்?

வெரிட்டோ வைப்
பிரீமியம் ஸ்டோரி
வெரிட்டோ வைப்

ஃப்ளாப் கார் / மஹிந்திரா வெரிட்டோ வைப்

வெரிட்டோ வைப்... மோசமான வைப்ரேஷன் ஏன்?

ஃப்ளாப் கார் / மஹிந்திரா வெரிட்டோ வைப்

Published:Updated:
வெரிட்டோ வைப்
பிரீமியம் ஸ்டோரி
வெரிட்டோ வைப்

போன மாதம் இண்டிகோ மெரினாவைத் தொடர்ந்து இந்த மாதம் மிஸ் லிஸ்ட்டுக்குத் தேர்வாகியிருக்கும் ஃப்ளாப் காரும் விநோதமான தோற்றத்தைக் கொண்ட வெரிட்டோ வைப். வைப்ரேஷனின் சுருக்கம்தான் வைப். சந்திரமுகியில் சாமியார் சொல்வதுபோல, இந்த வெரிட்டோ ஏன் மஹிந்திராவுக்கு நெகட்டிவ் வைப் கொடுத்தது என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், வெரிட்டோவின் அண்ணான லோகனைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.

வெகுஜன மக்களைக் கவரும் பொருட்டு விலை குறைவான மாடலைத் தயாரிக்க, ரெனோ கார் கம்பெனியிடம் பிரெஞ்ச் ஜனாதிபதி கோரிக்கை வைத்தார். இதைச் சவாலாக ஏற்று, தனது ரோமானிய பிராண்டான டாஸியா மூலம் லோகனை டிசைன் செய்து 2004-ல் சந்தைக்குக் கொண்டு வந்தது ரெனோ. ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பாவில் மட்டும் விற்பனைக்கு வந்த லோகன், அதன்பிறகுதான் தாய்நாடான பிரான்ஸிலும் விற்பனை செய்யப்பட்டது. ரெனோவே எதிர்பார்க்காத அளவுக்கு விற்பனை சக்கைப் போடு போட்டது. எனவே, மஹிந்திரா - ரெனோ கூட்டாக கார் தயாரிக்க 2005-ல் ஒப்பந்தம் போடப்பட்டபோது, மஹிந்திராவின் மனதில் ஓடி கொண்டிருந்தது ஒன்றுதான். எப்படியாவது லோகன் ஐரோப்பாவில் பெற்ற வெற்றியை இந்தியாவில் நிகழ்த்திக் காட்ட வேண்டுமென்பது!

வெரிட்டோ வைப்... 
மோசமான வைப்ரேஷன் ஏன்?

நிறைய ஹேட்ச்பேக் கார்களைவிட அதிக லக்கேஜைச் சுமக்க முடிந்தது. மற்றபடி USB/AUX உடன் கூடிய 2 டின் ஆடியோ சிஸ்டம், எலக்ட்ரிக் ரியர்வியூ மிரர் போன்றவைதான் பழைய லோகனில் இருந்து வெரிட்டோவுக்குக் கிடைத்த ‘அப்டேட்டுகள்’.

பார்ப்பதற்கு எப்படி?

ஒரு ஜெராக்ஸில் இருந்து ஜெராக்ஸ் எடுத்தால் எப்படித் தெளிவாக இருக்காதோ, அதேபோல்தான் வெரிட்டோ வைபும். டிசைனில் எந்தவித மாற்றமும் இன்றி வந்தது வெரிட்டோ. இந்த செடானின் நீளம் 4.2 மீட்டர் இருந்ததால், அரசின் வரிச்சலுகை கிடையாது.

இதனால் வெரிட்டோவின் பூட்டை, சி - பில்லருடன் இணைத்தால் 4 மீட்டருக்குள் வந்து சிறிய காருக்கான வரிச்சலுகை வரும் என மஹிந்திராவுக்கு ஐடியா கொடுத்திருப்பார்கள்போல! விளைவு, ஹேட்ச்பேக்கா அல்லது செடானா என வாடிக்கையாளரைக் குழம்ப வைத்தது வெரிட்டோ வைபின் டிசைன்.

வெரிட்டோ வைப்... 
மோசமான வைப்ரேஷன் ஏன்?

ஓட்டுவதற்கு எப்படி?

ரெனோ உலகம் முழுவதும் பயன்படுத்திய அதே 1.5 லி dCi டீசல் என்ஜின் என்பதால், 3 ஆண்டு அல்லது 1,00,000 கிமீ இன்ஜின் வாரன்டியுடன் வந்தது வெரிட்டோ வைப்.

4000 rpm-ல் 65bhp பவரும், 2000 rpm -ல் 16.0kgm டார்க்கையும் வெளிப்படுத்தும் இந்த இன்ஜினை வைத்து ARAI-யிடமிருந்து 20.8 கிமீ மைலேஜ் சான்றிதழ் வாங்கி வைத்திருந்தது மஹிந்திரா. முழுக்க முழுக்க மைலேஜுக்காக ட்யூன் செய்யப்பட்டிருந்ததால், பெர்ஃபாமன்ஸைப் பற்றிச் சொல்வதற்குப் பெரிதாக ஏதும் இல்லை.

வெரிட்டோ வைப்... 
மோசமான வைப்ரேஷன் ஏன்?
வெரிட்டோ வைப்... 
மோசமான வைப்ரேஷன் ஏன்?
வெரிட்டோ வைப்... 
மோசமான வைப்ரேஷன் ஏன்?


மஹிந்திராவின் தயாரிப்பு என்பதால், 172 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் ஸ்டிஃப்பான சஸ்பென்ஷன் உடன் வந்தது வெரிட்டோ வைப். வெரிட்டோ வைபின் தோல்விக்கு அதன் விநோத டிசைன் மட்டும் வில்லன் இல்லை; ஏனென்றால் வெரிட்டோ செடானுக்கும் ஏறக்குறைய இதை நிலை தான். அப்போது ஸ்டீயரிங்கிலேயே ஆடியோ கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், கீலெஸ் என்ட்ரி என ஏராளமான புது வசதிகள் 5 - 7 லட்ச ரூபாய் செக்மென்ட் கார்களில் வந்து கொண்டிருந்த சமயம். வெரிட்டோவுக்கும் இத்தகைய சிறப்பம்சங்களை அடுத்தடுத்த வெர்ஷனில் மஹிந்திரா கொண்டு கொடுத்திருந்தால் இது நிலைத்து நின்றிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதனால், 2015-ம் ஆண்டு முழுவதும் மஹிந்திராவால் வெறும் 619 வெரிட்டோ வைப் யூனிட்களை மட்டுமே விற்க முடிந்தது. சில சொகுசு கார்களுடன் ஒப்பிட்டாலும், இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். 2016-ன் தொடக்கத்தில் வெரிட்டோ வைபின் உற்பத்தியை நிறுத்திவிட்ட பின்னரும், டீலர்களிடம் தங்களிடம் தேங்கியிருந்த 32 யூனிட்களை விற்கப் படாதபாடு பட்டுவிட்டது மஹிந்திரா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism