Published:Updated:

யாரிஸ்... போரிங் கார் ஆனது ஏன்?

யாரிஸ்
பிரீமியம் ஸ்டோரி
யாரிஸ்

ஃப்ளாப் கார்: டொயோட்டா யாரிஸ்

யாரிஸ்... போரிங் கார் ஆனது ஏன்?

ஃப்ளாப் கார்: டொயோட்டா யாரிஸ்

Published:Updated:
யாரிஸ்
பிரீமியம் ஸ்டோரி
யாரிஸ்

நீங்கள் டொயோட்டா ரசிகராக இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும் - யாரிஸ்தான் உண்மையான டொயோட்டா DNA உடன் இந்தியாவில் வெளிவந்த கடைசி கார். பின்னர் வந்தவை எல்லாம் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாருதி மாடல்கள்தான். ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் ஆகியவற்றுக்குப் போட்டியாக டொயோட்டா பிரத்யேகமாகக் கொண்டு வந்த யாரிஸ் ஏன் தோற்றது என்பதைப் பார்ப்போம்.

லேட்டாக வந்தது; லேட்டஸ்ட்டாக இருந்ததா?

இந்தியாவில் ஏற்கெனவே தேய்பிறை போலத் தேய்ந்து கொண்டிருந்தது C செக்மென்ட் செடான் மார்க்கெட். அதில் மிகவும் லேட்டாக 2018-ல் யாரிஸுக்கு அட்மிஷன் போட்டது டொயோட்டா. மேலும் இதே செக்மென்ட்டின் மற்ற கார்களில் இருந்து தனித்துத் தெரியும் வகையில் எந்தப் பண்புகளையும் பெறாமல், எல்லாவற்றிலும் சராசரியாக இருந்தது. உதாரணத்துக்கு, ஹோண்டா சிட்டியை எடுத்துக் கொண்டால் ரெட் லைன் வரை பவரை டெலிவரி செய்யும் iVTEC இன்ஜின்; ஹூண்டாய் வெர்னாவை எடுத்துக் கொண்டால், கொடுக்கும் காசுக்கு வாரி வழங்கும் சிறப்பம்சங்கள்; இப்படி உப்பு இல்லாத உணவுபோல் சப்பென்று இருந்ததால், வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை யாரிஸ்.

யாரிஸ்... போரிங் கார் ஆனது ஏன்?

யாரிஸின் தோற்றத்தைப் பொறுத்தவரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இல்லையென்றாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வெளிப்புறம் நன்றாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பம்பர் முழுவதையும் ஆக்கிரமித்திருந்த ஏர் டேம், வித்தியாசமான முகப்பை யாரிஸுக்குக் கொடுத்தது.

வசதிகளைப் பொறுத்தவரை, ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கூரையில் பொருத்தப்பட்ட பின்புற ஏசி வென்ட்கள், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், 8 வழி இயங்கும் டிரைவர் இருக்கை மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் ஆகிய அம்சங்களைப் பெற்றிருந்தது யாரிஸ். மேலும் ஏழு ஏர்பேக்குகள், அனைத்துச் சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் கேமரா, ஹில்-ஹோல்டு கன்ட்ரோல் மற்றும் டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என போட்டி கார்களிடம் இல்லாத சில பாதுகாப்பு அம்சங்களும் யாரிஸில் இருந்தன.

யாரிஸ்... போரிங் கார் ஆனது ஏன்?

இருப்பினும் LED ஹெட்லேம்ப்கள், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் மற்றும் சன்ரூஃப் போன்ற ஆடம்பர வசதிகள் யாரிஸில் காணப்படவில்லை. இவை சியாஸில் இல்லையென்றாலும், 5 பேர் வசதியாகப் பயணிக்கும் அளவுக்கு இடவசதியைக் கொடுத்து பேமிலி ஆடியன்ஸைத் திருப்திபடுத்தி இருந்தது மாருதி.

ஓட்டுவதற்கு எப்படி?

ஒரே ஒரு 1.5 லி பெட்ரோல் இன்ஜினுடன் வந்த யாரிஸ், 107bhp பவர் மற்றும் 140Nm டார்க்கை வெளிப்படுத்தியது. டிரான்ஸ்மிஷனைப் பொறுத்தவரை வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்றது போல 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்டெப் CVT-ல் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த இன்ஜின் ARAI-யிடம் இருந்து 17.1 kmpl மைலேஜுக்கான சான்றையும் வாங்கியிருந்தது. இந்தப் பிரிவின் மற்ற கார்கள், டீசல் மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வந்த நிலையில், யாரிஸில் அவை மிஸ்ஸிங் என்பது நிச்சயம் மிகப் பெரிய மைனஸ் தான்.

சில ஓனர்களிடம் பேசியபோது, ஓட்டுதல் அனுபவத்தைப் பொறுத்தவரையில் சொல்வதற்குப் பெரிதாக ஏதும் இல்லை என தெரிவித்தனர். மேற்கத்திய நாடுகளில் டொயோட்டா கரோலாவுக்கு ‘போரிங் கார்’ என்னும் அடைமொழி உண்டு. அதை யாரிஸும் சரியாகப் பின்பற்றியது.

யாரிஸ்... போரிங் கார் ஆனது ஏன்?

ஏன் விற்பனை நின்றது?

யாரிஸின் விலை ரூ.9.16 லட்சத்தில் இருந்து ரூ.14.60 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) வரை இருந்தது. இது போட்டிக் கார்களை விட சற்றே கூடுதல் விலை என்பதால் - ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகியவை மாதந்தோறும் சராசரியாக 3,000 யூனிட்கள் விற்றுக் கொண்டிருந்தபோது, டொயோட்டாவால் மாதத்துக்கு 400 யாரிஸ்களை மட்டுமே விற்க முடிந்தது.

UK-வில் GR யாரிஸ் என்ற பெயரில் ஸ்போர்ட்டியான இதன் ஹேட்ச்பேக் வெர்ஷன் நன்றாக விற்பனையாகிறது. ஒரு செடானாக இந்தியாவில் நல்ல விற்பனை தரத் தவறியதால், செப்டம்பர் 2021 முதல் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் ‘டொயோட்டா’ என்னும் பிராண்ட் மேல் மக்கள் கொண்ட நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு யாரிஸின் உதிரி பாகங்கள் கிடைக்கும் என்று டொயோட்டா உறுதியளித்தது.

பழைய கார் மார்க்கெட்டில் செடான் வாங்குபவர்களுக்கு - கேபின் இன்சுலேஷன், ப்ரீமியம் இன்டீரியர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் சொகுசான பயணம் ஆகியவைதான் பிரதானத் தேவை என்றால், யாரிஸை நிச்சயம் லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளலாம்.

Hilux பிக்-அப் ட்ரக்குக்கு அடுத்து, ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாருதி சியாஸ் செடானை ‘பெல்டா’ என்ற பெயரில் கொண்டு வர இருக்கிறது டொயோட்டா. யாரிஸ் நிறுத்தியதை அடுத்து C - செக்மென்ட்டில் டொயோட்டாவுக்கு உண்டான வெற்றிடத்தை பெல்டா நிரப்பும் என்று நம்பலாமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism