Published:Updated:

வென்ட்டோ அளவுக்கு இல்லையே... ஏன் ஏமியோ?

ஃபோக்ஸ்வாகன் ஏமியோ
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் ஏமியோ

ஃப்ளாப் கார்: ஃபோக்ஸ்வாகன் ஏமியோ

வென்ட்டோ அளவுக்கு இல்லையே... ஏன் ஏமியோ?

ஃப்ளாப் கார்: ஃபோக்ஸ்வாகன் ஏமியோ

Published:Updated:
ஃபோக்ஸ்வாகன் ஏமியோ
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் ஏமியோ

- விநாயக் ராம்

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை செடான் கார் போட்டியில் ஹோண்டா சிட்டிதான் நம்பர் 1 ஆக இருந்தது. ஆனால், கையில் 8 லட்சம் ரூபாய் இருந்தால்தான், சிட்டியை சிட்டிக்குள் ஓட்ட முடியும்.

இதற்கிடையே, 2006 - ல் 4 மீட்டருக்குள் அடங்கும் சிறிய ரக கார்களுக்கு வரிச் சலுகை கொண்டு வந்தது மத்திய அரசு. 2008-ல் முதல் ஆளாக டாடா, தனது இண்டிகோவின் டிக்கியை வெட்டி காம்பாக்ட் செடான் என்னும் புதிய செக்மென்ட்டைத் தொடங்கி வைத்தாலும், 2012-ல் மாருதி தனது இரண்டாம் தலைமுறை டிசையர் கொண்டு வந்தபிறகுதான் மார்க்கெட்டே சூடு பிடித்தது.

பிரியோவில் இருந்து அமேஸ், i10 ல் இருந்து எக்ஸென்ட், ஃபிகோவில் இருந்து ஆஸ்பயர் என ஏற்கனவே இருந்த ஹேட்ச்பேக் கார்களில் பூட் பகுதியை எக்ஸ்ட்ராவாகச் சேர்த்து 2013, 2014, 2015 என அடுத்தடுத்த ஆண்டு, வெவ்வேறு கார் தயாரிப்பாளர்களிடமிருந்து புதிய கார்கள் வெளி வந்தன.

ஃபோக்ஸ்வாகன் இதில் ரொம்ப லேட். ஏற்கெனவே இருந்த போலோவில் டிக்கியைத் ஒட்ட வைக்க அதற்கு நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டது.

10 லட்ச ரூபாய்க்குள் ஜெர்மன் பில்டு குவாலிட்டியுடன் வந்த போலோ - வென்ட்டோ இரட்டையர்கள் இந்திய வாடிக்கையாளர்களைக் கவர்ந்தன. இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக 20% சதவீத வளர்ச்சியை அடைந்தபிறகு, மார்ச் 2012 -ல் முதன்முறையாக ஹோண்டா சிட்டியைப் பின்னுக்குத் தள்ளி, விற்பனையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது வென்ட்டோ. அதுதான் ஃபோக்ஸ்வாகனின் உச்சம் எனக் கூடச் சொல்லலாம். ஏனென்றால், அதன் பிறகு, 2017-க்கு அடுத்து, தொடர்ந்து சரிவையே சந்தித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வென்ட்டோ அளவுக்கு இல்லையே... ஏன் ஏமியோ?

சரி; ஒரு தயாரிப்பாக ஏமியோ எப்படி இருந்தது? முதலில் வெளியான 1.2 லி பெட்ரோல் இன்ஜின் 74bhp@5400rpm பவரும், 11.0kgm@3,750rpm டார்க்கும் கொண்டிருந்தது. இதன் அராய் மைலேஜ் 17.83 kmpl. வாடிக்கையாளர்கள் சொன்ன ஆவரேஜ் மைலேஜ் 14.5 கிமீதான்.

1.5 லிட்டர் டர்போ டீசல் யூனிட், சுமார் 110bhp பவர் மற்றும் 25.0kgm டார்க்கை வெளிப்படுத்தியது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, டீசல் மாடலில் ஃபோக்ஸ்வாகனின் ஸ்பெஷல் 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனும் இருந்தது. டீசல் இன்ஜினின் அராய் மைலேஜ் 21.66 கிமீ. ஆனால், வாடிக்கையாளர்கள் சொன்ன ஆவரேஜ் மைலேஜ் 17.5 கிமீ.

போலோவின் அண்ணன் என்பதால், அதன் சேஸிதான் ஏமியோவுக்கும். எனவே, கார் ஆர்வலர்கள் யாரும் ஏமியோவின் டிரைவிங் டைனமிக்ஸைக் குறை சொல்லவே இல்லை.

2018-ல் 1.2 லி பெட்ரோல் இன்ஜினுக்குப் பதிலாக புதிய 1.0 லிட்டர் MPI இன்ஜினைக் கொண்டு வந்தது ஃபோக்ஸ்வாகன். மைலேஜுக்காக ட்யூன் செய்யப்பட்ட இந்தப் புதிய இன்ஜின், ஏறக்குறைய அதே பவரைக் கொண்டிருந்தாலும் 1.5kgm குறைவாக 9.5kgm டார்க்கை மட்டுமே உற்பத்தி செய்தது. இதனால் 19.44 கிமீ மைலேஜ் பெற்று, டிசையருடன் நேருக்கு நேர் மோதியது ஃபோக்ஸ்வாகன் ஏமியோ.

வசதிகளைப் பொறுத்தவரை எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங், சென்ட்ரல் லாக்கிங் ரிமோட், உயரத்தைச் சரி செய்யக் கூடிய டிரைவர் இருக்கை, எலெக்ட்ரிக் விங் மிரர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஏசி, ரியர் ஏசி வென்ட், ஆட்டோ ரெய்ன் சென்சிங் வைப்பர்கள், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் என அப்போது ஹூண்டாய் எக்ஸென்ட்டுக்குச் சவால் விடும் வகையில் சிறப்பம்சங்கள் நிறைந்திருந்தன.

வென்ட்டோ அளவுக்கு இல்லையே... ஏன் ஏமியோ?

பாதுகாப்பு அம்சங்களாக இரட்டைக் காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை முதன் முதலில் ஸ்டாண்டர்டாக வந்தது ஏமியோவில்தான். மற்றபடி டாப்-எண்டான ஹைலைன் ப்ளஸ்ஸில் ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோ-டிம்மிங் ரியர்-வியூ மிரர், கார்னரிங் லைட்ஸ், ஈஎஸ்பி மற்றும் ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் (DSG) ஆகியவை இருந்தன.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் விற்பனையில் டாப்-10 இடங்களைப் பிடிப்பது 10 லட்ச ரூபாய்க்குள் விலை கொண்ட கார்களே! அப்படி இருக்கையில் 7 லட்ச ரூபாய்க்கு விற்பனையான ஏமியோ, விற்பனையில் எவ்வளவு பின்தங்கி இருந்தது என்பதற்கு, ஜனவரி 2019 விற்பனை ஒப்பீடே ஒரு சோற்றுப் பதம்.

ஏமியோவின் போட்டியாளரான போர்டு ஆஸ்பயர்1,539 யூனிட்டுகளை விற்பனை செய்தது. அதேசமயம், ஹூண்டாய் எக்ஸென்ட் 2,121 யூனிட்டுகளையும், ஹோண்டா அமேஸ் 7,981 யூனிட்டுகளையும் விற்றது. இந்தப் பிரிவில் 19,073 யூனிட்டுகளை விற்ற மாருதி சுஸூகி டிசையர் முன்னிலை வகித்தது. ஆனால், வோக்ஸ்வாகன் ஏமியோவோ, 735 யூனிட்டுகளை மட்டுமே விற்றது.

2020 மார்ச் மாதம் ஏமியோவின் தயாரிப்பை நிறுத்தியபோது, 2016 -ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, கிட்டத்தட்ட 50,000 யூனிட்கள்தான் மொத்தமாக விற்றதாக அறிவித்தது ஃபோக்ஸ்வாகன்.

ஒருபுறம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஜோராக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் நிர்வாகத்தில் தொடர்ச்சியாக மாற்றங்கள் நடந்து கொண்டிருந்ததால், உள்ளூர்ச் சந்தையைக் கோட்டை விட்டது போக்ஸ்வாகன்.

சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தி, காம்பேக்ட் செடானுக்கு ஏற்ற வகையில் ஸ்பேர்ஸ் மற்றும் சர்வீஸின் விலையை நிர்ணயித்திருந்தால், வென்ட்டோ நிகழ்த்திய மாயத்தை, ஏமியோவும் நிகழ்த்தியிருக்கக் கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism