Published:Updated:

ஸ்பேர் வீலை கழட்டியாச்சு...!எக்கோஸ்போர்ட் இப்ப எப்படியிருக்கு?

Eco sport
பிரீமியம் ஸ்டோரி
Eco sport

எக்கோஸ்போர்ட்

ஸ்பேர் வீலை கழட்டியாச்சு...!எக்கோஸ்போர்ட் இப்ப எப்படியிருக்கு?

எக்கோஸ்போர்ட்

Published:Updated:
Eco sport
பிரீமியம் ஸ்டோரி
Eco sport
ஸ்பேர் வீலை கழட்டியாச்சு...!எக்கோஸ்போர்ட் இப்ப எப்படியிருக்கு?

ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டின் புதிய மாடலான ஃபோர்டு எக்கோஸ்போர்ட் SE மாடலை கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஃபோர்டு நிறுவனம். இதன் மூலம் இந்தியாவின் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் வரிசையில் இந்தப் புதிய SE மாடலையும் இணைத்திருக்கிறது. இந்தப் புதிய எக்கோஸ்போர்ட்டில் மிகப்பெரிய மாற்றமாக ஃபோர்டு செய்திருப்பது, அதன் டெய்ல்கேட்டில் ஸ்பேர் வீல் இல்லாததுதான். டெய்ல்கேட்டில் மட்டுமல்ல; ஒட்டுமொத்தமாகவே ஸ்பேர் வீல் இல்லாமல்தான் இந்தப் புதிய மாடல் விற்பனைக்கு வந்திருக்கிறது. மேலும், மற்ற எக்கோஸ்போர்ட் மாடல்களில் இருந்து வித்தியாசமான பின்பக்க ஸ்டைலிங்கையும் பெற்றிருக்கிறது புதிய எக்கோஸ்போர்ட்.

ஸ்பேர் வீல் இல்லாத எக்கோஸ்போர்ட் மாடல்களை 2015-ல் இருந்தே தயாரித்து வருகிறது ஃபோர்டு. இந்தியாவில் தயாரிக்கப்படும் அந்த மாடல்கள் ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இப்போது டெய்ல்கேட்டில் ஸ்பேர் வீல் இல்லாத எக்கோஸ்போர்ட் மாடலை முதல் முறையாக இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஃபோர்டு. ஸ்பேர் வீல் இல்லை என்பதால், பஞ்சர் ரிப்பேர் கிட் ஒன்றை, புதிய SE மாடலுடன் ஸ்டாண்டர்டாகவே கொடுக்கிறது ஃபோர்டு.

ஸ்பேர் வீல் இல்லாமல் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடியுமா என்றால், முடியும் என்றே சொல்கிறது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் செய்த சட்டத் திருத்தத்தின் படி, M1 வகையின் கீழ் வரும் வாகனங்களை ஸ்பேர் வீல் இல்லாமலும் இந்தியாவில் விற்கலாம். 3.5 டன்களுக்கு மிகாமல், ஓட்டுநருடன் சேர்த்து ஒன்பது பேர் வரையில் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய பயணிகள் வாகனங்கள், M1 கேட்டகிரியின் கீழ் வகைப்படுத்தப்படும். ஆனால், இந்த வகையின் கீழ் ஸ்பேர் வீல் இல்லாமல் வாகனம் விற்க வேண்டும் என்றால், டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம் இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறுகிறது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்.

ஸ்பேர் வீலை கழட்டியாச்சு...!எக்கோஸ்போர்ட் இப்ப எப்படியிருக்கு?

புதிய SE மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு வேரியன்ட்களிலும் கிடைக்கிறது. 122bhp, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 100bhp, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என இரு வேரியன்ட்களும் இருக்கின்றன. ஆனால், இரண்டிலுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி கொடுக்கப்படவில்லை. பக்கவாட்டுக் காற்றுப்பைகள், டயர் ப்ரஷர் மானிட்டர், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ஆட்டோ ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் 8.0 இன்ச் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

எக்கோஸ்போர்டின் டாப்-மாடலான எக்கோஸ்போர்ட் S-ல் இருக்கும் சில சிறப்பம்சங்கள் புதிய SE மாடலில் இல்லை. ISOFIX ஆங்கர்ஸ், லெதர் சீட் ஆகியவை மிஸ்ஸிங். விலையைப் பொருத்தவரை வெளியீட்டின்போது பெட்ரோல் வேரியன்ட் 10.49 லட்சம் ரூபாய் விலையும், டீசல் வேரியன்ட் 10.99 லட்சம் ரூபாய் விலையும் எக்ஸ் ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது பெட்ரோல் வேரியன்ட் 10.69 லட்சம் ரூபாய் விலையிலும், டீசல் வேரியன்ட் 11.19 லட்சம் ரூபாய் விலையிலும் கிடைக்கின்றன.

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் ஏற்கெனவே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த செக்மென்ட்டுக்குப் புதிய வரவுகளான ரெனோ கைகர் மற்றும் நிஸான் மேக்னைட், சந்தையில் ஏற்கெனவே டாப் செல்லிங்கில் இருக்கும் கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ மற்றும் மாருதி சுஸூகியின் விட்டாரா பிரெஸ்ஸா, இதனுடன் டொயோட்டோ அர்பன் க்ரூஸர், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களுடன் கடுமையாகப் போட்டியிட வேண்டியிருக்கிறது புதிய ஃபோர்டு எக்கோஸ்போர்ட் SE.

டெயில் கேட்டில் ஸ்பேர் வீலைக் காலி செய்தது புதுமையாகப் பேசப்படுமா... அல்லது போர்டுக்குத் தலைவலியை ஏற்படுத்துமா என்பது இனிமேல்தான் தெரியும்.