Published:Updated:

ஸ்விஃப்ட்டில் ஸ்போர்ட் மாடல் இந்தியாவுக்கு வந்தால்..?

Swift Sport
பிரீமியம் ஸ்டோரி
Swift Sport

வெளிநாட்டு கார்: சுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட்

ஸ்விஃப்ட்டில் ஸ்போர்ட் மாடல் இந்தியாவுக்கு வந்தால்..?

வெளிநாட்டு கார்: சுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட்

Published:Updated:
Swift Sport
பிரீமியம் ஸ்டோரி
Swift Sport

முன்பு ஹேட்ச்பேக் என்றாலே விலை குறைவான கார் என்ற எண்ணம், இந்திய வாடிக்கையாளர் களிடையே இருந்தது. இந்த மனநிலையை மாற்றிய கார் ஸ்விஃப்ட் தான். இதன் ஃபன்-டு-டிரைவ் ஓட்டுதல் அனுபவம் காரணமாக ஆடி, பென்ஸ் என சொகுசு வைத்திருப்பவர்களும் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஒரு ஸ்விஃப்ட் வைத்திருந்தனர்.

டிரைவிங் ஆர்வலர்களிடையே ஸ்விஃப்ட் இழந்த இடத்தைப் பிடிக்கவும், தற்போதைய ஸ்விஃப்ட் ஓனர்கள் அப்கிரேட் ஆகவும், சுஸூகியிடமே ஒரு மாடல் உள்ளது. அது தான் UK - ல் விற்பனையாகும் சுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட். (Suzuki Swift Sport)

ஸ்விஃப்ட் ஸ்போர்ட் நல்ல காரா?

சுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் UK-ல் ஒரு சிறிய ஸ்போர்ட்டி சிட்டி கார். நம்ம ஊர் ஸ்விஃப்ட்டுடன் ஒப்பிடுகையில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின், பங்கி பாடி கிட் மற்றும் உட்புற வசதிகள் ஆகியவை மாறுபடுகின்றன. ஆனால், போலோ, ஐ10 நியோஸ் போன்றவற்றிலிருந்து உங்களைத் தூண்டுவதற்கு இது போதுமா?

சாதா ஸ்விஃப்ட்டில் இருந்து ஸ்போர்ட்டியாகக் காட்டுவதற்காக, ஒரு பெரிய கிரில், சில ஃபாக்ஸ் கார்பன் ஃபைபர் டிரிம்கள், 17-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் இரண்டு பெரிய எக்ஸாஸ்ட்கள் போன்ற டிசைன் அம்சங்களைச் சேர்த்துள்ளது சுஸூகி.

உள்ளேயும் இதேபோன்ற கதைதான் - டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோலில் ஏராளமான மாறுபட்ட சிவப்பு ட்ரிம்கள் உள்ளன. மற்றபடி நம்மூர் ஸ்விஃப்ட்டைப் போலவே ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் பெறுகிறது ஸ்விஃப்ட் ஸ்போர்ட். துரதிர்ஷ்டவசமாக, எளிதில் கீறல் விழக் கூடிய மலிவான பிளாஸ்டிக் பாகங்கள் ஸ்விஃப்ட் ஸ்போர்ட்டிலும் தொடர்கிறது.

உள்ளே என்ன இருக்கிறது?

ஸ்விஃப்ட் ஸ்போர்ட்டில் சாட்டிலைட் நேவிகேஷன் மற்றும் ஸ்மார்ட்போன் மிரரிங் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உட்பட பல உபகரணங்கள் தரம். நம்மூர் ஸ்விஃப்ட்டைப் போலவே முன்பக்கத்தில் ஆறடி உயரமுள்ள பெரியவர்களுக்கு இடமும், பின்புறத்தில் மூன்று குழந்தைகளுக்குப் போதுமான இடமும் உள்ளது. இதிலும் பூட் ஸ்பேஸ் சற்றுக் குறைவுதான்.

ஸ்விஃப்ட்டில் ஸ்போர்ட் மாடல் இந்தியாவுக்கு வந்தால்..?
ஸ்விஃப்ட்டில் ஸ்போர்ட் மாடல் இந்தியாவுக்கு வந்தால்..?

ஓட்டுவது எப்படி இருக்கும்?

சுஸூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட்டின் 1.4-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 130 bhp பவரையும், 235Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. வெளிநாட்டு கார் விமர்சகர்களைப் பொருத்தவரையில், இன்ஜின் உற்பத்தி செய்யும் பவரைக் காட்டிலும், ஓட்டுகையில் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் வேகமாக உணர வைக்கிறது எனச் சொல்கின்றனர். 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.1 விநாடிகளில் அடைவதே இதற்குச் சான்றாகும். அதிகபட்சமாக 210 கிமீ வேகம் வரை டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் நம்மூர் 1.2லி ஸ்விஃப்ட் 165 கிமீ வேகத்தை அடைகிறது.

துல்லியமான ஸ்டீயரிங், வலுவான பிரேக்குகள் மற்றும் ஸ்டிப்பான சஸ்பென்ஷன் ஆகியவை வளைவுகளில் நிலைத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் இந்தியாவுக்குக் கொண்டு வரும்போது, சஸ்பென்ஷனை சற்று சாஃப்ட்டாக ட்யூன் செய்யப்பட வேண்டியிருக்கும். எரிபொருளைச் சேமிக்க உதவும் மைல்டு - ஹைபிரிட் தொழில்நுட்பமும் ஸ்போர்ட் மாடலில் உள்ளது. இதனால் 21.3 கிமீ மைலேஜ் தரும் என சுஸூகி சொல்கிறது.

ஏன் இந்தியாவுக்கு வர வேண்டும்?

தற்போது ஸ்விஃப்ட்டின் உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை முழுமையாக ரசிக்க விடாமல் தடுப்பது, அதன் இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்தான். மைலேஜுக்காக ட்யூன் செய்யப்பட்ட 1.2 லி டூயல் ஜெட் இன்ஜின், அதிகபட்சமாக 89 bhp பவரையும், 113Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஆனால், மைலேஜைத் தாண்டி பெர்ஃபாமன்ஸ் ஆர்வலர்களும் இருக்கிறார்கள் என்பதை மாருதி உணர வேண்டும்.

UK-வில் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் £22,570 பவுண்டுகளுக்கு விற்பனையாகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 22.6 லட்சம் என்றாலும், மாருதி இந்தியாவுக்குக் கொண்டு வந்தால் பெரும்பாலான பாகங்கள் உள்ளூர்மயம் ஆக்கப்படும் என்பதால் விலை பாதிக்குப் பாதி என்ற அளவில் குறையும். இதைவிடச் சிறந்த வழி ஒன்று உள்ளது. ஸ்விஃப்ட் ஸ்போர்ட்டின் பாடி ஸ்டைலிங்கில், பெலினோ RS -ல் இருந்த 1.0 லி 3-சிலிண்டர் டர்போ இன்ஜினை மீட்டுருவாக்கம் செய்யலாம். அப்படிச் செய்யும்பட்சத்தில், 10 லட்சத்துக்கும் குறைவாக எக்ஸ்- ஷோரூம் விலையில் ஒரு மாருதி ஸ்போர்ட்ஸ் கார் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism