Published:Updated:

உள்ளூர் போலோ... வெளிநாட்டு போலோ... என்ன வித்தியாசம்?

ஃபோக்ஸ்வாகன் போலோ
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் போலோ

இந்த மாதம் வெளிநாட்டில் விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வாகன் போலோ-வுக்கும், நம்மூரில் விற்பனையாகும் போலோவுக்கும் இடையே உள்ள ஒற்றுமை - வேற்றுமைகளை அலசப் போகிறோம்.

உள்ளூர் போலோ... வெளிநாட்டு போலோ... என்ன வித்தியாசம்?

இந்த மாதம் வெளிநாட்டில் விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வாகன் போலோ-வுக்கும், நம்மூரில் விற்பனையாகும் போலோவுக்கும் இடையே உள்ள ஒற்றுமை - வேற்றுமைகளை அலசப் போகிறோம்.

Published:Updated:
ஃபோக்ஸ்வாகன் போலோ
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் போலோ

பொதுவாக வெளிநாட்டில் விற்பனையாகும் கார்களைப் பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவுக்குக் கொண்டு வருவதில்லை என்பது ஒருபுறம். மறுபுறம் பார்த்தால், ஒரு கார் வெளிநாட்டில் லேட்டஸ்ட் அப்டேட் உடன் விற்பனை செய்து கொண்டிருக்கையில், இங்கே மட்டும் அதே கார் பழைய மாடல் விற்பனையாகும். இப்படி இந்தியாவில் பல ஆண்டு காலமாக சத்தமில்லாமல் அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பெருமை ஃபோக்ஸ்வாகனையே சேரும்! இந்தியாவில் 2010 -ல் அறிமுகப்படுத்தப்பட்ட, ஐந்தாவது ஜென் போலோதான் தற்போது விற்பனையில் உள்ளது. ஆனால், UK - வில் 2017 இறுதியிலேயே ஆறாவது ஜென் போலோவை விற்பனைக்குக் கொண்டு வந்து, அதற்கு ஒரு ஃபேஸ்லிஃப்ட்டும் கொடுத்துவிட்டது ஃபோக்ஸ்வாகன்!

எனவே இந்த மாதம் வெளிநாட்டில் விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வாகன் போலோ-வுக்கும், நம்மூரில் விற்பனையாகும் போலோவுக்கும் இடையே உள்ள ஒற்றுமை - வேற்றுமைகளை அலசப் போகிறோம்.

போலோ
போலோ

டிசைன்

புதிய MQB-A0 ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட ஆறாவது ஜென் போலோ, பார்த்தவுடன் நம்மூர் போலோவின் அண்ணனைப்போல் உள்ளது. 4,053 மிமீ நீளம் & 1,751 மிமீ அகலத்தில், 81 மிமீ நீளமாகவும், 63 மிமீ அகலமாகவும் இருக்கிறது. 2,564 மிமீ என்னும் நீளமான வீல்பேஸை பெறுவதோடு முன்பக்கம் 15 mm மற்றும் பின்பக்கம் 21 மிமீ ஹெட்ரூம் அதிகமாக இருப்பதால், இந்திய மாடலின் மிகப் பெரிய மைனஸான இடப் பற்றாக்குறை UK மாடலில் இல்லை. வெளிநாட்டு மாடல் 351 லி பூட் கொள்ளளவைப் பெற்றாலும், இந்தியாவுக்கு வரும்போது வரிச்சலுகை காரணமாக 4 மீட்டருக்குள் வெட்டப்படும் என்பதால், தற்போதுள்ள 280 லிட்டர் பூட்டுடன் ஒப்பிடுகையில் பெரிய வித்தியாசம் இருக்காது.

உட்புற வசதிகள்

கேபினில் பல புதிய சேர்க்கைகள் உள்ளன. இதன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஆடி TT யின் காக்பிட்டை நினைவு கொள்ள வைக்கிறது. மிகவும் மேம்பட்ட பாணியில். ஸ்டீயரிங் வீலில் உள்ள ஒற்றை பட்டன் மூலம் அனைத்து மெனுக்களையும் அணுகலாம் என்பதால், கேபினில் குறைந்த அளவு பட்டன்களே உள்ளன. டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிரர் லிங்க், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. எப்போதும்போல், ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங்தான் என்றாலும் மெட்டல் ட்ரிம்முடன் உள்ளது. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, உலகப்புகழ் பெற்ற கோல்ஃப் மற்றும் பெரிய காரான பஸாத்துக்கு இணையாகக் கொடுத்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். சிட்டி எமர்ஜென்சி பிரேக்கிங், பாதசாரி கண்காணிப்பு, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பார்க் அசிஸ்ட் சிஸ்டம் என பட்டியல் நீள்கிறது.

போலோ
போலோ

இன்ஜின்

UK போலோவில் ஒரு சாதா (MPI), மூன்று டர்போ (TSI) என 4 பெட்ரோல் வேரியன்ட்டுகளிலும், ஒற்றை டீசல் வேரியன்ட்டிலும் வருகிறது. 1.0 லி MPI என்ஜின் 80 bhp பவரையும், 1.0 TSI என்ஜின் - 95 PS & 115 PS என இரு ட்யூனிங்கில் வருகிறது. பெர்ஃபாமன்ஸ் பிரியர்களுக்குப் பிடித்தமான UK போலோ GTI-ன் 2.0 TSI இன்ஜின் அதிகபட்சமாக 200bhp பவரை வெளிப்படுத்துகிறது. மேலும் 1.6 லி TDI டீசல் இன்ஜின், 95bhp பவரை மட்டும் வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் 1 லி சாதா மற்றும் 1 லி டர்போ என இரண்டு பெட்ரோல் இன்ஜின்களுடன் வருகிறது போலோ. இதில் 1.0 MPI இன்ஜின், UK போலோவைவிட 5 bhp குறைவாக 75 bhp வெளியிடுகிறது. அதேசமயம், இந்தியாவின் 1.0 TSI இன்ஜின் UK-வின் 95 மற்றும் 115bhp க்கு இடையே 110bhp பவருடன் வருகிறது.

UK-வில் 1.0 TSI 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DSG ஆட்டோ ஆப்ஷன்களில் வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 1.0 MPI 5 ஸ்பீடு மேனுவலிலும், 1.0 TSI 6 ஸ்பீடு மேனுவலிலும், 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்கிலும் வருகிறது.

DSG கியர்பாக்ஸ் வாகனத்தின் விலையைக் கணிசமாக உயர்த்துவதோடு, பின்னாட்களில் ஓவர் ஹாலிங் செய்யும்போது, சர்வீஸ் பில் லட்சத்தைத் தாண்டும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தற்போது இந்தியாவில் உள்ள போலோ இன்ஜின்கள், பெர்பாமன்ஸை பொறுத்தவரை பெரிதாக சமரசம் செய்யவில்லை என்றே தெரிகிறது. எனவே ஆறாவது ஜென் பாடி ஸ்டைலில் தற்போதைய இன்ஜின் - கியர்பாக்ஸ் காம்பினேஷனைக் கொண்டு வர வேண்டும் என்பதே போலோ ரசிகர்களின் எதிர்பார்ப்பாய் உள்ளது.

போலோ
போலோ

ஏன் இந்தியாவுக்கு வர வேண்டும்?

காலாவதியான கேபின் இருந்தபோதிலும், போலோவின் டிரைவிங் டைனமிக்ஸ் மற்றும் ப்ரீமியம் பில்ட் குவாலிட்டி காரணமாகத்தான் பத்தாண்டுகள் கழிந்தும், ஓட்டும் ஆர்வலர்களிடையே தொடர்ந்து பிரபலமாக உள்ளது. போலோவில் மாற்றங்களைக் கொண்டு வர ஃபோக்ஸ்வாகன் தயங்குவதற்கான காரணம் விலைதான். தற்போது 7.5 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும் போலோவின் ஆன் - ரோடு விலை, டாப் எண்டில் 12.5 லட்சத்தை அடைகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் 10 லட்சத்துக்கு மேல் ஹேட்ச்பேக் வாங்கத் தயக்கம் காட்டுவார்கள் என ஃபோக்ஸ்வாகன் நினைக்கிறது.

அதேசமயம், ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறைந்தபட்சமாக ஹோண்டா ஜாஸ் பேஸ் மாடலின் ஆன் ரோடு ஆரம்ப விலை 9 லட்சமாக உள்ளது. அதிகபட்சமாக i20 N Line 14.3 லட்சம் என்னும் ஆன் ரோடு விலைக்கு விற்பனையாகிறது. இந்த செக்மென்ட்டில் போலோவுக்கு முன்பே 10 லட்ச ரூபாயை தாண்டிய முதல் காரும் i 20 தான்.

மேலும், ஆறாவது தலைமுறை போலோ VW குழுமத்தின் MQB-A0 ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இதே ப்ளாட்ஃபார்மில் தான் VW டைகூனும், ஸ்கோடா குஷாக்கும் உருவாக்கப்படுவதால், அது ஏற்கெனவே உள்ளூர்மயமாக்கப்பட்டுள்ளது (localisation).

எனவே, VW-ன் பில்டு குவாலிட்டியுடன் பிரீமியம் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, அதிகரித்த இடவசதி ஆகியவற்றைச் சேர்த்து, புதிய தலைமுறை போலோவுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயித்தால் வாடிக்கையாளர்களை நிச்சயம் ஈர்க்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism