Published:Updated:

க்ராஷ் டெஸ்ட் எப்படி நடக்குது?

க்ராஷ் டெஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
க்ராஷ் டெஸ்ட்

குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்

மொபைல் ஆப்–ல் இருந்து ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினில் ஆரம்பித்து சினிமா ஸ்டார்கள் வரை ஸ்டார் ரேட்டிங்தான் அதன் தரத்தை உறுதி செய்கிறது. அப்படியென்றால், கார்களுக்கு ஸ்டார் ரேட்டிங் இல்லாமல் இருக்குமா? அதற்குத்தான் இருக்கிறது Global NCAP. அதாவது, ஒரு கார் நிஜமாகவே பாதுகாப்பானதுதானா, எந்தளவு பாதுகாப்பை உறுதி செய்கிறது என்பதைக் கண்டறிந்து ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதுதான் குளோபல் என்கேப்பின் பணி.

க்ராஷ் டெஸ்ட் எப்படி நடக்குது?

ஓகே! குளோபல் என்கேப் என்றால் என்ன?

`New Car Assessment Program’ - இதுதான் NCAP–ன் விரிவாக்கம். Euro NCAP, ஆஸ்திரேலியா NCAP, ஜப்பான் NCAP, ஏசியன் NCAP, சீனா NCAP, கொரியன் NCAP என்று ஏகப்பட்ட NCAP டெஸ்ட் சென்டர்கள் வந்தாலும், 2011–ல் ஜெர்மனியில் குளோபலாக இயங்கும் ஒரு தனியார் சாரிட்டியான குளோபல் NCAP–க்குத்தான் இப்போது உலகமெங்கும் மவுசு. விகடனின் சினிமா மார்க் பார்த்துப் படம் பார்ப்பதுபோல், குளோபல் NCAP–ன் ஸ்டார் ரேட்டிங் பார்த்து கார் வாங்குவதுதான் இப்போது ட்ரெண்ட். கார்களை நிஜமாகவே டெஸ்ட் எக்யூப்மென்ட்ஸில் மோதவிட்டு குளோபல் NCAP தரும் ஸ்டார் ரேட்டிங்தான் ஒரு காரின் பாதுகாப்பைக் குறிக்கிறது. இந்தியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் குளோபல் NCAPதான் ஸ்டார் ரேட்டிங் தருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
க்ராஷ் டெஸ்ட் எப்படி நடக்குது?

கார்களை எப்படி மோத விடுகிறார்கள்?

ஒவ்வொரு NCAP–களுக்கும் ஒரு ப்ரோட்டோகால் உண்டு. Euro NCAP-யைப் பொருத்தவரை முன் பக்கம், பக்கவாட்டுப் பகுதி, பெடஸ்ட்ரியன் பகுதியைச் சோதனை செய்யும். குளோபல் NCAP, முன்பக்க ஆஃப்செட் க்ராஷ் டெஸ்ட்டுகளை நடத்தும். Head on Collision – அதாவது, இரண்டு கார்களை நேருக்கு நேர் மோதவிட்டும் சோதனை செய்து ரேட்டிங் அளிப்பது NCAP–ன் ஸ்பெஷல். இ்ந்தியாவைப் பொருத்தவரை ARAI, BNCAP, ICAT என்று சில அரசாங்க ஏஜென்ஸிகள் உண்டு. இங்கேயும் பாதுகாப்புக்கான க்ராஷ் டெஸ்ட் நடக்கும். இதில் ஸ்டார் ரேட்டிங் கிடையாது. ஆனால், வேகம் குறைவாக இருக்கும். இங்கே 56 கிமீ வேகத்தில் ஓடவிட்டு மோத விடுவார்கள்.

க்ராஷ் டெஸ்ட் எப்படி நடக்குது?

இதை சில பாராமீட்டர்களாகப் பிரிப்பார்கள். உள்ளே சில டம்மியான மனித பொம்மைகளை வைத்து தலை–கழுத்து-மார்பு; முழங்கால் எலும்பு(Femur): இடுப்பு; பாதம் மற்றும் கால் என்று நம் உடலில் 4 பாகங்களுக்கு ஏற்படும் சேதாரத்தைப் பொருத்துக் கணக்கெடுப்பார்கள். ஒவ்வொன்றுக்கும் 4 மார்க்குகள்; (அதாவது 16)… எக்ஸ்ட்ராவாக சீட் பெல்ட் ரிமைண்டருக்கு 1 மார்க்... என்று மொத்தம் 17 மார்க் வைத்திருப்பார்கள். இதில் 11.5 மார்க் எடுத்தால், அந்த காருக்கு 4 ஸ்டார் ரேட்டிங் கிடைக்கும். இதற்கு மேல் எடுத்தால் 5 ஸ்டார் ரேட்டிங். இதில் குழந்தைகளுக்கான பாதுகாப்பும் டெஸ்ட் செய்யப்படும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
க்ராஷ் டெஸ்ட் எப்படி நடக்குது?

குளோபல் என்கேப்பில் என்ன நடக்கும்?

இதிலேயே கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆன கம்பெனிதான் Global NCAP. இதில் நாம் நினைக்கும் கார்களுக்கெல்லாம் டெஸ்ட்டுக்கு எடுக்க மாட்டார்கள். அந்த காரில் சீட் பெல்ட்டில் ஆரம்பித்து ESC, ABS, ட்ராக்ஷன் கன்ட்ரோல், ESP, ஹில் ஹோல்டு அசிஸ்ட் என பாதுகாப்பு வசதிகள் இருக்க வேண்டும். இதனால்தான் காற்றுப்பைகள் இல்லாத டாடா ஜெஸ்ட்டும், போலோவும் ஜீரோ ஸ்டார்கள் வாங்கின. அதன் பிறகு காற்றுப்பைகள் கொண்ட வேரியன்ட்கள், இந்த க்ராஷ் டெஸ்ட்டில் 4 வாங்கின. குளோபல் NCAP அமைப்பினர், காரை ஜெர்மனிக்கு எடுத்துப் போய் டெஸ்ட் செய்வார்கள். ஸ்ட்ரிக்ட் கம்பெனி என்பதால், இங்கே டெஸ்ட்டிங்கும் கடுமையாக இருக்கும். இங்கே ஒரு காரை 64 கிமீ–ல் ஓடவிட்டு, மோதவிட்டு டெஸ்ட் செய்வார்கள். இந்தியாவில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார்கள்கூட குளோபல் என்கேப்பில் நடுங்க ஆரம்பிக்கும் என்பதுதான் உண்மை. இதை Oscar of Automobiles என்பார்கள். அந்தளவு தரம். இங்கே 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கினால், அது பாதுகாப்பான கார் என்று அர்த்தம். இதில் குழந்தைகள் பாதுகாப்புக்கும் ரேட்டிங் உண்டு.

பாதுகாப்பான கார்களுக்கு வெல்கம் சொல்லுங்கள்!