மழைக்காலம் வந்துவிட்டது. ஈரமான மற்றும் தேங்கி நிற்கும் நீரில் வாகனங்களை ஓட்டிக் கொண்டு போவதைத் தவிர்க்க முடியாது.

இம்மாதிரி நேரங்களில் நிலை தடுமாறாமல் பயணிக்க நமக்குத் துணை நிற்பது டயர்களின் வரித்தடங்கள் (Treads or grooves). இது எல்லா வாகனங்களிலும் இருக்கிறது என்றாலும், சில வாகனங்கள் தண்ணீரில் செல்லும்போது நிலை தடுமாறுவதைப் பார்த்திருக்கிறோம். காரணம்.. வாகனம் தண்ணீரில் வேகமாய்ச் செல்லும்போது, சக்கரத்தின் மேல் மெல்லிய நீர்ப்படலம் உருவாகும். அதனால் சக்கரங்களுக்கும் சாலைக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் போய்விடும்.

அதனால் சாலையில் டயர் படாமலேயே வாகனம் பயணிக்கும். இவ்வாறு சக்கரத்துக்கும் சாலைக்கும் இடையே உருவாகும் நீர் அடுக்கு செய்கையே Aquaplaning அல்லது Hydroplaning என்று சொல்வார்கள்.

இது போன்ற நேரங்களில் நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், ஸ்டீயரிங் மற்றும் பிரேக்ஸ் நம் சொல்பேச்சைக் கேட்காது. சரி, இத்தகைய சூழ்நிலையை எப்படிக் கையாள்வது?

டயர்களின் வரித்தடங்கள்தான் டயருக்கு அடியே போகும் நீரை உள்வாங்கி, வெளியேற்றும் வேலை செய்பவை. வரித்தடங்களின் பேட்டர்ன், வாகனத்தின் வேகம், நீரின் அளவு, ஓட்டுனரின் திறமை ஆகியவற்றை வைத்தே எந்த அளவுக்கு வேகமாக நீர் வெளியேற்றப்படும்... வாகனம் கட்டுப்பாட்டை இழப்பதும், இழக்காமல் இருப்பதும் என்பது முடிவாகிறது.

தேங்கி நிற்கும் நீரின் மீது நிதானமாக வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்வதுதான் சிறந்தது. ஏதோ நினைப்பில் வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் தண்ணீரின் மீது வேகமாகச் சென்றுவிட்டால்... உடனே ஆக்ஸலரேட்டரிலிருந்து காலை எடுத்துவிட வேண்டும். ஸ்டீயரிங்கை நேர்கோட்டில் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். பிரேக்கை அழுத்தவே கூடாது!

வாகனத்தின் வேகம் குறையும்வரை காத்திருக்க வேண்டும். பீதியில் பிரேக்கை மிதிப்பதோ ஸ்டீயரிங்கை வேகமாகத் திருப்புவதோ பயன் தராது . மாறாக வாகனம் மேலும் சறுக்கிக் கொண்டு செல்லவே இது வழிவகுக்கும்.

ஆகையால், மழைக்காலங்களில் வாகனத்தை எடுப்பதற்கு முன்பு, சக்கரங்களில் வரித்தடங்கள் மற்றும் காற்றழுத்தம் சரியாக இருக்கிறதா என சோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.