கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

உலகின் முதல் கார் to ரஜினியின் ‘பாயும் புலி’ பைக் வரை!

ஹெரிடேஜ் கிளப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெரிடேஜ் கிளப்

ஹெரிடேஜ் கிளப்: சென்னை

உலகின் முதல் கார் 
to ரஜினியின்  ‘பாயும் புலி’ 
பைக் வரை!

என்னதான் பிரியாணியையும் லெக்பீஸையும் லவட்டுவதில் ஆர்வம் இருந்தாலும், பழைய சாதப் பிரியர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நானும் அப்படித்தான்; எனக்குப் பிரியாணியும் பிடிக்கும்; பழைய சாதமும் பிடிக்கும். ‘தம்பி, பிரியாணி – பழைய சாதம்னு டென்ஷனைக் கிளப்பாம விஷயத்துக்கு வாடா’ என்று நீங்கள் என்னைத் திட்டுவது கேட்கிறது.

சென்னையில் நடந்த ஹெரிடேஜ் கிளப்பில் நான் ஒட்டுமொத்தமாக 100 கார்களை ஒன்றாகப் பார்த்ததுக்குத்தான் இத்தனை பில்ட்அப்பும். எனக்கே ஏதோ 90–களுக்கு இல்லை; 1900–களுக்கு முன்னால் போனது மாதிரி இருந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த மறக்க முடியாத அனுபவத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தது ‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்’. ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த இரண்டு நாள் வின்டேஜ் கார் ஷோவில், 100 ஆண்டு பழைமையான காரில் இருந்து, சூப்பர் ஸ்டார் ரஜினி ஓட்டிய பைக் வரைக்கும் பார்க்கப் போகிறோம் எனும்போதே, நானும் புகைப்பட நிபுணி யேகயும் மெர்சலாகிப் போனோம்.

என்னை முதன் முதலில் கவர்ந்தது, 1886–ல் தயாரிக்கப்பட்ட மெர்சிடீஸ் பென்ஸ் மோட்டார்வேகன். பார்ப்பதற்கு ஏதோ சைக்கிள் ரிக்ஷா மாதிரி இருந்தது. ஆனால், இதுதான் உலகத்தின் முதல் கார் என்கிறார்கள். மரப் பலகைகளும் கடினமான ஸ்டீல் ட்யூபிங்குகளையும் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. பெல்ட் டிரைவ்தான். ஸ்டார்ட் செய்ய ஆர்வமாக இருந்தது; சாவியைத் தேடினேன். உரிமையாளர் மோகன் ஓர் ஓரமாய் உட்கார்ந்திருந்தார். என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு, வாலன்டியர் ஒருவர் வந்தார். அந்த பென்ஸின் பாதுகாவலராய் இருக்கலாம்.

உலகின் முதல் கார் 
to ரஜினியின்  ‘பாயும் புலி’ 
பைக் வரை!

காரின் பின்னால் இருக்கும் வீலைச் சுற்றினார். கார் ‘படிக்காதவன்’ ரஜினி படத்து லட்சுமி மாதிரி சட்டென ஸ்டார்ட் ஆகி உறுமியது. ஆம், இதற்குச் சாவியே கிடையாது பாஸ்!

மேலும், இந்த காருக்கு இன்னொரு முக்கியமான வரலாறு உண்டு. பென்ஸ் மோட்டார் வேகனில், பெர்த்தா பென்ஸ் எனும் ஜெர்மன் ஜாம்பவான், தன் மகன்களோடு Heidelberg முதல் Pforzheim வரை 194 கிமீ வரை ஒரு வரலாற்றுப் பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார். ஆட்டோமொபைல் வரலாற்றில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அதிக தூரம் டிரைவ் போனது இவர்தான். இவர் போன பாதையை ‘பெர்த்தா பென்ஸ் மெமோரியல் ரூட்’ என்றே கொண்டாடுகிறார்கள். இப்போதும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜெர்மனியில் பழங்கால ஆட்டோமொபைல்களின் அணிவகுப்பாக இது கொண்டாடப்படுகிறது.

உலகின் முதல் கார் 
to ரஜினியின்  ‘பாயும் புலி’ 
பைக் வரை!
உலகின் முதல் கார் 
to ரஜினியின்  ‘பாயும் புலி’ 
பைக் வரை!
உலகின் முதல் கார் 
to ரஜினியின்  ‘பாயும் புலி’ 
பைக் வரை!

கார் என்றாலே ஃபோர்டுதானே! ‘போர்டு எங்கே இருக்கு’ என்று தேடினேன். ‘ஹலோ இங்கே இருக்கேன்’ என்று தானாகவே என் கண்ணில் சிக்கியது ஃபோர்டின் குவாட்ரிசைக்கிள் ஒன்று.

1896–ம் ஆண்டு ஹென்றி ஃபோர்டு என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ஃபோர்டு குவாட்ரிசைக்கிள் இரண்டு கியர்கள் மட்டும்தான். இருக்கைக்குக் கீழ் 11 லிட்டர் ஃப்யூல் டேங்க் அமைக்கப்பட்டு இருந்தது. ஃபோர்டு தனது முதல் ஃபோர்ட் குவாட்ரிசைக்கிளை, 200 டாலருக்கு விற்று இரண்டு குவாட்ரிசைக்கிள்களை உருவாக்கினார். அப்புறம் 4… அப்புறம் 40…இப்படித்தான் ஃபோர்டு பணக்காரக் கம்பெனியாக்கி ஆனது. ஆனால், இப்போது ஃபோர்டை ரொம்ப மிஸ் பண்ணினேன்.

1800–களில் இருந்து அப்படியே டைம் மெஷினை 1900–களுக்கு அப்படியே திருப்பினேன். அனைத்தும் லட்டு லட்டாக வின்டேஜ் கார்கள். 1974 ஃபோக்ஸ்வாகன், 1937 மாடல் டாட்ஜ், 1968 மாடல் ஃபியட் 1100 R, 1958 பேபி இந்துஸ்தான் ,1938 வாக்ஸ்ஹால் 14E, 1957 டாட்ஜ் கிங்வே என்று எல்லாமே இருந்தன. இவற்றையெல்லாம் ரசிப்பது என் போன்ற ஜென்நிலைப் பார்ட்டிகளுக்குத்தான் அந்தப் பரவசம் புரியும்.

திடீரெனக் கண்ணைப் பறித்தது ஒரு கார். சிவப்புக் கலரில் 1939 மாடலான MG நிறுவனத்தின் TB என்றொரு மாடல் செமையாக இருந்தது. ‘எங்கேயோ பார்த்த மாதிரி’ இருக்கே என்று மீண்டும் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவை நோண்டினேன்.

கரெக்ட்! ‘சிவாஜி’ படத்தில் வரும் ‘அதிரடிக்கார மச்சான் மச்சானே’ பாடலில் ரஜினியும் ஷ்ரேயாவும் டூயட் பாடி ஆடுவார்களே… அது இந்த எம்ஜி TB மாடலில்தான்! அதிரடிக் காரை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு, அமைதியாகக் கிளம்பினேன்.

கூட்டத்தில், மோரிஸ் மைனர் காரோடு ஒரு தாத்தா நின்றிருந்தார். பார்ப்பதற்கு மேஜர் போல் இருந்தார். `‘மோட்டார் விகடனிலிருந்து வந்திருக்கோம்!’’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். மேஜர் உற்சாகமானார். ‘‘ஓ அப்படியா! உங்க எம்டி நல்லாருக்காரா? என் பேரும் சீனிவாசன்தான்!’’ என்றார்.

உலகின் முதல் கார் 
to ரஜினியின்  ‘பாயும் புலி’ 
பைக் வரை!
சீனிவாசன்
சீனிவாசன்
உலகின் முதல் கார் 
to ரஜினியின்  ‘பாயும் புலி’ 
பைக் வரை!
உலகின் முதல் கார் 
to ரஜினியின்  ‘பாயும் புலி’ 
பைக் வரை!
உலகின் முதல் கார் 
to ரஜினியின்  ‘பாயும் புலி’ 
பைக் வரை!

‘‘இந்த கார் பாத்தீங்கன்னா, 1948 மாடல்.ஆனால், நான் 1951–ல்தான் இதை வாங்கினேன். தினமும் 50 முதல் 70 கிலோ மீட்டர் சிட்டிக்குள்ள சுத்திட்டு இருக்கு. எப்பவாவது இந்த வண்டி, என் ஃபேமிலியோட ஒரு ட்ரிப் போயிட்டு வந்துரும். மலைச்சாலையா இருக்கட்டும்; கடற்கரையா இருக்கட்டும்; ஹைவேஸா இருக்கட்டும்… எல்லாத்துக்கும் கலக்கிடுவான் என் மைனர்!

இந்த காரின் ஐம்பதாவது வருஷத்துல ஒரு ராலி வச்சிருந்தாங்க. ஆஸ்திரேலியா சிட்னியில் இருந்து ஜப்பானின் டோக்கியோ வரைக்கும் போகணும்ங்கிறது இலக்கு. நான் லண்டனுக்குப் போய் கலந்துகிட்டு வந்தேன். வண்டியோட நட்டு போல்ட்ல இருந்து இன்ஜின் வரை எல்லாமே ஒரிஜினல்தான். இந்த மாதிரி என்கிட்ட 7 வெரைட்டியான கார் இருக்கு!’’ என்று மோரிஸ் மைனர் பற்றிப் பெருமையாகப் பேசினார் சீனிவாசன்.

‘‘அதெல்லாம் ஓகே! ஏதாச்சும் பார்ட்ஸ் ரிப்பேர் ஆனா என்ன பண்ணுவீங்க’’ என்று என் சந்தேகத்தைக் கேட்டேன்.

‘‘மோரிஸ் மைனர் கம்பெனியில் நான் மெம்பரா இருக்கேன். வண்டி பார்ட்ஸ்ல ஏதாச்சு பிரச்சனைனா லண்டன்ல இருக்கும் மோரிஸ் மைனர் கம்பெனிக்கு ஒரு போன் அடிச்சேன்னா போதும்… அடுத்த ஃப்ளைட்ல எனக்கு பார்ட்ஸ் வந்துரும். அது மட்டுமில்ல; இந்த வண்டிக்காகவே ஒரு பெர்மனென்ட் மெக்கானிக் வச்சிருக்கேன். இந்தா இதுதான் Morris Minor–ன் ஒரிஜினல் கார் சாவி!’’ என்று உற்சாகத்தோடு காட்டினார். ‘‘1951–ல் இதை ரூபாய் 5,600 ரூபாய்க்கு வாங்கினேன். இப்போ இதோட விலை 6 லட்சம்!’’ என ஆச்சரியப்பட வைத்தார். நிஜமாகவே மேஜர்தான் என்று நினைத்துக் கொண்டு, பைக் ஏரியாவுக்கு ஆக்ஸிலரேட்டரை முறுக்கினேன்.

60–70–கள் புள்ளிங்கோக்களின் ஃபேவரைட் பைக்குகள் வரிசையாக வரிசை கட்டி நின்றிருந்தன. எண்ணிப் பார்த்தேன். 20–க்கு மேல் இருக்கும். அதில் ஒரு மஞ்சள் கலர் பைக் மட்டும் புலி மாதிரி கம்பீரமாக இருந்தது. அட உண்மைதான்! ‘பாயும் புலி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயன்படுத்திய 1974 மாடல் சுஸூகி RV 90 பைக். இதன் எடை வெறும் 84 கிலோதானாம். இது கியரிங் மற்றும் ரைடர் எடையைப் பொருத்து அதிகபட்ச வேகமாக 85 கிமீ மணி வரை பாயுமாம். 1948 மாடல் பிஎஸ்ஏ 500சிசி, 1969 மாடல் லாம்ப்ரெட்டா எல்டி, மோஃபா சைக்கிள், யெஸ்டி, யமஹா என்று எல்லா பைக்குகளையும் தரிசித்து விட்டேன்.

ஏதோ ஒரு 1960 பழைய மாடல் பைக் ஒன்றிடம் ஒரு சலசலப்பு. பக்கத்தில் போனேன். ‘‘ப்ளீஸ்… ப்ளீஸ்’’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர். எதிரே இருந்த இன்னொருவர், ‘‘விற்பனைக்கு இல்ல தம்பி… ஆனா 4 லட்சம் இதோட மதிப்பு’’ என்று சொல்லி வாய் பிளக்க வைத்தார்.

ஒவ்வொரு கார்/பைக் முன்பும் செல்ஃபி எடுத்துக் கொண்டே மனமில்லாமல் வீட்டுக்குக் கிளம்பினேன். மழை நின்றபிறகும் மரக் கிளைகள் தூறுமே... அதுபோல்… இன்னும் என் மனதில் வின்டேஜ் கார்களின் நினைவுகள்…!