Published:Updated:

7.5 கோடி ரூபாய் லம்போகினி கார்; மகளுக்குப் பரிசளித்த அந்த சென்னை விஐபி யார்?

ஹூராக்கன் ஈவோ ஃப்ளோவ் கேப்ஸ்யூல்

இதன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 3.73 கோடி ரூபாய் வரும்பட்சத்தில் – இறக்குமதி வரி; நுழைவு வரி என்று கூட்டிக் கழித்துப் பார்த்தால்… இந்தியாவில் இதை ஓட்ட இதைவிட 2 மடங்கு அதிகமாகக் கட்ட வேண்டி வரலாம். அப்படியென்றால், இதை சுமார் 7.5 கோடிக்கு வாங்கியிருப்பார் அந்தச் சென்னை விஐபி.

7.5 கோடி ரூபாய் லம்போகினி கார்; மகளுக்குப் பரிசளித்த அந்த சென்னை விஐபி யார்?

இதன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 3.73 கோடி ரூபாய் வரும்பட்சத்தில் – இறக்குமதி வரி; நுழைவு வரி என்று கூட்டிக் கழித்துப் பார்த்தால்… இந்தியாவில் இதை ஓட்ட இதைவிட 2 மடங்கு அதிகமாகக் கட்ட வேண்டி வரலாம். அப்படியென்றால், இதை சுமார் 7.5 கோடிக்கு வாங்கியிருப்பார் அந்தச் சென்னை விஐபி.

Published:Updated:
ஹூராக்கன் ஈவோ ஃப்ளோவ் கேப்ஸ்யூல்

கொஞ்சம் பழைய உதாரணம்தான்; ஆனால், எவர்கிரீன் எக்ஸாம்பிள். ‘சூது கவ்வும்’ படத்தில் ‘நான் காரை ஓட்டலை… அந்தக் கடவுளையே ஓட்டினேன்’ என்று ஜாகுவார் காருக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால், லம்போகினி கார், கடவுளுக்கும் மேலே!

இந்தியாவில் இந்த காரை வாங்க முதலில் தகுதி வேண்டும்; அதைத் தாண்டி இறக்குமதி வரி… நுழைவு வரி… அந்த வரி இந்த வரி என்று சலிக்காமல் வரி கட்ட ரெடியாக இருக்கும் ஒரு தனவானாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தனவானைத்தான் லம்போகினி ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதம் லாஞ்ச் ஆன உடனேயே, மிகச் சூடாக ‘ஹூராக்கன் ஈவோ ஃப்ளோவ் கேப்ஸ்யூல்’ (Lamborghini Huracan EVO Fluo Capsule) எனும் லம்போகினி மாடல் காரை சென்னையில் டெலிவரி எடுத்திருக்கிறார் விஐபி ஒருவர். அந்த விஐபி யாரென்று லம்போகினி சொல்ல மறுக்கிறது. இந்த மாதம் பிப்ரவரி 14–ம் தேதி காதலர் தினத்தன்று, தனது மகளுக்குப் பரிசளித்திருக்கிறாராம் அந்த விஐபி. அவர் யாரென்று கண்டுபிடிப்பதை சோஷியல் மீடியா பார்த்துக் கொள்ளும். அதற்கு முன் அந்த லம்போகினி காரைப் பற்றிய ஒரு சின்ன அப்டேட்.

ஹூராகன் ஈவோ
ஹூராகன் ஈவோ

லம்போகினியில் ஏற்கெனவே ஹூராகன் ஈவோ கார் – Spyder, RWD, STO என்று பல வேரியன்ட்களில் சுமார் 3.5 கோடி முதல் 5.75 கோடி வரை விற்பனையில் இருக்கிறது. இந்த EVO Fluo Capsule மாடலை, அதன் அப்டேட்டாக இந்த ஆண்டின் முதல் மாடலாகக் கொண்டு வந்திருக்கிறது இத்தாலியைச் சேர்ந்த லம்போகினி நிறுவனம். Huracan என்றால் ஸ்பானிய மொழியில் Hurricane. அதாவது சூறாவளி என்று அர்த்தம்.

சும்மா போகிற போக்கில் பெயர் வைக்கும் பழக்கம் லம்போகினிக்குக் கிடையாது. நிஜமாகவே இது வேகத்தில் ஒரு சூறாவளிதாங்க! இதிலுள்ளது சிசி 5,200 சிசி கொண்ட V10 சிலிண்டர் இன்ஜின். இதன் பவர் 630bhp. அதாவது, இது நம் ஊர் இனோவா மாதிரி சுமார் நான்கரை மடங்கு வேகம். இதன் டார்க் 600Nm. இதிலுள்ள 7 ஸ்பீடு கியர்பாக்ஸை என்கேஜ்டு செய்தால், சட்டுபுட்டுனு வெறும் 2.9 விநாடிகளில் இது 100 கிமீ வேகத்தில் பறக்க ஆரம்பித்திருக்கும். 9 விநாடிகளில் 200 கிமீ–யைத் தொடுமாம் இந்த ஈவோ. இதன் வேகம் மணிக்கு சுமார் 325 கிமீ என்கிறது லம்போகினி. அதாவது, செங்கல்பட்டிலிருந்து ஈரோட்டுக்கு சுமார் ஒண்ணே கால் மணி நேரத்தில் போய் விடலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாக, சூப்பர் கார்கள் என்றால், நேர் சாலைகளில் வேகமாகப் பறக்கலாம். ஆனால், மேடு பள்ளங்களில் விவேகம் தேவை. காரணம், இதன் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ். அதை ஈடுகட்டும் விதமாக இதன் கிளியரன்ஸைக் கணிசமாக ஏற்றியிருக்கிறதாம் லம்போகினி. 135 மிமீ–ல் இருந்து சுமார் 175 மிமீ வரை ஏற்றியிருப்பதாகத் தகவல். அதேபோல், காற்றில் ஜிவ்வெனப் பறக்க வேண்டும் என்பதற்காக, எடை குறைந்த அலுமினியம் மற்றும் ஸ்டீலால் முடிந்தளவு எடையைக் குறைத்திருக்கிறார்கள். இவ்வளவு டெக்னிக்கல் அம்சங்கள் கொண்ட இந்த சூப்பர் காரின் எடை, 1,422 கிலோ. பொதுவாக, லம்போகினி கார்கள் சுமார் 5 முதல் 6 கிமீ வரை மைலேஜ் தரும்.

4 வீல் ஸ்டீயரிங்
4 வீல் ஸ்டீயரிங்

இது ஒரு 4வீல் டிரைவ் மட்டுமில்லை; 4 வீல் ஸ்டீயரிங் கார் என்பதும் ஒரு ஸ்பெஷல். அதாவது, பின் பக்க வீல்களுக்கும் ஸ்டீயரிங் கன்ட்ரோல் உண்டு. குறைந்த வேகங்களில் போகும்போது, முன் சக்கரங்களுக்கு எதிர்த் திசையில் இதன் பின் சக்கரங்கள் திரும்பும். இதனால், 4.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த காரின் டர்னிங் சர்க்கிள் குறையும். எனவே, சட் சட் என யூ–டர்ன் அடிக்க முடியும். வேகாகப் போகும்போது, இந்த வேலை அப்படியே எதிர்திசையில் நடக்கும். அதனால்தான் 200 கிமீ வேகத்தில் போனாலும், உள்ளே டீ குடித்துக் கொண்டேகூட சிந்தாமல் பறக்க முடியும். இதன் சஸ்பென்ஷன் செட்அப்பும் அப்படி!

கார் டிசைன் என்றாலே இத்தாலிதான். அதுவும் ஸ்போர்ட்ஸ் கார் டிசைன் என்றால், இத்தாலியை விட்டால் வேறு வழியில்லை. நம் ஊர் கார் தயாரிப்பாளர்கள், இத்தாலி நிறுவனங்களுடன் கைகோர்த்துத்தான் பல கார்களை டிசைன் செய்து கொண்டிருக்கின்றன. அடுத்த நாட்டுக்குக் கார் டிசைன் செய்தாலே அசத்தும் இத்தாலி டிசைனர்கள், தனது சொந்த நாட்டுத் தயாரிப்புக்குச் சும்மாவாக இருக்கும்.

ஏரோ டைனமிக்ஸ், முந்தைய ஹூராகன் மாடலைவிட 5 மடங்கு அதிகமாக இருக்கும்.
ஏரோ டைனமிக்ஸ், முந்தைய ஹூராகன் மாடலைவிட 5 மடங்கு அதிகமாக இருக்கும்.

காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் ஏரோ டைனமிக்ஸ், இதன் முந்தைய ஹூராகன் மாடலைவிட 5 மடங்கு அதிகமாக இருக்குமாம். பெரிய 20 இன்ச் அலாய் வீல்கள், முன் பக்க டிஃப்யூஸர் என்று கலக்குகிறது லம்போகினி Huracan EVO Fluo Capsule. மற்ற ஈவோ கார்களில் இருந்து தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக, அங்கங்கே கறுப்பு நிற ரூஃப், பம்பர், டிஃப்யூஸர், வீல்கள் என்று கொடுத்திருக்கிறார்கள். உள்பக்கமும் விமானத்தின் காக்பிட்டைப் போலவே கறுப்பு நிறத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறது. பட்டன் ஸ்டார்ட்டுக்கு, சீட்டுக்கு என்று காரின் வெளிப்பக்க கலரையே கொடுத்திருப்பது நச்! இந்த லெதர் சீட்களுக்குப் பெயர் Alcantara. இது உலகின் காஸ்ட்லியான லெதர்களில் ஒன்று.

உள்பக்மும் விமானத்தின் காக்பிட்டைப் போலவே...
உள்பக்மும் விமானத்தின் காக்பிட்டைப் போலவே...

பச்சை, ஆரஞ்ச், புளூ, மஞ்சள், சிவப்பு கலந்த ஆரஞ்ச் என்று மொத்தம் 5 கலர்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீட்டுப் பெயர் இருக்கிறது. பச்சை என்றால் Verde Shock, மஞ்சளுக்கு Giallo Clarus என்று Code Name வைத்திருக்கிறார்கள். நமது சென்னை விஐபி தனது மகளுக்குப் பரிசளித்திருப்பது Arancio Livrea எனும் ஆரஞ்ச் கலர் லம்போகினி.

இந்த காரின் சரியான எக்ஸ் ஷோரூம் விலையை லம்போகினி சொல்லவில்லை. ஆனால், இது பழைய ஈவோ மாடலைவிட சுமார் 10% விலை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 3.73 கோடி ரூபாய் வரும்பட்சத்தில் – இறக்குமதி வரி; நுழைவு வரி என்று கூட்டிக் கழித்துப் பார்த்தால்… இந்தியாவில் இதை ஓட்ட இதைவிட 2 மடங்கு அதிகமாகக் கட்ட வேண்டி வரலாம். அப்படியென்றால், இதை சுமார் 7.5 கோடிக்கு வாங்கியிருப்பார் அந்தச் சென்னை விஐபி. இன்னும் சில லட்சங்கள் கொடுத்து, இந்த காரின் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரில் எக்ஸ்ட்ரா மாடிஃபிகேஷன்களும் செய்திருப்பதாகத் தகவல்.

காருக்கு எக்ஸ்ட்ரா வரி.… ஈரோட்டுக்கு ஒண்ணே கால் மணி நேரம் எல்லாம் சரி,... ஆனால், இந்த லம்போகினியை ஓட்டுறதுக்கு நல்ல ரோடு வேணுமே விஐபி மகளே!