Election bannerElection banner
Published:Updated:

அல்கஸார்… ஹூண்டாயின் புதிய 6 & 7 சீட்டர் எஸ்யூவி-யில் என்ன ஸ்பெஷல்?! #ALCAZAR

அல்கஸார்
அல்கஸார்

இதில் 6 சீட்டர் மாடல் என்றால், சொகுசாகப் பயணிக்க கேப்டன் சீட் வசதி இருக்கும். 7 சீட்டர் வேண்டும் என்றால், சாதாரண பென்ச் சீட்தான் கிடைக்கும். இரண்டு மாடல்களிலுமே பின் சீட்டில் சிங்கிள் டச் ஆப்ஷன் மூலம் சீட்களை ஸ்லைடு செய்து, இடவசதியைப் பெருக்கி, சுருக்கிக் கொள்ளலாம்.

எக்ஸ்யூ500, டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் போன்றவற்றுக்குப் போட்டியாக, தனது பிராண்ட் நியூ எஸ்யூவியான அல்கஸார்-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது ஹூண்டாய். 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களுடன் வந்திருக்கும் அல்கஸார், கிட்டத்தட்ட க்ரெட்டாவின் Underpinnings-ல், சுமார் 650 4th ஜென் ரோபோக்களை வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன் நீள/அகல/உயரம் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கார் நீளமாக இருப்பதால், இதன் வீல்பேஸ் மட்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 2,760 மிமீ. இது மிட் சைஸ் எஸ்யூவியான க்ரெட்டாவைவிட 150 மிமீ அதிகம் இருக்கும். இவ்வளவு ஏன், இந்த செக்மென்ட்களில் பெஸ்ட்டான டாடா சஃபாரி (2,741மிமீ), எம்ஜி ஹெக்டர் (2,750மிமீ) கார்களை முந்திவிட்டது அல்கஸார்.

6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்
6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

அதேபோல், வீல்பேஸைத் தாண்டி இருக்கும் இதன் பின் பக்க ஓவர்ஹேங் பகுதியும் நீளம். இதனால், பின் பக்க மூன்றாவது வரிசை இடவசதியும் சும்மா பேருக்கு இருக்காது. மற்றபடி முன் பக்க ஃபெண்டர்கள், பாடி பேனல்கள், முன் பக்கக் கதவுகள் எல்லாமே க்ரெட்டாதான். பெரிய எஸ்யூவி என்பதால், 18 இன்ச் அலாய் வீல்கள் இருக்கின்றன. இது ஹேரியரைவிட, க்ரெட்டாவைவிட 1 இன்ச் பெரியது. பின்னால் டூயல் எக்ஸாஸ்ட் கொடுத்திருக்கிறார்கள்.

இதில் 6 சீட்டர் மாடல் என்றால், சொகுசாகப் பயணிக்க கேப்டன் சீட் வசதி இருக்கும். 7 சீட்டர் வேண்டும் என்றால், சாதாரண பென்ச் சீட்தான் கிடைக்கும். இரண்டு மாடல்களிலுமே பின் சீட்டில் சிங்கிள் டச் ஆப்ஷன் மூலம் சீட்களை ஸ்லைடு செய்து, இடவசதியைப் பெருக்கி, சுருக்கிக் கொள்ளலாம்.

18 இன்ச் அலாய் வீல்கள்
18 இன்ச் அலாய் வீல்கள்

அதேபோல், அல்கஸாரின் டிக்கியில் இடவசதியும் அதிகம். மூன்று வரிசைகளுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், இதன் பூட் ஸ்பேஸ், 180 லிட்டர். இது சஃபாரியை விட (73லிட்டர்), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்ஸைவிட (155லிட்டர்), எக்ஸ்யூவி500–யைவிட (93 லிட்டர்) அதிகம்.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் வரவிருக்கிறது. தவிர பெட்ரோலில் மட்டுமே இரண்டு ஆப்ஷன்கள் உண்டு.

115bhp பவரைத் தரும் 1.5 லிட்டர் இன்ஜினும், 140bhp பவரைத் தரும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும் உண்டு. இன்னும் பவர்ஃபுல்லாக வேண்டும் என்பவர்களுக்கு 2.0 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷனும் உண்டு

பெரிய காராக இருந்தாலும், க்ரெட்டாவில் இருக்கும் இன்ஜினையே பொருத்தி இருக்கிறார்கள். 115bhp பவரைத் தரும் 1.5 லிட்டர் இன்ஜினும், 140bhp பவரைத் தரும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும் உண்டு. இதை இந்த காரின் அளவுக்கு ஏற்ப ட்யூன் செய்திருக்கிறது ஹூண்டாய்.

இன்னும் பவர்ஃபுல்லாக வேண்டும் என்பவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷனும் உண்டு. இது 159bhp பவரையும் 19.2kgm டார்க்கையும் தருகிறது. இது எலான்ட்ரா மற்றும் டூஸான் போன்ற பெரிய கார்களில் இருக்கும் இன்ஜின் என்பதால், இதன் பெர்ஃபாமன்ஸ் பவர்ஃபுல்லாக இருக்கலாம். மேலும் இது எலான்ட்ராவையும் டூஸானையும்விட 7bhp பவர் அதிகம்.

பூட் ஸ்பேஸ் 180 லிட்டர்
பூட் ஸ்பேஸ் 180 லிட்டர்

டீசலைப் பொருத்தவரை 115bhp பவரையும், 25kgm டார்க்கையும் தரும் 1.5L டீசல் இன்ஜின் கொடுத்திருக்கிறார்கள். இதுவும் க்ரெட்டாவில் இருக்கும் அதே டர்போ டீசல்தான்.

இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கின்றன.

வசதிகளிலும் கலக்க இருக்கிறது அல்கஸார். பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்கள், 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் என பல வசதிகளுடன் கலக்க இருக்கும் அல்கஸாரின் விலை, இந்த மாத இறுதியில் தெரிந்துவிடும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு