Published:Updated:

க்ரெட்டா ப்ளாட்ஃபார்ம், டூஸான் இன்ஜின் - ஹூண்டாய் அல்கஸார்

Hyundai Alcazar
பிரீமியம் ஸ்டோரி
Hyundai Alcazar

ப்ரோட்டோ டைப் டிரைவ்: ஹூண்டாய் அல்கஸார்

க்ரெட்டா ப்ளாட்ஃபார்ம், டூஸான் இன்ஜின் - ஹூண்டாய் அல்கஸார்

ப்ரோட்டோ டைப் டிரைவ்: ஹூண்டாய் அல்கஸார்

Published:Updated:
Hyundai Alcazar
பிரீமியம் ஸ்டோரி
Hyundai Alcazar

வழக்கமான ஃபர்ஸ்ட் டிரைவ்போல் இல்லை இது. ஒரு ப்ரோட்டோ டைப் மாடலின் ரிப்போர்ட்டைக் கொடுப்பது ரொம்பப் புதுமையாக இருக்கிறது. இது ஹூண்டாயின் புது வரவு – அல்கஸார். பல ஸ்பை படங்களில் அடிபட்ட அல்கஸாரின், ப்ரோட்டோ டைப் மாடல் ஸ்பை படங்களில் சிக்குவதைப் போன்ற அதே camouflage தோற்றத்தில் நம் கைக்குக் கிடைத்தது.

நீங்கள் ஒரு ஹாலிவுட் பிரியராக இருந்தால், Alcazar - என்ற பெயரைக் கேட்டவுடன், `Tintin’னில் குறி தவறாமல் கத்தி எறியும் போலீஸ் அதிகாரி அல்கஸார் நினைவுக்கு வந்திருப்பார். ஆனால், இந்த காருக்கு, ஸ்பெயின் நாட்டின் பிரபலமான மிகப் பெரிய அரண்மனையின் பெயரைத் தான் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டிருக்கிறது ஹூண்டாய். அல்கஸார் அரண்மனையின் பெயருக்கு ஏற்றபடி விஸ்தாரமாகத்தான் அல்கஸாரை வடிவமைத்திருக்கிறது ஹூண்டாய்.

கார்களை பொசிஷன் செய்வதில் என்னைப் பொருத்தவரை ஹூண்டாயை ஒரு கில்லாடி என்பேன். பெரிய 7 சீட்டர் காராக, அதாவது க்ரெட்டாவுக்கு மேலே ஒரு படியும், தனது பெரிய மாடலான டூஸானின் இன்ஜினைப் பொருத்தி அதற்குக் கீழேயும் பொசிஷன் செய்து, எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது ஹூண்டாய். 7 சீட்டர் என்றால் எம்பியாகவோ, எஸ்யூவியாகவோதான் இருக்கும். இதை எஸ்யூவி என்கிறது ஹூண்டாய்.

உள்ளே...

காருக்குள்ளே நுழைந்தவுடன் அவ்வளவு இடவசதி. ப்ரீமியமாக வரவேற்கிறது அல்கஸாரின் இன்டீரியர். 7 பேர் உட்கார்வதற்காக இதன் வீல்பேஸை செமையாக இழுத்திருக்கிறார்கள். 2,760 மிமீ என்பது இந்த செக்மென்ட்டின் நீளமான காராக இருக்கப் போகிறது அல்கஸார். ஹூண்டாயின் க்ரெட்டாவைவிட 150 மிமீ பெரியது. இதில் 6 சீட்டர் என்றால் நடுவரிசை சீட்டுகள் கேப்டன் சீட்டுகளாகவே இருக்கும். இன்டீரியரில் ஒவ்வொரு மிமீ–யையும் பயணிகளின் கம்ஃபர்ட்டுக்காகப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு வரிசை சீட்டுக்கும் பயணிகளுக்கான அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கிறது. 6 சீட்கள் என்றால், மிடில் சீட்டில் பயணிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். சொகுசு கேரன்ட்டி.

க்ரெட்டாவுக்கு மூத்தவன் என்பதால், அதைவிட 1 இன்ச் பெருசு. அல்கஸாரில் இருப்பது18 இன்ச் அலாய் வீல்கள்.
க்ரெட்டாவுக்கு மூத்தவன் என்பதால், அதைவிட 1 இன்ச் பெருசு. அல்கஸாரில் இருப்பது18 இன்ச் அலாய் வீல்கள்.


இதுவே 7 சீட்டர் வெர்ஷனில் 60:40 ஸ்ப்ளிட் சீட் ஆப்ஷன் இருக்கிறது. பின் பக்கம் செல்வதற்கு, நடுவரிசையில் ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் போதும். தானாக மடிகின்றன நடுவரிசை சீட்கள். மூன்றாவது வரிசையில் ஆள் இல்லாதபட்சத்தில், அட்ஜஸ்டபிள் பேக்ரெஸ்ட்டுடன், கப் ஹோல்டர்களுடன் அசத்தலான கம்ஃபர்ட். என்ன, குறுகலான கார் என்பதால், இரண்டாவது வரிசையில் 3 பேர் என்றால் மட்டும் கொஞ்சம் அசெளகரியமாக இருக்கும். பின் பக்கமும் 3 சிறுவர்களுக்கு நன்றாக செட் ஆகும். பெரியவர்கள் என்றால் குறைந்த தூரம் மட்டும் சென்று வரலாம். ஆனால், இங்கேயும் ஏர் வென்ட்கள் கொடுத்திருக்கிறார்கள். சில்லென்று பயணிக்கலாம். என்ன, கொஞ்சம் தாழ்வாக அமர்வதுபோல் இருக்கின்றது. இருந்தாலும், 6 சீட் கேப்டன் சீட்கள்தான் எனக்குப் பிடித்திருந்தது.

வெளியே…

க்ரெட்டாவின் ப்ளாட்ஃபார்மையே… அப்படியே 7 சீட்டருக்காக ரீ–இன்ஜீனியரிங் செய்திருக்கிறது ஹூண்டாய். இதன் க்ரோம் ஸ்டட் செய்யப்பட்ட கிரில் டிசைன், எஸ்யூவிக்கு ஏற்றபடி கெத்தாக மாறியிருக்கிறது. அதேநேரத்தில் க்ரெட்டாவைவிட ப்ரீமியமாகவும் இருக்கிறது. ஹெட்லைட் க்ளஸ்டர், க்ரெட்டாபோல் இருந்தாலும், ரீ–டிசைன் செய்யப்பட்ட இதன் பனிவிளக்குகளும், ஸ்கஃப் பிளேட்டும், க்ரோம் ஃபினிஷ்களும் க்ரெட்டாவின் அண்ணனாகக் காட்டுகின்றன அல்கஸாரை.

இதன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், அப்படியே க்ரெட்டாதான்.
இதன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், அப்படியே க்ரெட்டாதான்.


பக்கவாட்டில் வந்தால்தான் பெரிய மாற்றத்தைக் கண்டுபிடிக்கலாம். அந்த க்வார்ட்டர் கிளாஸ்தான் அல்கஸாரின் பின்பக்க ஓவர்ஹேங்கை நீளமாகக் காட்டுகிறது. க்ரெட்டாவுக்கு மூத்தவனாச்சே… அதனால் ஒரு இன்ச் அதிகமாக 18 இன்ச் அலாய் வீல்கள் கொடுத்திருக்கிறார்கள். இது இந்தப் பெரிய எஸ்யூவிக்கு ரொம்பவும் பொருத்தமாக இருக்கிறது. பின் பக்கம் ஃபெண்டரின் இரட்டை லைன்கள் கொண்ட டிசைனும், கறுப்படித்த D பில்லரும் ஸ்டைலாகவே இருக்கின்றன. க்ரெட்டாவிலேயே சன்ரூஃப் இருக்கும்போதே… அல்கஸாரில் இருக்காதா என்ன?

க்ரெட்டா ப்ளாட்ஃபார்ம், டூஸான் இன்ஜின் - ஹூண்டாய் அல்கஸார்

எக்யூப்மென்ட் லிஸ்ட்

ஹூண்டாய் இதுவரை அல்கஸாரின் மொத்த வசதிகளையும் வெளியிடவில்லை. நாம் ஓட்டியது ப்ரோட்டோ டைப் என்பதால், புரொடக்ஷன் மாடலில் என்னென்ன வசதிகள் வரும் என்று தெரியவில்லை. ஆனால் 10.25 இன்ச் கொண்ட பெரிய டச் ஸ்க்ரீன் உண்டு. இதில் கனெக்டட் வசதிகளுடன் ஆப்பிள் கார் ப்ளே /ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் நிச்சயம் இருக்கும். கூடவே 360 டிகிரி பார்க்கிங் கேமராவும் இருக்கலாம். வயர்லெஸ் சார்ஜிங் இல்லாமலா… அதுவும்தான். வென்டிலேட்டட் சீட்களும் நிச்சயம் இருக்கலாம். அதாவது, க்ரெட்டாவைவிட வசதிகளும் கம்ஃபர்ட்டும் உறுதி என்று அடித்துச் சொல்லலாம். அதைவிட பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங் என்று கலக்க இருக்கிறது அல்கஸார்.

டூயல் எக்ஸாஸ்ட், ஸ்டைல். காரின் ஸ்டெஃப்னி அடியில் இருக்கிறது.
டூயல் எக்ஸாஸ்ட், ஸ்டைல். காரின் ஸ்டெஃப்னி அடியில் இருக்கிறது.


டிரைவிங்

பெட்ரோல்/டீசல் என இரண்டிலுமே ஓடவிருக்கிறது அல்கஸார். முதலில் 1.5 லிட்டர், 115bhp பவர் கொண்ட டீசல் இன்ஜின். க்ரெட்டாவில் உள்ள அதே இன்ஜினைத்தான் பெரிய எஸ்யூவிக்காகக் கொஞ்சம் ரீ–காலிபரேட் செய்திருக்கிறார்கள். பெட்ரோலைப் பொருத்தவரை க்ரெட்டாவில் உள்ள 1.4 TGDi, 140bhp பவர் கொண்டது கிடையாது. இதில் காருக்கு ஏற்றபடி இன்னும் கொஞ்சம் பெரிதாகி இருக்கிறது. அல்கஸாரின் பெட்ரோல் பவர் 159bhp. இதை 2.0லிட்டர் இன்ஜினுடன் பொருத்தியிருக்கிறார்கள். அதாவது, இது டூஸான் மற்றும் எலான்ட்ராவில் இருக்கும் அதே 2.0லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின்தான். ஆனால், இதிலிருப்பது 3–வது ஜெனரேஷன் இன்ஜின். இதன் பவரைக் கொஞ்சம் (7bhp) கூட்டியிருக்கிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் உண்டு. ஆட்டோமேட்டிக் என்பது Dual Clutch Transmission இல்லை. வழக்கமான டார்க் கன்வெர்ட்டர்தான்.

க்ரெட்டா ப்ளாட்ஃபார்ம், டூஸான் இன்ஜின் - ஹூண்டாய் அல்கஸார்

6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் வேரியன்ட்தான் இப்போதைக்கு ஓட்ட முடிந்தது. இதன் ஷார்ட் த்ரோ கியர்பாக்ஸ் மிகவும் துல்லியமாக இருந்தது. ஆனால், சிட்டிக்குள் இதன் க்ளட்ச் கொஞ்சம் ஹெவியாக இருப்பதுபோல் இருந்தது. டார்க் கன்வெர்ட்டரை ஓட்ட ஆசையாக இருக்கிறது. ஆனால், பெட்ரோல் இன்ஜின் ரொம்ப ஸ்மூத் ஆகவும், ஃப்ளெக்ஸிபிள் ஆகவும் இருந்தது ஓட்டுவதற்கு. ஒரே மிதியில் 1,000rpm-ல் இருந்து 7,500rpm வரை சங்கடமில்லாமல் இழுக்கிறது. இருந்தாலும் மற்ற லாங்–ஸ்ட்ரோக் இன்ஜின்கள் மாதிரி ஃப்ரீ ரெவ் ஆகவில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால், ஆச்சரியம் – 60–வது கிமீ வரை முதல் கியரிலேயே செல்ல முடிந்தது. அதாவது, டால் கியரிங் செட்–அப்பை காம்பென்சேட் பண்ணுவதற்காக இந்த முயற்சியோ! அதேநேரம், டர்போ பெட்ரோலில் கிடைக்கும் மிட் ரேஞ்சில் ஒரு பன்ச்சும் ஃபன்னும் இதில் மிஸ் ஆகிறது.

இந்த க்வார்ட்டர் கிளாஸ்தான், பின் பக்க ஓவர்ஹேங்கை நீளமாகக் காட்டுகிறது.
இந்த க்வார்ட்டர் கிளாஸ்தான், பின் பக்க ஓவர்ஹேங்கை நீளமாகக் காட்டுகிறது.

1.4TGDi க்ரெட்டா எஸ்யூவியைவிட 150 கிலோ அதிகமான அல்கஸாரை, இந்த 2.0லிட்டர் NA இன்ஜின், ஜிவ்வென இழுத்துப் போகிறது. நிச்சயம் க்ரெட்டாவைவிட இதன் பெர்ஃபாமன்ஸ் வேகமாகத்தான் இருக்கும்.

இதன் ஹேண்ட்லிங், ஸ்போர்ட்டியாக இருப்பதைவிட சொகுசாக இருக்கிறது என்றே சொல்லலாம். இதன் பெரிய வீல்பேஸும், காரின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள High Strength Steel–களும் ஹைவேஸில் ஹைஸ்பீடில் பறப்பதற்குத் தன்னம்பிக்கை ஊட்டுகின்றன. அதேநேரம், லேசாக பாடி ரோல் தெரிகிறதே! ஆனால், இதன் மெச்சூர்டான டைனமிக்ஸ், அல்கஸாரின் ஹேண்ட்லிங்கை எளிமையாக்குகிறது. இதில் தண்டனைக்குரியவர்களாக இருக்கப் போவது – அந்த 3–வது வரிசைப் பயணிகளாகத்தான் இருப்பார்கள். காரணம், அவர்கள் அமர்ந்திருப்பது ரியர் ஆக்ஸில் கட்டுமானத்தில் என்பதால், மேடு பள்ளங்களில் தூக்கிப் போடுவது உறுதி.

க்ரெட்டா ப்ளாட்ஃபார்ம், டூஸான் இன்ஜின் - ஹூண்டாய் அல்கஸார்

முதல் தீர்ப்பு

7 சீட்டராக இதைக் கொண்டு வந்தாலும், மற்ற 7 சீட்டர்களைப் போல் இது சிறுவர்களுக்கு மட்டும்தான் செட் ஆகும். மற்றபடி இதன் கேப்டன் சீட்களும், சொகுசும் – 6 பேருக்கு வேண்டுமானால் அம்சமாக இருக்கலாம். மே மாத ஆரம்பத்தில் ஹூண்டாய் ஷோரூம்களுக்கு வந்துவிடும் அல்கஸார். இது அநேகமாக எக்ஸ் ஷோரூமில் க்ரெட்டாவைவிட 1.5 லட்சம் அதிகமாக பொசிஷன் செய்யப்படலாம். அதேபோல், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்ஸைவிட, டாடா சஃபாரியைவிட கணிசமான விலைக் குறைப்பில் வெளியிட்டால், அல்கஸார் 7 சீட்டர் ஜெனரல்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism