Published:Updated:

க்ரெட்டாதான் செல்ட்டோஸ்... செல்ட்டோஸ்தான் க்ரெட்டா!

ஹூண்டாய் க்ரெட்டா VS கியா செல்ட்டோஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் க்ரெட்டா VS கியா செல்ட்டோஸ்

ஒப்பீடு: ஹூண்டாய் க்ரெட்டா VS கியா செல்ட்டோஸ்

க்ரெட்டாதான் செல்ட்டோஸ்... செல்ட்டோஸ்தான் க்ரெட்டா!

ஒப்பீடு: ஹூண்டாய் க்ரெட்டா VS கியா செல்ட்டோஸ்

Published:Updated:
ஹூண்டாய் க்ரெட்டா VS கியா செல்ட்டோஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் க்ரெட்டா VS கியா செல்ட்டோஸ்
இந்த ஒப்பீட்டுக்குத்தான் நீங்கள் ஆர்வமாகக் காத்திருந்தீர்கள் எனத் தெரியும். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செல்ட்டோஸ் நம் நாட்டில் அறிமுகமானது.களத்திலிருந்த மிட்சைஸ் எஸ்யூவிகள் எல்லாவற்றையும் முந்திக் கொண்டு எடுத்த எடுப்பிலேயே விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது செல்ட்டோஸ். அப்போது பழைய க்ரெட்டா அதற்குக் கடும் போட்டியாக இருந்தது என்றாலும், அது மக்களிடையே தனது மதிப்பை இழந்துவிடவில்லை. பின்னர் செல்ட்டோஸ் தயாரிக்கப்படும் அதே ப்ளாட்ஃபார்மில், புதிய க்ரெட்டா உற்பத்தி செய்யப்பட்டது. கியாவின் மாடலுக்குக் கிடைத்த ஃபீட்பேக்கை நன்கு கவனித்த ஹூண்டாய், தனது புதிய க்ரெட்டாவில் அந்தக் குறைகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டது. இந்த மிட்சைஸ் எஸ்யூவிகளின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் காம்போ கொண்ட டாப் வேரியன்ட்களையே இங்கே ஒப்பீடு செய்திருக்கிறோம். மற்றபடி இரு கார்களிலும் ஸ்டீயரிங் - சஸ்பென்ஷன் - பிரேக்ஸ் - சேஸி எனப் பல ஒற்றுமைகள் உண்டு என்றாலும், தமது பாணிக்கேற்ப அந்தந்த நிறுவனங்கள் அதை ரீ-டியூன் செய்திருக்கின்றன. சரி, இந்தக் கொரிய குடும்பச் சட்டையில் வெல்லப் போவது யார்?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விலை (GTX+) : 21.09 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
விலை (GTX+) : 21.09 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

டிசைன்

என்னதான் பெரிய Glass House, கச்சிதமான Overhangs, தடிமனான வீல் ஆர்ச்கள் என டிசைன் அம்சங்கள் பக்காவாக அமைந்திருந்தாலும், அவை ஒன்றிணைக்கப்பட்ட விதம் அனைவருக்கும் பிடித்தபடி அமையவில்லை. 3 பாகங்களாக இருக்கும் LED ஹெட்லைட் - LED DRL - டெயில் லைட்ஸ், பனி விளக்குகளுடன் மிகத் தாழ்வாக வைக்கப்பட்டுள்ள இண்டிகேட்டர்கள் ஆகியவை அதற்கான உதாரணம்.

புதிய க்ரெட்டாவுடன் ஒப்பிடும் போது, அளவுகளில் செல்ட்டோஸ் கொஞ்சம் பெரிதாக உள்ளது. ‘Tiger Nose’ Honeycomb கிரில் கெத்தாக இருந்தாலும், அதனைச் சுற்றி Knurled Brushed அலுமினிய பார்டர் - LED பட்டை என டிசைன் அம்சங்கள் நிரம்பியுள்ளன. மேலும் முன்பக்கத்தில் மெலிதான LED ஹெட்லைட்ஸும் அதற்கு மேட்சிங்காக இருக்கும் LED DRL-கள், LED இண்டிகேட்டர்களுக்குத் தனியாக இடம், Brushed அலுமினிய ஸ்கிட் பிளேட் (GT Lineல், இங்கே சிவப்பு நிற வேலைப்பாடு இருக்கும்).... அடேங்கப்பா!

விலை (SX O): 20.89 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
விலை (SX O): 20.89 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

கேபின்

வெளிப்புறத்தைப் போலவே, செல்ட்டோஸின் உள்பக்கத்திலும் பலவிதமான அம்சங்கள் மனதையும் கண்களையும் ஈர்க்கின்றன. தரம் அற்புதமாக இருப்பதால், ஹூண்டாயை இந்த ஏரியாவில் கியா சுலபமாக வீழ்த்திவிடுகிறது கியா. கேபின் எங்கும் Brushed Silver - Piano Black வேலைப்பாடுகள் இருப்பது அழகு. தவிர தொடுவதற்கு மென்மையான Double-Stitched Leatherette ஃபினிஷ், டேஷ்போர்டு மற்றும் டோர் பேடு ஆகியவற்றில் இருப்பது வாவ் ரகம். முந்தைய மாடல்களில் டேஷ்போர்டு டூயல் டோன் கலரில் இருந்தாலும், இந்த ஆண்டு வெளியான அப்டேட்டில், GTX மற்றும் GTX+ வேரியன்ட்களின் கேபின் கறுப்பு நிறத்துக்கு மாறிவிட்டது.

க்ரெட்டாவின் கறுப்பு நிறக் கேபினில் தரமான பிளாஸ்டிக்ஸ் இருந்தாலும், அதில் பிரதான பகுதிகளான டேஷ்போர்டின் மேல்பகுதி மற்றும் டோர் பேடு ஆகியவற்றில் இருக்கும் பிளாஸ்டிக்கின் தரம், அவ்வளவு சிறப்பாக இல்லை. மற்றபடி டேஷ்போர்டு வடிவமைக்கப்பட்ட விதம் நீட்டாக உள்ளதுடன், அதன் எர்கனாமிக்ஸும் பக்கா. சென்டர் கன்சோலில் இருக்கும் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் அதற்கான உதாரணம். இருப்பினும் டிஜிட்டல் டயல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உயரமாக வைக்கப்பட்டுள்ளதால், அவை உயரம் குறைவானவர்களுக்கு நெருக்கடியைத் தரலாம்.

1. கியாவின் இன்டீரியர் தரம் அற்புதம். 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சூப்பர்.  2. செல்ட்டோஸிலும் க்ரெட்டாவைப்போலவே 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ்.  3. டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம், டயர்களில் காற்று குறைந்தால் பார்த்துக் கொள்ளலாம்.  3. முன் பக்கம் கூல்டு சீட், டிரைவருக்கு பவர்டு மெமரி சீட்.. நல்ல வசதி.
1. கியாவின் இன்டீரியர் தரம் அற்புதம். 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சூப்பர். 2. செல்ட்டோஸிலும் க்ரெட்டாவைப்போலவே 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ். 3. டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம், டயர்களில் காற்று குறைந்தால் பார்த்துக் கொள்ளலாம். 3. முன் பக்கம் கூல்டு சீட், டிரைவருக்கு பவர்டு மெமரி சீட்.. நல்ல வசதி.

இடவசதி

முன்பக்க இருக்கைகளைப் பொறுத்தவரை, இரண்டுமே Cooling வசதி - Faux லெதர் உடன் இருப்பது ப்ளஸ். மேலும் டிரைவர் இருக்கைக்கு எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் செல்ட்டோஸின் இருக்கைகள் ஸ்போர்ட்டியாக இருப்பதுடன், இறுக்கமான குஷனிங்கையும் கொண்டுள்ளன. க்ரெட்டாவின் இருக்கைகள் பெரிதாக இருப்பதால், அவை உடல் பருமனானவர்களுக்கும் வசதியாக இருக்கின்றன. இரு கார்களிலும் பின்பக்க இடவசதி நன்றாக இருந்தாலும், க்ரெட்டாவின் இருக்கைகள் மென்மையான குஷனிங்குடன் உள்ளன. மேலும் இவை முதுகுக்கும் தொடைகளுக்கும் நல்ல சப்போர்ட் தருகின்றன. மேலும் பின்பக்க ஹெட்ரெஸ்ட்டில் இருக்கும் மென்மையான குஷன் பகுதி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் சேரும்போது, ஹூண்டாயின் கேபின் தரும் ப்ரீமியம் ஃபீலை உணர முடிகிறது. இதுவே செல்ட்டோஸில் சிறிய சன்ரூஃப் தான் இருப்பதுடன், முன்பக்கத்தைப் போல பின்பக்க இருக்கையின் குஷனிங்கும் இறுக்கமாகவே உள்ளது. ஆனால் இரண்டிலுமே Rear Window Blind & ரியர் ஏசி வென்ட்கள் இருப்பது செம!

1. க்ரெட்டாவின் கறுப்பு நிற கேபின் ஸ்போர்ட்டி. சில இடங்களில் மட்டும் ப்ளாஸ்டிக் தரம் மேம்பட வேண்டும். இதிலும் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன்.  2. க்ரெட்டாவின் சீட்கள் பெரிதாக இருப்பதால், உடல் பருமனானவர்களுக்கும் வசதியாக இருக்கும்.  3. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் ஏகப்பட்ட விஷயங்கள்.  4. டெயில் லைட்ஸ் டிசைன் ஓகே ரகம்.
1. க்ரெட்டாவின் கறுப்பு நிற கேபின் ஸ்போர்ட்டி. சில இடங்களில் மட்டும் ப்ளாஸ்டிக் தரம் மேம்பட வேண்டும். இதிலும் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன். 2. க்ரெட்டாவின் சீட்கள் பெரிதாக இருப்பதால், உடல் பருமனானவர்களுக்கும் வசதியாக இருக்கும். 3. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் ஏகப்பட்ட விஷயங்கள். 4. டெயில் லைட்ஸ் டிசைன் ஓகே ரகம்.

சிறப்பம்சங்கள்

மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில், வசதிகளில் முன்னிலை வகிப்பது, இந்த இரு கார்கள்தான் (டாப் வேரியன்ட்களில்தான்). எனவே இரண்டுக்கும் அதிக ஒற்றுமைகள் இருந்தாலும், சிற்சில விஷயங்களில் வித்தியாசம் உண்டு. லக்ஸூரி கார்களில் காணப்படும் Cooled & Powered முன்பக்க இருக்கைகள், 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், பெரிய கலர் MID ஸ்க்ரீன், Connected தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர், வாய்ஸ் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், AQI உடனான Air Purifier, டிரைவிங் மோடுகள், TPMS, ஆட்டோமேட்டிக் LED ஹெட்லைட்ஸ், 6 காற்றுப்பைகள், ESC, ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட், ஸ்மார்ட் வாட்ச் போன்ற சிறப்பம்சங்கள் இவற்றில் இருப்பது வியப்பளிக்கிறது. க்ரெட்டாவில் கூடுதலாக Paddle Shifters, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் மீட்டர் ஆகியவை நைஸ். இதுவே செல்ட்டோஸில் Heads Up டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட், Lane Watch அசிஸ்ட், இரட்டை அனலாக் மீட்டர்கள் ஆகியவை ஸ்பெஷல்.

க்ரெட்டாதான் செல்ட்டோஸ்... செல்ட்டோஸ்தான் க்ரெட்டா!

இன்ஜின், டிரைவிங்

க்ரெட்டா & செல்ட்டோஸில் இருப்பது, ஒரே இன்ஜின் - கியர்பாக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் பாகங்கள்தாம். எனவே இதனால் கிடைக்கும் செயல்திறன் ஒரே மாதிரி இருந்தாலும், அவை வெளிப்படும் விதத்தில் வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது. இவற்றின் அராய் மைலேஜே அதனை உறுதிப்படுத்திவிடுகிறது (செல்ட்டோஸ்: 16.5 கிமீ, க்ரெட்டா: 16.8 கிமீ). இதிலுள்ள 1,353சிசி டர்போ பெட்ரோல் இன்ஜின், 140bhp@6,000rpm பவர் - 24.2kgm@1,500rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. ஆரம்ப கட்ட வேகத்தில் இருந்தே பவர் டெலிவரி தொடங்கிவிடுவது பெரிய ப்ளஸ். அதை முன்பக்க வீல்களுக்கு, 7 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கடத்துகிறது. எனவே 0-100 கிமீ வேகத்தை செல்ட்டோஸ் 9.72 விநாடிகளில் எட்டினால், க்ரெட்டா அதை 9.81 விநாடிகளில் தொடுகிறது. ஆனால் கியர்களுக்கு இடையேயான வேகத்தில், செல்ட்டோஸை வீழ்த்தி விட்டது க்ரெட்டா. இந்த வேறுபாட்டுக்கு, கியர்பாக்ஸ் செட் செய்யப்பட்ட விதமே காரணம் எனலாம்!

அதன்படி ஹூண்டாயுடன் ஒப்பிட்டால் கியாவின் கியர்பாக்ஸ், கியர்களுக்கு இடையே காரை விரட்டும்போது உடனடியாகச் செயல்பட மறுக்கிறது. மேலும் குறைவான வேகங்களில், க்ரெட்டாவின் கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக கியர்களை மாற்றுகிறது. செல்ட்டோஸில் அந்த உணர்வு இல்லை என்பதால், நெரிசல்மிக்க நகரச்சாலைகள் மற்றும் மலைச் சாலைகளில் கூடுதல் கவனம் தேவை. மொத்தமாகப் பார்த்தால், விரட்டி ஓட்டப்படுவதை செல்ட்டோஸ் அதிகம் விரும்புகிறது. க்ரெட்டாவில் இருக்கும் பேடில் ஷிஃப்ட்டர்கள், இதில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

க்ரெட்டாதான் செல்ட்டோஸ்... செல்ட்டோஸ்தான் க்ரெட்டா!

கியாவின் ஸ்டீயரிங் எடை அதிகமாக இருப்பதுடன், பாடி கன்ட்ரோலும் அட்டகாசமாக உள்ளது. எனவே திருப்பங்களில் செல்ட்டோஸைச் செலுத்துவது நல்ல அனுபவம். மற்ற ஹூண்டாய் கார்களைப் போலவே, க்ரெட்டாவின் ஸ்டீயரிங் போதுமான ஃபீட்பேக்கைத் தரவில்லை. மேலும் பாடி ரோலும் அதிகமாகவே உள்ளது நெருடல். ஆனால் குறைவான வேகங்களில் செல்லும்போது, காரின் எடை குறைவான ஸ்டீயரிங் கைகொடுக்கிறது. தவிர கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, க்ரெட்டாவின் மென்மையான சஸ்பென்ஷன் பின்பக்க பயணிகளின் லைக்குகளை அதிகமாகப் பெறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மோட்டார் விகடன் தீர்ப்பு

இந்த ஒப்பீட்டின் வெற்றியாளரைக் கணிப்பது என்பது, எதிர்பார்த்தபடியே கடினம்தான். ஸ்போர்ட்டியான அடை யாளத்துடன் இருக்கும் செல்ட்டோஸ், அடிப்படையில் க்ரெட்டாதான். நம் நாட்டில் குறுகிய காலத்தில், கியா அடைந்திருக்கும் இடத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது, இந்த மிட்சைஸ் எஸ்யூவிதான். நாம் எதிர்பார்த்ததை, கியா துல்லியமாக வழங்கியதே அதற்கான காரணம். எனவே க்ரெட்டாவும் அதே பாணியில் வந்து, லாக்டெளன் காலத்திலும் விற்பனையில் வீறுநடை போட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், Bench Marking கோட்பாடுகளை, ஹூண்டாய் தனது காரில் சிறப்பாகச் செயல்படுத்தியிருக்கிறது. செல்ட்டோஸைவிடச் சொகுசான ஓட்டுதல், ஸ்மூத்தான கியர்பாக்ஸ், மேம்படுத்தப்பட்ட பின்இருக்கை அனுபவம், பெரிய சன்ரூஃப் ஆகியவை அதற்கான பளிச் உதாரணங்கள். எனவே காரை நீங்களே ஓட்டுவீர்கள் என்றால், கியா உங்களுக்கு ஏற்ற சாய்ஸாக இருக்கும். மற்றபடி டிரைவர் வைத்துக் கார் ஓட்டுபவர்களுக்கு, ஹூண்டாய்தான் உற்ற தேர்வு. இதன் டிசைன் அனைவருக்கும் பிடிக்காமல் போகலாம். ஆனால், லக்ஸூரி அனுபவத்தைத் தருவதில் க்ரெட்டாதான் முன்னிலை வகிக்கிறது. எனவே அந்த கார்தான், இந்த ஒப்பீட்டின் வெற்றியாளர். என்றாலும், செல்ட்டோஸ் கடும் சவால்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism