இங்கே நீங்கள் பார்க்கும் கார்களை ஏன் ஒப்பிடவேண்டும் என்ற கேள்வி எழலாம். ஏனென்றால் இவை இரண்டுக்கும் இடையே, ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. ஆம், இரண்டு கார்களில் இருப்பதும் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான். டூயல் டோன் ஃபினிஷில் கிராண்ட் i10 நியோஸ் டர்போ Sportz இருந்தால், ஸ்பெஷல் எடிஷனில் போலோ TSI Highline Plus வந்திருக்கிறது.

இரண்டுமே ஹேட்ச்பேக்குகள்தான் என்றாலும், அடிப்படையில் இவை வெவ்வேறு செக்மென்ட்களைச் சேர்ந்த மாடல்கள். மேலும் வழக்கமான NA பெட்ரோல் இன்ஜினுடன் இந்த கார்கள் கிடைக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போதே, தங்களது சிறிய கார் பவர்ஃபுல் காராகவும் இருக்கவேண்டும் என விரும்புபவர்களின் தேர்வாக, இந்த டர்போ வெர்ஷன்கள் இருக்கின்றன. டெக்னிக்கல் விபரங்களின்படி பார்த்தால், ஹூண்டாயைவிட ஃபோக்ஸ்வாகன் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் சாலையில் ஓட்டும்போது, இந்த வித்தியாசம் எந்தளவுக்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாகவே இருந்தோம்.

ஃபோக்ஸ்வாகன் போலோ - ஓட்டுதல் அனுபவம்

முதலில் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டது போலோ! எனவே, காரின் டிசைன் நன்கு பரிச்சயப்பட்ட ஒன்றுதான் என்பதுடன், டேஷ்போர்டின் வடிவமைப்பும் காரின் வயதை உணர்த்திவிடுகிறது. என்றாலும், போலோவின் கட்டுமானத்தரம் அட்டகாசமாக உள்ளதுடன், கேபினில் இருக்கும் பிளாஸ்டிக்கின் தரமும் அசத்துகிறது. இதைச் செலுத்துவதோ International Engine of the Year Award பெற்ற இன்ஜின். (110bhp பவர் - 17.5kgm). இந்த விருதுக்கு இந்தக் கார் எந்த அளவு தகுதியுள்ளது என்பதை காரை ஓட்டும்போதே உணர முடிகிறது. ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது இதற்கு அப்படியே பொருந்துகிறது. 2,000 ஆர்பிஎம்மில் தொடங்கும் பவர் டெலிவரி, 6,000 ஆர்பிஎம்மைத் தொட்டபிறகும் அதிரடிக்கிறது. இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ள 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், பயன்படுத்த நன்றாகவே உள்ளது. 10 விநாடிகளுக்குள்ளாக 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு இந்த கூட்டணி துணை நிற்கிறது. எதிர்பார்த்தபடியே, இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின், நெடுஞ்சாலைகளைத்தான் அதிகம் விரும்புகிறது. பெரிய 16 இன்ச் அலாய் வீல்கள் - துல்லியமான ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் ஆகியவை சேரும்போது, திருப்பங்களில் போலோவைச் செலுத்துவது சூப்பர் அனுபவமாக இருக்கிறது. தவிர பிரேக்குகளின் ஃபீட்பேக்கும் நச் ரகம். 10 வருடங்களைக் கடந்த ஒரு மாடல், ஓட்டுதலில் இன்றுமே ரசிக்கவைப்பது பெரிய ப்ளஸ்தான். 1,200 ஆர்பிஎம் முதலே கார் வேகமெடுப்பதால், நகர்ப்புறங்களில் காரை ஓட்டுவதும் சுலபம்தான். ஆனால், பெரிய சைஸ் டயர்கள் காரணமாக, குறைவான வேகத்தில் ஓட்டுதல் இறுக்கமாக உள்ளதுபோலத் தோன்றுகிறது. நெடுஞ்சாலைகளில் முன்னே சொல்லும் காரை ஓவர்டேக் செய்வதற்கு, சரியான கியரில் கார் இருப்பது அவசியம். ஏனெனில் க்ளட்ச் பெடலின் டிராவல் அதிகமாக இருப்பதுடன், கியர்களைக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தே மாற்ற வேண்டியிருக்கிறது.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் - ஓட்டுதல் அனுபவம்

இதர ஹூண்டாய் தயாரிப்புகளைப் போலவே, நெரிசல்மிக்க நகரச்சாலைகளில் இந்த காரை ஓட்டுவது சுலபமாக உள்ளது. குறைவான ஆர்பிஎம்மில் இருந்தே பவர் கிடைப்பது இதற்கான காரணம். மேலும் சஸ்பென்ஷன் செட்-அப் மென்மையாக உள்ளதால், கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, போலோவைவிட கிராண்ட் i10 நியோஸ் சொகுசாக உள்ளது. தவிர எடை குறைவான ஸ்டீயரிங், காரின் கையாளுமையை எளிதாக்கிவிடுகிறது. 1.2 லிட்டர் Kappa பெட்ரோல் இன்ஜினைவிட, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பவர்ஃபுல்லாக இருக்கிறது. (100bhp பவர் - 17.2kgm). மிட்ரேஞ்ச் அதிரடியாக இருப்பதால், நெடுஞ்சாலைகளில் ஓவர்டேக் செய்வது ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆக நடக்கிறது. இன்னும் சொல்லப்போனால், போலோவைவிட கிராண்ட் i10 நியோஸ் வேகமாக இருப்பது ஆனந்த அதிர்ச்சி (0-100கிமீ வேகம்: 9.82 விநாடிகள்)! கியர்களுக்கு இடையேயான வேகத்திலும், வழக்கமான மாடலைவிட இங்கே அதிக ஆக்ஸிலரேஷன் இருப்பதை உணர முடிகிறது. ஆனால் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் & Taller கியர் ரேஷியோக்கள் காரணமாக, ஃபோக்ஸ்வாகனைவிட ஹூண்டாய் அதிக ஆர்பிஎம்மைக் கொஞ்சம் மெதுவாகத்தான் எட்டுகிறது. அதற்கேற்ப 3-வது கியரில், 164கிமீ வேகத்தை கார் தொட்டு விடுகிறது; இப்படி நினைத்த நேரத்தில் பரமசாதுவாக இருந்து பஞ்ச் பாலாவாக மாறும் திறன் கைகூடி இருப்பதால், ஒரு சிறிய காரை விரட்டுவது செம ஃபீலிங். ஆனால் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, கிராண்ட் i10 நியோஸின் குறைகள் பளிச்சிடுகின்றன. அதாவது ஸ்டீயரிங் துல்லியமாக இல்லாததுடன், திருப்பங்களில் போதுமான ரோடு கிரிப்பும் கிடைக்கவில்லை (சிறிய 15 இன்ச் அலாய் வீல்கள்தான் இங்கே). மேலும் அதிக இன்ஜின் சத்தம் காருக்குள்ளே கேட்பதும் நெருடல். மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப் காரணமாக, பாடி ரோலும் தெரிகிறது. டர்போ மாடலில் பிரத்யேகமான கறுப்பு நிற கேபின் உள்ளதுடன், அதில் சிவப்பு நிற வேலைப்பாடுகள் இருப்பது ஸ்போர்ட்டி டச். சென்டர் கன்சோலின் மேலே வாட்டமான இடத்தில் டச் ஸ்க்ரீன் இருப்பதால், அதன் பயன்பாடு நச்சென அமைந்திருக்கிறது. தவிர டிரைவரின் சீட்டில் இருந்து, வெளிச்சாலை பளிச்செனத் தெரிவதும் நல்ல விஷயமே!

இடவசதி & சிறப்பம்சங்கள்

ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், பின்பக்க ஸ்பாய்லர், கறுப்பு நிற மிரர்கள், ரியர் ஏசி வென்ட்கள், எலெக்ட்ரிக் மிரர்கள் ஆகிய வசதிகள் பொதுவாக உள்ளன. ஆனால் போலோ போல கிராண்ட் i10 நியோஸ் டர்போவை டாப் வேரியன்ட்டில் வாங்க முடியாது என்பதால், சில வசதிக் குறைபாடுகளைக் கேபினில் பார்க்க முடிகிறது. அதற்கேற்ப வயர்லெஸ் சார்ஜர், Shark Fin Antenna, ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் & பனி விளக்குகள், LED DRL ஆகியவை இருந்தாலும், பின்பக்க வைப்பர் இல்லாதது குறைதான். இதற்குப் பதிலாக, ரிவர்ஸ் கேமரா வாயிலாக டச் ஸ்க்ரீனில் காருக்குப் பின்னே நடக்கும் விஷயங்களைத் தொடர்ச்சியாகப் பார்க் கமுடியும். என்றாலும், மழைக் காலங்களில் வைப்பர் இல்லாதது சிக்கலை ஏற்படுத்தலாம். இரண்டு கார்களிலுமே, பூட் ஸ்பேஸ் ஓகே ரகம்தான். சர்வதேச Global NCAP அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்டில், ஃபோக்ஸ்வாகன் போலோ 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது (2014-ம் ஆண்டு). இதுவே ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸோ, 2 ஸ்டார் ரேட்டிங்கையே பெற்றுள்ளது (2020-ம் ஆண்டு).

டாப் வேரியன்ட்டில் கிடைக்கும் போலோவில் க்ரூஸ் கன்ட்ரோல், Rain Sensing வைப்பர்கள், Auto Dimming மிரர், பின்பக்க வைப்பர், ஸ்டீயரிங் Reach & Rake அட்ஜஸ்ட், Auto Up Down பவர் விண்டோக்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. என்றாலும், இரு கார்களிலுமே கீ-லெஸ் என்ட்ரி/புஷ் பட்டன் ஸ்டார்ட் கிடையாது. மேலும் போலோவில் இருக்கும் வழக்கமான Antenna, ஹாலோஜன் ஹெட்லைட்ஸ், LED DRL இல்லாதது ஆகியவை காரின் வயதை நமக்கு நினைவூட்டுகின்றன. தவிர பின்பக்க ஸ்பாய்லர், Dual Tone Finish ஆக்ஸசரியில்தான் வரும் என்பது நெருடல். இதிலுள்ள முன்பக்க இருக்கைகள் பெரிதாக இருப்பதால், அவை தேவையான சப்போர்ட்டைத் தருகின்றன. ஆனால் பின்பக்கத்தில் லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் குறைவு என்பதால், இடவசதி கொஞ்சம் டைட்டாகவே உள்ளது. ஆனால் இருக்கைகளில், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் இருப்பது ஆறுதல். மற்றபடி போலோவைவிடக் குறைவான வீல்பேஸில் இருந்தாலும், கிராண்ட் i10 நியோஸில் அதிக பின்பக்க இடவசதி கிடைக்கிறது. அதிக உயரம் காரணமாக, ஹெட்ரூமும் வசதியாகவே உள்ளது. ஆனால் இருக்கைகளில் Fixed Headrest இருப்பது, நெடுந்தூரப் பயணங்களில் இடையூறாக இருக்கலாம்.

இரண்டுமே ஹேட்ச்பேக்குகள்தான். என்றாலும், இந்த டர்போ வெர்ஷன்கள் பெர்ஃபாமன்ஸ் பிரியர்களை மனதில் வைத்துக் களமிறங்கியுள்ளன. எனவே, நகரங்களில் எளிதான ஓட்டுதலைக் கொண்ட அதே சமயம், நெடுஞ்சாலைக்குத் தேவையான பவரும் வேண்டும் என்பவர்கள், ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மாடர்ன் டிசைன் மற்றும் பிராக்டிக்கல் கேபின் போனஸ்தான். மற்றபடி ‘அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணிப்பேன். எனவே கார் பழைய மாடலாக இருந்தாலும் பரவாயில்லை; ஓட்டுவதற்கு ஸ்போர்ட்டியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் போதும்’ என்பவர்களை, ஃபோக்ஸ்வாகன் போலோ திருப்திப்படுத்தும். ப்ரீமியம் ஹேட்ச்பேக்குக்கு இணையான சைஸ் என்பதால், இந்த காரின் Road Presence அற்புதம். International Engine of the Year Award பெற்ற இன்ஜின் வாவ்!