Published:Updated:

இது ஸ்போர்ட்டியான ஐ20

ஹூண்டாய் ஐ20
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் ஐ20

ஃபர்ஸ்ட் லுக்: ஹூண்டாய் ஐ20 N-Line

இது ஸ்போர்ட்டியான ஐ20

ஃபர்ஸ்ட் லுக்: ஹூண்டாய் ஐ20 N-Line

Published:Updated:
ஹூண்டாய் ஐ20
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் ஐ20
ஹூண்டாய் ஐ20 N-Line
ஹூண்டாய் ஐ20 N-Line
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு சாதுவான ஹேட்ச்பேக் இருக்கும்; அதை டர்போ இன்ஜின், ஸ்போர்ட்டியான சில அம்சங்கள் கொடுத்து பெர்ஃபாமன்ஸ் கேட்டகிரியில் சேர்த்து முரட்டுத்தனமாக மாற்றும் கார் நிறுவனங்கள். பெலினோ RS, ஃபோக்ஸ்வாகன் போலோ GT, ஃபியட்டில் புன்ட்டோ அபார்த், டாடாவில் டியாகோ JTP என சில உதாரணங்கள் உண்டு. அந்த வேலையை இப்போது ஹூண்டாயும் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே ஐ20 விற்பனையில் இருக்கும்போது, அதன் ஹை பெர்ஃபாமன்ஸ் காராக ஐ20 N-Line எனும் பெர்ஃபாமன்ஸ் காரை இந்த மாதம் லாஞ்ச் செய்திருக்கிறது ஹூண்டாய். இனிமேல் ஹூண்டாயில் இருந்து வரும் பெர்ஃபாமன்ஸ் கார்கள் இந்த N-Line சீரிஸில்தான் வரும்.

அதென்ன N..? தென்கொரியாவில் Namyang எனும் இடத்தில்தான் ஹூண்டாயின் R&D சென்டர் இருக்கிறது. அங்கேதான் ஹூண்டாய் தனது பெர்ஃபாமன்ஸ் கார்களைத் தயாரித்து வருகிறது. அதன் முதல் எழுத்தைத்தான் N-Line என்று சூட்டியிருக்கிறது. இன்னொன்றும் உண்டு – ஜெர்மனியில் உள்ள கடினமான ட்ராக்கான Nurburgring எனும் கார் ரேஸ் ட்ராக்கில் இந்த கார்கள் டெஸ்ட் செய்யப்படுகின்றன. அப்படியும் வைத்துக் கொள்ளலாம் என்கிறது ஹூண்டாய்.

ஹூண்டாய் ஐ20 N-Line காரில் என்ன ஸ்பெஷல்?

சாதா ஐ20 காரை அப்படியே சில காஸ்மெட்டிக் மற்றும் சில சுறுசுறுப்பான வேலைப்பாடுகள் செய்து, செம ஸ்போர்ட்டியாக மாற்றியிருக்கிறார்கள் ஐ20 N-Line காரை. Chequered Flag டிசைன் கிரில், ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், டாப் ஆங்கிளில் பார்த்தால் மின்னல் கீற்று மாதிரி தெறிக்கும் பானெட்டில் இருக்கும் கோடுகள், இந்தச் சின்ன காருக்கு 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், மேலே சிங்கிள் பேன் சன்ரூஃப், பின் பக்கம் OE ஃபிட்டட் ஆக வரும் ஸ்பாய்லர், ரியர் விண்ட்ஸ்க்ரீனுக்குப் பக்கத்தில் வரும் கேட் ஸ்பாய்லர் என்று ஒரு ராலி கார் போலக் கலக்குகிறது ஐ20 N-Line. இருக்காதா பின்னே… WRC (World Rally Championship)–யில் கலந்து கொள்ளும் ராலி கார்களின் டிசைன்தான் ஐ20 N-Line காரின் இன்ஸ்பிரேஷன். முக்கியமாக அந்த டபுள் டிப் எக்ஸாஸ்ட்… அருமை!

ஸ்போர்ட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக, கறுப்பு – மற்றும் சிவப்பு வேலைப்பாடுகள்தான் அதிகம் இருக்கின்றன. பிரேக் காலிப்பர்களுக்கு சிவப்பு நிறம், காரின் முன் பக்கம் - பக்கவாட்டில் கீழே ஸ்கஃப் பிளேட்டுக்குச் சிவப்பு, ORVM மிரர்கள் மற்றும் B - C பில்லர்களுக்குக் கறுப்பு என்று தூக்கலாக… ஆனால் நன்றாகவே இருக்கிறது.

இன்டீரியரில் அப்படியே ரெகுலர் ஐ20தான். ஆனால், இங்கேயும் கறுப்பு மற்றும் சிவப்பு வேலைப்பாடுகள். டேஷ்போர்டு முழுக்க கறுப்பு; ஏசி புளோயர், டோர் பேடுகள், கியர் லீவர், சீட்களில் தையல் போன்ற இடங்கள் சிவப்பாகச் சிரிக்கின்றன. சீட் மற்றும் லீவர் போன்ற இடங்களில் அந்த N பேட்ஜிங் செம! இது ஒரு கனெக்டட் கார். புளூலிங்க் ஆப் மூலம் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டமும் உண்டு. கதவைத் திறப்பதில் இருந்து சன்ரூஃப் வரை வாய்ஸிலேயே இயக்கிக் கொள்ளலாம். இப்படி 58 வகையான விஷயங்களைச் சொல்கிறது ஹூண்டாய். 10.25 இன்ச் ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன்தான் செம ப்ரீமியமாக இருக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு/ஆட்டோ என கனெக்டிவிட்டி அம்சங்கள் அருமை. ஹூண்டாயில் வயர்லெஸ் சார்ஜிங் இல்லாமலா? ஆனால், வென்டிலேட்டட் சீட் இல்லை.

இன்டீரியரில் சிவப்பு நிறத்தில் அங்கங்கே ஸ்போர்ட்டி வேலைப்பாடுகள்...
இன்டீரியரில் சிவப்பு நிறத்தில் அங்கங்கே ஸ்போர்ட்டி வேலைப்பாடுகள்...


பெர்ஃபாமன்ஸ் கார் என்றால், இன்ஜின் பவர் தெறி காட்டும் என்று நினைத்தால்… சாதா ஐ20–ல் இருக்கும் அதே 1.0லிட்டர் டர்போ GDI, 3 சிலிண்டர் இன்ஜின்தான் இதிலும். 120bhp பவரும், 17.5kgm டார்க்கும் கொஞ்சம் ஸ்போர்ட்டியான பெர்ஃபாமன்ஸுக்கு ஏற்ப ட்யூன் செய்யப்பட்டிருக்கின்றன. இன்ஜினை ஸ்டார்ட் செய்ததும், டபுள் எக்ஸாஸ்ட்டில் இருந்து ராலி கார் மாதிரிதான் சத்தம் தெறிக்கிறது. 7 ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸில் 6 ஸ்பீடு IMT (Intelligence Manual Transmission) தொழில்நுட்பம் உண்டு. அதாவது, ஐ20 N-Line–ல் க்ளட்ச்சே கிடையாது. பெடல்கள் மெட்டலில் செம ஸ்போர்ட்டியாக இருந்தன. DCT-ல் பேடில் ஷிஃப்ட்டர்கள் உண்டு. மேனுவல் கியர்பாக்ஸில் NA பெட்ரோல் மற்றும் டீசலைக் கொடுக்கவில்லை ஹூண்டாய்.

வசதிகளிலும் சூப்பர். 6 காற்றுப்பைகள், ரியர்வியூ கேமரா, TPMS சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், Vehicle Stability Management, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் (HAC), ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப்ஸ் என்று பல வசதிகள் உண்டு.

ஓட்டுதலில் சாதா ஐ20–யைவிட இதில் சஸ்பென்ஷனைக் கொஞ்சம் ட்வீக் செய்திருக்கிறது ஹூண்டாய். அட, நான்கு பக்கமும் டிஸ்க் பிரேக்ஸ் இருந்தன. ஓட்டுதலில் நிச்சயம் வித்தியாசம் தெ ரியும். ஐ20–யைவிட சுமார் 1 – 1.5 லட்சம் அதிகமான விலையில் வரப் போகிறது ஐ20 N-Line. இப்போதைக்கு பெர்ஃபாமன்ஸ் கேட்டகிரியில் ஐ20 N-Line-க்குப் போட்டி எதுவும் இல்லை. ராலி பிரியர்கள் இந்த ஐ20–யை விரும்பினால்… ஐ20 N-Line ‘வ்வ்ர்ர்ரூம்’ எனப் பறக்கும்!இன்டீரியரில் சிவப்பு நிறத்தில் அங்கங்கே ஸ்போர்ட்டி வேலைப்பாடுகள்...