Published:Updated:

இது நம்ம ஊரு டூஸான்!

 ஹூண்டாய் டூஸான்
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் டூஸான்

ஃபர்ஸ்ட் லுக்: ஹூண்டாய் டூஸான்

இது நம்ம ஊரு டூஸான்!

ஃபர்ஸ்ட் லுக்: ஹூண்டாய் டூஸான்

Published:Updated:
 ஹூண்டாய் டூஸான்
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் டூஸான்
 ஹூண்டாய் டூஸான்
ஹூண்டாய் டூஸான்

ஹூண்டாய் டூஸான் 2004-ம் ஆண்டிலிருந்து, அதாவது 18 ஆண்டுகளாக நம் நாட்டில் விற்பனையில் இருக்கிறது. இப்போது நான்காம் தலைமுறை டூஸான் விற்பனைக்கு வந்திருக்கிறது. என்றாலும், இந்த மாடல் உலகின் பல நாடுகளிலும் 2020-ம் ஆண்டிலிருந்தே விற்பனை செய்யப்பட்டுவருகிறது. வெளிநாடுகளில் விற்பனையாகும் டூஸான் இரண்டு வேறு வேறு விதமான வீல் பேஸ்களில் விற்பனையாகிறது. இப்போது நம்நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கும் டூஸான் இதில் லாங் வீல் பேஸ் கொண்ட மாடல். நம்ம ஊரு டூஸான் எப்படி இருக்குனு பார்க்கலாம்!

வெளிப்புறத் தோற்றம்:

ADAS லெவல் 2 தொழில்நுட்பத்துக்கு அடுத்தபடியாக இதன் தனித்தன்மை வெளிப்படுவது டிசைன் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில்தான். இந்த டிசைனை ஹூண்டாய் Sensuous Sportiness Design என்று குறிப்பிடுகிறது. இந்த டிசைன் இந்தக் காருக்கு புதிய தோற்றத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக, இதன் கிரில் இப்போது அகலமாக மாறியிருப்பதுடன், இதில் ஆபரணங்கள் பதித்தைப்போல வேலைப்பாடுகளும் சேர்ந்திருக்கின்றன. கிரில் அகலமாக இருக்கிறது. இதோடு இயைந்து இருக்கும் டே டைம் ரன்னிங் லைட்ஸ், `கிரில் எது, டே டைம் ரன்னிங் லைட்ஸ் எது?’ என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரே மாதிரி இருக்கிறது. ஆனால், அது ஒளிரும் போது ஆச்சரியப்படும் அளவுக்கு அழகு வெளிப்படுகிறது. இதற்குக் கீழே இருக்கும் LED ஹெட்லைட் டிசைனும் காருக்குத் தனித்தன்மையை கூட்டுகிறது. விசாலமான DLO (Day Light Openning), அதை ஒட்டிச் செல்லக்கூடிய க்ரோம் வில்லின் வடிவில் C பில்லர் வரை செல்வது ஆகியவை அழகு. 18 இன்ச் அலாய்வீல் டிசைன், அதன் புருவம் போன்று இருக்கும் வீல் ஆர்ச், அம்பின் முனைபோன்ற வடிவில் கார் கதவுகளில் இடம்பெற்றிருக்கும் கிரீஸ் கோடுகள் ஆகியவை காருக்குப் பொலிவூட்டுகின்றன.

காரின் பின்புறம் விண்ட்ஷீல்டில் முப்பரிமாணத்தில் இடம்பெற்றிருக்கும் ஹூண்டாய் லோகோ, T வடிவில் இருக்கும் LED விளக்குகள், இரு பக்க டெயில் லைட்ஸையும் இணைக்கும் LED லைட் பார், பின்பக்க பம்பரில் இருக்கும் வைர வடிவிலான டிசைன், அதற்கு கீழே இருக்கும் ஸ்கிட் பிளேட், ஸ்பாய்லரில் மறைந்திருக்கும் பின்பக்க ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், பவர்டு டெயில் கேட், ஷார்க் ஃபின் ஆன்ட்டெனா ஆகிய எல்லாமே இந்தக் காருக்கு ஒரு தனி அடையாளத்தைக் கொடுக்கின்றன.

உள்ளலங்காரம்:

பழைய டூஸானுக்கும் இந்த டூஸானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுபோல முற்றிலுமாக மாறியிருக்கிறது புதிய டூஸான். லைட் கிரே மற்றும் ப்ரீமியம் பிளாக் என்று இரட்டை வண்ணத்தில் கவர்கிறது இதன் இன்டீரியர். விலை உயர்ந்த கார்களில் இருப்பதுபோல ஏசியின் ஏர் வென்ட் டேஷ் போர்டில் ஒரு பக்கமிருந்து மறுபக்கம்வரை நீள்வது புதுமை. க்ரெட்டா, அல்கஸார் போன்ற கார்களில் இருப்பதுபோல் அல்லாமல், இதில் இருக்கும் 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் டிசைன் வித்தியாசமாக இருக்கிறது. இது பிடித்து ஓட்டவும் வசதியாக இருக்கிறது.

அனலாக் மீட்டர் தேவையான தகவல்களைத் தருகிறது.
அனலாக் மீட்டர் தேவையான தகவல்களைத் தருகிறது.
லைட் கிரே மற்றும் பிளாக் என டூயல் டோனில் பிளசன்ட்டாக இருக்கிறது கேபின். ஏசி வென்ட்   கார் முழுதும் நீள்வது அருமை.
லைட் கிரே மற்றும் பிளாக் என டூயல் டோனில் பிளசன்ட்டாக இருக்கிறது கேபின். ஏசி வென்ட் கார் முழுதும் நீள்வது அருமை.
பெட்ரோல்/டீசல் இரண்டுமே உண்டு.
பெட்ரோல்/டீசல் இரண்டுமே உண்டு.
கியர்பாக்ஸின் ஸ்லிம் அண்ட் ஸ்லீக் டிசைன், பயன்படுத்த சூப்பர்.
கியர்பாக்ஸின் ஸ்லிம் அண்ட் ஸ்லீக் டிசைன், பயன்படுத்த சூப்பர்.

டேஷ்போர்டின் நடுநாயகமாக இடம்பெற்றிருக்கும் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன், அதைச் சுற்றியிருக்கும் பியானோ பிளாக் மெட்டீரியலோடு இயைந்து செல்கிறது. கியர் லீவர் டிசைன் அருமை. டூயல் டோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன் ரூஃப், ஏர் ப்யூரிஃபையர், ஹீட்டட் வென்டிலேட்டட் சீட்ஸ், 64 வண்ணங்களில் ஆம்பியன்ட் லைட்டிங், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் என்று இதில் எக்கச்சக்க சிறப்பம்சங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஹூண்டாயின் புளூலிங் வசதி இருப்பதால், 60-க்கும் மேற்பட்ட கனெக்டெட் கார் அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. வாய்ஸ் கட்டளைகள் மூலமாகவே இதில் இருக்கும் அலெக்ஸா மற்றும் கூகுல் அசிஸ்டென்ட் ஆகியவற்றை இயக்க இயலும். 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் மியூசிக் சிஸ்டம் செம!

இதன் டிரைவர் சீட்டை 6 வகையாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடிகிறது. காரின் இருக்கைகள் மிருதுவாகவும் வசதியாகவும் இருக்கின்றன. இரண்டாம் வரிசையில் இருக்கும் சீட்டைப் பின்புறமாகத் தள்ளக்கூடிய ரெக்லைனிங் வசதியும் உண்டு. லாங் வீல்பேஸ் இருப்பதால் காலை நன்றாக நீட்டி உட்காரும் அளவுக்கு இடமிருக்கிறது.

பாதுகாப்புக்கு 6 காற்றுப்பைகள், காரின் முன்புறமும் பின்புறமும் பார்கிங் சென்ஸார்ஸ், ஹில் அசிஸ்ட், ஹில் டிஸென்ட் கண்ட்ரோல், நான்கு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ் ஆகியவையும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

இன்ஜின்:

அல்கஸாரில் இருக்கும் அதே 4 சிலிண்டர்கள் கொண்ட 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இதையும் இயக்குகிறது. இது 156bhp சக்தியையும், 192Nm டார்க்கையும் அளிக்கிறது. பெட்ரோல் இன்ஜினோடு இயைந்து செயல்படுவது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்.

இதுவே 186bhp சக்தியையும், 416Nm டார்க்கையும் அளிக்கும் 2 லிட்டர் டீசல் இன்ஜினாக இருந்தால் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸோடு சேர்ந்து செயல்படும். எந்த வேரியன்ட்டிலும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை.

இந்த காரை பனி, மண், சகதி போன்று மூன்றுவிதமான பாதைகளிலும் ஓட்ட மூன்றுவிதமான டெரெய்ன் மோட்ஸ் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல எக்கோ, ஸ்போர்ட், ஸ்மார்ட் என்று மூன்று டிரைவிங் மோட்ஸும் உண்டு. தவிர, டீசலில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் இருக்கிறது.

ஜீப் காம்பஸ், சிட்ரன் C5, எம்ஜி ஹெக்டர், டாடா ஹேரியர் போன்ற கார்களோடு போட்டி போட இருக்கும் ஹூண்டாய் டூஸானின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்தே இது எந்த அளவுக்கு வாடிக்கையர்களின் மனங்களைக் கவரும் என்பதைச் சொல்ல இயலும்.

 ஹூண்டாய் டூஸான்
ஹூண்டாய் டூஸான்