Published:Updated:

ஹலோ... ஹோண்டா சிட்டி லவ்வரா நீங்கள்?

Honda CIty 2020
பிரீமியம் ஸ்டோரி
Honda CIty 2020

அறிமுகம்: ஹோண்டா சிட்டி 2020

ஹலோ... ஹோண்டா சிட்டி லவ்வரா நீங்கள்?

அறிமுகம்: ஹோண்டா சிட்டி 2020

Published:Updated:
Honda CIty 2020
பிரீமியம் ஸ்டோரி
Honda CIty 2020

ந்தாம் தலைமுறை சிட்டி-யை தாய்லாந்தில் தடாலடியாகக் காட்சிப் படுத்தி இருக்கிறது ஹோண்டா. ப்ரீமியம் டிசைன், ஸ்போர்ட்டியான கேபின், புதிய இன்ஜின் என காரில் கணிசமான மாற்றங்கள் தெரிகின்றன.

ஹோண்டா சிட்டி 2020
ஹோண்டா சிட்டி 2020

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட இந்த சிட்டி 113மிமீ அதிக நீளம் (4,553மிமீ), 53மிமீ அதிக அகலம் (1,748மிமீ); ஆனால் முன்பைவிட 28மிமீ குறைவான உயரம் (1,467மிமீ) - 11மிமீ குறைவான வீல்பேஸ் (2,589மிமீ) எனச் சில ஏரியாக்களில் கார் காம்பேக்ட் ஆகியிருக்கிறது. 2020-ம் ஆண்டு மத்தியில், இந்தியாவில் சுமார் 10-15 லட்ச ரூபாயில் அறிமுகமாகப்போகும் இந்தப் புதிய மிட்சைஸ் செடான், ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் - வென்ட்டோ/ரேபிட் - டொயோட்டா யாரிஸ் - மாருதி சுஸூகி சியாஸ் ஆகிய கார்களுடன் போட்டி போடுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்திய மதிப்பில் சுமார் 13.74 லட்சம் முதல் 17.52 லட்சம் வரையிலான விலையில் தாய்லாந்தில் வெளியாகியிருக்கும் புதிய சிட்டி, ஐந்து நிறங்களில் கிடைக்கும். S, V, SV, RS எனும் 4 வேரியன்ட்கள் உண்டு. சிவப்பு நிறம், RS-க்கு எனப் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் ஹோண்டா பங்குபெறாது என்பதால். அங்கே கார் காட்சிப்படுத்தப்பட மாட்டாது.

ஹலோ... ஹோண்டா சிட்டி லவ்வரா நீங்கள்?

டிசைன்

புத்தம் புதிய தோற்றத்தில் இருந்தாலும், இது சிட்டிதான் என்பதைப் பார்த்த உடனேயே தெரிந்துகொள்ள முடிகிறது. அமேஸ் மற்றும் சிவிக் ஆகிய கார்களில் இருப்பதுபோலவே, தடிமனான க்ரோம் பட்டை உடனான கிரில் (Solid Wing Face) இங்கும் உண்டு. RS மாடலில் க்ரோமுக்குப் பதில் கறுப்பு நிறப் பட்டை உள்ளது. இதன் இருபுறமும் அகலமான `Jewel Eye’ LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் (LED DRL உண்டு) அழகாக இடம் பெற்றுள்ளன.

RS மாடலில் ஃபுல் LED ஹெட்லைட்ஸ் & LED பனி விளக்கும் இருக்கும். முன்பக்க பம்பர், மிகவும் சிம்பிளாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. முன்பக்கக் கதவிலிருந்து பின்பக்க டெயில் லைட் வரை செல்லும் Character Line செம. முன்பு போலவே, கதவின் கீழ்ப்பகுதியிலும் க்ரீஸ் கோடுகளோடு கூடிய வேலைப்பாடு இருக்கிறது. இங்கே பில்லருக்குப் பதில், கதவில் ரியர் வியூ மிரர் வைக்கப்பட்டிருக்கிறது. நீட்டிக்கப்பட்ட வடிவத்தில் இருக்கும் டெயில் லைட்டில், U வடிவ LED எட்டிப் பார்க்கிறது.

 இந்தியாவில் டூயல் டோன் டேஷ்போர்டு வரலாம். டிசைன் வழக்கம்போல் ப்ரீமியம்தான்.
இந்தியாவில் டூயல் டோன் டேஷ்போர்டு வரலாம். டிசைன் வழக்கம்போல் ப்ரீமியம்தான்.

பின் பக்க பம்பரில் ரிஃப்ளெக்டர்ஸ் இருப்பது நைஸ். தாய்லாந்துச் சந்தைகளில் வரப்போகும் சிட்டியில் 185/60 R15 டயர்கள் கொண்ட டைமண்ட் கட் அலாய் வீல்கள் இருக்கின்றன (RS மாடலில் 16 இன்ச் வீல்கள்). எனவே இந்திய மாடலில், அநேகமாக 16 இன்ச் வீல்கள் பயன்படுத்தப்படலாம். முன்பக்கம் சிவிக்கைப் போலவே இருந்தாலும், காரைப் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, பெரிய அமேஸ் போன்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

கேபின் மற்றும் வசதிகள்

காருக்குள்ளே நுழையும்போது, சிம்பிளான அதேசமயம் உயர்ரக டேஷ்போர்டு வரவேற்கிறது. தாய்லாந்து மாடலில் ஆல் பிளாக் இன்டீரியர் இருந்தாலும், இந்திய மாடலில் டூயல் டோன் ஃபினிஷ் (Beige - Black) வரலாம். கேபினில் இருக்கும் பியானோ பிளாக் மற்றும் Brushed அலுமினிய வேலைப்பாடுகள் ஸ்மார்ட் டச். சென்டர் கன்ஸோலில் உள்ள 8 இன்ச் டச் ஸ்க்ரீனின் இருபுறமும், செங்குத்தாக ஏசி வென்ட்கள் உள்ளன.

 காரின் அகலம் அதிகரித்திருந்தாலும், உயரமும் வீல்பேஸும் குறைவுதான்.
காரின் அகலம் அதிகரித்திருந்தாலும், உயரமும் வீல்பேஸும் குறைவுதான்.

இதில் அப்படியே புதிய ஜாஸின் தாக்கம் அதிகம். தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலில் ஏசிக்கு டச் கன்ட்ரோல்கள் இருக்கும் நிலையில், தாய்லாந்து மாடலில் 3 Rotary டயல்கள் வழங்கப்பட்டிருந்தன. சென்டர் கன்ஸோலின் கீழ்ப்பகுதியில் 2 USB Slot, ஒரு 12V பவர் சாக்கெட் இருக்கிறது. லெதர் சுற்றப்பட்ட 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீலில், க்ரூஸ் கன்ட்ரோல் - ப்ளூடூத் Telephony - வால்யூம் கன்ட்ரோல் ஆகியவற்றுக்கான பட்டன்கள் உள்ளன. லெதர் வேலைப்பாடுகள் மற்றும் Brushed அலுமினிய ஃபினிஷில் இருக்கும் பெடல்கள் செம ஸ்போர்ட்டி. பெரிய டெட் பெடல் இருப்பது வரவேற்கத்தக்க அம்சம். Eco மோடு உடன் ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போதைய மாடலில் 3 டயல்களைக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருக்கும் நிலையில், புதிய மாடலில் சிவப்பு லைனிங் உடனான இரு டயல்களைக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளது. இதற்கிடையே MID ஸ்க்ரீன் உண்டு. இது அமேஸைப் போலவே உள்ளது.

இன்ஜின் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

தாய்லாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாடலில், 122bhp@5,500rpm பவர் மற்றும் 17.3kgm@2,000-4,500rpm டார்க்கை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர், VTEC Turbo பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்டெப் CVT கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்பட்டுள்ளது. இந்த 3 சிலிண்டர் இன்ஜின், E20 எரிபொருளிலும் (80% பெட்ரோல் + 20% எத்தனால்) இயங்கக் கூடியது என்பது பெரிய ப்ளஸ்.

Borg Warner நிறுவனத்தின் Single Scroll டர்போ சார்ஜர், Dual Variable Valve Timing Control (VTC), DOHC என மாடர்ன் விஷயங்கள், இந்த 998சிசி இன்ஜினில் இருக்கின்றன. அளவில் 500சிசி குறைந்திருந்தாலும், 3bhp அதிக பவர் மற்றும் 2.8kgm டார்க் கிடைப்பதால், பர்ஃபாமன்ஸில் பெரிய குறை இருக்காது. தாய்லாந்து TestCycle படி, இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 23. கி.மீ தூரம் செல்லும் எனத் தெரிகிறது. டாப் வேரியன்ட்களில் பேடில் ஷிஃப்ட்டர்ஸ் இருக்கும் என்றாலும், மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை. 40 லிட்டர் பெட்ரோல் டேங்க் தொடர்ந்தாலும், காரின் எடை 65 கிலோ ஏறிவிட்டது (1,165 கிலோ).

 U வடிவ LED டெயில் லைட்ஸ்... செம!, க்ரோமுக்குப் பதில் கறுப்பு ஃபினிஷ்... இது RS ஸ்பெஷல்.
U வடிவ LED டெயில் லைட்ஸ்... செம!, க்ரோமுக்குப் பதில் கறுப்பு ஃபினிஷ்... இது RS ஸ்பெஷல்.

இந்தியாவில் இந்த இன்ஜின் வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்; எனவே தற்போதைய மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் 4 சிலிண்டர் இன்ஜின் ஆப்ஷன்கள் BS-6 டியூனிங்கில் வரலாம்.

2021-ம் ஆண்டில் i-MMD மைல்ட் - ஹைபிரிட் சிஸ்டம் உடனான 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல் வெளிவரலாம்.

6 காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, VSC, ஹில் அசிஸ்ட், மல்டி ஆங்கிள் ரியர் வியூ கேமரா ஆகிய பாதுகாப்பு வசதிகள் உண்டு.