Published:Updated:

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லாக்டெளனுக்குப் பிறகு வரப்போகும் கார்கள்
லாக்டெளனுக்குப் பிறகு வரப்போகும் கார்கள்

அறிமுகம்: லாக்டெளனுக்குப் பிறகு வரப்போகும் கார்கள்

பிரீமியம் ஸ்டோரி

”அர்ஜென்ட்டா கார் வாங்கியே ஆகணும்’’ என்று சொன்ன கார் ஆர்வலர்களைக்கூட, ``யூ ட்யூபில் மடோனா பாப் ஆல்பம் பார்த்துட்டிருக்கேன்’’ என்று வீட்டில் உட்கார வைத்துவிட்டது கொரோனா. சிவப்பு சிக்னல் மாறி பச்சை விழுந்தவுடன் சீறிப் பறக்கக் காத்திருக்கும் வாகனங்கள்போல, இந்த லாக்டெளன் முடிந்ததும் `சர் புர்’ என வந்திறக்கக் காத்திருக்கின்றன கார்கள். `என்ன கார் வாங்கலாம்’ எனும் ஐடியாவில் இருப்பவர்களுக்கான ஒரு சின்ன ட்ரெய்லர் இது. இதில் எஸ்யூவி, எம்பிவி பிரியர்களுக்கும் இனிப்பான செய்தி உண்டு. (விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம், இந்தியா)

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

5 லட்சம் முதல் 10 லட்சம் வரை

டட்ஸன் ரெடி கோ ஃபேஸ்லிஃப்ட்

விலை : 3 – 5 லட்சம்

இன்ஜின் : 0.8 லி, 1.0 லி பெட்ரோல்

பவர் : 54, 68 bhp

டார்க் : 7.2, 9.1kgm

கியர்பாக்ஸ் : 5 ஸ்பீடு மேனுவல்/AMT 1.0 லிட்டர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

பார்த்தவுடன் மலிவான கார் என்று சொல்லிவிடலாம்; டட்ஸன் ரெடி கோவின் மைனஸ் இதுதான். இனி அப்படி இருக்காது. முன் பக்கம் ட்வீக் செய்யப்பட்ட பெரிய கிரில், ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், பின் பக்கம் பெரிய `L’ வடிவ டெயில் லைட்ஸ் என்று பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக மாறிவிட்டது ரெடி கோ. அதிலும் ஸ்டைலான அலாய் வீல்கள், ரெடி கோவின் தோற்றத்தையே மிகவும் பொலிவாக்கி இருக்கின்றன. ஏற்கெனவே கார் கொஞ்சம் உயரமாகத் தோற்றமளிக்கும். இதில் லேட்டஸ்ட் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப, பானெட்டை இன்னும் கொஞ்சம் உயர்த்தி இருக்கிறார்கள். உள்ளேயும் மாற்றங்கள் உண்டு. இப்போதெல்லாம் டச் ஸ்க்ரீன் இல்லாத கார்களுக்கு வரவேற்பு இல்லை. அதனால், ரெடி கோவில் மாடர்னான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை எதிர்பார்க்கலாம். 800 சிசி, 1,000 சிசி என்று மொத்தம் 4 வேரியன்ட்களில் வருகிறது.

ரெடி… போலாமா!

ஹோண்டா ஜாஸ் BS-6

விலை : 7.6 – 9.85 லட்சம்

இன்ஜின் : 1.2 லி பெட்ரோல், 1.5 லி டீசல்

பவர் : 90, 100 bhp

டார்க் : 11.0, 20.0 kgm

கியர்பாக்ஸ் : 5 ஸ்பீடு மேனுவல்/CVT, 6 ஸ்பீடு மேனுவல்/டீசல்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

லாக்டெளன் மட்டும் இல்லையென்றால், இந்நேரம் இந்த ஹோண்டா ஜாஸை சாலையில் பார்த்திருக்கலாம். மாற்றம் செய்யப்பட்ட முன் பக்க கிரில், LED ஹெட்லைட்ஸ், DRL என எல்லாமே புதுசு! மற்றபடி பாடி ஸ்டைலில் மாற்றமில்லை. பார்க்கவே `கிண்'ணென்று இருக்கிறது. தடிமனான அதே `ஏ’ பில்லர்கள்தான் காரணம். இப்போதுள்ள வசதிகளோடு சில மாற்றங்கள் புது ஜாஸில் உண்டு. இன்ஜின் பவர் ட்ரெயின்களில் மாற்றமில்லை; BS-6 தான் விஷயமே! ஆட்டோமேட்டிக், மேனுவல் என இரண்டு பிரியர்களும் இந்த ஜாஸுக்காகக் காத்திருக்கலாம்.

ஹோண்டா WR-V ஃபேஸ்லிஃப்ட்

விலை : 8.3 – 10.8 லட்சம்

இன்ஜின் : 1.2 லி பெட்ரோல்,

1.5 லி டீசல்

பவர் : 90, 100 bhp

டார்க் : 11.0, 20.0 kgm

கியர்பாக்ஸ் : 5 ஸ்பீடு மேனுவல்/6 ஸ்பீடு மேனுவல்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

ஹோண்டாவின் WR-V காரை, எஸ்யூவியா, ஹேட்ச்பேக்கா, க்ராஸ்ஓவரா என்று கேட்டால், லேசாகத் தலை சுற்றும். ஆனால், உண்மையிலேயே இது ஒரு க்ராஸ்ஹேட்ச். லாங் ஷாட்டில் பார்த்தால், ஜாஸ்போலத்தான் இருக்கும். உளியை வைத்துச் செதுக்கியது போன்ற ஷார்ப்பான பம்பர், அடுக்கடுக்கான கிரில்கள், LED புரொஜெக்டர் ஹெட் லைட்ஸ், பின் பக்கமும் LED டெயில்லைட்ஸ். பழைய WR-V-வில் இருந்து செமையான மாற்றம் கண்டிருக்கிறது. கேபினிலும், இன்டீரியரிலும் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பெட்ரோல், டீசல் இரண்டையுமே BS-6-க்கு அப்டேட் செய்திருக்கிறது ஹோண்டா. `10 லட்சத்துக்குள்ள ஒரு ஸ்டைலான க்ராஸ்ஹேட்ச் வாங்கணும்’ என்பவர்கள் WR-V-க்குக் காத்திருக்கலாம்.

கியா சொனெட்

விலை : 7 – 11.5 லட்சம்

இன்ஜின் : 1.2 லி பெட்ரோல், 1.0லி டர்போ பெட்ரோல், 1.5 லி டீசல்

பவர் : 83, 120, 100 bhp

டார்க் : 11.4, 17.2, 24.0 kgm

கியர்பாக்ஸ் : 5 ஸ்பீடு மேனுவல்/6 ஸ்பீடு மேனுவல்/DCT

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

ரம்பமே அதிரடியாக எஸ்யூவி செக்மென்ட்டில், செல்ட்டோஸ் மூலம் நுழைந்தது கியா. இப்போது அதே அஸ்திரத்தில் அடுத்த அதிரடிக்கு ரெடியாகி விட்டது. சொனெட் – ஒரு பக்கா எஸ்யூவி. பாடி பில்டர் போன்ற டிசைன், டைமண்ட் கட் அலாய் வீல்கள், உள்ளே 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன், பாஸ் சரவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, டிரைவ் மோடுகள், லெதர் சீட்கள் என்று செம ப்ரீமியமாகக் கலக்க வருகிறது சொனெட். இன்ஜினைப் பொறுத்தவரை வென்யூவில் இருக்கும் சரக்குகள்தான். சுமார் 7லட்சம் எக்ஸ் ஷோரூம் ஆரம்ப விலையில், இந்த ஆகஸ்ட்டில் சொனெட்டை எதிர்பார்க்கலாம்.

மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ்

விலை : 8.2 – 12.2 லட்சம்

இன்ஜின் : 1.5 லி பெட்ரோல்

பவர் : 105 bhp

டார்க் : 13.8 kgm

கியர்பாக்ஸ் :5 ஸ்பீடு மேனுவல்/

4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

எஸ்-க்ராஸ் என்றாலே அதன் 1.3 லிட்டர் ஃபியட் மல்ட்டிஜெட் இன்ஜின்தான். அதற்குத்தான் மூடு விழா நடந்து விட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மாருதியின் பெரிய க்ராஸ்ஓவரான எஸ்-க்ராஸில் இனி பெட்ரோல் இன்ஜின்தான். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனுடனும் வருகிறது எஸ்-க்ராஸ். மைல்டு ஹைபிரிட் டெக்னாலஜி இருக்கும் என்பதால், மைலேஜ் பற்றிப் பயப்பட வேண்டாம் என்கிறது மாருதி. டீசல் எஸ்-க்ராஸின் விலையைவிட குறைந்த விலையிலேயே பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி! லாக்டெளன் முடிந்ததும், நெக்ஸாவில் எஸ்-க்ராஸ் வீற்றிருக்கலாம்.

நிஸான் மேக்னைட்

விலை : 5.25 – 8 லட்சம்

இன்ஜின் : 1.0 லி பெட்ரோல்,

1.0 லி டர்போ பெட்ரோல்

பவர் : 72, 95 bhp

டார்க் : 9.6, 16.0 kgm

கியர்பாக்ஸ் : 5 ஸ்பீடு மேனுவல்/AMT/ CVT

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

கிக்ஸ் கைவிட்ட நிலையில், நிஸானுக்குக் கைகொடுக்க வந்திருக்கிறது மேக்னைட்., விலையைக் கவனியுங்கள். வென்யூ, நெக்ஸான், பிரெஸ்ஸா போன்ற எஸ்யூவிகளுக்குப் போட்டியாக வரும் மேக்னைட்தான், இந்தியாவின் விலை குறைந்த B-செக்மென்ட், சப் 4 மீட்டர் எஸ்யூவி. ரெனோவின் பேஸ் மாடலான BR10 பெட்ரோல் இன்ஜின்தான் இதன் NA மாடலில் வரும். அதனால்தான் இந்தக் குறைந்த விலை. டர்போவுக்கு HR10 இன்ஜின். ட்ரைபரில் இருக்கும் அதே பவர் ட்ரெயின்கள்தான் இதிலும். பெரிய டச் ஸ்க்ரீன், கிக்ஸ்போல 360 டிகிரி கேமரா, அதைத் தாண்டி கனெக்ட்டட் காராகவும் வரவிருக்கிறது. மேனுவல், CVT/AMT என இரண்டு ஆட்டோமேட்டிக்குகளிலும் வந்து அதிரடி காட்டப் போகிறது மேக்னைட்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர்

விலை : 7.5 – 11.5 லட்சம்

இன்ஜின் : 1.5 லி பெட்ரோல்

பவர் : 105 bhp

டார்க் : 13.8 kgm

கியர்பாக்ஸ் : 5 ஸ்பீடு மேனுவல்/4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

பெயரிடப்படாத ஹீரோக்களின் படங்களுக்கு விஜய் 65, அஜித் 57 என்று டைட்டில் வைப்பார்களே… அதேபோல், அர்பன் க்ரூஸர் என்று இந்த எஸ்யூவிக்குப் பெயர் வைத்து அழைக்கிறது டொயோட்டா. புது எஸ்யூவி என்று நினைக்க வேண்டாம்; பெலினோ போர்வையில் சுத்தும் கிளான்ஸா போல், விட்டாரா போர்வையில் உலவ வருகிறது இந்த அர்பன் எஸ்யூவி. லோகோவைத் தவிர்த்துவிட்டுப் பாருங்கள் - அப்படியே பிரெஸ்ஸாதான். பிரெஸ்ஸாவில் இருக்கும் அதே பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும். மைலேஜுக்காக மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் சேரலாம். ஆட்டோமேட்டிக் மாடலில் டார்க் கன்வெர்ட்டர் உண்டு. வழக்கமான 3 ஆண்டு வாரன்ட்டி பேக்கேஜுடன், ஆகஸ்ட்டில் டொயோட்டா ஷோரூமுக்கு வந்துவிடும் இந்த அர்பன் எஸ்யூவி.

10 லட்சம் முதல் 20 லட்சம் வரை

ஃபோர்ஸ் கூர்க்கா

விலை : 10.75 – 11.75 லட்சம்

இன்ஜின் : 2.6 லி டீசல்

பவர் : 90 bhp

டார்க் : 26 kgm

கியர்பாக்ஸ் : 5 ஸ்பீடு மேனுவல்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

டந்து முடிந்த எக்ஸ்போவில் பளபளவென மின்னித் தள்ளியது ஃபோர்ஸின் கூர்க்காதான். ஆரஞ்சு நிறத்தில் பார்த்தபோதே எடுத்து ஆஃப்ரோடு பண்ண வேண்டும்போல் இருந்தது. ஒரு ஆஃப்ரோடு காருக்கு LED DRL வசதியெல்லாம் செம! பழைய கூர்க்காவின் இன்டீரியர், கொஞ்சம் க்ளாஸிக்காக இருக்கும். புதிய கூர்க்காவின் டேஷ்போர்டு, மொத்தமாக மாறிவிடும். மாடர்ன் அம்சங்களுடன், வசதிகளுடன் இரண்டாம் வரிசைப் பயணிகளின் இருக்கை அமைப்பும் மாறியிருக்கிறது. மெக்கானிக்கலாகவும் நிறைய மாற்றங்கள் உண்டு. 2,600 சிசி BS-6 இன்ஜினில், தட் புட் என சேறு, சகதிகளில் இறங்கக் காத்திருக்கிறது புது கூர்க்கா.

ஹோண்டா சிட்டி

விலை : 10 – 15 லட்சம்

இன்ஜின் : 1.5 லி பெட்ரோல்/டீசல்

பவர் : 121*, 100 bhp

டார்க் : 15.0, 20.0 kgm

கியர்பாக்ஸ் : 6 ஸ்பீடு மேனுவல்/CVT Auto

னிமேல் சிட்டியை மிட்சைஸ் செடான் என்று சொல்ல முடியாது. ஆம், பழைய சிட்டியைவிட நீளமாகி இருக்கிறது, இந்த 5-வது ஜென் ஹோண்டா சிட்டி. இந்த க்ளாஸிலயே பெஸ்ட் கேபினாக இருக்கப் போகிறது சிட்டியின் இன்டீரியர்.

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

`எக்யூப்மென்ட் வசதிகளிலும் சிட்டி பட்டையைக் கிளப்பப் போகிறது’ என்கிறது ஹோண்டா. எங்கு பார்த்தாலும் LED மயம், சன்ரூஃப், லேன் வாட்ச்சிங் கேமரா போன்றவை உதாரணம். பின்னே, வெர்னாவை வெல்ல வேண்டுமே! சிட்டியை இதில்தான் மெச்ச வேண்டும்; ஆம் - டீசல், பெட்ரோல், ஆட்டோமேட்டிக், மேனுவல் என்று எல்லாத்துக்கும் தம்ஸ் அப் காட்டுகிறது புது ஹோண்டா சிட்டி.

ஹூண்டாய் எலான்ட்ரா டீசல்

விலை : 18 – 21.5 லட்சம்

இன்ஜின் : 1.5 லி டீசல்

பவர் : 115 bhp

டார்க் : 25 kgm

கியர்பாக்ஸ் : 6 ஸ்பீடு மேனுவல்/6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

டந்த ஆண்டில்தான் எலான்ட்ராவை ஃபேஸ்லிஃப்ட் செய்தது ஹூண்டாய். குட்டி காரான சான்ட்ரோவில் இருந்து காஸ்ட்லி கார்கள் வரை ஹூண்டாய், இப்போது டால்பாய் டிசைன், கொழுக் மொழுக் போன்றவற்றுக்கு `பை பை’ சொல்லிவிட்டது. இந்த எலான்ட்ராவும் செம ஷார்ப். அதிக இடவசதிகள் ஹூண்டாயின் இன்னொரு பலம். BS-6 பெட்ரோல் எலான்ட்ரா, எப்போதோ வந்துவிட்டது. இப்போது டீசல் BS-6 –யையும் கொண்டு வந்துவிட்டது ஹூண்டாய். மேனுவல், ஆட்டோமேட்டிக் என இரண்டிலுமே எலான்ட்ராவை ஓட்டலாம். 115 bhp பவர் ட்யூனிங்கில், இந்த செக்மென்ட் பெஸ்ட்டாக இருக்கலாம் எலான்ட்ரா.

மஹிந்திரா மராத்ஸோ BS-6

விலை : 10.5 – 15 லட்சம்

இன்ஜின் : 1.5 லி டீசல்

பவர் : 123 bhp

டார்க் : 30.0 kgm

கியர்பாக்ஸ் : 6 ஸ்பீடு மேனுவல்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

ல்லா கார்களையும்போல BS-6 அவதாரத்துக்குத்தான் காத்துக் கொண்டிருந்தது மராத்ஸோ. இப்போது அதே 1.5 லி டீசல் இன்ஜினில், அதே 123 bhp பவர் ட்யூனிங்கில், எமிஷன் குறைவாக… அதாங்க BS-6 மராத்ஸோ வந்துவிட்டது. எக்ஸ் ஷோரூம் 10.5 – 15 லட்சத்துக்குள் இருக்கும் விலைதான் மராத்ஸோவின் கெத்தே! சும்மாவா பின்னே… 25 லட்ச ரூபாய் க்ரிஸ்டாவுடனெல்லாம் போட்டி போடுவது என்றால் சாதாரணம் இல்லை. இதுபோக, ஆட்டோமேட்டிக் ஆப்ஷனையும் அறிமுகப்படுத்த இருக்கிறது மஹிந்திரா. ஆம், mStallion குடும்பத்தின் 1.5 லிட்டர் டர்போ GDI யூனிட்டான பெட்ரோல் இன்ஜின்தான். இதன் பவர் 163 bhp. க்ரிஸ்டாவுக்கு இன்னும் டஃப் காத்திருக்கு!

மஹிந்திரா தார்

விலை : 11 – 13 லட்சம்

இன்ஜின் : 2.2 லி டீசல், 2.0 லி டர்போ பெட்ரோல்

பவர் : 140, 190 bhp

டார்க் : 32.0, 38.0 kgm

கியர்பாக்ஸ் : 6 ஸ்பீடு மேனுவல்/டார்க் கன்வெர்ட்டர்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

2020-ல் மஹிந்திராவின் பெரிய வரவு இந்த தார். தார் ஜீப்பென்றால், இப்படித்தான் இருக்கும் என்கிற கருத்தை உடைக்க வருகிறது புது தார். ஆம், முதன் முறையாக ஹார்டு-டாப் ரூஃப் ஆப்ஷனுடன், அதாவது ஃபேக்டரி ஃபிட்டோடு வருகிறது தார். எதிரெதிரே பார்த்து அமரும் இரண்டாவது வரிசை சீட்டுகள், மாடர்னான டேஷ்போர்டு, டச் ஸ்க்ரீன், ரிவர்ஸ் கேமரா என்று கூர்க்காவுக்குப் போட்டியாக வருகிறது தார். ஆட்டோமேட்டிக், மேனுவல் என்று இரண்டிலுமே இனி தாரை ஓட்டலாம். அதைவிட முக்கியமான விஷயம் – இந்தியாவில் முதன் முறையாக தார், பெட்ரோலில் ஓடக் காத்திருக்கிறது. செப்டம்பர் வரை காத்திருங்கள்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 130bhp

விலை : 11 – 12.5 லட்சம்

இன்ஜின் : 1.2 லி டர்போ பெட்ரோல்

பவர் : 130 bhp

டார்க் : 23.0 kgm

கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு மேனுவல்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

துதான் ரோட்ல ஓடிக்கிட்டிருக்கே. இது எப்படி புது கார் லிஸ்ட்ல வரும்’ என்று நீங்கள் கேட்கலாம். மஹிந்திராவின் mStallion இன்ஜின்களிலிருந்து பெறப்பட்ட 1.2லிட்டர், DI.. அதாவது டைரக்ட் இன்ஜெக்ஷன் கொண்ட டர்போ பெட்ரோல்தான் இந்த எஸ்யூவியின் ஸ்பெஷல். சுமார் 1,200 – 1,300 கிலோ கொண்ட இந்தச் சின்ன எஸ்யூவி-யை 130 குதிரை சக்திகளும், 23.0kgm இழுவைத் திறனும் கொண்டு இழுத்தால்… (அதுவும் டர்போ துணையுடன்) எப்படி ஜிவ்வெனப் பறக்கலாம்! இது நடப்பு பெட்ரோல் இன்ஜினைவிட 20 bhp/3.0kgm அதிகம். இதைத்தான் ஸ்போர்ட்ஸ்’ வேரியன்ட் எனும் பெயரில் எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்தார்கள். ஆல் பிளாக் தீம் கொண்ட கேபின், அங்கங்கே சிவப்பு வேலைப்பாடுகளுடன் நிஜமாகவே ஸ்போர்ட்டியாகப் பறக்க வருகிறது எக்ஸ்யூவி300.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்

விலை : 14 – 19 லட்சம்

இன்ஜின் : 1.5 லி டர்போ பெட்ரோல், 2.0 லி டீசல்

பவர் : 143, 170 bhp

டார்க் : 25, 35 kgm

கியர்பாக்ஸ் : 6 ஸ்பீடு மேனுவல்/DCT

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

காரின் பெயரைப் பார்த்ததுமே உத்தேசித்து இருப்பீர்கள். சரிதான்; சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் 5 சீட்டர் ஹெக்டரை இழுத்து, 7 சீட்டராக்கி, `ப்ளஸ்’ எனும் பெயரைச் சேர்த்திருக்கிறது எம்ஜி. இதில் ஒரு புத்திசாலித்தனம் – பழைய ஹெக்டரின் அதே நீளம், வீல்பேஸ்தான். பின் பக்கம் டெயில் இழுவையை வைத்துத்தான் ப்ளஸ் மாடலைக் கண்டுபிடிக்க முடியும். நடுவரிசைக்கு பெஞ்ச் சீட் அல்லது கேப்டன் சீட் ஆப்ஷனும் வழங்கியிருக்கிறது எம்ஜி. உள்ளேயும் அப்படித்தான்; சீட் அதிகமாகி இருக்கிறது. மற்றபடி சாதா ஹெக்டரில் உள்ள அதே டீசல்; டர்போ பெட்ரோல்தான். மைல்டு ஹைபிரிட் ஹெக்டர் ப்ளஸ் மாடலும் உண்டு.

ரெனோ டஸ்ட்டர் 1.3 டர்போ பெட்ரோல்

விலை : 10 – 13 லட்சம்

இன்ஜின் : 1.3 லி டர்போ பெட்ரோல்

பவர் :156 bhp

டார்க் : 25.4 kgm

கியர்பாக்ஸ் : 6 ஸ்பீடு மேனுவல்/8 ஸ்டெப் CVT

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

`டீசல் இனி டஸ்ட்டரில் கிடையாது’ எனும்போதே, ஏகப்பட்ட சோக ஸ்மைலிகள். சாதாரண 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் டஸ்ட்டர் ஓடுவதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரிவதற்குள், லாக்டெளன் லாக் செய்துவிட்டது. அதற்குள் டர்போ பெட்ரோல் டஸ்ட்டரையும் களமிறக்க இருக்கிறது ரெனோ. புது நிஸான் கிக்ஸ் BS-6 –ல் இருக்கும் அதே இன்ஜின் சமாச்சாரங்கள்தான் இந்த டஸ்ட்டரிலும். 156 bhp பவர், 25.4 kgm டார்க். என்ன, கிக்ஸில் இருக்கும் 5 ஸ்பீடு மேனுவல் மட்டும் டஸ்ட்டரில் கிடையாது. ஆட்டோமேட்டிக்கில் 8 ஸ்டெப் CVT டஸ்ட்டர் எப்படி இருக்கும் என்று இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

20 லட்சம் முதல் 40 லட்சம் வரை

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்

விலை : 22.8 – 28 லட்சம்

இன்ஜின் : 2.0 லி பெட்ரோல், 2.0 லி டீசல்

பவர் : 150, 182 bhp

டார்க :19.2, 40.0 kgm

கியர்பாக்ஸ் : 6 ஸ்பீடு / 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

முன்பு சொன்ன அதே விஷயம்தான்; இப்போதெல்லாம் ஷார்ப் டிசைனில்தான் கவனமாக இருக்கிறது ஹூண்டாய். பழைய மொழுக் டூஸான், இப்போது செம ஷார்ப். அகலமான கிரில், புதிய ஹெட்லைட்ஸ்தான் பெரிய மாற்றம். இன்டீரியரிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். சின்ன கார்களிலேயே அவ்வளவு வசதிகளை வாரி இறைக்கும் ஹூண்டாய். டூஸானிலும் வசதிகளுக்குப் பஞ்சமில்லை. பேசஞ்சருக்குக்கூட பவர் அட்ஜஸ்ட் சீட், புது டச் ஸ்க்ரீன், புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி – இவை சில சாம்பிள். பழைய இன்ஜின்கள்தான், அப்படியே BS-6-க்கு மாறியிருக்கின்றன. ஆனால், டீசலுக்கு மட்டும் புத்தம் புது கியர்பாக்ஸ். Gl(O), GLS – இந்த இரண்டு ஆப்ஷன்களில்தான் வரவிருக்கிறது டூஸான்.

இசுஸூ D-மேக்ஸ் V-க்ராஸ் BS-6

விலை : 20 – 23.5 லட்சம்

இன்ஜின் : 2.5 லி, 1.9 லி டீசல்

பவர் : 136, 150 bhp

டார்க் : 32.0, 35.0 kgm

கியர்பாக்ஸ் : 5 ஸ்பீடு மேனுவல்/6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்

`என்னடா, ட்ரக் மாதிரி இருக்கு; கார் லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே’ என்று நினைக்க வேண்டாம். ஆம், இது பிக்-அப் ட்ரக்தான். ஆனால், கார் ஆர்வலர்களைக்கூட பிக்-அப் செய்யக்கூடிய வல்லமை படைத்தது இந்த இசுஸூ D-மேக்ஸ் V-க்ராஸ். காரணம், இதன் பர்ஃபாமென்ஸ்.

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

இந்த ஆண்டின் துவக்கத்திலேயே வந்திருக்க வேண்டியது – லாக்டெளனால் பாதி ஆண்டுக்கு மேல்தான் வரப் போகிறது. `லேட்டானதும் வசதியாப் போச்சு’ என்று பர்ஃபாமென்ஸில் அப்கிரேடு செய்துவிட்டது இசுஸூ. கார்களில் இருக்கும் வசதிகளைக் கொண்ட ஒரு செமையான பிக்-அப்புக்கு ஜூன் வரை காத்திருங்கள்.

இசுஸூ MU-X BS-6

விலை : 31 – 33 லட்சம்

இன்ஜின் : 3.0 லி , 1.9 லி டீசல்

பவர் :177 bhp

டார்க் : 38 kgm

கியர்பாக்ஸ் : 5 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

து ட்ரக் இல்லை; எஸ்யூவிதான். அதுவும் 7 சீட்டர். D-மேக்ஸ் மாதிரி இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களெல்லாம் இந்த MU-X-ல் கிடையாது. `ஒண்ணே ஒண்ணு; கண்ணே கண்ணு’ என ஒரே இன்ஜின்தான். அதுவும் 3,000 சிசி இன்ஜின். ஜப்பானிய நிறுவனமான இசுஸூவின் கட்டுமானத் தரம்தான் இதன் பெரிய ப்ளஸ். பழைய BS-4-ல் இருந்து 3-4 லட்சம் வரை விலை உயர்த்தியிருக்கிறது இசுஸூ. விலை அதிகம்தான்; ஆனால் இதன் பவரும் பர்ஃபாமன்ஸும் வேற ரகம். BS-6 வாங்குபவர்கள், ஆட்புளூ டேங்க் இருக்கிறதா என்பதைச் சோதனை செய்ய மறக்காதீர்கள்.

50 லட்சத்திற்கு மேல்

லேண்ட்ரோவர் டெஃபெண்டர்

விலை : 69.99 – 86.27 லட்சம்

இன்ஜின் : 2.0 லி டர்போ பெட்ரோல்

பவர் : 300 bhp

டார்க் : 40.0 kgm

கியர்பாக்ஸ் : 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

லேண்ட்ரோவரின் செல்லமே இந்த டெஃபெண்டர் எஸ்யூவிதான். மோனோகாக் கட்டுமானத்தில் செம ஸ்டைலாக இருக்கும் டெஃபெண்டர், பலரது கனவு காரும்கூட! ஸ்டைலிங்கில் எம்மாடியோவ்… என்னா முன்னேற்றம்! 3-டோர், 5-டோர் என்று இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது டெஃபெண்டர். பொதுவாக, ஆஃப்ரோடு என்றால், டீசல்தானே; டெஃபெண்டரில் பெட்ரோல் போட்டுத்தான் மாளாது. பேசிக்கொண்டிருப்பதில் சிலருக்கு உடன்பாடு இருக்காது; சட்டென காரியத்தில் இறங்கிவிடுவார்கள். அவர்களுக்கான கார், டெஃபெண்டர். ஆகஸ்ட் வரை காத்திருங்கள்

1 கோடிக்கு மேல்

மெர்சிடீஸ் பென்ஸ் AMG C 63 கூபே

விலை : 1.5 கோடி

இன்ஜின் :4.0 லி bi-டர்போ V8 பெட்ரோல்

பவர் : 476 bhp

டார்க் :65 kgm

கியர்பாக்ஸ் : 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது, டிஜிட்டலாக இந்த C க்ளாஸ் காஸ்ட்லி செடானை லாஞ்ச் செய்திருக்கும் பென்ஸ். பார்த்தாலே முரட்டுத்தனம் நம்மிடம் தொற்றிக்கொள்ளும் டிசைன்தான், இந்த 2 டோர் கூபேவான c 63-ன் ஸ்பெஷல். இந்த கிரில்லுக்குப் பெயர் Panamericana. அதாவது, வெர்டிக்கலாக இருக்கும் இந்த கிரில்தான் AMG கார்களின் டிரேட்மார்க். AMG என்பது, பென்ஸில் பர்ஃபாமன்ஸ் கார்கள். 18 இன்ச் அலாய் வீல்கள் கொண்டிருக்கும் இந்த செடான், 0-100 கி.மீ-யை வெறும் 4 விநாடிகளில் தொட்டுவிடும். சுமார் 4,000 சிசியில் 8 சிலிண்டர் இன்ஜினாச்சே! இதன் டாப் ஸ்பீடு 250 கி.மீ. இப்போ ஒத்துக்கிறீங்களா இது செம AMG -ன்னு!

மெர்சிடீஸ் பென்ஸ் AMG GT R

விலை : 2.25 கோடி

இன்ஜின் :4.0 லி bi-டர்போ V8 பெட்ரோல்

பவர் :585 bhp

டார்க் : 70 kgm

கியர்பாக்ஸ் : 7 ஸ்பீடு DCT Auto

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

ந்த GT R-யை, C 63-ன் அண்ணன் என்றே சொல்லலாம். இதன் பவரைக் கவனியுங்கள். 585 bhp பவர்… இதுவும் bi-டர்போ, V8 பெட்ரோல் இன்ஜின்தான். இதுதான் இந்தியாவிலேயே மெர்சிடீஸ் தயாரிப்பின் அதிவேகமான கார். இது வெறும் 3.6 விநாடிகளிலேயே 100 கி.மீ வேகத்தை நின்ற இடத்திலிருந்து தொட்டுவிடும். இதன் டாப் ஸ்பீடு… 317 கி.மீ! ஆனால், இதற்கான சாலைகளைத்தான் தேட வேண்டும். இதன் டார்க் கன்வெர்ட்டர் கியரின் செயல்பாடு… வாவ் ரகமாக இருக்கும்! இந்த 2 டோர் கூபே, 2017-ல் வந்தபோதே இதன் விலை 2.23 கோடி எக்ஸ் ஷோரூம் இருந்தது. இப்போது 2 லட்சம் விலை கூட்டி 2.25 கோடி ஆக்கியிருக்கிறார்கள். இந்த GT R-ம் இந்நேரம் டிஜிட்டலாக லாஞ்ச் ஆகியிருக்கலாம்.

மெர்சிடீஸ் பென்ஸ் GLS

விலை : 1.1 கோடி

இன்ஜின் : 3.0 லி டர்போ பெட்ரோல், 3.0 லி டர்போ டீசல்

பவர் : 367, 330 bhp

டார்க் : 50, 70 kgm

கியர்பாக்ஸ் : 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்

வரப் போகும் கார்கள் - 2020 ட்ரெய்லர்

பென்ஸில் S க்ளாஸுக்கென்று ஒரு தனித்துவமும் மரியாதையும் இருக்கிறது. அதை பென்ஸின் GLS எஸ்யூவிகளுடனும் ஒப்பிடலாம். ஆம், GLS எஸ்யூவிகளை, S க்ளாஸாகவே பாவித்து வாங்குபவர்கள் இருக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ் செடான்களைப் போலவே ஸ்போர்ட்டியான டிசைன், செம பல்க் மட்டும் இல்லை; கிக்கும்தான்! உள்ளே ஏறினாலும் அதே கிக்! இந்த GLS-க்கு இன்னொரு பெருமையும் உண்டு. அது, இந்த 1 கோடி ரூபாய் கார் ஒரு 7 சீட்டர். டீசல் ஏற்கெனவே விற்பனையில் இருந்தாலும், பெட்ரோலையும் களமிறக்கி இருக்கிறது பென்ஸ். வரும் ஆகஸ்ட்டில் இந்த 1 கோடி ரூபாய் 7 சீட்டர், சாலைக்கு வந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு