Published:Updated:

''ஜீப்புக்கு தமிழ்நாடு மிகவும் முக்கியம்!”

விஐபி இன்டர்வியூ: ஜீப் இந்தியா தலைவர் நிபுன் மஹாஜன்

பிரீமியம் ஸ்டோரி

ஜீப் நிறுவனத்தின் இந்தியத் தலைவரான நிபுன் மஹாஜனிடம் , ``இந்தியாவில் ஜீப்பின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன; இந்தியாவுக்கான வருங்காலத் திட்டங்கள் என்னென்ன, முக்கியமாகத் தமிழகத்துக்கு ஏதாவது திட்டங்களை ஜீப் வைத்திருக்கிறதா?” என சில கேள்விகளை முன்வைத்தோம்.

“தற்போது இந்தியாவில் காம்பஸ் மற்றும் ரேங்ளர் என இரு மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறோம்'' என்று ஆரம்பித்தவர், ``கொரோனா காலத்தில் இருந்து தற்போது மீண்டு வந்திருக்கிறோம். கடந்த ஆண்டை விட தற்போது இந்தியாவில் ஜீப்பின் விற்பனை வேகம் எடுத்திருக்கிறது. கடந்த மாதம் மட்டும் 1,400 கார்களை இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறோம். வாடிக்கையாளர்களிடமும் எங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஜீப் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. முக்கியமாக இந்த வருடம் வெளியான காம்பஸ், வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

இந்தியாவில் தமிழ்நாடு என்பது ஜீப்புக்கு முக்கியமான ஒரு களம். இந்தியாவில் விற்பனையாகும் கார்களில், 7% கார்கள் தமிழகத்திலேயே விற்பனையாகின்றன. தமிழகத்தில் மேலும் எங்கள் தடத்தை ஆழப் பதிக்க விரும்புகிறோம். சமீபத்தில்தான் சென்னையில் ஜீப்பின் இரண்டாவது ஷோரூமைத் திறந்திருக்கிறோம். ஜீப்பின் ஷோரூம்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான ஓர் அனுபவத்தைத் தர விரும்புகிறோம். தமிழகத்தில் சென்னை மட்டுமின்றி கோயம்புத்தூர், சேலம், திருச்சி மற்றும் மதுரை என முக்கியமான நகரங்களில் எல்லாம் ஜீப்பின் ஷோரூம்களைத் திறந்திருக்கிறோம். இன்னும் தமிழகத்தில் எந்தெந்த வகையில் எல்லாம் ஜீப்பின் தடத்தை மேம்படுத்தலாம் என வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கிறோம். கண்டிப்பாக வாடிக்கையாளர்களைப் பூர்த்தி செய்யும் வகையிலான சேவைகளைத் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் ஜீப் வழங்கும்!” என்றார் நம்பிக்கையோடு.

''ஜீப்புக்கு தமிழ்நாடு மிகவும் முக்கியம்!”
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு