Published:Updated:

காம்பஸின் அண்ணன் மெரிடியன்! உண்மையான ஆஃப்ரோடரா?

ஜீப் மெரிடியன்
பிரீமியம் ஸ்டோரி
ஜீப் மெரிடியன்

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஜீப் மெரிடியன்

காம்பஸின் அண்ணன் மெரிடியன்! உண்மையான ஆஃப்ரோடரா?

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஜீப் மெரிடியன்

Published:Updated:
ஜீப் மெரிடியன்
பிரீமியம் ஸ்டோரி
ஜீப் மெரிடியன்
காம்பஸின் அண்ணன்
மெரிடியன்!
உண்மையான ஆஃப்ரோடரா?
காம்பஸின் அண்ணன்
மெரிடியன்!
உண்மையான ஆஃப்ரோடரா?

ப்ளஸ்: கட்டுமானம், ரைடு அண்ட் ஹேண்ட்லிங், எதையும் தாங்கும் ஆஃப்ரோடு தன்மை

மைனஸ்: விலை, மூன்றாவது வரிசை நெருக்கடி, பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை, பவர் இன்னும் இருந்திருக்கலாம்.

பார்ப்பதற்குப் பசு மாதிரி இருக்கும் ஜீப் காம்பஸ், பாய்ந்தால் புலி என்றுதான் சொல்ல வேண்டும். நான் அதன் ஆஃப்ரோடின் பெருமை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். நிஜமாகவே காம்பஸ் உரிமையாளர்கள், காருக்கே வலிக்காமல் சிட்டிக்குள்ளும், ஜாலியாக ஹைவேஸிலும் பறப்பார்கள். ஆனால், அதில் வெறித்தனமான ஆஃப்ரோடு செய்யலாம் என்பது நமக்கு மட்டும்தான் தெரியும். அப்படிப்பட்ட ஜீப்பின் காம்பஸ் பற்றி வாடிக்கையாளர்கள் மத்தியில் ரொம்ப நாட்களாக ஒரு குறை… இல்லை.. வேண்டுகோள் என்று வைத்துக் கொள்ளலாம். ‘காம்பஸில் 7 சீட்டர் இருந்தால் எப்படி இருக்கும்!’

அந்த வேண்டுகோளை நிறைவேற்றி விட்டது ஜீப். ஆம், காம்பஸின் பெரியண்ணன் மாதிரியே அச்சு அசலாக ஒரு 7 சீட்டர் காம்பஸை இறக்கி விட்டிருக்கிறது ஜீப். அதன் பெயர் மெரிடியன். போன மாதமே இதன் ஃபர்ஸ்ட் லுக் பற்றிப் பார்த்து விட்டோம். ஓட்டுவதற்குக் கைகளும் கால்களும் பரபரத்தன. இதைத் தெரிந்து கொண்ட ஜீப், சண்டிகர் வரை ஜீப் மெரிடியனை எல்லா சாலைகளிலும் ஓட்டிப் பார்க்க நம்மை அன்போடு அழைத்திருந்தது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இருந்து ஜீப் மெரிடியனின் டிரைவ் ரிப்போர்ட் இதோ!

தோற்றத்தில் காம்பஸ் மாதிரியேதான் இருக்கு!

அப்படியே காம்பஸை இழுத்துப் பிடித்துச் செய்தது மாதிரியேதான் இருக்கிறது இதன் தோற்றம். முன் பக்கம் பார்த்தால், ‘காம்பஸ்தான் போகுது’ என்று பலரும் நினைப்போம். அந்த 7 ஸ்லாட் கிரில்கூட அதே! கொஞ்சம் `Bevelled’ மட்டும் ஆகியிருக்கிறது. பின் பக்கம் டெயில் லைட்டுகள் அதே ஸ்லிம் அண்ட் ஸ்லீக் டிசைனுடன் இணைந்திருப்பது அழகு. ஆனால், பக்கவாட்டில் பார்த்தால்தான் ‘அட, பெரிய காம்பஸ்’ என்று வியக்கத் தோன்றும். காம்பஸில் இருந்து 364 மிமீ நீளத்தை அதிகரித்து, 146 மிமீ வீல்பேஸை அதிகரித்து, குவார்ட்டர் கிளாஸைப் பெரிதாக்கி (உள்ளே இருந்து நன்றாக வேடிக்கை பார்க்கலாம்) இருக்கிறார்கள். இந்த செக்மென்ட்டில் அதிகமான வீல்பேஸ் கொண்டது மெரிடியன்தான் – 2,782 மிமீ.

குளோபலாக ஓடிக் கொண்டிருக்கும் கமாண்டர் எனும் எஸ்யூவியையும், கிராண்ட் செரோக்கியின் தாக்கமும் எனக்குத் தெரிந்தது மெரிடியனைப் பார்க்கும்போது. நிஜம்தான்; ஒரு ஷார்ப்னெஸ் வேண்டும் என்பதற்காக செரோக்கியின் க்ரீஸ் கோடுகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கறுப்பு நிற D பில்லர், டூயல் டோன் ரூஃபும், கதவுகளுக்கு மேலே க்ரோம் சுற்றும் மார்க்கெட்டுக்குத் தேவையான புதுமைகள்.

ஆனால், காம்பஸின் அண்ணன் என்பதால், குறைந்தபட்சம் ஒரு 19 இன்ச் அலாய் வீல்களாவது கொடுத்திருக்கலாம். அதே 18 இன்ச் வீல்கள்தான் மெரிடியனிலும். இதன் பூட் ஸ்பேஸும் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

ஃபார்ச்சூனர், எண்டேவர் அளவுக்குப் பெரிய கடோத்கஜன்போல் இல்லாதது மாதிரி தெரிந்தது எனக்கு. ஓவர்ஆலாக, ‘அட, இங்க பார்றா’ என்று திகைக்க வைக்கும் டிசைன் இல்லை. ஆனால், ஆஃப்ரோடு – ஹைரோடு என்று எல்லாவற்றையும் சமாளிக்கும் டைனமிக்ஸுடன் பக்கா டிசைனில் இருக்கிறது மெரிடியன்.

காம்பஸின் அண்ணன்
மெரிடியன்!
உண்மையான ஆஃப்ரோடரா?
காம்பஸின் அண்ணன்
மெரிடியன்!
உண்மையான ஆஃப்ரோடரா?


உள்ளே என்ன இருக்கு மெரிடியனில்?

உள்ளே நுழைந்ததும், காம்பஸில் நுழைவதுபோல்தான் இருந்தது எனக்கு. ஆனால் – இந்த ஆண்டு சிறந்த ஃபேஸ்லிஃப்ட்டுக்கான விருது வாங்கியதல்லவா ஜீப் காம்பஸ்… அந்தத் தரமும் புதுமையும் தெரிகிறது மெரிடியனிலும். கதவை உள்ளே இருந்து மூடினாலும் சரி; வெளியே இருந்து மூடினாலும் சரி – கிண்ணென்ற கட்டுமானம் புலப்படுகிறது. சில சின்னச் சின்ன மாற்றங்கள் – பிரெளன் மற்றும் கறுப்பில் டூயல் டோன் டேஷ்போர்டு, (காம்பஸ் முழுக்க ஆல் பிளாக் தீம்), புதுமையான தையல் வேலைப்பாடுகள் போன்றவை வித்தியாசம்.

காம்பஸில் இருக்கும் அதே ஃப்ரீ ஸ்டாண்டிங் 10.1 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம்தான். டச் செய்வதற்கு நன்றாகவே இருக்கிறது. 360 டிகிரி கேமரா, வெயிலில் அவ்வளவாக கிளார் அடிக்கவில்லை. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டச் ஸ்க்ரீனைவிடப் பெருசு. 10.25 இன்ச் டிஜிட்டல் க்ளஸ்ட்டரில் பல தகவல்கள். அதிலும் ஆஃப்ரோடுக்கான தகவல்கள் பரவசமாக இருக்கின்றன. 1 லிட்டர் பாட்டில்கள் வைக்க, சாவி வைக்க என்று அங்கங்கே பயன்பாட்டு வசதிகளில் கலக்குகிறது மெரிடியன்.

மேலும் வயர்லெஸ் சார்ஜிங், டிரைவிங் மோடுகள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், பெரிய பனோரமிக் சன்ரூஃப் என்று எஸ்யூவி ஓனர்கள் விரும்பும் வசதிகள் அனைத்தும் உள்ளன. ஆனாலும், இவ்வளவு விலை கொண்ட ப்ரீமியம் காரில் சில வசதிகள் இல்லாததைச் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

வென்டிலேட்டட் சீட்கள், முன் பக்க பார்க்கிங் சென்ஸார், ஏதாவது ADAS வசதி இருந்திருக்கலாம்; உதாரணத்துக்கு அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிப்பார்ச்சர் வார்னிங் போன்றவற்றை மிஸ் செய்தேன். எக்ஸ்யூவி 700, எம்ஜி கிளாஸ்டர் போன்றவை நினைவுக்கு வந்தன.

காம்பஸின் அண்ணன்
மெரிடியன்!
உண்மையான ஆஃப்ரோடரா?
காம்பஸின் அண்ணன்
மெரிடியன்!
உண்மையான ஆஃப்ரோடரா?


நடுப்பக்கம்

பெரிய கார் என்றதும், கொஞ்சம் லெக்ரூமை அதிகப்படுத்தி இருப்பார்கள் என்று நினைத்தேன். காம்பஸில் அமர்வதுபோல்தான் இருந்தது. ஆனால், அகலமாக இருக்கிறது. காரணம், டோர் பாக்கெட்கள் கொஞ்சம் மெலிந்திருக்கின்றன. ஆனால், 3 பேருக்கான மிடில் சீட் இது இல்லை. சில 7 சீட்டர்கள் மாதிரி ஸ்லைடிங் வசதியாவது கொடுத்திருக்கலாம் ஜீப். ஒருவேளை – இதைக் கொடுத்திருந்தால், லெக்ரூம் கிடைத்திருக்குமோ என்னவோ! ஆனால், தொடைகளுக்கான சப்போர்ட் அருமை. காம்பஸில் அமர்ந்து பார்த்தால்… வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வர முடியாது. ஆனால், மெரிடியன் கொஞ்சம் உயரமாக இருப்பதாலும், விண்டோக்களைப் பெரிதாக்கி இருப்பதாலும், விஸிபிலிட்டி நன்றாகவே கிடைக்கிறது.

மூன்றாவது வரிசை எப்படி?

மற்ற மூன்றாவது வரிசைப் போட்டியாளர்களை ஒப்பிடும்போது, மெரிடியன் கொஞ்சம் ஏமாற்றம்தான். இன்னும் இட வசதி தேவையில்லை என்று அர்த்தமில்லை. அந்த ரூஃபின் டிசைனைக் காரணமாகச் சொல்லலாம். மூன்றாவது வரிசைப் பயணிகள் உயரமாக இருந்தால்… ப்ச்ச்! முழங்கால்களை நடுசீட்டில் மடக்கியபடிதான் வர வேண்டும்போல! இத்தனைக்கும் சீட்களை ஃப்ளோரில் வைத்திருக்கிறார்களோ என்று சந்தேகம் வரும் அளவுக்குத் தாழ்வாகவும் இருக்கிறது. ஆனால், மெரிடியனில் பிடித்த விஷயம் – இதன் ஒன் டச் ஸ்லைடு சீட்கள். சில கார்களில் உள்ளே போய் வரக் கஷ்டமாக இருக்கும்! மெரிடியின் ஒரே டச்சில் சீட்களை நன்றாக மடக்கி, எளிதாகப் போய் வரலாம். மேலும், மூன்றாவது வரிசைப் பயணிகளுக்கு மேலே ரூஃப் ஏசி வென்ட்டும் கொடுத்திருக்கிறார்கள். கூலிங் பிரச்னை இல்லை.

அதாவது, மூன்றாவது வரிசை – இளைஞர்களுக்கான நீண்ட தூரப் பயணங்களுக்கு செட் ஆகாது. குழந்தைகள்… இல்லையென்றால் கொஞ்சம் லக்கேஜ்களை வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

காம்பஸின் அண்ணன் என்பதால், வீல் அளவைக் கூட்டியிருக்கலாம். அதே 18 இன்ச்.
காம்பஸின் அண்ணன் என்பதால், வீல் அளவைக் கூட்டியிருக்கலாம். அதே 18 இன்ச்.
காம்பஸின் அண்ணன்
மெரிடியன்!
உண்மையான ஆஃப்ரோடரா?
 ஜீப் மெரிடியனில் காம்பஸில் இருக்கும் அதே டீசல் இன்ஜின் மட்டும்தான். 
பெட்ரோல் ஆன் தி வே.
ஜீப் மெரிடியனில் காம்பஸில் இருக்கும் அதே டீசல் இன்ஜின் மட்டும்தான். பெட்ரோல் ஆன் தி வே.
காம்பஸின் அண்ணன்
மெரிடியன்!
உண்மையான ஆஃப்ரோடரா?
6 ஸ்பீடு மேனுவல்/9ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 2வீல்/4வீல் டிரைவ் எல்லாமே இருக்கு!
6 ஸ்பீடு மேனுவல்/9ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 2வீல்/4வீல் டிரைவ் எல்லாமே இருக்கு!
இந்த செக்மென்ட்டின் அதிக வீல்பேஸ் கொண்ட எஸ்யூவி. இடவசதி ஓகே!
இந்த செக்மென்ட்டின் அதிக வீல்பேஸ் கொண்ட எஸ்யூவி. இடவசதி ஓகே!
காம்பஸின் அண்ணன்
மெரிடியன்!
உண்மையான ஆஃப்ரோடரா?
காம்பஸின் அண்ணன்
மெரிடியன்!
உண்மையான ஆஃப்ரோடரா?

இன்ஜின், பெர்ஃபாமன்ஸ்

இன்ஜினை ஸ்டார்ட் செய்ததும் லேசாகத் தடதடத்தது மெரிடியன். ஆட ஆமாங்க… ஜீப் மெரிடியனில் டீசல் இன்ஜின்தான். பெட்ரோல் ஆப்ஷன் இல்லை. அதுவும் காம்பஸில் இருக்கும் அதே 2.0லிட்டர் 170bhp பவர் கொண்ட டீசல்தான். இத்தனை பெரிய காருக்கு இது எப்படிப் போதும் என்று நான் நினைத்தது உண்மையாகிப் போனது. ஹைவேஸில் இன்னும் பவர் வேண்டும் என்று கெஞ்சியது மெரிடியன்.

ஆனால், இந்த இன்ஜினில் ரீ–காலிப்ரேஷன் மற்றும் ரீ–மேப்டு ECU வைத்திருக்கிறார்கள். பவர் டெலிவரி காம்பஸைவிட லீனியராகக் கிடைத்ததை நன்கு உணர்ந்தேன். அட, ஜீப் டெக்னீஷியன்கள் சொன்னதுபோல், காம்பஸைவிட ஸ்மூத்தர் டிரைவும் கிடைத்தது உண்மைதான். இதன் NVH லெவலும் அற்புதம். இதை ஹைவேஸ், சிட்டி என எல்லா ஏரியாக்களிலும் உணர்ந்தேன்.

ஆனால், நான் ஏற்கெனவே சொன்னதுபோல், பவர் பத்தாமல் திணறியது மெரிடியன். இது காம்பஸை விட 110 கிலோ பெரியது. இத்தனை பெரிய எஸ்யூவியை இழுக்க ஒரு 200bhp பவராவது கொடுத்திருக்கலாம். இதன் டார்க்கும் 35kgm என்பது ஓகே! சஃபாரி போன்றவை 40kgm என்பதெல்லாம் நினைவுக்கு வந்தது.

ஆனால், சும்மா சொல்லக்கூடாது; மெரிடியனின் ஓட்டுதல் திறன் அபாரமாக இருந்தது. இதன் இன்ஜின் காலிப்ரேஷனைச் சொல்கிறேன். 4,500rpm ரெட்லைன் வரை பறக்கிறது மெரிடியன். இதை சுமார் 165 கிமீ வரை ஓட்டிப் பார்க்க முடிந்தது. 190 வரை பறக்கலாம் போல! அதற்கு மேலும் போயிருக்கும். அதற்காக ரொம்ப ஸ்போர்ட்டி என்றும் சொல்லிவிட முடியவில்லை. அண்டர்பவர் என்றும் சொல்லிவிட முடியாது.

இன்ஜின்தான் ஒன்று; கியர்பாக்ஸ் மற்றும் டிரைவ்கள் பலவிதம். 6 ஸ்பீடு மேனுவல், 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக், 2வீல் மற்றும் 4வீல் டிரைவ் என்று மெரிடியன் விருந்து வைக்கிறது. 9 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஓகேதான்! இதன் டால் கியரிங் செட்–அப், இது ஒரு ஹைவே கார் என்பதையும் நிரூபிக்கிறது. அதைவிட இதன் டைனமிக்ஸ் அருமை, ஆடாமல் அசையாமல் பறக்கிறது மெரிடியன்.

ரைடு அண்ட் ஹேண்ட்லிங் மற்றும் ஆஃப்ரோடு

இதன் டைனமிக்ஸ்தான் பாடி ரோலையும் கட்டுப்படுத்துகிறது. நெடுஞ்சாலைகளில் பாடிரோலும் அவ்வளவாக இல்லை. சிட்டிக்குள் வளைத்து ஓட்டவும் அற்புதமாக இருக்கிறது.

இதன் சஸ்பென்ஷனைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். இதில் FSD (Frequency Selective Damping) மற்றும் Hydraulic Rebound Stoppers (HRS) சஸ்பென்ஷன் செட்அப்பை முன் பக்கம் மற்றும் பின் பக்கத்துக்குப் பொருத்தி இருக்கிறார்கள். கிண்ணென்ற கட்டுமஸ்தான இந்த செட்–அப் ஃபார்முலா கார்களில் காணப்படும் தொழில்நுட்பம். எந்தச் சாலைகளைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை மெரிடியனில். உடைந்த சாலைகளா… வழுக்கும் பாதைகளா… டம் டமாலென்ற மேடு பள்ளங்களா… எதற்கும் சலிக்கவில்லை மெரிடியன். அதைவிட, அந்தத் தாக்கம் உள்ளே இருக்கும் பயணிகளுக்குக் கடத்தாமல் பார்த்துக் கொள்வது வாவ்! பட்டர்ஃப்ளை சாஃப்ட் செட்அப் இல்லை… என்ன, சில இடங்களில் மட்டும் தூக்கிப் போடுகிறது. இது பெரிய குறையாகத் தெரியவில்லை.

கடுமையான ஆஃப்ரோடராக்க வேண்டும் என்று மெரிடியனைப் பார்த்துப் பார்த்து டிசைன் செய்திருக்கிறார்கள் நிபுணர்கள். பெரிய ஜீப்கள் மாதிரி இதன் அப்ரோச்/டிப்பார்ச்சர்/பிரேக் ஓவர் ஆங்கிள்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஒரு பெரிய 32 டிகிரி பள்ளத்தில் இறங்கினேன். ம்ம்ஹூம்… அப்படியே டயர்கள் தரையைத் தாங்கியபடி, நம்மை பவ்யமாகக் கீழிறக்குகிறது மெரிடியன். இதற்காகவே சண்டிகர் வழியாக இமாச்சல் பிரதேசம் போகும் வழியில் ஒரு காட்டைக் குத்தகைக்கு எடுத்திருந்தது ஜீப். அதில்தான் ஆஃப்ரோடு டிரைவ். சாய்மானங்கள்… வழுக்கும் சாலைகள்… சேறு சகதி கொண்ட குட்டி அகழிகள்.. பல டிகிரி இறக்கங்கள்.. என்று எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டது 4வீல் டிரைவ் மெரிடியன். இதை ஒரு உண்மையான ஆஃப்ரோடர் என்பேன். 2 வீல் டிரைவ் என்றால், ஆஃப்ரோடைத் தவிர்ப்பது நல்லது.

காம்பஸின் அண்ணன்
மெரிடியன்!
உண்மையான ஆஃப்ரோடரா?

முதல் தீர்ப்பு

ஆஃப்ரோடு மற்றும் ஆன்ரோடு என்று எல்லா ஏரியாக்களிலும் சொல்லியடிக்கும் ஜீப் மெரிடியனின் பெரிய குறை – ஒரே ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டும்தான். பெட்ரோல் கூடிய விரைவில் வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். Limited மற்றும் Limited (O) என்று இரண்டு வேரியன்ட்களில் வரும் மெரிடியனுக்கு நேரடிப் போட்டியாளர்கள் என்று பார்த்தால்… டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி கிளாஸ்டர், ஸ்கோடா கோடியாக் போன்றவைதான். இதன் விலை சுமார் 36 – 39 லட்சம் வரும்.

இதன் சஸ்பென்ஷனுக்காகவே மெரிடியனை ஒரு கை பார்க்கலாம். ஒரு ஜீப் டிஎன்ஏ உடன் ஒரு ஆன்ரோடர்.. ஆஃப்ரோடர் வேண்டும் என்பவர்களுக்கு, மெரிடியன் நல்ல சாய்ஸாக இருக்கும்!

காம்பஸின் அண்ணன்
மெரிடியன்!
உண்மையான ஆஃப்ரோடரா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism