Published:Updated:

ஹாலிவுட் ஹீரோ… இனி இந்தியத் தயாரிப்பு!

ஜீப் ரேங்ளர்
பிரீமியம் ஸ்டோரி
ஜீப் ரேங்ளர்

2021 ஜீப் ரேங்ளரின் ஃபர்ஸ்ட் லுக் | விலை: 53.9 – 57.9 லட்சம் (எக்ஸ் ஷோரூம்)

ஹாலிவுட் ஹீரோ… இனி இந்தியத் தயாரிப்பு!

2021 ஜீப் ரேங்ளரின் ஃபர்ஸ்ட் லுக் | விலை: 53.9 – 57.9 லட்சம் (எக்ஸ் ஷோரூம்)

Published:Updated:
ஜீப் ரேங்ளர்
பிரீமியம் ஸ்டோரி
ஜீப் ரேங்ளர்

ஒரு அமெரிக்க ரேங்ளர் ஜீப்பை நீங்கள் இந்தியாவில் ஓட்ட வேண்டுமென்றால், சுமார் 75 லட்சம் முதல் 80 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். 2019–ல்தான் முதன் முதலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது ரேங்ளர். அதுவும் CBU (Completely Built-up Unit) வாயிலாகத்தான். அதாவது இறக்குமதி சிஸ்டம்தான். இப்போது CKD முறையில் (Completely Knocked Down) முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாராக இருப்பதால், இதன் விலை கணிசமாக 12 முதல் 13 லட்சங்கள் வரை விலை குறைய வாய்ப்புண்டு! அப்படிப்பட்ட ரேங்ளரின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிப் பார்க்கலாம்!

ஜீப் ரேங்ளர்
ஜீப் ரேங்ளர்

2019–ல் அறிமுகப்படுத்த ரேங்ளர் – JL சீரிஸின் 4–வது ஜென் மாடல். இது 5–வது ஜெனரேஷனா என்பது தெரியவில்லை. ஆனால், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானால், ஜெனரேஷன் சேஞ்ச் ஆகத்தான் இருக்கும் இந்த ரேங்ளரில். அல்லது 4–வது ஜெனரேஷன் ரேங்ளரோடே இது விற்பனை செய்யப்படலாம்.

Unlimited, Rubicon - இப்படி இரண்டு வேரியன்ட்களில், இந்தியாவில் தயாராகும் ரேங்ளர், 5–டோர் ஜீப்பாகத்தான் வருகிறது. அதேபோல் டெக்னிக்கல் அம்சங்களிலும் பெரிதாகக் கைவைக்கவில்லை ஜீப். அதே 2.0லிட்டர் பெட்ரோல் In-Line 4 சிலிண்டர் இன்ஜின், வெறித்தனமான டர்போவில் இயங்குகிறது. இதன் பவர் 268bhp. டார்க் 40kgm. இந்த இன்ஜினில் மொத்தம் 16 வால்வ்கள் இருப்பதால், இதன் ஸ்மூத்னெஸ் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை. கியர்பாக்ஸ் 8 ஸ்பீடு, டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்திய ஆஃப்ரோடர்கள் டீசலிலேயே ஆஃப்ரோடு செய்து பழகியிருப்பார்கள். ஜீப், டீசலுக்கும் கொஞ்சம் மனசு வைக்கலாம்.

‘பரிசுத்தமான ஆஃப்ரோடர்’ என்று பெயரெடுத்த ரேங்ளரில், பெயருக்குக்கூட 2 வீல் டிரைவ் ஆப்ஷன் இருப்பதை விரும்பவில்லை ஜீப். அதனால், ‘Selec-Trac’ ஆல்டைம் 4 வீல் டிரைவ் சிஸ்டம்தான் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக, ஆஃப்ரோடர்களில் அப்ரோச் ஆங்கிள், டிப்பார்ச்சர் ஆங்கிள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதோடு, ‘க்ரால் ரேஷியோ’ (Crawl Ratio) என்றொரு அம்சம்தான் ஆஃப்ரோடிங்குக்கு மிக முக்கியம். இந்த Crawl Ratio அதிகமாகும் பட்சத்தில் எப்படிப்பட்ட பாறைகளிலும் ‘தட தட’ என க்ரால் ஆகிக் கிளம்ப முடியும். 2.72:1 எனும் விகிதத்தில் இதன் Crawl Ratio–வை செட் செய்திருக்கிறது ஜீப். கூடவே, ஹெவி டியூட்டி சஸ்பென்ஷன் வேறு. இது இந்த ரேங்ளரின் ஆரம்ப மாடலான Unlimited வேரியன்ட்டில்கூட உண்டு என்பதுதான் ஸ்பெஷல்.

பரிசுத்தமான ஆஃப்ரோடர்
பரிசுத்தமான ஆஃப்ரோடர்


இதுவே கொஞ்சம் காஸ்ட்லியான, டாப் எண்ட் மாடலான Rubicon வேரியன்ட்டில் இருப்பது, `Rock-Track’ ஆல்வீல் டிரைவ் சிஸ்டம். இந்த இரண்டு வேரியன்ட்களும் ஸ்டாண்டர்டாகவே 4வீல் டிரைவ் என்பதால், எப்போதுமே ஆஃப்ரோடுக்குத் தயாராகவே இருக்கும். நினைத்ததுபோலவே Rubicon–ன் Crawl Ratio–வை 4:1 எனும் அளவில், கொஞ்சம் அதிகமாகவே செட் செய்திருக்கிறார்கள். அதாவது, க்ரால் ரேஷியோ கூடக் கூட அது ஆஃப்ரோடுக்கானது. குறைந்தால், அது சாஃப்ட் ரோடுக்கானது. இதில் டிஃப்ரன்ஷியல் லாக் உண்டு. ‘அதான் நம் ஊர் தார்லயே இருக்கே’ என்று நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால், இதில் இருப்பது எலெக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக்ஸ். முன் பக்கம்/பின் பக்கம் இரண்டுக்குமே! அதாவது, தேவைக்கேற்ப கார் வெட்டியாக ஸ்பின் ஆகாத அளவுக்கு, முன்/பின் டிஃப்ரன்ஷியல்களை ஆட்டோமேட்டிக்காகவே லாக் செய்து கொள்ளும் என்பது ஸ்பெஷல்கள். கார்களில் உள்ள ஆன்ட்டி ரோல் பார்களை, இதுபோன்ற ஆஃப்ரோடர்களில் Sway Bar என்று சொல்வார்கள். இதுவும் எலெக்ட்ரானிக்தான்.

வாட்டர் வேடிங் டெப்த் 760 மிமீ
வாட்டர் வேடிங் டெப்த் 760 மிமீ

இரண்டு வேரியன்ட்களையும் வீல்களை வைத்தே அடையாளம் கண்டு கொள்ளலாம். Unlimited ரேங்ளருக்கு 18 இன்ச் அலாய் வீல் (255 / 70 / R18 All-season) கொடுத்திருக்கிறார்கள். இதுவே ஆஃப்ரோடிங் அம்சம் அதிகமான Rubicon வேரியன்ட்டில் 1 இன்ச் சைஸ் குறைந்திருக்கிறது. இதில் இருப்பது 255 / 75 / R17 டயர்கள். இதில் டயர்களின் சைடு வால் பகுதியை கொஞ்சம் தடிமன் ஆகவும், செக்ஷனை அதிகப்படுத்தியும் இருக்கிறார்கள். டயர்களும் Unlimited –ஐ விட கொஞ்சம் ஸ்போர்ட்டியானவை. இரண்டு மாடல்களுக்குமே இரண்டு பக்கமும் டிஸ்க் கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோல், Rubicon மாடலில் கிரவுண்ட் கிளியரன்ஸும் 3 மிமீ அதிகம். Unlimited மாடலில் 214 மிமீ. Rubicon–ல் 217 மிமீ. அதேபோல் ஏற்கெனவே சொன்னபடி பிரேக்ஓவர் ஆங்கிள் Rubicon–ல்தான் ஜாஸ்தி. இரண்டிலுமே வாட்டர் வேடிங் டெப்த் 760 மிமீ. அதாவது, 76 செமீ தண்ணீருக்குள் புகுந்து புறப்பட்டு வரலாம். அதேபோல், இரண்டுக்கும் ஸ்பீடு லிமிட் இருக்கிறது. 8 கிமீ வேகத்தில்தான் போனால்தான் சேஃப்டி.

18 இன்ச் அலாய் வீல்
18 இன்ச் அலாய் வீல்

ஜீப் நிறுவனத்துக்கு இப்போது 80 வயது ஆகிறது. அதைக் கொண்டாடும்விதமாக ரேங்ளரின் 80th Anniversary Edition ஒன்றையும் வெளியிட இருக்கிறது ஜீப். இது 1941–ம் ஆண்டு வந்த இந்த பிராண்டில் வில்லிஸ் MB ஜீப்பை நினைவுகூரும் விதமாக இது இருக்கும்.

ஆஃப்ரோடர் என்பதற்காக, வசதிகளில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை ஜீப். ஒரு பெரிய லக்ஸூரி காருக்கு என்னென்ன வசதிகள் தேவையோ, அத்தனையும் ரேங்ளரில் உண்டு. எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் டே டைம் ரன்னிங் லைட்ஸ், பனி விளக்குகளுக்குக்கூட எல்இடி, காருக்கு உள்ளே லெதர் சீட்கள், 7 இன்ச் MID ஸ்க்ரீன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், 8.4 இன்ச் கொண்ட டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்… (அதில் ஆப்பிள் கார் ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோவும் உண்டு), டூயல் டோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி மற்றும் ஸ்டார்ட். ஆஃப்ரோடர் ஆச்சே.. அதனால் கழற்றி மாட்டிக் கொள்ளக்கூடிய வகையில் கதவுகளும், ஹார்டு டாப் ரூஃப்களும் கொடுத்திருக்கிறார்கள்.

8.4 இன்ச் டச் ஸ்க்ரீன்
8.4 இன்ச் டச் ஸ்க்ரீன்

பாதுகாப்பைப் பொருத்தவரை, முன் பக்கம் டிரைவர்/பேசஞ்ஜர் காற்றுப் பைகள், பக்கவாட்டுக் காற்றுப்பைகள், ESC, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிஸென்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ரோல் மிடிக்கேஷன் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், ஆன்ட்டி தெஃப்ட் இன்ஜின் இம்மொபைலைஸர் என ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகள் உண்டு.

புனேவில் உள்ள ரஞ்சங்கோன் ஜீப் தொழிற்சாலையில், ரேங்ளரின் உற்பத்தி துவங்கிவிட்டது. புக்கிங்குகளும் ஓப்பன் ஆகிவிட்டது. இந்த புனே தொழிற்சாலையின் ஸ்பெஷல் என்னவென்றால், அமெரிக்கா Ohio-வில் உள்ள Toledo தொழிற்சாலைக்குப் பிறகு ரேங்ளர் தயாராகும் இரண்டாவது இடம், இதுதான்.

ஜீப் காம்பஸ்
ஜீப் காம்பஸ்

இது தவிர, ஜீப்பில் இருந்து காம்பஸில் ஒரு புதிய 7 சீட்டர் மாடலையும் கொண்டு வரவிருக்கிறார்கள். இதற்கு H6 என்று குறியீட்டுப் பெயரும் வைத்து விட்டார்கள். இதைத் தொடர்ந்து ஜீப்பின் அதிரடி ஆஃப்ரோடரான கிராண்ட் செரோக்கி காரின் அடுத்த ஜெனரேஷன் மாடலையும், லோக்கலைஸ் செய்யவிருக்கிறதாம் ஜீப்.

இப்போதைக்கு ரேங்ளருக்கு இருக்கும் ஒரே போட்டி, லேண்ட்ரோவர் டிஃபெண்டர். இதன் 3 டோர் வெர்ஷன் மற்றும் 5 டோர் வெர்ஷன், 74 லட்சத்தில் இருந்து 1.08 கோடி வரை வருகிறது. ரேங்ளரின் எக்ஸ் ஷோரூம் விலை, Unlimited - 53.9 / Rubicon - 57.9 லட்சம். பழசை விட மிகக் கணிசமாக விலை குறைவதால், ஆஃப்ரோடர்களுக்குள் போட்டி தறி கெட்டு நடக்க வாய்ப்பு இருக்கிறது.

ஜீப் ரேங்ளர் 2021
ஜீப் ரேங்ளர் 2021