ஃபார்முலா–1 உலகின் மன்னன் மைக்கேல் ஷூமேக்கருக்கு அடுத்து, ஏழு முறை உலக சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறார், லூயிஸ் ஹாமில்ட்டன். ஃபார்முலா–1 வரலாற்றில் அதிக வெற்றிகளைக் (94 முறை ) கொண்ட வீரர் மற்றும் இளம்வயதில் (23) ஃபார்முலா–1 உலக சாம்பியன் பட்டம் பெற்ற ஒரே வீரர் – லூயிஸ் ஹாமில்ட்டன்.

இப்போது லூயிஸ்தான், டாக் ஆஃப் தி ரேஸ்.

1985–ம் ஆண்டு இங்கிலாந்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் லூயிஸ் ஹாமில்ட்டன். அவரின் தந்தை ஐந்து வயதில் அவருக்கு ரிமோட் கன்ட்ரோல் கார் ஒன்றைப் பரிசளித்தார். அதுதான் லூயிஸ் ஹாமில்ட்டனுக்குக் கார் ரேஸின் மீது ஆர்வம் வரக் காரணமாக இருந்ததாம். ‘ஸ்கூலில் நல்ல மார்க் எடுத்தால் உன்னை ரேஸர் ஆக்குவேன்’’ என்று தந்தை சொன்னதை அடுத்து ரேஸராக வேண்டும் என்ற எண்ணத்தில், வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தார் லூயிஸ் ஹாமில்ட்டன். தன் மகனின் ஆசையை நிறைவேற்ற, ஒரே நேரத்தில் நான்கு வேலைக்குச் சென்றார் லூயிஸின் அப்பா.

ஹாமில்ட்டன் சந்தித்த ஒரே பிரச்னை – நிறம். ஆம், அந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட ஒரே கருப்பு இனத்தவர் இவரே! இதனால் பல இடங்களில் நிறவெறியால் பாதிக்கப்பட்டாராம் லூயிஸ். நிறவெறித் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே ஐந்து வயதிலேயே கராத்தேவும் கற்றுக் கொண்டாராம்.

1993 –ம் ஆண்டு, தன் எட்டாவது வயதில் லூயிஸ் ஹாமில்ட்டன் கார்ட் ரேஸில் முதன் முதலில் கலந்து கொண்டார். தன்னுடைய பத்து வயதில் British Cadet Kart Championship–யை வென்ற இளம் வீரர் என்ற சாதனை ஹாமில்ட்டனுக்குச் சொந்தமானது.

அப்போது Autosport Award நிகழ்ச்சியில் மெக்லாரன் அணியின் பாஸ் ரான் டென்னிஸிடம், ஹாமில்ட்டன் ஆட்டோகிராப் பெற்றபோது அவரிடம், ‘‘என் பெயர் லூயிஸ் ஹாமில்ட்டன். நான் பிரிட்டிஷ் கார்ட் ரேஸிங் சாம்பியன். நான் உங்கள் அணியில் ரேஸ் ஓட்ட விரும்புகிறேன்’’ என்று கேட்டார். ஆட்டோகிராப் நோட்டில் ரான் டென்னிஸ், ‘‘ஒன்பது வருடம் கழித்து என்னை வந்து பார்க்கவும்’’ எனப் பதிலளித்தார். 9 ஆண்டுகளுக்கு முன்பே, ரான் டென்னிஸ், லூயிஸ் ஹாமில்டனை தனது McLaren Driver Development Programme-ல் பணிக்குச் சேர்த்துக் கொண்டார். இப்படித்தான் ஆரம்பித்தது லூயிஸின் கார் ரேஸ் வாழ்க்கை. Intercontinental A, Formula A, Formula Super A என அவரின் ரேஸ் கரியர் தொடர்ந்தது. இரண்டே ஆண்டுகளில் ஐரோப்பியன் சாம்பியன் பட்டம் வென்றது, ரேஸ் வரலாற்றில் பேசப்பட்டது.

ஃபார்முலா–1 சாம்பியன்

2007–ம் ஆண்டு மெக்லாரன் அணியில் லூயிஸ் ஹாமில்ட்டன், நடப்பு சாம்பியன் பெர்னோண்டோ அலோன்சோவின் டீம் மேட்டாக இடம் பெற்றார். தன் முதல் ஃபார்முலா–1 ரேஸில் போடியம் ஏறி சாதனை படைத்தார். ஆனால், 2007-ன் ஃபார்முலா–1 உலக சாம்பியன்ஷிப்பை வெறும் ஒரே ஒரு புள்ளியில் தவறவிட்டபோது, கதறி அழுதார் லூயிஸ். ஆனால், விடவில்லை.

2008–ம் ஆண்டு, ஹாமில்ட்டன் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு. அந்த வருடம் முழுவதும் ஃபிலிப் மாஸாவுக்கும் ஹாமில்ட்டனுக்கும் கடும் போட்டி நிலவியது. அந்த சீஸனின் கடைசிப் போட்டியில் ஹாமில்ட்டன், கடைசி லேப் கடைசி கார்னரில் ஓவர்டேக் செய்து, 2008-ன் ஃபார்முலா–1 உலக சாம்பியன் பட்டத்தை ஒரு புள்ளி வித்தியாசத்தில் வென்றார். போன ஆண்டு ஒரு புள்ளி வித்தியாசத்தில் விட்டதைப் பிடித்தார் லூயிஸ். ஃபார்முலா–1 வரலாற்றில், 23 வயதில் ஒருவர் சாம்பியன்ஷிப் வெல்வது இதுவே முதல் முறை என்று நியூஸ் ஹெட்லைன்ஸ் சொன்னது. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு, உலக சாம்பியன்ஷிப்பை வெல்லும் பிரிட்டிஷ் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

அடுத்து மெக்லாரன் அணியில் இருந்த நான்கு வருடம், அவரால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. 2012-ன் இறுதியில் மெர்சிடீஸ் அணிக்குச் சென்ற அவர், 2014 சீஸனில் 19–ல் 11 ரேஸ்களை வென்று, தன் 2–வது ஃபார்முலா–1 உலக சாம்பியன்ஷிப்பை வென்றார். 2015-லும் ஹாமில்ட்டனின் ராஜ்ஜியம்தான். 17 முறை போடியம் ஏறிய தனது ஹீரோவான Aryton Senna-வின் சாதனையைச் சமன் செய்தார்.

2016–ம் ஆண்டு லூயிஸ் ஹாமில்ட்டனுக்கும் தன் டீம் மேட் நிக்கோ ரோஸ்பெர்க்குக்கும் போட்டி. தனது டீம் மேட்டிடம் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் சாம்பியன்ஷிப்பை இழந்தார் லூயிஸ். 2017–ம் ஆண்டு செபாஸ்ட்டியன் வெட்டலுடன் போட்டி போட்டு, தனது நான்காவது உலக சாம்பியன்ஷிப்பை வென்றார்.

2018–ம் ஆண்டு 5–வது சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக மறுபடியும் வெட்டலுடன் மோதல். ஆனால், இந்த முறை வெட்டலுக்கு லீட் கிடைத்தது. ஆனாலும், சீஸனின் இரண்டாவது பாதியில் வெட்டல் செய்த சிறு தவற்றால், சாம்பியன்ஷிப் லீட் ஹாமில்ட்டன் கைக்குச் சென்றது. அட, ஹாமில்ட்டன் மீண்டும் 5 வது முறையாக உலக சாம்பியன். 2019-லும் வேறு யார்? ஹாமில்ட்டன்தான் சாம்பியன். இப்போது 2020–யையும் விட்டு வைக்கவில்லை லூயிஸ்.

ஷூமேக்கருக்குப் பிறகு 7 முறை சாம்பியன்ஷிப் பட்டம் அடித்தது லூயிஸ் ஹாமில்ட்டன்தான். ஃபார்முலா–1 வரலாற்றில் ஷூமேக்கருக்கு 91 வெற்றிகள் என்றால், ஹாமில்ட்டன் 93. அதிலும், நவம்பர் 2020–ல் நடந்த Turkey Grandprix-ல் கடைசியாக வெற்றி பெற்றதால், 94–க்கு லீட் ஆகியுள்ளார் லூயிஸ்.

துருக்கி போடியத்தில் நின்றபடி லூயிஸ் ஹாமில்ட்டன் இப்படிச் சொன்னார்: ‘‘இந்த வெற்றியை உலகெங்கும் சாதிக்க நினைக்கும் குழந்தைகளுக்குச் சமர்ப்பிக்கிறேன். கறுப்பு இனத்தவனான என்னால் இதைச் சாதிக்க முடிந்தால், உங்களாலும் நிச்சயம் முடியும்.’’

ரேஸ் ஃபீல்டில், ஹாமில்ட்டனை GOAT எனச் சொல்வார்கள். ஆடு என்று நினைத்து விடாதீர்கள். Greatest Of All Time. உண்மைதான்; லூயிஸ் GOATதான்.

ஃபரித்கான்