Published:Updated:

காருக்குள் சானிட்டைஸர் இருக்கலாமா?

 லாக்டெளன் டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
லாக்டெளன் டிப்ஸ்

லாக்டெளன் டிப்ஸ்

கொரோனா காலத்தில் முகக்கவசம், சானிட்டைஸர்... எல்லாம் எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு காரைப் பயன்படுத்தும்போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.

கைகள் மட்டுமல்ல; வாகனமும்

சுத்தமாய் இருக்க வேண்டும்.

கைகளைச் சுத்தப்படுத்துவதைப்போல் காரின் வெளிப்பகுதியையும், உள் பகுதியையும், குறிப்பாக நாம் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளையும் சுத்தப்படுத்த வேண்டும். பெட்ரோல் பம்ப்பில் பொதுக் கழிவறையில் உள்ளதைவிட அதிக அளவில் நுண்கிருமிகள் காரின் திருகுகள் போன்ற பகுதிகளில் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இந்தக் கொரோனா காலத்தில் இன்னும் நாம் எந்த அளவுக்குக் கவனமாக இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள் . முன் பக்க சீட்களை மட்டுமல்ல, பின்புறமுள்ள சீட்டையும் மறக்காமல் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். பூட் பகுதியில் பொருட்களை வைக்கும் முன்னரும் பின்னரும் அந்த இடத்தையும் சுத்தப்படுத்துதல் அவசியம். தேவைக்குப் பயன்படுத்த காரில் கையுறைகளை எப்போதும் வைத்திருப்பது, நாம் தொடும் பகுதியைக் குறைப்பது ஆகியன கூடுதல் பாதுகாப்பைத் தரும் .

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சானிட்டைஸர்

கவனம் தேவை...

நாம் வீட்டிலிருந்து காரில் ஏறிய உடன் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டோமா என்று சரிபார்க்க மனதில் ஒரு பட்டியல் வைத்திருப்போம். அதில் கை சானிட்டைஸரைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். காரில் பயணம் செய்யும்பொழுது சானிட்டைஸரை, காருக்குள்ளேயே வைத்துவிடாமல் மறக்காமல் கையோடு கைப்பையில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். ஆல்கஹால் சார்ந்த சானிட்டைஸர்களை, இந்தக் கொளுத்தும் வெயிலில் பூட்டிய காருக்குள் வைப்பது பாதுகாப்பானது அல்ல. போகும் இடத்தில், தேவைப்படும்போது கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளவும் இந்த வழக்கம் பயனுள்ளதாக இருக்கும்.

 லாக்டெளன் டிப்ஸ்
லாக்டெளன் டிப்ஸ்

வேகம், விவேகம் இல்லை!

இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலும் சாலைகளில் பொதுப்போக்குவரத்து குறைந்து காணப்படுவதால், சாலைகளில் ஜில்லென்று பறக்கலாம் என்ற சபலம் தோன்றும். அப்படி ஒரு சபலம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஊரடங்கு காலத்தில் நடக்கும் பல விபத்துகளுக்குக் காரணம், ஓவர் ஸ்பீடிங் என்பது நினைவிருக்கட்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மின்னணு பரிவர்த்தனை

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது டோல் கேட்டில் கட்டணத்தைச் செலுத்த மின்னணுப் பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது. ஃபாஸ்டேக் மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். மின்னணுப் பரிவர்த்தனை இல்லாத சுங்கச்சாவடி என்றால், பணம் செலுத்தப்படும் நிலை ஏற்பட்டால் சரியான சில்லறையைக் கொடுப்பது சிறந்தது. இல்லையெனில், சுங்கச்சாவடியில் இருந்து நாம் சில்லறையை வாங்கிய உடன் பணத்தைத் தனியாக ஓர் இடத்தில் வைத்துவிட்டு, சானிட்டைஸர் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்தி விட்டுத்தான் ஸ்டீயரிங்கைப் பிடிக்க வேண்டும்.

சானிட்டைஸர்
சானிட்டைஸர்

கூட்டம் கவனம்!

அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே நீங்கள் கடைக்குச் சென்றாலும், அங்கே கூட்டம் இருக்கும் பட்சத்தில் - வண்டியைக் கூட்டத்திற்கு இடையில் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லை என்றால், நாம் கடைக்குள் சென்ற நேரம் காரை யார் வேண்டுமானாலும் தொட்டிருக்கக் கூடும். காரில் யார் வேண்டுமானாலும் சாய்ந்திருக்கக் கூடும். இதை மனதில் வைத்துக் கொண்டு காரைப் பயன்படுத்துங்கள்.

காருக்குள் எப்பொழுதுமே கையுறைகளும், சில முகக் கவசங்களும் இருப்பது அவசியம். பலருடன் சேர்ந்து பயணிப்பதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் பல பேரை காரில் ஏற்ற வேண்டியதாக இருந்தால்... உடன் பயணிக்கும் நபரும் போதுமான அளவு எச்சரிக்கையோடு முகக்கவசம் அணிந்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

சானிட்டைஸர்
சானிட்டைஸர்

இப்படிப்பட்ட பயணம் வெயிலில் அமைந்துவிட்டால், ஏசியை ஆன் செய்யத் தோன்றினாலும், அதைப் பயன்படுத்தாமல் இருப்பதே கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ள வழி.

`ஏசிதான் இல்லையே’ என்று அதற்காக, காரின் எல்லா கதவுகளையும் ஒரேயடியாக இறக்கிவிட்டுக்கொண்டு காரை ஓட்ட வேண்டிய அவசியமில்லை. ஜன்னல் கண்ணாடிகளைத் தேவையான அளவு இறக்கிவிட்டுக் கொண்டு பயணிப்பதே சரியானது.

கார் வாங்க நினைப்பவர்கள் கவனத்துக்கு...

புதிதாக கார் வாங்க நினைப்பவர்கள், ஷோரூம் ஷோரூமாக ஏறி இறங்காமல்... கூடுமானவரை இணையத்திலேயே உங்களுக்குத் தோன்றும் அத்தனை சந்தேகங்களுக்கும் பதிலைத் தேடுங்கள். இணையம் வழியாக காரை புக்கிங் செய்யும் வசதியே இப்போது வந்துவிட்டது. டெஸ்ட் ட்ரைவ் செய்ய விரும்புபவர்கள், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும்.