Published:Updated:

வால்வோ எனும் சொகுசுப் படகு!

விலை: ரூ. 43.50 லட்சம் (எக்ஸ் ஷோரூம்)
பிரீமியம் ஸ்டோரி
விலை: ரூ. 43.50 லட்சம் (எக்ஸ் ஷோரூம்)

லாங் ரைடு: வால்வோ S60 பெட்ரோல்

வால்வோ எனும் சொகுசுப் படகு!

லாங் ரைடு: வால்வோ S60 பெட்ரோல்

Published:Updated:
விலை: ரூ. 43.50 லட்சம் (எக்ஸ் ஷோரூம்)
பிரீமியம் ஸ்டோரி
விலை: ரூ. 43.50 லட்சம் (எக்ஸ் ஷோரூம்)

அன்புக்கு அன்னை தெரசா, வம்புக்கு சிம்பு, சண்டைக்கு ஜாக்கிசான்... பாதுகாப்புக்கு நிச்சயம் வால்வோதான். தனது சின்னச் சின்ன கார்களிலேயே வதவதவென காற்றுப்பைகளெல்லாம் கொடுத்து, பெடஸ்ட்ரியன் சேஃப்டிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில் வால்வோதான் ஆல் டைம் கிங்.

அப்படிப்பட்ட வால்வோவின் புது S60 ப்ரீமியம் செடான் கார், இந்த 2021–க்குப் பிறகுதான் நம் கைகளுக்கு வரும் என்று நினைத்திருந்தோம். ஆனால், புத்தாண்டுச் சிறப்பிதழுக்கு வால்வோவை ஓட்டி ஃபர்ஸ்ட் டிரைவ் எழுதும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. ஏற்கெனவே எனக்கு Euro-4 நார்ம்ஸ் கொண்ட வால்வோ S60–யை ஓட்டிய அனுபவம் உண்டு. புது வால்வோ S60 எப்படி இருக்கும் என்று அறிய எனக்கு ஆவலோ ஆவல்! ஒரு வீக் எண்டில் அந்த ஆவலை நிவர்த்தி செய்தது வால்வோ!

விலை: ரூ. 43.50 லட்சம் (எக்ஸ் ஷோரூம்)
விலை: ரூ. 43.50 லட்சம் (எக்ஸ் ஷோரூம்)

இது மூன்றாவது ஜென் S60. செகண்ட் ஜென் வால்வோவின் டீசலும் சரி; பெட்ரோலும் சரி – இனி கிடையாது. ஜூலையிலேயே நிறுத்திவிட்டது வால்வோ. அதற்குப் பதிலாக இந்த S60, இனி 190bhp பெட்ரோலில் மட்டும்தான் கிடைக்கும்.

வெளியே...

கேரளா ஆலப்புழா படகு போன்ற நீளமும், லுக்கும்தான் வால்வோ, ஜாகுவார் போன்ற கார்களின் ஸ்பெஷல். இந்த வால்வே S60–ம் அப்படித்தான். செம நீளம் – 4,761 மிமீ. இதன் அகலமே ஒரு ஹேட்ச்பேக்கின் வீல்பேஸுக்கு இணையாக இருக்கிறது (2,040 மிமீ). அப்படியென்றால் இதன் வீல்பேஸ் 2,872 மிமீ. ஆனால் ப்ரீமியம் செடான்கள் என்றால் சாலையில் பறக்க வேண்டும். அதற்கு உயரம் குறைவாக இருந்தால்தான் சரி – இதன் உயரத்தை 1,431 மிமீ–க்கு டிசைன் செய்திருக்கிறது வால்வோ. இந்த ப்ளாட்ஃபார்மின் பெயர் Scalable Platform Architecture. நிச்சயம் இதன் ஸ்டெபிலிட்டி செமையாக இருக்கும் என்று நினைத்தேன். பொய்க்கவில்லை. சென்னை அவுட்டர் ரிங்ரோட்டில் 180 கிமீ–ல் பறந்தேன். பழைய வால்வோ S60–ல் 200 கிமீ–க்கு மேல் போன ஞாபகம் இருந்தது. இதில் 180–யைத் தாண்டவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு விஷயம் – இனி எந்த வால்வோ கார்களிலும் 180 கிமீ–க்கு மேல் பறக்க முடியாது. இது குளோபலாக வால்வோ கடைப்பிடிக்கும் விஷயம்.

வால்வோ எனும் சொகுசுப் படகு!

எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸை உற்றுப் பார்த்தால், அவென்ஜர்ஸ் ‘Thor’-ன் சுத்தியல் போலவே டிசைன் செய்திருக்கிறது வால்வோ டிசைன் டீம். வால்வோவின் Eye Catching அம்சமே இதுதான். LED DRL-ம் அருமை. மற்றபடி வழக்கம்போல் சன்ரூஃப், ஷார்க் ஃபின் ஆன்ட்டெனா, பெரிய 18 இன்ச் அலாய் வீல்கள் என கிண்ணென்று இருக்கிறது S60.

வால்வோ எனும் சொகுசுப் படகு!

உள்ளே...

S60–ன் சாவியே வித்தியாசமாக இருக்கிறது. ரிமோட் கீயை அன்லாக் செய்து உள்ளே போனால்... செம ரெஃப்ரெஷ்ஷாக இருக்கிறது கேபின். சீட்கள் அத்தனை பெருசு ப்ளஸ் சொகுசு. டேஷ்போர்டு உயரமாகவும், விண்ட்ஷீல்டு இறக்கமாகவும் இருந்தாலும், வெளிச்சாலை விஸிபிலிட்டி அருமை. பட்டன் ஸ்டார்ட் வழக்கமான புஷ் ஸ்டார்ட் இல்லை; லீவர்போல் திருப்புவது ஸ்டைல்.

காரின் இன்டீரியர் செம தரம். வென்டிலேட்டட் சீட் இல்லை.
காரின் இன்டீரியர் செம தரம். வென்டிலேட்டட் சீட் இல்லை.

டச் ஸ்க்ரீன், ஏர்வென்ட்டுகள் எல்லாமே வெர்ட்டிக்கலாக இருந்தன. S90 அளவுக்கு இல்லை; ஆனால் பட்டன்களில் இருந்து சீட்கள், டோர் பேடுகள் வரை எல்லாமே தரம். டேப்லெட் மாதிரி இருந்த டச் ஸ்க்ரீனில் டச் செய்வதற்கு ஜாலியாகவே இருந்தது. கறுப்பு பேக்ரவுண்ட் என்பதால், இரவு/பகல் என எப்போதும் சிக்கலாக இருக்காது.

பிராக்டிக்காலிட்டி

இடவசதியிலும் வால்வோ சூப்பர். லெக்ரூம், தொடைக்கான சப்போர்ட், லம்பர் சப்போர்ட் என எல்லாமே அருமை. உயரம் குறைவான கார் என்பதால், ஹெட்ரூம் இடிக்குமோ என்று நினைத்தேன். இல்லை. தாராளமாகவே இருந்தது. பின் பக்கம் ஏர் கன்ட்ரோல்களும் டிஜிட்டலாக இருந்தன. பூட் ஸ்பேஸும் செம! ஆனால், பிஎம்டபிள்யூ 3 சீரிஸைவிடக் குறைவுதான். வசதிகள் ஓகேதான். ஆனால், சின்னச் சின்ன கியா, ஹூண்டாய் போன்ற கார்களில் இருக்கும் வென்ட்டிலேட்டட் சீட்ஸ் - இதெல்லாம் எங்கே வால்வோ? அதற்குப் பதில் 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜிங், பெரிய சன்ரூஃப் என்று டேலி செய்துவிட்டது வால்வோ.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிரைவிங்

வால்வோ S60–ல் இனி டீசல் இருக்காது. இந்த S60–ல் இருப்பது 2.0லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல். இதன் டார்க் 30kgm@1,400-4,000rpm. குறைந்த வேகங்களில் இந்த இன்ஜின் செம ரெஸ்பான்ஸிவ்வாக இருந்தது. டர்போ லேக்கெல்லாம் படுத்தவில்லை. 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் இருந்தது. கியர்பாக்ஸ் ஸ்மூத்தான். வெறித்தனம் காட்டும் என்று நினைத்தேன். ஆனால், ஓகே ரகம்தான் இந்த வால்வோ. பழைய வால்வோ S60–ல் எந்த இடத்தில் ஆக்ஸிலரேட்டர் மிதித்தாலும், அங்கே இருந்து பவர் டெலிவரி குப்பெனக் கிடைப்பதுபோல் இருக்கும். இந்த S60–ல், 5,000–rpm–க்கு மேல் கொஞ்சம் சத்தம் போடுவதுபோல் இருக்கிறது. இதன் 0–100 கிமீ–யை செக் செய்தேன். 9.35 விநாடிகள் ஆனது. வால்வோ போன்ற கெத்து கார்களுக்கு இது கம்மிதான். கொஞ்சம் அழுத்தி ஓட்டினால், என்ஜாய்மென்ட் குறைவாகத்தான் இருக்கிறது இந்த S60. பெர்ஃபாமன்ஸ் டல் என்பதற்காக, இந்த வால்வோவைக் குறை சொல்லிவிட முடியாது. ஜம்மென்று ஒரு சோஃபா போன்ற சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒரு ரிலாக்ஸ்டு டிரைவிங் அடிக்க இந்த S60 செமையாக இருக்கிறது.

அவென்ஜர்ஸ் Thor-ன் சுத்தியலை நினைவுபடுத்தும் ஹெட்லைட்ஸ்..
அவென்ஜர்ஸ் Thor-ன் சுத்தியலை நினைவுபடுத்தும் ஹெட்லைட்ஸ்..
சீட்கள் செம சொகுசு. ஏசி வென்ட் கூட டிஜிட்டல்தான்.
சீட்கள் செம சொகுசு. ஏசி வென்ட் கூட டிஜிட்டல்தான்.

வால்வோ வாங்கலாமா?

இந்த வால்வோவை லைக் செய்ய நிறைய விஷயங்கள் இருக்கின்றன. கிண்ணென்ற கட்டுமானம், நமது ப்ரெஸ்டிஜை எந்த விதத்திலும் குறைக்காத இதன் டிசைன் மற்றும் ஸ்டைல், குறையே சொல்ல முடியாத தரம், வேற லெவலில் இருக்கும் இதன் சொகுசு, அதைவிட இதன் பாதுகாப்பு வசதிகள். க்ரூஸ் கன்ட்ரோல், ரேடார்–சோனார் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பிரேக்கிங் மற்றும் Steering Avoidance, லேன் கீப்பிங் அசிஸ்ட், பைலட் அசிஸ்ட்... செமி அட்டானமஸ் மோடுகூட உண்டு. வால்வோதான் கிங் ஆஃப் சேஃப்டி என்றதற்குக் காரணம் இருக்கிறது. குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் 5ஸ்டார் வாங்கியிருக்கிறது இந்த வால்வோ S60.

டிரைவிங்கில் மட்டும் கொஞ்சம் என்ஜாய்மென்ட்டைக் கூட்டினால், 43.50 லட்சம் எக்ஸ் ஷோரூமுக்கு இந்த வால்வோ S60–யை வாங்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism