மஹிந்திராவின் எலெக்ட்ரிக் பேனரில் உருவாகும் இரண்டாவது கார் இது. விலை குறைந்த பட்ஜெட் காருக்கு KUV 100–எலெக்ட்ரிக் என்றால், தனது 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய XUV300–லும் எலெக்ட்ரிக் வெர்ஷனைக் காட்சிப்படுத்தியது மகிழ்ச்சி. லாங் ஷாட்டில் சாதாரண XUV300–க்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் மெஸ்மா (MESMA) 350 எனும் மாட்யூலர் பிளாட்ஃபார்மில், இப்போதிருக்கும் XUV300 காரின் பாடி ஷெல்லில் தயாராகி இருக்கும் இந்த eXUV300, 5 ஸ்டார் ரேட்டிங் வாங்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். இனி வரும் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்த பிளாட்ஃபார்ம்தானாம்.

அதே சப் 4 மீட்டர் சைஸில் இருக்கும் இந்த காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி, இப்போதைக்கு கான்செப்ட்தான். எலெக்ட்ரிக் என்றால், நீல நிற பேட்டர்ன் டிசைன் என்று மஹிந்திரா பிக்ஸ் ஆகிவிட்டதுபோல. எனவே பம்பருக்குக் கீழே, ஹெட்லைட் ஓரம், டெயில் லைட், அலாய் வீல் என்று eKUV100 போலவே, இதிலும் புளூ பேட்டர்ன்களை வைத்துக் காரில் விளையாடி இருக்கிறார்கள்.

ஹெட்லைட்டே கிரிஸ்டல் வடிவத்தில் வித்தியாசமாக இருக்கிறது. LED-யாக இருக்கலாம். டெயில் லைட்டும்தான். சாதாரண மஹிந்திரா கார்களில் இருந்து வித்தியாசப்படுகின்றன இதன் அலாய் வீல்கள்.

எக்ஸ்போவில் இருந்த இந்த கான்செப்ட் வெர்ஷனில் எல்லோரையும் ‘அட’ என்று கவர்ந்த ஓர் அம்சம் – சைடு வியூ மிரர்களுக்குப் பதில் ஒல்லியாக ஒரு கேமரா வைத்திருந்தார்கள். புரொடக்ஷன் வெர்ஷனில் இது இருக்குமா என்று தெரியவில்லை. IC இன்ஜின் கொண்ட XUV300 காருக்கும் இதற்கும், டிசைன் அளவுகளில் வேறெந்த வேறுபாடுகளும் இல்லை.

எக்ஸ்போவில், இந்த காரின் கதவைத் திறந்து இன்டீரியரைப் பார்க்க யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, XUV300 காரின் இன்டீரியரைப் போலவேதான் இருந்தது. இதில் பெரிய ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீனும், ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கனெக்ட்டிவிட்டி வசதிகளும் கொடுக்கப்படலாம்.

எஸ்யூவி என்பதால், பெரிய பேட்டரி பேக் கொடுத்திருக்கிறார்கள். 40kW லித்தியம் அயன் பேட்டரி 130 bhp பவர் கொடுக்கிறது. பெட்ரோல்/டீசல் கார்களைப்போல, இந்த எலெக்ட்ரிக் காரிலும் ஸ்டாண்டர்டு/பர்ஃபாமன்ஸ் என இரண்டு ஆப்ஷன்களைக் கொடுத்து அசத்திவிட்டது மஹிந்திரா. நீங்கள் நினைப்பது சரிதான்.

ஸ்டாண்டர்டு வேரியன்ட் ஒரு ஃபுல் சார்ஜுக்கு – 250 முதல் 300 கி.மீ வரை ஓடும். இதுவே பர்ஃபாமென்ஸ் வேரியன்ட் 400 முதல் 450 கி.மீ வரை ஓடுமாம். அப்படியென்றால், ஹைவே ரைடிங்குக்குக் கவலை இல்லை. இதிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொடுக்க இருக்கிறது மஹிந்திரா. நார்மல் சார்ஜிங்குக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகலாம்.

எக்ஸ் ஷோரூம் விலையான 13.99 லட்சத்தில் டாடா நெக்ஸானுக்குப் போட்டியாக வரும் இந்த இந்த eXUV300, இன்னொரு காஸ்ட்லி காருடனும் போட்டி போடுகிறது என்பதுதான் ஆச்சரியம். இதன் பர்ஃபாமென்ஸ் வேரியன்ட்டின் ரேஞ்சைக் கவனியுங்கள் – இது கிட்டத்தட்ட 25-30 லட்ச ரூபாய் ஹூண்டாய் கோனாவின் ரேஞ்சுடன் போட்டி போடுகிறது.

அநேகமாக, ஒரு கார் இரண்டு செக்மென்ட் கார்களுடன் போட்டி போடுவது eXUV300–யாகத்தான் இருக்கும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கக் காத்திருக்கிறது மஹிந்திரா.