Published:Updated:

”உலகத்தரத்தில் மஹிந்திரா கார்கள் வரும்!”

ராஜீவ்மேத்தா
பிரீமியம் ஸ்டோரி
ராஜீவ்மேத்தா

மஹிந்திரா மஹிந்திரா ராஜீவ்மேத்தா

”உலகத்தரத்தில் மஹிந்திரா கார்கள் வரும்!”

மஹிந்திரா மஹிந்திரா ராஜீவ்மேத்தா

Published:Updated:
ராஜீவ்மேத்தா
பிரீமியம் ஸ்டோரி
ராஜீவ்மேத்தா

கடந்த சில மாதங்களாகவே, ஆட்டோமொபைல் உலகின் டாக் ஆஃப் தி டவுனாக இருப்பது மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி 700தான். சாதாரணமாக எக்ஸ்யூவி 500-ல் இருந்து அப்டேட்டட் வெர்ஷனாக மட்டும் இல்லாமல், முழுவதுமாகப் புதிய தொழில்நுட்பங்கள், நிறைந்த பாதுகாப்பு அம்சங்கள், புதிய லோகோ என இந்த எக்ஸ்யூவி 700 மூலம் மஹிந்திராஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. எக்ஸ்யூவி 700 என்ன மாதிரியான கார்? பாதுகாப்பை முதன்மையாக வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கிறதா? விலையை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கிறதா? அல்லது பெர்ஃபமன்ஸ்தான் இந்தப் புதிய எஸ்யூவியின் பலமா? என்ன சொல்கிறார், மஹிந்திராவின் ப்ராடக்ட் ப்ளானிங் துறையின் தலைவர் ராஜீவ் மேத்தா.

``மஹிந்திராவின் புதிய லோகோவில் என்ன ஸ்பெஷல்?’’

``இரண்டு மலைகள் சேர்ந்ததுபோல் இருக்கும் லோகோ, மஹிந்திரா & மஹிந்திரா பெயரில் இருக்கும் இரண்டு ‘M’-களைக் குறிக்கும். இனி வெளியாகும் மஹிந்திராவின் எல்லா மாடல் கார்களிலும் புதிய லோகோவே பயன்படுத்தப்படும். ஆனால், கமர்ஷியல் வாகனங்களில் பழைய லோகோவே பயன்படுத்தப்படும்.”

``புதிய எக்ஸ்யூவி 700-ல் பலம் என்று எதைக் கூறலாம்?”

``பிஎம்டபிள்யூ காரின் பலம் அதன் டிரைவிங் டைனமிக்ஸ். ஆடியின் பலம் அதன் சொகுசுத்தன்மை. அதுபோல உலகத்தரம் வாய்ந்த ஒரு காரை நாமும் நம் நாட்டு வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இந்த எக்ஸ்யூவி 700 உருவாவதற்கான அடிப்படை. கிட்டத்தட்ட 1000 பொறியாளர்கள், கடந்த மூன்றரை வருடமாக அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்ததன் பலனாகவே இந்த எக்ஸ்யூவி 700 இந்த அளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

உலகத்தரம் வாய்ந்த டிரைவிங் டைனமிக்ஸ், சொகுசுத்தன்மை ஆகியவற்றை எல்லாம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு, அதுவும் அவர்கள் வாங்கக்கூடிய விலையில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த XUV 700 மூலமாக நிறைவேறியிருக்கிறது.

பெர்ஃபாமன்ஸ், பாதுகாப்பு அம்சங்கள், சொகுசுத்தன்மை மற்றும் புதிய டெக்னாலஜி என அனைத்தையும் சேர்த்துக் கொடுக்கும் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்றுதான் இந்த எக்ஸ்யூவி 700-ஐ உருவாக்கியிருக்கிறோம். ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்திவிட்டு, மற்றொன்றில் வசதிகளைக் குறைப்பதில் துளியும் அர்த்தமில்லை.

எக்ஸ்யூவி 700, மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 200 கிமீ வேகத்தில் செல்லும்போது, வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். கார் நிலைத்தன்மையோடு இருக்க வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் பல பாதுகாப்பு அம்சங்களை இந்த எஸ்யூவியில் சேர்த்திருக்கிறோம்.

பெர்ஃபாமன்ஸ் மட்டுமல்ல; தொழில்நுட்பத்திலும் புதியவை பலவற்றை இந்த எக்ஸ்யூவி பெற்றிருக்கிறது. டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் என்ற புதிய வசதியை இதில் சேர்த்திருக்கிறோம். அதிவேகத்தில் சென்று காரைச் சட்டெனத் திருப்பினாலும், கார் நிலைகுலையாமல் பாதையில் சரியாகப் பயணிக்க இந்த டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் உதவும்.

இதில் பயன்படுத்தியிருக்கும் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டமும் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும். காரின் உள்ளே பாடல்கள் மற்றும் ஆடியோ கேட்பதற்கு சோனியின் மியூசிக் சிஸ்டம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கார் முழுவதும் 12 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. எந்தெந்த ஸ்பீக்கரில் இருந்து ஆடியோ ஒலிக்க வேண்டும் என்பதைக்கூட நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளாலம்.

இந்த எக்ஸ்யூவியில் அதிகம் பேசப்படும் விஷயமாக இருக்கப்போவது, இதன் பாதுகாப்பு அம்சங்கள்தான். சாதரணமாகப் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும் நிறுவனங்கள், 6 ஏர்பேக்குகளை வழங்கும். ஆனால், இந்த எக்ஸ்யூவியில் டிரைவரின் முழங்காலுக்கும் சேர்த்து 7 காற்றுப்பைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர, ஓட்டும்போது டிரைவருக்குத் துணை நிற்கும் Advanced Driver Assistance System (ADAS)... காரில் இல்லாதபோதும் கார் பற்றிய முழுத் தகவல்களையும் உரிமையாளருக்குத் தெரிவிக்கும் AdrenoX என்று ஆச்சரியங்களைக் கொடுக்கும் அம்சங்களும் இதில் ஏராளம்!”

ராஜீவ்மேத்தா
ராஜீவ்மேத்தா