Published:Updated:

‘‘அட… கார் இப்படித்தான் உருவாக்கப்படுகிறதா!’’ மஹிந்திராR&D-க்கு மாணவர்களுடன் விசிட்!

 இண்டஸ்ட்ரி விசிட்
பிரீமியம் ஸ்டோரி
இண்டஸ்ட்ரி விசிட்

இண்டஸ்ட்ரி விசிட்: மஹிந்திரா & மஹிந்திரா

‘‘அட… கார் இப்படித்தான் உருவாக்கப்படுகிறதா!’’ மஹிந்திராR&D-க்கு மாணவர்களுடன் விசிட்!

இண்டஸ்ட்ரி விசிட்: மஹிந்திரா & மஹிந்திரா

Published:Updated:
 இண்டஸ்ட்ரி விசிட்
பிரீமியம் ஸ்டோரி
இண்டஸ்ட்ரி விசிட்

மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளுக்கும் அவர்கள் வேலை செய்யப்போகும் தொழிற்சாலைக்கும் இடையில் நிலவி வரும் மிகப்பெரிய இடைவெளியை நிரப்புவதற்காக மஹிந்திரா ரிஸர்ச் மையத்துடன் இணைந்து மோட்டார் விகடன், `மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் ஒரு நாள்' என்ற பெயரில் ஒரு பயிலரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.விகடன் இணையதளப் பக்கங்களில் இது பற்றிய அறிவிப்பு வந்த அதே வேகத்தில் தமிழகம் முழுவதுமிருந்தும்... ஏன் இந்தியா முழுவதுமிருந்துமே ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். என்றாலும், அமைதியான ஆராய்ச்சி மையம் என்பதால் முதற்கட்டமாக, சுமார் நூறு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. செங்கல்பட்டு டோல்கேட் அருகில் அமைந்திருக்கும் இந்த ஆராய்ச்சி மையத்திற்குச் செல்ல, காலை 7 மணிக்கு, மாணவர்கள் பலரும் சென்னையில் இருக்கும் மோட்டார் விகடன் அலுவலகத்தில் குவிந்தனர். மீதமிருந்த மாணவர்கள் நேரடியாக மஹிந்திரா ஆராய்ச்சி மையத்திற்கு வந்துவிட, சரியாக காலை பத்து மணிக்கு ஆரம்பமானது பயிலரங்கம்.

‘‘அட… கார் இப்படித்தான் உருவாக்கப்படுகிறதா!’’
மஹிந்திராR&D-க்கு மாணவர்களுடன் விசிட்!
‘‘அட… கார் இப்படித்தான் உருவாக்கப்படுகிறதா!’’
மஹிந்திராR&D-க்கு மாணவர்களுடன் விசிட்!


‘‘ R & D செக்டர், அதாவது ஒரு ஆட்டோமொபைல் கம்பெனியின் ஆராய்ச்சி மையம் என்பது ராணுவ ரகசியம் இருக்கும் மையம்போல இருக்கும். இதில் பொதுவாக வெளியாட்களுக்கு அனுமதி இல்லை. என்றாலும், மாணவர்களின் அறிவுத் தேடலுக்கும் ஆர்வத்துக்கும் வித்திட மஹிந்திரா, தன் ஆராய்ச்சி மையத்திற்கு மோட்டர் விகடன் வாசகர்களான மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்து வரவேற்றது.

மஹிந்திராவின் ஜோஸ்வா, ஆராய்ச்சி மையத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும் ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் வேலைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

மாணவர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் இருந்து வந்திருந்தமையால், ஒருவருக்கொருவர் ரொம்பப் பழக்கமில்லாதவர்களாய் இருந்தனர். இதனால் ஜோஸ்வா அனைத்து மாணவர்களையும் 4 அணியாகப் பிரித்து, ஒருவருக்கொருவர் நன்கு உரையாட வைத்து, அவர்களை மிகவும் சகஜமாக்கினார். இதன் மூலம் கற்றல் எளிமையாகும் என்பதுதான் அவர் திட்டம்.

நாங்கள் சென்ற முதல் ஆய்வகம் இன்ஜின் டெவலப்மெண்ட் சென்டர் (Engine development Centre). இந்த இடத்தில்தான் ஒரு இன்ஜினை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை மாணவர்கள் தெரிந்து கொண்டனர். நாம் பார்க்கக் கூடிய மஹிந்திராவின் அனைத்து இன்ஜின்களையும் இங்குதான் சோதனை அடிப்படையில் ஆரம்பக் கட்டத்தில் தயாரிக்கிறார்கள். ஒரு இன்ஜினுக்கான பவர், மைலேஜ் என்று எல்லாமே முடிவு செய்யப்படுவது இங்குதான். பொலேரோ, ஸ்கார்ப்பியோ, தார், XUV 700 போன்ற கார்களின் இன்ஜின்கள் எல்லாமே இங்கு உருவெடுத்தவைதான். இங்கு தயாராகி, டெஸ்ட்டிங் முடிந்த பின்புதான், எல்லாமே தயாரிப்பு யூனிட்டிற்குச் செல்லும்.

இரண்டாவதாக Powertrain Development. இன்ஜின், டிரான்ஸ்மிஷனில் ஆரம்பித்து ஆக்ஸில், டயர் என்று ஏகப்பட்ட விஷயங்களை இந்த இடத்தில்தான் வைத்து ஆய்வு செய்வார்கள். இங்கு உள்ளே சென்று பார்க்கும்போது, ஏதோ மருத்துவமனையில் உள்ள ஆப்பரேஷன் தியேட்டருக்கு வந்ததுபோல இருந்தது. ஏனென்றால் ஒரு இன்ஜினை வைத்து, கிட்டத்தட்ட இருபது, முப்பது வயர்களைச் சொருகி, அந்த இன்ஜின் எப்படி பெர்ஃபாமன்ஸ் செய்கிறது என்று 90 சென்ஸார்களை வைத்து ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். பார்க்கவே மிகவும் பிரமிப்பாக இருந்தது.

‘‘அட… கார் இப்படித்தான் உருவாக்கப்படுகிறதா!’’
மஹிந்திராR&D-க்கு மாணவர்களுடன் விசிட்!
‘‘அட… கார் இப்படித்தான் உருவாக்கப்படுகிறதா!’’
மஹிந்திராR&D-க்கு மாணவர்களுடன் விசிட்!


அடுத்து, இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆய்வகம். காரில் ஏற்படும் சத்தம், அதிர்வுகள் போன்றவற்றைக் குறைப்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் இடம் இது. அதிர்வுகளினால் ஏற்படக்கூடிய சத்தம், கார் திறக்கும்போது வரும் சத்தம், சீட்பெல்ட் போடும்போது வரும் சத்தம்... என அனைத்து விதமான சத்தங்களையும் குறைக்க ஆராய்ச்சிகள் நடப்பதை மாணவர்கள் பார்த்தார்கள்.

நானகாவதாக, டெக்னிகல் அகாடமி ஆய்வகம். காரின் பாடி சிஸ்டம் குறித்துத் தெளிவாக விளக்கமளித்தார்கள். காரில் எங்கே என்ன மாதிரியான உலோகம் பயன்படுத்தப்படவேண்டும் என்பது துவங்கி திடீரென விபத்து நேர்ந்தால், அதிலிருந்து எப்படியெல்லாம் பயணிகளைக் காப்பாற்ற முடியும் என்பதுவரை பல நுணுக்கமான விஷயங்களை ஆராயும் இடமிது.

இறுதியாக எங்களை டெஸ்ட்டிங் ட்ராக் அழைத்து சென்றார்கள். இந்த ட்ராக்கில்தான் ஒரு கார் உருவானவுடன் முதல் கட்டப் பரிசோதனை செய்வார்கள். அது எப்படி நடக்கும் என்று செய்தும் காட்டினார்கள்.

ஒவ்வொரு ஆய்வகத்திலுமே அந்தந்த நிபுணர்களுடன் பேசும் வாய்ப்பு மாணவர்களுக்கு அன்று கிடைத்தது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர். தாங்கள் புத்தகத்தில் படிக்கும் ஒரு விஷயம் ப்ராக்டிக்கலாக எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை அன்று அவர்கள் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொண்டார்கள்.

இதற்கு நடுவில் மாணவர்களுடன் M&M-ன் துணை இயக்குநர் சங்கர் வேணுகோபால், மாணவர்களிடையே வீடியோ கான்ஃபரன்ஸில் கலகலப்பாக உரையாடினார்.

நிகழ்ச்சியின் முடிவில், ‘‘இந்த நாள் இப்படியே தொடரக் கூடாதா!’’ என்றெல்லாம் சில மாணவர்கள் ஃபீல் செய்ததைப் பார்க்க முடிந்தது. கவலை வேண்டாம் மாணவர்களே… இது ஆரம்பம்தான். இதற்கு மேல் இன்னும் சுவாரஸ்யமாக பல விசிட்கள் காத்திருக்கின்றன.

‘‘அட… கார் இப்படித்தான் உருவாக்கப்படுகிறதா!’’
மஹிந்திராR&D-க்கு மாணவர்களுடன் விசிட்!
‘‘அட… கார் இப்படித்தான் உருவாக்கப்படுகிறதா!’’
மஹிந்திராR&D-க்கு மாணவர்களுடன் விசிட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism