Published:Updated:

முரட்டு ஜென்டில்மேன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N
பிரீமியம் ஸ்டோரி
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N

ஃபர்ஸ்ட் லுக்: மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N

முரட்டு ஜென்டில்மேன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!

ஃபர்ஸ்ட் லுக்: மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N

Published:Updated:
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N
பிரீமியம் ஸ்டோரி
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N

சென்னை ஆன்ரோடு விலை: 15.91 - 26.75 லட்சம்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்யூவி மார்க்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கும் வாகனம் ஸ்கார்ப்பியோ. இப்போது இதன் மூன்றாம் தலைமுறை ஸ்கார்ப்பியோ, ஸ்கார்ப்பியோ N என்ற பெயரில் அறிமுகாகியிருக்கிறது. தொழில்நுட்பம், தரம் என்று துவங்கி பல விஷயங்களிலும் இதை மேம்படுத்தியிருப்பதால் இதை மஹிந்திரா இப்போது D செக்மென்ட்டில்் சேர்த்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இதற்குப் போட்டியே டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் என்கிறது மஹிந்திரா. இன்னொரு முக்கியமான செய்தி. பழைய ஸ்காரிப்பியோவின் விற்பனையை மஹிந்திரா நிறுத்தப் போவதில்லை. அது ஸ்கார்ப்பியோ க்ளாஸிக் என்ற பெயரில் தொடர்ந்து விற்பனையாகும். ஸ்கார்ப்பியோ கிளாஸிக்குக்கு ஒரு படி மேலேயும், XUV700-வுக்கு ஒரு படி கீழேயும் புதிய ஸ்கார்ப்பியோ N-யை பொசிஷன் செய்திருக்கிறது மஹிந்திரா.

வெளித்தோற்றம்:

முரட்டுச் சிங்கம்போலக் காட்சியளித்து வந்த ஸ்கார்ப்பியோ, ஸ்கார்ப்பியோ N என்ற பெயரில் இப்போது கோட்சூட்டில் இருக்கும் கட்டுமஸ்த்தான பவுன்ஸர் மாதிரி... இல்லை இல்லை ஜென்டில்மேன் மாதிரி இருக்கிறது. இதன் நீளமும், அகலமும் கூடியிருக்கிறது. உயரம் சற்றே குறைந்திருக்கிறது. டபுள் பேரல் ஹெட்லைட்ஸ் ஸிலிம்மாகவும் முழு LEDயாகவும் மாற்றம் பெற்றிருக்கிறது. இரண்டு ஹெட்லைட்ஸையும் இணைக்கும் க்ரோம் பட்டை க்ளாஸ். கிரில் வேறு வடிவம் எடுத்திருக்கிறது. அது முப்பரிமாணத் தோற்றத்தில் இருப்பது கூடுதல் அழகு. பனி விளக்குகளைச் சுற்றி இருக்கும் LED ரன்னிங் லைட்ஸ், தேள் கொடுக்கின் வடிவில் இருக்கிறது. காரின் ஹைஸ்டான்ஸ்..அதாவது ரோடு பிரசன்ஸ் மாறாமல் அப்படியே இருக்கிறது. பக்கவாட்டில் இருந்து பார்த்தால் முதலில் தெரிவது... மென்மையாக மாறியிருக்கும் கேரக்டர் லைன். 18 இன்ச் அலாய்வீல், மற்றும் 255/60 டயர், அதற்கு மேலே இருக்கும் வீல் ஆர்ச் என எல்லாமே புது டிசைன். காரின் பின்புறத் தோற்றம் மாறியிருக்கிறது. இந்த மாற்றம் எத்தனை பேருக்குப் பிடிக்கும் என்பது அவரவரின் ரசனையைப் பொருத்தது.

உள்ளலங்காரம்:

சாக்லெட் மற்றும் கறுப்பு என இரட்டை வண்ணத்தில் இருக்கும் கேபின் டிசைன் முற்றிலுமாக மாறியிருக்கிறது. தரமும் கூடியிருக்கிறது. டேஷ்போர்டில் இடம் பெற்றிருக்கும் ஃபாக்ஸ் லெதர் தரமானதாக இருக்கிறது. சீட்டுகள் கம்பீரமாகவும் தாரளமாகவும் இருக்கின்றன. இந்த செக்மென்ட்டில் லேடர் ஆன் ஃப்ரேம் முறையில் தயாரிக்கப்படும் ஒரே வாகனம் இதுதான். இதனால் ஓட்டுநர் சீட்டிங் பொசிஷன் உயரமாக இருக்கிறது. சாலை நன்றாகத் தெரியும். டிரைவர் சீட், பவர்டு சீட்டும்கூட! கியர் லீவர் டிசைன் நவீனமாக மட்டுமல்ல, பயன்படுத்துவதற்கு வசதியாகவும் டிசைன் செய்யப் பட்டிருக்கிறது.

இரண்டாவது வரிசை சீட்டுகளில் கேப்டன் சீட் - பென்ச் சீட் என இரண்டு ஆப்ஷன்கள் உண்டு. கேப்டன் சீட்டாக இருந்தால் அதை நன்றாகச் சாய்த்துக் கொள்ள முடியும். பென்ச் சீட்டாக இருந்தால் 60:40 என்ற முறையில் மடித்துக் கொள்ள முடியும். மூன்றாவது வரிசைக்குச் செல்ல, இரண்டாவது வரிசையில் இருக்கும் சீட்டின் விசையை இயக்கினால் போதும்... அது தானாக மடிந்து வழிவிடுகிறது. மூன்றாம் சீட்டுக்குச் செல்வது அத்தனை சிரமமாக இல்லை. ஆனால் இந்த மூன்றாம் வரிசையில் நீண்ட தூரம் பயணிப்பது சிரமமாக இருக்கும். அதனால் ஒன்று... அதைச் சிறுவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அல்லது அதை மடக்கி பெட்டி படுக்கைகள் வைக்கும் ஏரியாவைப் பெரிது படுத்திக் கொள்ளலாம்.

சிறப்பம்சங்களிலும் ஸ்கார்ப்பியோN அசத்துகிறது. XUV 700-ல் இருக்கும் அதே AdrenoX, கனெக்டட் வசதி இதிலும் இருக்கிறது. அதனால் காரை போன் மூலமாகவும், போனை கார் வழியாகவும் தொடர்பு கொள்ள உதவும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே உட்பட 70 ஆப்ஸைப் பயன்படுத்த முடியும். 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை பயன்படுத்த வசதியாக இருக்கின்றன. பிரமாண்டமான ஷாப்பிங் மால் பார்க்கிங் அல்லது பெரிய பொதுக்கூட்ட மைதானம் போன்ற இடங்களில் காரின் லொக்கேஷனை மூன்றே வார்த்தைகளில் தெரிந்து கொள்ள உதவும் What3Words வசதியை இதில் அலெக்ஸா வாய்ஸ் கமாண்ட் மூலமே பயன்படுத்த முடியும். ஒயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப், டூயல் க்ளைமேட் கன்ட்ரோல், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட சோனி மியூசிக் சிஸ்டம், ஆட்டோ ஹெட் லாம்ப்ஸ், ஆட்டோ வைப்பர்ஸ், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் என வசதிகளுக்குக் குறைவில்லை.

6 காற்றுப்பைகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், டயர் ப்ரஷர் மானிட்டர், ISOFIX ஹூக்ஸ், பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராக்கள் மற்றும் டிரைவரின் ஓட்டுதலில் தடுமாற்றம் தெரிந்தால் எச்சரிக்கை விடுக்கும் டிரைவர் ட்ரவ்ஸினஸ் அலெர்ட் சிஸ்டம் என பாதுகாப்புக்கு ஏராளமான விஷயங்களைக் கொடுத்திருப்பது, குளோபல் N கேப்பில் நல்ல ரேட்டிங் வாங்க மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.

ஆட்டோமேட்டிக்/மேனுவல் இரண்டுமே உண்டு.
ஆட்டோமேட்டிக்/மேனுவல் இரண்டுமே உண்டு.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N
இன்டீரியர், சாக்லேட் பிரவுன் மற்றும் கறுப்பு என டூயல் டோனில் கலக்குகிறது.
இன்டீரியர், சாக்லேட் பிரவுன் மற்றும் கறுப்பு என டூயல் டோனில் கலக்குகிறது.
ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல்கள் தரம் அருமை.
ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல்கள் தரம் அருமை.
 சன்ரூஃப் காரை வெளிச்சமாக்குகிறது.
சன்ரூஃப் காரை வெளிச்சமாக்குகிறது.

இன்ஜின்:

மஹிந்திரா தாரில் இருக்கும் அதே mStallion டர்போ பெட்ரோல் மற்றும் mHawk டர்போ டீசல் ஆகியவைதான் இதிலும் இருக்கின்றன. ஆனால் இவை ஸ்கார்ப்பியோN-ல் எப்படி இயங்குகிறது என்பதில்தான் இதை வடிவமைத்தவர்களின் திறமை இருக்கிறது. 203bhp சக்தியையும் 380Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் பெட்ரோல் இன்ஜினாக இருந்தாலும் சரி, 175bhp சக்தியையும், 400Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் டீசல் இன்ஜினாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்று இரண்டு கியர் ஆப்ஷன்ஸ் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் உண்டு.

டீசல் வேரியன்ட்டைப் பொறுத்தவரை Zip, Zap Zoom என மூன்றுவிதமான மோடுகளில் வைத்து ஸ்கார்ப்பியோN-ஐ ஓட்ட முடியும். இதில் ZIP-ல் வைத்து ஓட்டினாலே போதுமான அளவுக்குச் சக்தி கிடைக்கிறது. Zap, Zoom என்று மாற்றினால் ஸ்கார்ப்பியோ தெறிக்கவிடுகிறது. ஆனால் Zap - Zoom ஆகிய இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை உணர முடியவில்லை. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைப் பொறுத்தவரை ஸ்மூத்தாக இயங்கிறது. ஆனால், ஸ்போர்ட்டி என்று சொல்ல முடியவில்லை. பெட்ரோல் வேரியன்ட்டை ஓட்ட நமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை:

4 வீல் டிரைவ் மாடலும் இதில் உண்டு. மணல், பாறை, சல்லிக்கற்கள், ஈரமான பாதை என நான்கு டெரெய்ன் மோடுகளும் உண்டு. ஸ்கார்ப்பியோN-ஐ லோனாவாலாவில் இருக்கும் சேறும் சக்தியுமான ஒரு பிரதேசத்தில் பெரிய பெரிய மேடு-பள்ளம், குண்டு-குழி என்று ஏற்றி இறக்கினோம். இதோடு மழையும் சேர்ந்து கொண்டதால், டிரைவ் மேலும் சாகச அனுபவமாக மாறியது. ஸ்கார்ப்பியோ எங்கும் தரை தட்டவில்லை. டயர் கிரிப்பை விடவில்லை. நிலை தடுமாறவில்லை. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் இதன் penta-link ரியர் சஸ்பென்ஷன் மற்றும் watts link மெக்கானிசமும்தான். பாடி ஆன் ஃப்ரேம் செட்-அப் கொண்ட உயரமான கார்களில் பொதுவாக பாடி ரோல் தெரியும். ஆனால், இதில் பாடி ரோல் பெரும் அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்டீரியங் வீலில் நல்ல ஃபீட்பேக் கிடைக்கிறது. அதுவும் உடனுக்கு உடன் கிடைக்கிறது. ஆகையால், வேகமாக ஓட்டுவதற்கு நம்பிக்கை அளிக்கிறது. பின் சீட்டில் உட்கார்ந்திருந்த நம் கேமரா மேன் வண்டி, பள்ளங்களில் ஏறி இறங்கும் போது கொஞ்சம் அதிர்வுகள் தெரிந்ததாகக் கூறினார்.

முரட்டு ஜென்டில்மேன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ!