Published:Updated:

இந்தியாவின் முதல் கூபே எஸ்யூவி... வருகிறது மஹிந்திராவின் XUV900

2016 ஆட்டோ எக்ஸ்போவைக் கவனித்தவர்கள், மஹிந்திராவின் XUV ஏரோ கான்செப்ட்டை மறந்திருக்க மாட்டார்கள். இதன் புரொடக்ஷன் வெர்ஷன்தான் இப்போது XUV900 காராக அவதாரம் எடுக்க இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் எஸ்யூவிக்குத்தான் மிகப் பெரிய டிமாண்ட் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது மஹிந்திரா. அதனால்தான் மஹிந்திராவில் செடான்கள், ஹேட்ச்பேக்குகளே கிடையாது. எல்லாமே எஸ்யூவி டைப் கார்கள். காம்பேக்ட் காரான KUV100 கூட எஸ்யூவி டிசைன் என்பதிலேயே மஹிந்திராவின் எஸ்யூவி வெறி தெரிகிறது. (மராத்ஸோ மட்டும் எம்பிவி வகை.)

மஹிந்திராவில் இருந்து அடுத்து வரப் போவது XUV500 ஃபேஸ்லிஃப்ட்டா அல்லது XUV700 காரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, அடுத்த நகர்வை புத்திசாலித்தனமாக திட்டமிட்டிருக்கிறது மஹிந்திரா. ஆம், அடுத்து எஸ்யூவியைக் களமிறக்கப்போகிறது.

புதுமை என்னவென்றால், இதில் எஸ்யூவி டிசைனோடு, கொஞ்சம் கூபே டிசைனையும் கலந்து கட்டி அடித்திருக்கிறது மஹிந்திரா. XUV900 எனும் பெயரில் வரவிருக்கும் இதுதான் இந்தியாவின் முதல் கூபே எஸ்யூவி. இப்போதைக்கு இதன் குறியீட்டுப் பெயர் W620. (டாடாவும் கூபே எஸ்யூவியில் ஒரு கண் வைத்தது. H8 எனும் குறியீட்டுப் பெயரில் தனது புகழ்பெற்ற ஒமேகா ப்ளாட்ஃபார்மில் ஒரு காரைக் களமிறக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அது கைவிடப்பட்டு விட்டது.)

Mahindra XUV900 SUV Coupe Concept Car
Mahindra XUV900 SUV Coupe Concept Car

2016 ஆட்டோ எக்ஸ்போவைக் கவனித்தவர்கள், மஹிந்திராவின் XUV ஏரோ கான்செப்ட்டை மறந்திருக்க மாட்டார்கள். இதன் புரொடக்ஷன் வெர்ஷன்தான் இப்போது XUV900 காராக அவதாரம் எடுக்க இருக்கிறது. அதுவும் வெற்றிடமான கூபே எஸ்யூவி செக்மென்ட்டை நிரப்ப வந்திருக்கிறது.

முதன் முதலில் BMW தான் தனது X6 காரில் இப்படிப்பட்ட கூபே பாடி ஸ்டைலை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது . இப்போது அந்த ஐடியா மஹிந்திராவுக்கு வந்திருக்கிறது. எக்ஸ்போ சமயத்தில் மாதத்துக்கு 2,000 கார் புக்கிங்கும், 20 லட்ச ரூபாயும், குறைந்த தயாரிப்பும் என திட்டம் வைத்திருந்த மஹிந்திராவுக்கு, தாரின் வெற்றி மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருப்பதால், தைரியமாக இப்படி ஒரு செக்மென்ட்டில் களமிறங்கலாம் என்கிற முடிவில் இறங்க ஆரம்பித்திருக்கிறது. மஹிந்திராவுக்குச் சொந்தமான Mahindra Automotive Design Europe (M.A.D.E) டிசைன் ஸ்டூடியோவில் இருந்து வெளிவரும் முக்கியமான கார்களில் ஒன்றாக இருக்கப் போகிறது XUV900.

Mahindra XUV900 SUV Coupe Concept Car
Mahindra XUV900 SUV Coupe Concept Car

பார்ப்பதற்கு XUV700 கார் போலவே ஓரளவு இருந்தாலும், பின் பக்கம் சரிவாக இறங்கும் அந்த கூபே டிசைன்தான் XUV900-ன் ஸ்பெஷல். இருந்தாலும் XUV700 காரில் இருக்கும் பல மெக்கானிக்கல் மற்றும் இன்ஜின் அம்சங்களுடன்தான் வரவிருக்கிறது XUV900 .உதாரணத்துக்கு, டோர் ஃபெண்டர்கள், பானெட், முன் பக்க டோர்கள், உள்ளே டேஷ்போர்டு, முன் பக்க சீட்கள் என சிலவற்றைச் சொல்லலாம். கூடுதலாக கொஞ்சம் ப்ரீமியம் வசதிகளை எதிர்பார்க்கலாம். எனவே, இதை XUV700-க்கு அடுத்தபடியாக பொசிஷன் செய்யவிருக்கிறது மஹிந்திரா. XUV700-ல் இருப்பதுபோலவே 2.0லிட்டர் MStallion பெட்ரோல் மற்றும் 2.2லி mHawk டீசல் இன்ஜின்கள் இதில் கொண்டு வரப்படலாம். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் உண்டு XUV900-ல். W620 எனும் குறியீட்டுப் பெயர் கொண்ட இந்த XUV900 எஸ்யூவி கூபே, சாலைகளுக்கு வருவதற்கு 2023-க்கு மேல் ஆகலாம் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு