Published:Updated:

தூறலின் நசநசப்பும் வெப்பத்தின் கசகசப்பும்! - மஹிந்திரா; மான்சூன் ராலி!

மஹிந்திரா; மான்சூன் ராலி!
பிரீமியம் ஸ்டோரி
மஹிந்திரா; மான்சூன் ராலி!

ராலி மஹிந்திரா

தூறலின் நசநசப்பும் வெப்பத்தின் கசகசப்பும்! - மஹிந்திரா; மான்சூன் ராலி!

ராலி மஹிந்திரா

Published:Updated:
மஹிந்திரா; மான்சூன் ராலி!
பிரீமியம் ஸ்டோரி
மஹிந்திரா; மான்சூன் ராலி!

தென்மேற்குப் பருவமழை துவங்கும் ஜூன் மாதத்தில், அரபிக் கடலோரம் சாரல் மழை தொடங்கும். அந்தச் சமயத்தில் மஹிந்திராவின் மான்சூன் ராலியும் ஆரம்பமாகிவிடும். கர்நாடக மாநிலம் மங்களூரில் தொடங்கும் இந்த மான்சூன் ராலி, வழக்கமாக கோவாவில் நிறைவுபெறும். இந்த ஆண்டு ஊட்டிக்கு ரூட்டை மாற்றியது மஹிந்திரா. கொஞ்சம் வெயில், நிறைய மழை, வழியெங்கும் மலைகள் என ஈரத்தின் நசநசப்பும், வெப்பத்தின் கசகசப்பும் ஒருங்கே கிடைக்கும் அனுபவத்துக்காகவே இதில் பங்கேற்க ஆர்வமாக வருவார்கள்.

தூறலின் நசநசப்பும்
வெப்பத்தின் கசகசப்பும்! - மஹிந்திரா; மான்சூன் ராலி!

கடந்த ஜூலை 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடந்த இந்த ராலியில், எக்ஸ்யூவி 500, கேயூவி 100, டியூவி-300, தார், பொலேரோ என மொத்தம் 42 மஹிந்திரா வாகனங்கள் பங்கெடுத்தன. தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில், இந்த ஆண்டு நிறைய புதுமுகங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓப்பன் க்ளாஸ், க்ளாஸ்-2, கார்ப்பரேட் க்ளாஸ், டாக்டர்ஸ் க்ளாஸ், கப்பிள் க்ளாஸ், லேடீஸ் க்ளாஸ், மீடியா க்ளாஸ், நோவிஸ் க்ளாஸ் என எட்டு பிரிவுகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டிருந்தனர். டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். மீடியா பிரிவில் மோட்டார் விகடனும், டிரைவ் ஸ்பார்க் எனும் ஆன்லைன் மீடியாவும் கலந்து கொண்டது. மோட்டார் விகடனுக்கு, இம்முறை ஈரோட்டைச் சேர்ந்த தனபாலை நேவிகேட்டராக மஹிந்திராவே ஏற்பாடு செய்திருந்தது. நமக்கு தார் ஜீப் ஒதுக்கப்பட்டிருந்தது.

தூறலின் நசநசப்பும்
வெப்பத்தின் கசகசப்பும்! - மஹிந்திரா; மான்சூன் ராலி!

TSD ராலி என அழைக்கப்படும் இந்தப் போட்டியில், மொத்தம் எட்டு பிரிவுகளின் 42 வாகனங்கள்; டிரைவர், நேவிகேட்டர் எனப் பெரும்படை 5-ம் தேதி மாலை மங்களூர் ஃபோரம் ஃபைஸா மாலில் துவக்க விழாவில் அணிவகுத்தது. அன்று இரவு, எக்ஸ்பர்ட்டுகள் கலந்துகொள்ளும் ஓப்பன் கிளாஸுக்கான போட்டி மட்டும் நடந்தது.

மறுநாள் காலை 6 மணிக்கு அனைத்துப் பிரிவுகளுக்கும் ராலி துவங்கியது. 42 வாகனங்களுக்கான டைம் சார்ட், ரோடு புக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு காரும் 2 நிமிட இடைவெளியில் புறப்பட வேண்டும். வழக்கமான ரூட் இல்லை என்பதால், நேவிகேட்டர்கள் கொஞ்சம் கவனமாக ரோடு புக்கை மேய்ந்துகொண்டே சென்றனர்.

தூரத்தைக் கணக்கிடும் காரின் ஓடோ மீட்டர் மிகச் சரியாக இருக்க வாய்ப்பு இல்லை. காரணம், ஜிபிஎஸ் மூலம் மார்க் செய்துதான் ரோடு புக் கொடுத்திருப்பார்கள். அதனால், மொபைல் போனில் ஜிபிஸ் மூலம் இயங்கும் ஓடோ மீட்டர் ஆப் மூலம்தான் ஓரளவு தூரத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியும்.

தூறலின் நசநசப்பும்
வெப்பத்தின் கசகசப்பும்! - மஹிந்திரா; மான்சூன் ராலி!

மங்களூரில் இருந்து மலையேறித்தான் மைசூர் செல்ல வேண்டும் என்பது ராலியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தெரியும். ஆனால், ரூட் எப்படி இருக்கும் என்று எந்த ஐடியாவுமே இல்லை. சக்லேஷ்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ரூட் மேப், சட்டென வலதுபுறம் கிராமச்சாலையில் திரும்பியது. ஆனால், கி.மீ அடையாளம் தவறாகக் காட்டுவதைக் கவனித்து, என்ன பிரச்னை எனப் புரியாமல் குழம்பியபடியே சென்றோம்.

இரண்டு நிமிடங்களுக்கு ஒரு வாகனம் வரும் என்பதால் வேகமாக முன்னேறிச் செல்லவோ, பின்தங்கவோ முடியாது. கொஞ்சம் படபடப்புடன் சரியான பாதைதானா என்ற சந்தேகத்தோடு அந்தச் சாலைக்குள் நுழைந்தோம். ரோடு புக்கில் இருந்த அடையாளங்களுடன் ஒப்பிட்டு ஆசுவாசமானபோது, டைம் கன்ட்ரோலர் கண்ணில்பட்டார். குறிப்பிட்ட நேரத்தைவிட முன்னால் சென்றால், இரண்டு மடங்கு நேரம் அபராதம்; தாமதமாகச் சென்றால், ஒரு மடங்கு நேரம் அபராதம். தயங்கி நின்று அவரிடம் கையெழுத்து வாங்கிப் புறப்பட்டோம்.

தூறலின் நசநசப்பும்
வெப்பத்தின் கசகசப்பும்! - மஹிந்திரா; மான்சூன் ராலி!

இடதும் வலதும் பிரியும் கிராமச் சாலைகள் குழப்பத்தை மேலும் மேலும் உருவாக்கிக்கொண்டே சென்றன. ராலியில் பலர் புதுமுகம் என்பதால் ஆங்காங்கே கார்கள் ஒன்று சேரவும், வேகமெடுத்துப் பிரிவதுமாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பமாகி இருந்தது.

ஓடோ ஆப்பில் என்ன குழப்பம் என்பதைக் கண்டுபிடித்தபோது, அன்றைய தினத்தின் பாதி ராலி தூரம் முடிந்திருந்தது. குழப்பத்துக்குக் காரணம், மொபைல் ஆப்பை ஆன் செய்து கி.மீ/ மைல் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க மறந்துவிட்டதுதான். அது மைல் கணக்கில் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. அதைச் சரிசெய்து சரியான ஓடோவில் ஓட்ட ஆரம்பித்தோம். மாலை மலையேறும் முதன்மைச் சாலை ஒன்றில் திரும்பியதும் ராலி முடிந்தது. அழகான வளைவு நெளிவுகளுடம் பாம்புபோல ஏறுகிறது கூர்க் மாவட்டத்தின் மடிக்கேரி செல்லும் அந்தச் சாலை. இயற்கைக் காட்சிகளும் தூறலின் ஈரத்தில் மண் வாசனையுமாக மலை மீதிருக்கும் மடிக்கேரியில் மதிய உணவை முடித்துவிட்டு, மைசூர் நோக்கி விரைந்தோம்.

தூறலின் நசநசப்பும்
வெப்பத்தின் கசகசப்பும்! - மஹிந்திரா; மான்சூன் ராலி!

மைசூரில் முதல் நாள் போட்டி முடிவு வெளியானது. அதில் நாம் மைல் குழப்பத்தால் 55 நிமிடங்கள் அபராதம் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தோம். அடுத்த நாள் இதைச் சரிசெய்ய வேண்டும் என்ற சபதத்துடன் தூங்கச் சென்றோம்.அடுத்த நாள் காலை மைசூரில் துவங்கி ஊட்டியில் முடிகிறது. எப்படியும் பந்திப்பூர் வனவிலங்குகள் சரணாலயம் வரைதான் போட்டி இருக்கும் என யூகிக்க முடிந்தது. ஆனால், அநியாயத்துக்கு சந்து பொந்து, கிராமம், குறுகிய தெருக்கள், வண்டிப்பாதை என அனைவருக்கும் சோதனைச் சாலையாக அன்றைய தினம் இருந்தது.

ஆனாலும் இம்முறை மிக கவனமாக நேரத்தையும், தூரத்தையும் கணக்கிட்டுக்கொண்டே வழிதவறாமல் சரியான ரூட்டில் சென்றோம். காலை 8 மணிக்குத் துவங்கிய ராலி, மதியம் இரண்டு மணியாகும்போது குண்டல்பேட் அருகே நிறைவுபெற்றது. அங்கிருந்து ஊட்டி நோக்கி விரைந்தோம். வழியில் பந்திப்பூர், முதுமலைக் காடுகளை ரசித்தவாறு மசினகுடி, கல்லட்டி சாலை வழியே ஊட்டியை அடைந்த போது மாலை ஆகிவிட்டது.

தூறலின் நசநசப்பும்
வெப்பத்தின் கசகசப்பும்! - மஹிந்திரா; மான்சூன் ராலி!

அன்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. எக்ஸ்பர்ட்டுகள் கலந்துகொள்ளும் ஓப்பன் க்ளாஸ் பிரிவில் சந்தோஷ்குமார் - நாகராஜன் ஜோடி, 22 விநாடி வித்தியாசத்தில் முதல் இடத்தைப் பிடித்தது. இரண்டாம் இடத்தை கார்த்திக் மாருதி - சக்திவேல் ஜோடி பிடித்தது.

க்ளாஸ்-2 பிரிவில் செளரஜித் தத்தா - சுவ்ரஜித் தத்தா ஜோடி 21 விநாடிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தைப் பிடிக்க... கார்ப்பரேட் பிரிவில் தீப்ஷிகா பாதுரி - அமன் குல்ஃபாம் ஜோடி முதல் இடத்தைப் பிடித்தது. கப்பிள் க்ளாஸ் பிரிவில் அனில் அப்பாஸ் - சினி அனில் ஜோடி முதல் இடம் பிடிக்க... டாக்டர்ஸ் க்ளாஸில் ராகவேந்திரா - முரளிதர்ராய் ஜோடி முதல் இடத்தைப் பிடித்தது. லேடீஸ் க்ளாஸில் ஆஸிமா - அம்ரிதா ஜோடி முதலிடம் பிடிக்க... மீடியா பிரிவில் மோட்டார் விகடன் முதல் இடத்தைப் பிடித்தது.

ஒட்டுமொத்தப் போட்டியாளர்களில் முதல் இடத்தைப் பிடித்தது, ஓப்பன் க்ளாஸ் பிரிவில் போட்டியிட்ட சந்தோஷ்குமார் - நாகராஜன் ஜோடி. பின்தங்கியவர்கள், அடுத்த ஆண்டு ஒரு கை பார்த்துவிடுவோம் என்ற சபதத்துடன் பிரிந்தனர்.