Published:Updated:

ஆல் நியூ ஆல்ட்டோ கே10... எல்லாமே மாறிடுச்சு!

ஆல்ட்டோ கே10
பிரீமியம் ஸ்டோரி
ஆல்ட்டோ கே10

கவர் ஸ்டோரி: மாருதி சுஸூகி ஆல்ட்டோ கே10

ஆல் நியூ ஆல்ட்டோ கே10... எல்லாமே மாறிடுச்சு!

கவர் ஸ்டோரி: மாருதி சுஸூகி ஆல்ட்டோ கே10

Published:Updated:
ஆல்ட்டோ கே10
பிரீமியம் ஸ்டோரி
ஆல்ட்டோ கே10

ஆல்ட்டோ என்பது நம் நாட்டு மக்களுக்கு ஆல் டைம் ஃபேவரைட். கடந்த 22 வருடமாக நம் நாட்டில் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் கார் - மாருதி சுஸூகி ஆல்ட்டோ. இதுவரை 42 லட்சத்துக்கும் மேலான ஆல்ட்டோ கார்கள் நம் நாட்டில் விற்பனை ஆகியிருக்கின்றன. இருசக்கர வாகனத்தில் இருந்து காருக்கு மாற விரும்புகிறவர்களின் முதல் தேர்வு ஆல்ட்டோதான்.

இப்போது அறிமுகமாகியிருக்கும் ஆல் நியூ ஆல்ட்டோ K10 சுஸூகியின் HEARTECT ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதால் - இதன் உறுதி, கேபின் ஸ்பேஸ், மற்றும் NVH ஆகியவை மேம்பட்டிருக்கிறது என்று மாருதி சொல்கிறது. அடுத்ததாக புதிய ஆல்ட்டோ K10-ல் இருப்பது மாருதி சுஸூகி எஸ்-ப்ரெஸ்ஸோவில் இருக்கும் அதே K சீரிஸ் இன்ஜின்தான்.

வெளித்தோற்றம்:

டிசைன் க்யூட்டாக இருக்கிறது. ஆனால், பழைய ஆல்ட்டோவின் பழைய அடையாளமும் அப்படியே இருக்கிறது. தேனடையை நினைவுபடுத்தும்விதமாக ஹனிகோம்ப் கிரில் அமைந்திருக்கிறது. இது அகலமாகவும் இருக்கிறது. ஹெட்லைட்ஸும் மேம்பட்டிருக்கின்றன. இதற்கு 13 இன்ச் வீல்தான் கொடுத்திருக்கிறார்கள். பின்பக்க டிசைன், காரை சற்றே பெரிய கார் மாதிரி காட்டுகிறது. டெய்ல் லேம்ப்ஸ் டிசைன் கச்சிதம்.

ஆல் நியூ ஆல்ட்டோ கே10... எல்லாமே மாறிடுச்சு!
ஆல் நியூ ஆல்ட்டோ கே10... எல்லாமே மாறிடுச்சு!
ஆல் நியூ ஆல்ட்டோ கே10... எல்லாமே மாறிடுச்சு!
ஆல் நியூ ஆல்ட்டோ கே10... எல்லாமே மாறிடுச்சு!

உள்ளலங்காரம்:

Low Stance கொண்ட கார் என்றாலும், காரில் சுலபமாக ஏறி இறங்க முடிகிறது. வெளிப்பக்கம் க்யூட்டாக இருக்கும் அளவுக்கு கேபினும் க்யூட்டாக இருந்திருக்கலாம். நாம் முதலில் டெஸ்ட் செய்தது விலை அதிகம் கொண்ட வேரியன்ட். அதில் ஏசி இருந்தது. ஆனால் மேனுவல்தான். அதில் முன்பக்க சீட்களுக்கு மட்டுமே பவர் விண்டோஸ் இருந்தன. அதனை இயக்கும் விசையைக் கதவில் வைக்காமல், காரின் சென்ட்ரல் கன்சோலுக்குக் கீழே கொடுத்திருக்கிறார்கள். எல்லா வேரியன்ட்டுகளுக்கும் ஏசியையும், பவர் ஸ்டீயரிங் வசதியையும் ஸ்டாண்டர்டாகக் கொடுத்திருக்கலாமே மாருதி?

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டிஜிட்டலாக மாறியிருந்தாலும், இதில் ஆர்பிஎம்மை அளந்து சொல்லும் டேக்கோ மீட்டர் இல்லை. இந்த டிஜிட்டல் க்ளஸ்ட்டர் எஸ்-ப்ரெஸ்ஸோவில் இருப்பதுதான் என்றாலும், இது ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் இருப்பதால், சாலையில் இருந்து கண்ணை எடுக்காமல் டிரைவ் செய்ய முடியும். ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் கொடுத்திருப்பது வசதி. ஸ்டீயரிங் வீல் கச்சிதமாக இருந்தாலும், இன்னும் கொஞ்சம் தடிமனாக இருந்திருந்தால், பிடித்து ஓட்டுவதற்கு இன்னும் வசதியாக இருந்திருக்கும். டிரைவர் சீட்டை முன்புறமாகவும், பின்புறமாகவும் மட்டும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். உயரத்துக்கான அட்ஜெஸ்ட் இல்லை. ஆனாலும் A பில்லர் ஒல்லியாக இருப்பதால், சாலை தெளிவாகத் தெரிகிறது.

சீட் ஃபேப்ரிக் இரட்டை வண்ணத்தில் சரியான அடர்த்தியோடு இருக்கிறது. டிரைவர் சீட்டில் உட்காரும்போது கால் முட்டி இடிக்கவில்லை. இங்கே முழங்காலுக்கான இடவசதி அதிகமாகி இருக்கிறது.

பயன்பாடு

7 இன்ச் டச் ஸ்மார்ட் ப்ளே சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகள் உண்டு. நேவிகேஷன் வசதியும் இருக்கிறது. ஸ்டீயரிங் வீல் மூலமாகவே காரோடு இணைக்கப்பட்ட போனில் இருந்து அழைப்புகளை ஏற்க முடிகிறது. இசையை ரசிப்பதற்கு, முன்பக்கக் கதவுகளில் இரண்டு ஸ்பீக்கர்கள் கொடுத்திருக்கிறார்கள். க்ளோவ் பாக்ஸ் இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருக்கலாம். சென்ட்ரல் கன்சோலில் போனை வைப்பதற்கு இடம் உண்டு. ஆனால் அதில் பெரிய போன்களை வைக்க முடியாது. முன்பக்கக் கதவுகளில் மட்டும்தான் தண்ணீர் பாட்டில் வைப்பதற்கு இடம். கூடவே இரண்டு கப் ஹோல்டர்களும் இருக்கின்றன.

பின் பக்க இடவசதி

பின் சீட்டில் தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்வதற்கு இடமில்லை. இங்கே பவர் விண்டோ இல்லை என்பதால், கையால் சுற்றித்தான் கதவில் இருக்கும் கண்ணாடிகளை ஏற்றவும் இறக்கவும் முடியும். பின் சீட்டில் தொடைக்கு நல்ல சப்போர்ட் இருக்கிறது. போதுமான அளவு ஹெட்ரூமும் இருக்கிறது. காரின் வீல் பேஸில் 20 மிமீ கூடியிருப்பதால், காலை நீட்டி மடக்க இடவசதி இப்போது சற்றே அதிகமாகியிருக்கிறது. Upright Position-ல், அதாவது நிமிர்ந்துதான் உட்கார வேண்டும். ஆனால், இது அசௌகரியமாக இல்லை. ஹெட்ரெஸ்ட் சிறியதாக இருக்கிறது. பின்னிருக்கைகளில் மூன்று பேர் நிச்சயம் உட்கார முடியாது. வேண்டுமென்றால் குழந்தைகளை உட்கார வைத்துக் கொள்ள முடியும்.

புதிய ஹார்டெக்ட் ப்ளாட்ஃபார்ம் கட்டுமான உறுதியை மேம்படுத்தியிருப்பதால், கூடுதல் பாதுகாப்பை இந்தப் புது ஆல்ட்டோ அளிக்கும் என்கிறது மாருதி. மற்றபடி இரண்டு காற்றுப்பைகள், ABS, EBD, ரியர் பார்க்கிங் சென்சார் ஆகியவற்றையும் கொடுத்திருக்கிறார்கள்.

இன்ஜின்

3 சிலிண்டர்களைக் கொண்ட 1 லிட்டர் DualJet, டூயல் VVT இன்ஜின் அளிக்கும் 67bhp சக்தியும், 89Nm டார்க்கும் நெடுஞ்சாலைகளிலும் சரி; நகர்ப்புறச் சாலைகளிலும் சரி, சலிக்காமல் ஒத்துழைக்கிறது. பம்பர் டு பம்பர் டிராஃபிக்கில் ஓட்டும்போது க்ரீப் ஃபங்ஷன் கைகொடுக்கிறது. ஆக்ஸிலரேட்டர் பெடலை மிதமாக அழுத்தினாலே நன்றாக சக்தி வெளிப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் வேகமாகப் போகும்போது, இன்ஜின் சத்தம் சற்று அதிகமாகவே இருக்கிறது. ஆனால், உறுத்தல் இல்லாமல் இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்டில், கியர்கள் ஷார்ட் ரேஷியோ கொடுத்திருக்கிறார்கள். இதனால் நகர்ப்புறங்களில் அடிக்கடி கியரை மாற்ற வேண்டியிருக்கிறது.

இதுவே 5 கியர்கள் கொண்ட Automatic Gear Shift (AGS) காராக இருந்தால், ஓட்டுவதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஒரு கியரில் இருந்து இன்னொரு கியருக்கு மாறும்போது ஒரு சில விநாடிகளுக்கு Lag இருந்தாலும், சீராக இயங்குகிறது. இந்த வேரியன்ட்டை மேனுவல் மோடில் வைத்து ஓட்டும்போது, ஓட்டுதல் அனுபவம் உற்சாகமாக இருக்கிறது.

ரைடு மற்றும் ஹேண்ட்லிங்

ஸ்டீயரிங் லைட்டாக இருப்பதால், வசதியாக இருக்கிறது. ஆனால் ஸ்டீயரிங் ரிட்டர்ன் வரவில்லை. அதனால் திருப்பங்களில் கூடுதலாகச் சக்தியைச் செலவிட வேண்டி இருக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் நன்றாக இருப்பதால், சின்னச் சின்ன மேடு பள்ளங்களில் தட்டாமல் ஏறி இறங்க முடிகிறது. டர்னிங் ரேடியஸ் குறைவான சிறிய கார் என்பதால், மோட்டார் சைக்கிள் போல இதை வளைத்து வளைத்து ஓட்ட முடிகிறது.

மைலேஜ்

பழைய ஆல்ட்டோவைவிட இதன் மைலேஜ் மேம்பட்டிருக்கிறது. அதாவது AGS வேரியன்ட் லிட்டருக்கு 24.9 கிமீ-யும், மேனுவல் வேரியன்ட் 24.3 கி.மீ-யும் கொடுக்கும் என்கிறது மாருதி.

ஆல் நியூ ஆல்ட்டோ கே10... எல்லாமே மாறிடுச்சு!
இன்டீரியர் ஓகே.. டாப் எண்டில் 7 இன்ச் டச் ஸ்க்ரீன், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல்ஸ் உண்டு.
இன்டீரியர் ஓகே.. டாப் எண்டில் 7 இன்ச் டச் ஸ்க்ரீன், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல்ஸ் உண்டு.
டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர்... 
டேக்கோ மீட்டர் இல்லை.
டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர்... டேக்கோ மீட்டர் இல்லை.
பின் பக்கம் 3 பேர் அமர்வது கஷ்டம்...
பின் பக்கம் 3 பேர் அமர்வது கஷ்டம்...
ஆல் நியூ ஆல்ட்டோ கே10... எல்லாமே மாறிடுச்சு!

மோட்டார் விகடன் தீர்ப்பு

டிசைன் க்யூட்டாக இருக்கிறது. ஓட்டுவதற்கும், பார்க் செய்வதற்கும் சுலபமாக இருக்கிறது. மைலேஜும் நன்றாக இருக்கிறது. ஆனால், இதன் ஸ்டாண்டர்டு வேரியன்ட்டுகளில் ஏஸி, பவர் விண்டோஸ் போன்ற பல முக்கியமான அம்சங்களே இல்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள், மூலப்பொருள்களின் விலை ஏற்றம், அதிகமாகியிருக்கும் மைக்ரோ சிப்புகளின் பயன்பாடு மற்றும் அதற்கு நிலவும் தட்டுப்பாடு ஆகிய காரணங்களால் இதன் மேனுவல் வேரியன்ட்டின் ஆன் ரோடு விலையே 6 லட்சம் ரூபாயை நெருங்கிவிடும். இதுவே AGS வேரியன்ட்டாக இருந்தால், இதன் டாப் வேரியன்ட் சுமார் 7 லட்சம் ஆகிவிடும். இதற்குப் போட்டி என்றால் ரெனோ க்விட் மட்டுமல்ல; மாருதியே விற்பனை செய்யும் ஆல்ட்டோ 800 மற்றும் எக்ஸ்பிரஸோவும் கூடத்தான்!

ஆல் நியூ ஆல்ட்டோ கே10... எல்லாமே மாறிடுச்சு!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீ/அ/உ : 3,530/1,490/1,520மிமீ

வீல்பேஸ்: 2,380 மிமீ

ஃப்யூல் டேங்க்: 27 லிட்டர்

பூட் ஸ்பேஸ்: 214 லிட்டர்

இன்ஜின்: பெட்ரோல், 998சிசி, 3 சிலி

பவர்: 67bhp@5,500rpm

டார்க்: 89Nm@3,500rpm

கியர்பாக்ஸ்: 5 மேனுவல்/5 AGS

டிரைவ்: ஃப்ரன்ட் வீல் டிரைவ்

டயர்: 145/80/R13

பிரேக்ஸ் (மு/பி): டிஸ்க்/டிரம்

மைலேஜ் (ARAI): 24.3 (Manual) / 24.9 (AT)

சஸ்பென்ஷன்: மெக்ஃபர்ஷன் ஸ்ட்ரட்/டார்ஷன் பீம் காயில் ஸ்ப்ரிங்குகளுடன்...