Published:Updated:

பழைய எர்டிகா… 8 லட்சத்துக்குப் பக்கா எம்யூவி!

மாருதி சுஸூகி எர்டிகா
பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸூகி எர்டிகா

பழைய கார்: மாருதி சுஸூகி எர்டிகா

பழைய எர்டிகா… 8 லட்சத்துக்குப் பக்கா எம்யூவி!

பழைய கார்: மாருதி சுஸூகி எர்டிகா

Published:Updated:
மாருதி சுஸூகி எர்டிகா
பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸூகி எர்டிகா

எம்பிவி மார்க்கெட்டில் ஒரு சரியான 7 சீட்டர் கார் என்றால், எந்தவிதச் சந்தேகமுமின்றி எர்டிகாவைக் கைகாட்டலாம். பழைய கார் மார்க்கெட்டிலும் எர்டிகாவுக்கு செம டிமாண்ட் இருக்கிறது என்பது உண்மைதான். மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க்கும், பராமரிப்பும், CNG வேரியன்ட்டும் இன்னும் இதன் ரீ–சேல் மதிப்பைக் கூட்டுகின்றன. யூஸர் ஃப்ரெண்ட்லியான இந்த எர்டிகாவைப் பழைய மார்க்கெட்டில் வாங்கும்போது என்னென்னவெல்லாம் கவனிக்க வேண்டும்?

எர்டிகா வரலாறு

2012–ல்தான் எர்டிகா முதன் முதலில் லாஞ்ச் ஆனது. இந்த 9 ஆண்டுகளில் எர்டிகா மாருதியை எந்தவிதத்திலும் ஏமாற்றவில்லை. 2018–ல் அந்த நம்பிக்கையில் செகண்ட் ஜென் எர்டிகாவைக் கொண்டு வந்தது மாருதி. எர்டிகா விற்பனை தந்த உற்சாகத்தில், கொஞ்சம் வசதிகளை எக்ஸ்ட்ராவாகச் சேர்த்து குஷிப்படுத்தியது மாருதி. முதல் ஜென் எர்டிகா, இப்போதும் பழைய மார்க்கெட்டில் நல்ல டிமாண்டில் இருந்தாலும், நாம் இங்கே சொல்வது 2018–ல் வந்த செகண்ட் ஜென் மாடலைப் பற்றித்தான்.

இன்ஜின் ஆப்ஷன்கள்

இரண்டாவது ஜென் எர்டிகாவில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களைக் கொண்டு வந்தது மாருதி. ஒன்று – மாருதி சியாஸில் இருக்கும் அதே 1.5லிட்டர் பெட்ரோல் இன்ஜின். இதன் பவர் 105bhp மற்றும் டார்க் 13.8kgm. இன்னொன்று – ஃபியட்டின் ஃபேவரைட்டான 1.3லிட்டர் மல்ட்டிஜெட் 90bhp பவர் கொண்ட டீசல் இன்ஜின். இதன் டார்க் 20kgm. இரண்டுமே மாருதியின் SHVS (Smart Hybrid Vehicle System) எனும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன்தான் வந்தது. மாருதியின் ஹைபிரிட் சிஸ்டம் பற்றித் தெரியும்தானே… மைலேஜுக்குப் பெயர் பெற்றது இது. டீசல்/பெட்ரோல் என இரண்டு இன்ஜின்களிலுமே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மேனுவல் உண்டு. 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன், பெட்ரோலில் மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு, மாருதி அதே 95bhp பவரில் புதிதாக CNG வேரியன்ட்டையும் கொண்டு வந்தது. ‘5 ஸ்பீடு போதவில்லை’ எனும் குறையைப் போக்க, 1.5லிட்டர் டீசல் இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் எர்டிகாவில் அறிமுகமானது. இருந்தாலும், 1.3லிட்டர் டீசல் மற்றும் 1.5லிட்டர் டீசல் இரண்டையும் 2020–ல் BS-6 நார்ம்ஸுக்காக நிறுத்தி விட்டது மாருதி.

பழைய எர்டிகா… 8 லட்சத்துக்குப்
பக்கா எம்யூவி!
எர்டிகா
எர்டிகா

எர்டிகாவின் ரியல் டைம் மைலேஜ் என்ன?

மைலேஜைப் பொருத்தவரை நமது எர்டிகா வாடிக்கையாளர்களிடம் ஒரு சர்வே எடுத்தோம். பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எர்டிகா – நகரத்தில் 11 கிமீ மைலேஜும், நெடுஞ்சாலையில் 16.5 கிமீ மைலேஜும் தருவதாகச் சொல்கிறார்கள். பெண்களும் எளிதில் ஓட்டும்படி இருந்தாலும், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் மைலேஜ் நகரத்தில் 9 கிமீதான் சொல்கிறார்கள். இதுவே நெடுஞ்சாலையில் 14.5 கிமீ பதிவாகி இருக்கிறது. பெரிய 1,135 கிலோ எர்டிகாவைச் சுமக்கும் சின்ன 1.3 லிட்டர் இன்ஜினாக இருந்தாலும் சரி; 1.5 லிட்டர் பெரிய இன்ஜினாக இருந்தாலும் சரி – மைலேஜில் காம்ப்ரமைஸ் செய்யாததுதான் எர்டிகாவின் பலம். ஆனால், ஆட்டோமேட்டிக்கின் மைலேஜ் கொஞ்சம் அதிர்ச்சி ரகம்தான்.

இதுவே டீசல் மாடல் கிடைத்தால், எர்டிகாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். 7 பேருடன் பயணித்தாலும், இது நகரத்தில் 15 கிமீ ரியல் டைம் மைலேஜும், நெடுஞ்சாலையில் 19 கிமீ தருவதாகவும் சொன்னார்கள் டீசல் எர்டிகா வாடிக்கையாளர்கள். ராமநாதபுரத்தில் உள்ள சிஎன்ஜி வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ CNG கேஸுக்கு 23 கிமீ–க்கு மேல் மைலேஜ் தருவதாகச் சொல்வது வியப்பாகவே இருக்கிறது. எனவே, CNG கிடைத்தாலும் விட வேண்டாம். 1.5லிட்டர் டீசல் இன்ஜினின் மைலேஜ் – ஆவரேஜாக 14 கிமீ மைலேஜ் தருவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

பழைய எர்டிகா… 8 லட்சத்துக்குப்
பக்கா எம்யூவி!

1. டாப் எண்டான Z+ ஆப்ஷனில் டச் ஸ்க்ரீன், கனெக்டிவிட்டி, லெதர் வீல், ரியர் கேமரா என ஏகப்பட்ட வசதிகள் உண்டு.

2. இதன் ஸ்மார்ட் ப்ளே டச் ஸ்க்ரீன், அவ்வளவு ஸ்மார்ட்டாக இல்லை என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

3. நீங்கள் வாங்கப் போகும் எர்டிகா 35,000 கிமீ-க்கு மேல் ஓடியிருந்தால், பிரேக் பேடுகளைக் கவனியுங்கள்.

பழைய எர்டிகா… 8 லட்சத்துக்குப்
பக்கா எம்யூவி!

எந்த வேரியன்ட்… என்ன வசதி?

பழைய கார் மார்க்கெட்டில் எர்டிகாவின் Z அல்லது Z+ வேரியன்ட்களைத்தான் பெஸ்ட் ஆப்ஷன்கள் என்று சொல்லலாம். லேட்டஸ்ட் ட்ரெண்டுக்குத் தகுந்தபடி இதன் வசதிகள் Z+ வேரியன்ட்டில் உண்டு. ஸ்மார்ட் ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, டச் ஸ்க்ரீனில் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்ஸார், ரியர் கேமரா, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 15 இன்ச் அலாய் வீல்கள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், உயரம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடிய டிரைவர் சீட் என வசதிகள் ஏராளமாக இருக்கின்றன.

பேஸ் வேரியன்ட் என்றாலும், இரட்டைக் காற்றுப்பைகளும் ஏபிஎஸ்–ஸும் ஸ்டாண்டர்டாகவே இருக்கின்றன. இதில் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் என்றால், மலையில் கீழே இறங்காமல் இருக்க ஹில் ஹோல்டு கன்ட்ரோலும் ESP (Electronic Stability Program)–யும் உண்டு.

என்ன இருந்தாலும், XL6 காரில் இருக்கும் DRL–களுடன் எல்இடி ஹெட்லைட்ஸும், டைமண்ட் கட் அலாய் வீல்களும் எர்டிகாவில் இல்லை.

பழைய எர்டிகா… 8 லட்சத்துக்குப்
பக்கா எம்யூவி!
பழைய எர்டிகா… 8 லட்சத்துக்குப்
பக்கா எம்யூவி!

என்ன கவனிக்கணும்?

எர்டிகா வாடிக்கையாளர்களிடம் விசாரித்தில், அதில் பிரச்னை என்றால் முக்கியமாக பிரேக் பேடுகளைத்தான் சொல்கிறார்கள். மாருதி என்பதால், பிரேக் பேடுகளுக்குப் பெரிதாகப் பர்ஸ் பளுக்காது. இருந்தாலும் 35,000 கிமீ–க்கு மேல் ஓடிய கார் என்றால், ரியர் டிரம்மையும் முன் பக்க டிஸ்க்கையும் கொஞ்சம் கவனியுங்கள். பாதி தேய்ந்தாலே இதில் கவனம் தேவை. இதன் பிரேக் பேடுகள் 3,000 – 3,500 ரூபாய் ஆகலாம்.

அதேபோல், டச் ஸ்க்ரீனையும் கைகாட்டுகிறார்கள் வாடிக்கை யாளர்கள். இதன் ஸ்மார்ட் ப்ளே டச் ஸ்க்ரீன், ஸ்மார்ட்டாக இல்லை என்பது பலரது வாதம். சில நேரங்களில் லேக் ஆவதும், பல நேரங்களில் சாஃப்ட்வேர் க்ராஷ் ஆவதும் நடப்பதாகப் புகார்கள் வருகின்றன.

முக்கியமாக, மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்திலும் ‘உச்’ கொட்டுகிறார்கள். எர்டிகாவை டெஸ்ட் டிரைவ் செய்தால், காரை நிறுத்தியதும் ஆஃப் ஆகி, க்ளட்ச்சை ப்ரஸ் செய்ததும் ஸ்மூத்தாக ஆன் ஆகிறதா என்பதை டெஸ்ட் செய்யுங்கள். காரணம், ஹைபிரிட் சிஸ்டம் கோளாறு சம்பந்தமாக, ஜனவரி–1, 2019–ல் இருந்து நவம்பர் 21, 2019 வரை தயாரிக்கப்பட்ட எர்டிகா, சியாஸ், XL6 போன்ற கார்களை ரீ–கால் செய்தது மாருதி. நீங்கள் வாங்கப் போவது இந்த இடைப்பட்ட தயாரிப்பு என்றால், SHVS சிஸ்டத்தில் உள்ள மோட்டார் ஜெனரேட்டர் அதில் சரி செய்யப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க மறக்க வேண்டாம்.

பழைய எர்டிகா… 8 லட்சத்துக்குப்
பக்கா எம்யூவி!

எது உங்கள் சாய்ஸ்?

நீங்கள் ஹைவே ரைடர் என்று வைத்துக் கொள்வோம். அடிக்கடி நெடுஞ்சாலைப் பயணங்கள்தான் உங்கள் தேவை என்றால், டீசல்கள்தான் பெஸ்ட் சாய்ஸ். மைலேஜிலும் கையைக் கடிக்காது; இன்ஜின் பஞ்ச்சும் பக்கா! 1.5லிட்டர் டீசல் இன்ஜினின் ரிஃபைன்மென்ட்டும், ரைடிங் உற்சாகமும் இன்னும் அதிகமாக இருக்கும். ‘சட் சட்’ என ஹைவே பயணங்களை முடிக்கலாம். ஆனால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் இந்த 1.5லி டீசல் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். காரணம், ஒரு வருடம்தான் இதை விற்பனை செய்தது மாருதி. பெட்ரோலின் பராமரிப்பும் அம்சம்!

8–10 லட்சத்துக்குள் இந்த 2–nd ஜென் எர்டிகா கிடைத்தால், தைரியமாக நம்பி வாங்கலாம். மாருதியின் பரந்து விரிந்த நெட்வொர்க்கும், குறைவான பராமரிப்புச் செலவும் – எர்டிகாவை வாங்கியவர்களுக்கு இதுவரை மனஉளைச்சலும் சிக்கலும் தந்ததில்லை என்பதுதான் உண்மை.