Published:Updated:

பார்க்கவே கிராண்டாக இருக்கும் கிராண்ட் விட்டாரா!

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா
பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா

ஃபர்ஸ்ட் லுக்: மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா

பார்க்கவே கிராண்டாக இருக்கும் கிராண்ட் விட்டாரா!

ஃபர்ஸ்ட் லுக்: மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா

Published:Updated:
மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா
பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா

சின்ன கார் மார்க்கெட்டில் மாருதி சுஸூகிதான் இன்னமும் கிங். இந்தச் சந்தையில் அதற்குத்தான் அதிக மார்க்கெட் ஷேர் இருக்கிறது. ஆனால் எஸ்யூவி செக்மென்ட்டில் ஒரே கார் - சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பிரெஸ்ஸா ஒன்று மட்டும்தான். எஸ் க்ராஸ்கூட ஏறக்குறைய விடை பெற்றுவிட்டது. ஆகையால் எஸ்யூவி செக்மென்ட்டை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு, இப்போது அது மிட் சைஸ் செக்மென்ட்டில் அறிமுகம் செய்திருக்கும் கார்தான் கிராண்ட் விட்டாரா.

மாருதிக்கும் டொயோட்டாவுக்கும் இடையே இருக்கும் உடன்படிக்கையின்படி, இந்தக் காரை ஹைரைடர் என்ற பெயரில் டொயோட்டா தயாரிக்கிறது. ஹைரைடர் தயாராகும் அதே தொழிற்சாலையில்தான் மாருதியின் இந்த கிராண்ட் விட்டாராவும் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இரண்டு மற்றும் மூன்றாம் தலைமுறை கிராண்ட் விட்டாரா கார்களை மாருதி பல வருடங்களுக்கு முன்பு நம் நாட்டில் விற்பனை செய்து வந்தது. ஆனால், அவை எல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டவை. ஆனால், இப்போது அறிமுகமாகியிருக்கும் கிராண்ட் விட்டாரா ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்தது. சுஸூகியில் C ஃப்ளாட்பார்மில் உற்பத்தியாக இருக்கும் இது, நம் நாட்டு வாடிக்கையாளர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது.

பார்க்கவே கிராண்டாக இருக்கும் கிராண்ட் விட்டாரா!

வெளித்தோற்றம்:

கலங்கடிக்கும் தோற்றம் இல்லை என்றாலும், கட்டுமஸ்தான தோற்றம் கொண்டதாக இருக்கிறது விட்டாரா. க்ரோம், பியானோ பிளாக் என்று கிரில் கச்சிதமாக இருக்கிறது. LED ஹெட்லைட்ஸ் சதுர வடிவில் இருக்க... டே டைம் ரன்னிங் லைட்ஸ் மூன்று வைரக்கற்கள் போல க்ரோம் அலங்காரத்தோடு ஜொலிக்கின்றன. 17 இன்ச் அலாய் வீல், ஃப்ளோட்டிங் ரூஃப், கட்டுமஸ்தான வீல் ஆர்ச், க்ரோம் ஷோல்டர் லைன் என்று பக்கவாட்டத் தோற்றம் கவர்கிறது. ஷார்க் ஃபின் ஆண்டனா, ஸ்பாய்லர், LED டையில் லாம்ப் டிசைன், ரியர் ஸ்கிட் ப்ளேட் ஆகியவற்றோடு கிராண்ட் விட்டாரா என்ற பேட்ஜும், ஹைபிரிட், ஆல் கிரிப் என்ற முத்திரைகளும் இதற்குத் தனி அந்தஸ்த்தைக் கொடுக்கின்றன. ஆக மொத்தத்தில் நல்ல ரோடு பிரசன்ஸ் இருக்கிறது.

வென்டிலேட்டட் சீட்ஸ் உண்டு...
வென்டிலேட்டட் சீட்ஸ் உண்டு...
கலக்கலான டிரைவிங் மோடுகள்...
கலக்கலான டிரைவிங் மோடுகள்...
ஹைரைடரின் அதே கேபின்... ப்ரீமியம் ரகம்.
ஹைரைடரின் அதே கேபின்... ப்ரீமியம் ரகம்.

உள்ளலங்காரம்:

ஹைரைடரின் கேபினில் இடம் பெற்றிருக்கும் பல பாகங்கள், இதிலும் இடம் பெற்றிருக்கின்றன. டேஷ்போர்டில் செய்யப்பட்டிருக்கும் ஃபாக்ஸ் லெதர் வேலைப்பாடு, விலை உயர்ந்த காருக்கான தோற்றத்தை கொடுக்கிறது. இந்த ஃபாக்ஸ் லெதர் வேலைப்பாடு, கதவுகளின் பேடிலும் தொடர்வது அழகு. சீட், உட்கார இதமாகவும் - உடம்பை அணைத்துக் கொள்ளும் விதமாகவும் அமைந்திருக்கிறது. தேவையான போது சூடான/குளிர்ந்த காற்றை வெளிப்படுத்தும் வென்டிலேட்டட் சீட்ஸ் இது. காரின் பின்னிருக்கைகள் தாராளமாக இருக்கின்றன. கதவுகளின் கண்ணாடிகள் இன்னும் சிறுது பெரிதாக இருநதிருந்தால் காரின் கேபின் இன்னும் தாராளமாகத் தெரிந்திருக்கும்.

பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜர், ஏர் ஃப்யூரிஃபையர், ஹெட் அப் டிஸ்ப்ளே, புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 9 இன்ச் ஸ்மார்ட் ப்ளே ப்ரோ + இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் என்று ஏராளமான அம்சங்களை இதில் அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

6 காற்றுப்பைகள், 360 டிகிரி கேமரா, இஎஸ்பி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஹில் டெஸன்ட் கண்ட்ரோல், ரியர் டிஸ்க் பிரேக்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் கொடுத்திருக்கிறார்கள். எல்லாவற்றும் மேலாக சுஸூகி கனெக்ட் என்ற பெயரில் 40-க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகளும் உண்டு.

இன்ஜின்

ஹைபிரிட் என்பதுதான் இதன் மிகப் பெரிய USP. டொயோட்டா ஹைரைடரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் TNGA Atkinson Cycle இன்ஜின்தான் இதிலும். இது 92 bhp சக்தியையும், 122 Nm அளவுக்கு டார்க்கையும் கொடுக்கிறது. இதோடு இயைந்து செயல்படும் எலெக்ட்ரிக் மோட்டர் 79 bhp சக்தியையும், 141Nm அளவுக்கு டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. e-CVT கியர்பாக்ஸோடு இயைந்து இயங்கும் இந்த இன்டெலிஜென்ட் எலெக்ட்ரிக் ஹைபிரிட் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரி மோட்டாரின் திறன் 115 bhp ஆக உயர்கிறது. இதன் லித்தியம் ஐயன் பேட்டரியில் சேமிக்கப்படும் சக்தியில் இருந்து தொடர்ச்சியாக 25 கிமீட்டர் வரை ஓட்ட முடியும் என்கிறது மாருதி சுஸூகி. இது லிட்டருக்கு 27.97 கிமீ மைலேஜ் தரும் என்கிறது மாருதி சுஸூகி.

1.5L Next-Gen K-series Dual Jet, Dual VVT இன்ஜின் ஆப்ஷனும் உண்டு. பிரெஸ்ஸாவில் இருக்கும் அதே இன்ஜின்தான் இதுவும். இந்த ஸ்மார்ட் ஹைபிரிட் இன்ஜின் 103bhp சக்தியையும் 117 Nm டார்க்கையும் அளிக்கிறது. இதில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் என்று இரண்டு ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் உண்டு. இது 21.11 கிமீ மைலேஜ் கொடுக்குமாம். இந்த வேரியன்ட்டில் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷனும் உண்டு.

எக்கோ, பவர், நார்மல், EV என்று நான்கு டிரைவ் மோடுகள் உண்டு. அதேபோல சேறு, சக்தி, மணல் என்று வெவ்வேறுவிதமான பாதைகளில் ஓட்ட வசதியாக இதில் ஆல்-கிரிப் என்கிற ஒரு ஆப்ஷனும் உண்டு.

திகட்டத் திகட்ட தொழில்நுட்ப அம்சங்கள். ஹைபிரிட் டெக்னாலஜியால் வசப்படும் கூடுதல் மைலேஜ், ஹெட்அப் டிஸ்ப்ளே போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்கள் என்று வந்திருக்கும் இதன் விலைதான் நமது பெரிய எதிர்பார்ப்பு? எந்த அளவுக்கு இது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்ட்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வாகன் டிகுவான், எம்ஜி ஆஸ்ட்டர், நிஸான் கிக்ஸ் ஆகியவற்றோடு போட்டி போடும்; வாடிக்கையாளர்களின் எண்ணங்களைக் கவரும் என்பது விலை வந்த பிறகுதான் தெரியும்.

பார்க்கவே கிராண்டாக இருக்கும் கிராண்ட் விட்டாரா!