Published:Updated:

எக்ஸ்ட்ரா மைலேஜ்... ஸ்விஃப்ட்டில் மாறியது என்ன?

Maruti Suzuki Swift
பிரீமியம் ஸ்டோரி
Maruti Suzuki Swift

ஃப்ர்ஸ்ட் டிரைவ்: மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

எக்ஸ்ட்ரா மைலேஜ்... ஸ்விஃப்ட்டில் மாறியது என்ன?

ஃப்ர்ஸ்ட் டிரைவ்: மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

Published:Updated:
Maruti Suzuki Swift
பிரீமியம் ஸ்டோரி
Maruti Suzuki Swift
ந்தியாவின் தேசிய கார் எது?’ - என்று சென்ற நூற்றாண்டின் இறுதியில் கேட்டிருந்தால், `அம்பாஸடர்’ என்று பதில் வந்திருக்கும். ஆனால் அந்த இடத்துக்கு மாருதியின் ஸ்விஃப்ட் வந்து வெகுகாலம் ஆகிவிட்டது. வெகுகாலம் என்றால் பதினாறு வருடங்கள். இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் ஒரு காரில்... காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது சவாலான விஷயம்.
ஸ்விஃப்ட்டில் பட்டன் ஸ்டார்ட் வசதி இருப்பது ப்ரீமியமாகத் தோற்றமளிக்கிறது.
ஸ்விஃப்ட்டில் பட்டன் ஸ்டார்ட் வசதி இருப்பது ப்ரீமியமாகத் தோற்றமளிக்கிறது.

ஸ்விஃப்ட் என்றால் ஸ்போர்ட்டியான லுக் என்று பெயர் எடுத்தது மட்டுமல்ல... ஸ்விஃப்ட்டின் உருவம் வாடிக்கையாளர்கள் மனதிலும் அழுத்தமாகப் பதிந்துவிட்டது என்பதால், மாருதியால் அதில் அதிகமாக விளையாட முடியாது. ஆனால், ஒவ்வொரு முறை மாற்றங்கள் செய்யும் போதும் முன்பைவிடப் புதுமையாகவும், காலத்துக்கு ஏற்றபடியும் ஸ்விஃப்ட்டை வடிவமைக்க வேண்டும். 2018-ல் வெளிவந்த மூன்றாவது தலைமுறை மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஃபேஸ்லிஃப்ட்டை ஒரு நாள் முழுதும் சென்னையின் வீதிகளில் ஓட்டிப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.

சென்னை டிரேட் சென்டருக்கு எதிரில் அமைந்திருக்கும் சாலை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பது. இதைத் தாண்டினால் மலைக்க வைக்கும் மதுரை வீரன் கோயில் வரும். கத்திப்பாராவிலிருந்து கத்தினால் கேட்கும் தூரத்தில் இருக்கும் இடம்தான் என்றாலும், தமிழ்நாட்டின் கிராமிய மணம் வீச இருக்கிறது இந்தக் கோயில். இந்தக் கோயில் இருக்கும் பகுதியை நாம் தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு முக்கியக் காரணம் - அது ஆள் அரவமற்ற சாலையும்கூட!

டாப் எண்ட் வேரியன்ட்டில் டயல்களுக்கு நடுவே கலர் MID உண்டு.
டாப் எண்ட் வேரியன்ட்டில் டயல்களுக்கு நடுவே கலர் MID உண்டு.


இருந்தாலும் நம்மை முந்திக்கொண்டு சென்ற பைக் இளைஞர்கள்... `புது ஸ்ஃவிப்ட்டா அண்ணா? கிரில் சூப்பரா இருக்கு... டூயல் டோன் வேற லெவல்!’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள். `உள்ளே பார்க்கலாமா’ என்று அனுமதி கேட்டபடியே ஜன்னல் வழியாகத் தலையை உள்ளே நீட்டியவர்கள், ``ஸ்பீடோ மீட்டர் மாறியிருக்கு’’ என்று சொல்ல, அவரது நண்பர், ``நல்லா கவனி, ஸ்பீடோ மீட்டருக்கும் டேக்கோ மீட்டருக்கும் நடுவில் இருக்கும் டிஸ்ப்ளே கலரா மாறியிருக்கு!’’ என்று தன் அப்ஸர்வேஷன் பவரைக் காட்டினார்.

‘சரி, சரி, சீட் கவர் மாறியிருக்குது பார். அதைக் கவனி’ - இப்படி இருவரும் நிமிஷத்தில் காரை ரெவ்யூ செய்துவிட்டு, ‘டாங்க்ஸ்ண்ணா’ என்று கிராமச் சாலைக்குள் பைக்கை ஓட்டிக்கொண்டு மறைய... அந்த ராணுவச் சாலை மீண்டும் வெறிச்சோடியது.

கேபினுக்குள் அவர்கள் கவனிக்கத் தவறிய இன்னொரு முக்கிய மாற்றம், இருக்கைகளில் சைடு சப்போர்ட்டை இப்போது கூட்டியிருக்கிறார்கள். பின்சீட்டில் இடம் போதுமானதாக இருந்தாலும், குவார்ட்டர் கிளாஸ் இருக்க வேண்டிய இடத்தில், அதாவது C பில்லர் அருகே, பின்கதவின் கைப்படி வந்துவிட்டதால், சாலைகளைப் பார்க்க வேண்டுமானால் கொஞ்சம் எட்டித்தான் பார்க்க வேண்டும்.

15 இன்ச் அலாய் வீல்கள் ஸ்டைலாகவும், ரைடிங்குக்கு நல்ல துணையாகவும் இருக்கின்றன.
15 இன்ச் அலாய் வீல்கள் ஸ்டைலாகவும், ரைடிங்குக்கு நல்ல துணையாகவும் இருக்கின்றன.


கண்ணுக்குத் தெரியும் மாற்றங்களைவிட பானெட்டுக்கு உள்ளே மாறியிருப்பதுதான் முக்கியமான மாற்றம். ஆம்! இதில் செயல்படுவது 4 சிலிண்டர்கள் கொண்ட, 1.2 லிட்டர் டூயல்ஜெட் VVT பெட்ரோல் இன்ஜின். இதன் ஸ்பெஷல் என்னவென்றால் ஒவ்வொரு சிலிண்டரிலும் இரண்டு இரண்டு ஃப்யூல் இன்ஜெக்டர்கள் இருக்கின்றன. அதனால் இதன் சக்தி மட்டும் கூடவில்லை; மைலேஜும் 2 கிமீ வரை அதிகரிக்கிறது என்கிறது மாருதி.

காரின் ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் ஏற்றிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தோம். உற்றுக் கவனித்தபோதுதான் இன்ஜின் சத்தம் கேட்டது. ஆக்ஸிலேட்டரை அழுத்தினால், அதிர்வுகள் இல்லாமல் ஸ்மூத்தாக படிப்படியாக வேகம் கூடுகிறது. 1,200 ஆர்பிஎம்-ஐ தாண்டினால், காரில் புது எழுச்சி பிறக்கிறது. ஓட்டுதல் அனுபவம் த்ரில்லிங் என்று சொல்ல முடியாது. ஆனால், பவர்ஃபுல்லாக இருக்கிறது என்று சொல்லலாம்.

முன்பிருந்த ஸ்ஃவிப்ட்டில் கிடைத்தது 83bhp. ஆனால் இப்போது கிடைப்பதோ 90bhp. இதை ஓட்டும்போது நன்கு உணர முடிகிறது. டார்க் அதே 113 Nm-ல்தான் இருக்கிறது, என்றாலும் முன்பைவிட வேகமாக டார்க் வெளிப்படுபவதை உணரமுடிகிறது. பழைய ஸ்விஃப்டைவிட சீக்கிரமாக அதாவது, 11.67 விநாடிகளில் 0 - 100 கிமீ வேகத்தை இது அடைந்துவிடுகிறது. ஃபோக்ஸ்வாகன் போலோவும், ஹூண்டாய் நியாஸும் இதைவிட சிக்கிரமாகவே இந்த வேகத்தை அடைந்துவிடுகின்றன என்பது வேறு விஷயம்.

எக்ஸ்ட்ரா மைலேஜ்... ஸ்விஃப்ட்டில் மாறியது என்ன?
மோட்டார் விகடன் தீர்ப்பு: இதில் கனெக்டட் டெக்னாஜி இல்லை. ஒயர்லெஸ் போன் சார்ஜர் இல்லை. டீசல் ஆப்ஷன்கள் இல்லை. ஒரு காலத்தில் இருந்த அளவுக்கு இது ஃபன் டு டிரைவ் காராகவும் இல்லை. ஆனால், இதை ஹாயாக வசதியாக உட்கார்ந்து ஓட்ட முடிகிறது. நாம் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் இது வளைந்து கொடுத்து செயல்படுகிறது. போரூர் ஜங்ஷன் போன்ற போக்குவரத்து நெரிசலான இடங்களில்கூட, டென்ஷன் இல்லாமல் ஓட்ட முடிகிறது. அனைத்துக்கும் மேலாக முன்பை விடவும் கூடுதலாக இரண்டு கிமீ மைலேஜ் கிடைக்கிறது. வெளியூர் செல்லும்போது வைக்கும் அளவுக்கு டிக்கியில் போதுமான இடமும் இருக்கிறது. ஆக, எப்போதும்போல தினசரி வாழ்க்கைக்கு ஏற்ற காராக எப்போதும் போல இருக்கிறது ஸ்விஃப்ட்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism