Published:Updated:

30 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் CNG - ப்ளஸ், மைனஸ் என்ன? | Maruti Swift CNG

Swift CNG

வழக்கமான ஸ்விஃப்ட் பெட்ரோலைவிட சுமார் 80,000 முதல் 90,000 வரை விலை அதிகமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, VXi மாடலின் சென்னை ஆன்ரோடு விலை – ரூ.8.10 லட்சம். VXi CNG மாடல் சுமார் 8.90 முதல் 9 லட்சத்துக்கு வரலாம். ZXi–ல் டச் ஸ்க்ரீன், அலாய் வீல் போன்ற பல வசதிகள் உண்டு.

30 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் CNG - ப்ளஸ், மைனஸ் என்ன? | Maruti Swift CNG

வழக்கமான ஸ்விஃப்ட் பெட்ரோலைவிட சுமார் 80,000 முதல் 90,000 வரை விலை அதிகமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, VXi மாடலின் சென்னை ஆன்ரோடு விலை – ரூ.8.10 லட்சம். VXi CNG மாடல் சுமார் 8.90 முதல் 9 லட்சத்துக்கு வரலாம். ZXi–ல் டச் ஸ்க்ரீன், அலாய் வீல் போன்ற பல வசதிகள் உண்டு.

Published:Updated:
Swift CNG

சும்மாவே மாருதி கார்கள் மைலேஜில் பொளந்து கட்டும். அதுவும் சிஎன்ஜி வேரியன்ட் என்றால் சொல்லவே வேண்டாம். எலெக்ட்ரிக்குக்கு மாற்றாக இருக்கும் சிஎன்ஜிதான் இப்போது பலரது சாய்ஸும். இப்போது சென்னையில் கிட்டத்தட்ட அனைத்து IOC மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற ஸ்டேஷன்களில் சிஎன்ஜி கிடைக்க ஆரம்பித்து விட்டது. பொதுவாக, சிஎன்ஜியை லிட்டரில் கணக்கிடாமல் கிலோவில்தான் கணக்கிடுகிறார்கள். சென்னையில் சுமார் 60 ரூபாய் 64 ரூபாய் வரைக்கும் விற்கிறார்கள். வெளிமாவட்டங்களில் CBG (Compressed Bio Gas) என்கிற பெயரிலும் இந்த வாயு கிடைக்கும்.

சிஎன்ஜி கார்கள் மைலேஜுக்குப் பெயர் பெற்றவை. கூடவே மைலேஜுக்குப் பெயர் பெற்ற மாருதியும் இதில் கைகோர்த்தால்… அப்படித்தான் தனது ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி வேரியன்ட்டைக் கொண்டு வந்திருக்கிறது மாருதி. இது 30.9 கிமீ வரை மைலேஜ் தரும் என்று மாருதி க்ளெய்ம் செய்வதுதான் ஹாட்டஸ்ட் நியூஸ்.

நேற்று முன்தினம் முதல் சூடாக எல்லா மாருதி ஷோரூம்களிலும் விற்பனைக்கு வந்திருக்கிறது மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் CNG. ஏற்கெனவே வேகன்–ஆர், எர்டிகா போன்றவற்றில் சிஎன்ஜி வேரியன்ட்கள் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்க… ரொம்ப நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்விஃப்ட் சிஎன்ஜி இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. ஸ்விஃப்ட் சிஎன்ஜியின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ப்ளஸ்–மைனஸ் பற்றிப் பார்க்கலாம்.
CNG
CNG

அவுட்லுக்கில் என்ன மாற்றம்?

வெளியே சாதாரண ஸ்விஃப்ட் மாதிரியேதான் இருக்கும் சிஎன்ஜி வேரியன்ட். அதாவது, அவுட்லுக்கில் எந்த மாற்றங்களும் இல்லை. வெளிப்பக்கம் S-CNG என்கிற பேட்ஜ் மட்டும் இருந்தால், அது சிஎன்ஜி வேரியன்ட் என்று கண்டுபிடிக்கலாம்.

இன்ஜின் பவர் குறைகிறதா?

விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட்டில் உள்ள அதே 1.2 லிட்டர் NA (Naturally Aspirated) 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும். வழக்கமாக 90 bhp பவர் சக்தியில் பெட்ரோலில் ஓடும் இந்த ஸ்விஃப்ட்டை, சிஎன்ஜி–க்கு டாகிள் செய்தால், இதன் பவர் 77bhp-க்கு ஜர்ரெனக் குறையும். இதன் டார்க் 98.5NM ஆக இருக்கும். அதனால், வழக்கம்போல் சிஎன்ஜி வேரியன்ட்டில் ஓடினால், பிக்அப்பும் பவர் டெலிவரியும் நிச்சயம் அடிபடும். ஹைவேஸில் பெட்ரோலில் பறப்பதுபோன்ற ஒரு ஜிவ்னெஸ், சிஎன்ஜியில் பயணித்தால் கிடைக்காது என்பதும் உண்மை. அதே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான் இதிலும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்ஜினில் ட்யூனிங் நடந்திருக்கிறதா?

வழக்கமாக சிஎன்ஜியில் ஓடும் கார்கள் பெட்ரோலைவிட பவர் மந்தமாக இருக்கும் என்று பார்த்தோம். அந்தக் குறை பெரிதாகத் தெரியக்கூடாது என்பதற்காக, இந்த ஸ்விஃப்ட்டில் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸில் ஒரு சின்ன ட்யூனிங் செய்திருக்கிறது மாருதி. இதில் புதிதாக (ID ECU) Independent Dual Electronic Control Unit–ஐச் சேர்த்திருக்கிறார்கள். கூடவே, இந்த ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தையும் ரிவைஸ் செய்திருக்கிறார்கள் மாருதி இன்ஜீனியர்கள்.

இவ்வளவு மைலேஜ் கிடைக்குமா?

எடை கூடினாலும், இந்தப் பவர்குறைபாடுதான் ஸ்விஃப்ட்டின் இந்த அதிகப்படியான மைலேஜுக்கு உதவுகிறது. ஆம், ARAI மைலேஜாக 30.9 கிமீ மைலேஜ் இந்த ஸ்விஃப்ட் சிஎன்ஜி தரும் என்று க்ளெய்ம் செய்கிறது மாருதி. நாம் ஸ்விஃப்ட் சிஎன்ஜி வேரியன்ட்டை டெஸ்ட் டிரைவ் செய்யவில்லை. இருந்தாலும், இதன் ரியல் டைம் மைலேஜ் சுமார் 28 கிமீ இருந்தாலே வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்தான்! டாடா டியாகோ 26.4 கிமீ–யும், கிராண்ட் ஐ10 நியோஸ் 28.5 கிமீ–யும் ARAI மைலேஜாக ரெக்கார்டு ஆகியிருக்கிறது. இந்த மைலேஜ் உண்மையாக இருந்தால், மார்க்கெட்டில் அதிக மைலேஜ் தரும் ஹேட்ச்பேக் – ஸ்விஃப்ட்டாகத்தான் இருக்கும்.

Swift CNG
Swift CNG

CNG-க்காக சஸ்பென்ஷன் ட்யூனிங் நடந்திருக்கிறதா?

இன்ஜின் தவிர்த்து, எக்ஸ்ட்ராவாக சிஎன்ஜிக்கான சிலிண்டரும் சேர்வதால், சிஎன்ஜி கிட் பொருத்திய கார்கள், வழக்கமான பெட்ரோல் கார்களைவிட எடை கூடும். அதைச் சரிக்கட்டும்படி காரின் சஸ்பென்ஷன் செட்அப்பை நிச்சயம் ட்யூன் செய்யும் கார் நிறுவனங்கள். அப்படி இந்த ஸ்விஃப்ட்டின் சஸ்பென்ஷன் செட்அப்பை ரைடு அண்ட் ஹேண்ட்லிங்குக்கு ஏற்றபடி கொஞ்சம்போல சாஃப்ட்டாக மாற்றியிருக்கிறது மாருதி. சாதாரண ஸ்விஃப்ட்டில் பயணிப்பதற்கும், இதில் பயணிப்பதற்கும் நிச்சயம் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

வேரியன்ட்கள் மற்றும் விலை!

VXi மற்றும் ZXi என மொத்தம் 2 வேரியன்ட்களில் வந்திருக்கிறது. இதில் ZXiதான் டாப் மாடல். இதன் சென்னை ஆன்ரோடு விலை தெரியவில்லை. ஆனால், இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாக 7.77 லட்சம் எக்ஸ் ஷோரூம் முதல் 8.45 லட்சம் வரை வந்திருக்கிறது ஸ்விஃப்ட் சிஎன்ஜி. அநேகமாக, வழக்கமான ஸ்விஃப்ட் பெட்ரோலைவிட சுமார் 80,000 முதல் 90,000 வரை விலை அதிகமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, VXi மாடலின் சென்னை ஆன்ரோடு விலை – ரூ.8.10 லட்சம். VXi CNG மாடல் சுமார் 8.90 முதல் 9.00 லட்சத்துக்கு வரலாம். ZXi–ல் டச் ஸ்க்ரீன், அலாய் வீல் போன்ற பல வசதிகள் உண்டு.

சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் வாங்கலாம்!

மாருதி சுஸூகி நிறுவனம் ‘சப்ஸ்கிரிப்ஷன் லீஸ் ப்ளான்’ என்றொரு திட்டத்தை வைத்திருக்கிறது. ALD, Orix, Myles, Quiklyz போன்ற சில நிறுவனங்களுடன் கூட்டு வைத்திருக்கிறது மாருதி. நீங்கள் கையில் காசே இல்லாமல், மாதம் 16,500 ரூபாயில் தொடங்கி தவணைமுறையில் பணம் கட்டி ஸ்விஃப்ட் சிஎன்ஜி வேரியன்ட்டை வாங்கிக் கொள்ளலாம். இதற்கு முன் பணம் பெரிதாகத் தேவைப்படாது.

Swift CNG
Swift CNG

என்ன மைனஸ்?

வழக்கமாக சிஎன்ஜி கார்களில், ஒரே ஒரு மைனஸ்தான் இருக்கும். டிக்கியில் கேஸுக்கான டேங்க்கும், ஸ்பேர் வீலும் இருப்பதால், பூட் ஸ்பேஸ் மொத்தமாகக் காலியாகி விடும் என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

சிஎன்ஜி பெட்ரோலைவிட லாபமா?

பெட்ரோல் விலையைவிட சிஎன்ஜி விலை மிகவும் குறைவு. வழக்கமாக ஒரு காரில் 10 - 11 கிலோ சிஎன்ஜி கொள்ளளவு கொண்ட டேங்க் இருக்கும். ஆனால் இதை 8 முதல் 9 கிலோ வரைதான் நிரப்பிக் கொள்ள முடியும். ஸ்விஃப்ட்டின் சரியான கொள்ளளவு தெரியவில்லை. இதன் டேங்க் கொள்ளளவு – 55 லிட்டர் சிஎன்ஜி என்றால், இதில் சுமார் 8 – 9 கிலோ சிஎன்ஜி வரை நிரப்பலாம். ஒரு கிலோ 65 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்… 8 கிலோ நிரப்பினால் 520 ரூபாய் ஆகிறது. ரியல் டைமில் ஒரு லிட்டருக்கு 26 கிமீ என்று வைத்துக் கொண்டால்கூட, 208 கிமீ கிடைக்கும். அதாவது, 520 ரூபாய்க்கு 208 கிமீ ஒரு காரில் பயணிக்க முடியும் என்பது ப்ளஸ்தானே!

டிக்கி இடவசதியைத் தவிர்த்துவிட்டு, கூட்டிக் கழித்துப் பார்த்தால்… ஸ்விஃப்ட் சிஎன்ஜி நல்ல லாபம்தான்!